சவாலுக்கு பதில்-1 RADHA KRISHNAN அவர்களின் கவிதை..

நான் இறந்து போயிருந்தேன் ---கவிதை...
சவாலை ஏற்றுக்கொண்டு கவிதை அனுப்பிய
அதீத கனவுகள் RADHAKRISHNAN... அவர்களின் கவிதை..


நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்

அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான்

நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது



கவிதை வெளியிடப்பட்டுள்ள தளம்
http://www.greatestdreams.com
அதீத கனவுகள்

3 கருத்துரைகள்:

Unknown said...

அருமை RADHAKRISHNAN...
நான் மிக ரசித்த வரிக்கள்

"நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்."


நீர் கவிஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

செல்வா said...

கவிதை நல்ல இருக்குங்க..!! வாழ்த்துக்கள்..!!

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன்

சவாலை ஏற்று எழுதிய கவிதை அருமை நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்