வரிகளில் சரித்திரம் ....

சினிமாவுக்கு பாட்டெழுத திருரங்கத்திலிருந்து சென்னைக்கு
கிளம்பினார் ரங்கராஜன். கட்டுக்கட்டாய் கவிதைகளொடும், 
மெட்டுக்குப் பாட்டெழுதும்கனவொடும். ஒருஇசைத்தட்டுப் 
போல கோடம்பாக்கத்தைச்  சுற்றிவந்தார். திறக்கப்படத 
கதவுகளும்  இரக்கப்படாத சென்னையும்  திறமைச்சாலி
ரங்கராஜனை சோர்ந்து போக வைத்தன."எட்ட 
 முடியவில்லையே  எதிர்பார்த்த  உயரம்.  எத்தனை 
நாள்  தான்  இப்படியோர்  துயரம்"  என்ற  எண்ணம் 
மனதைத்  தைத்தது. "சரி...  சொந்த ஊருக்கே போய்ச் 
சேரலாம்" என முடிவெடுத்தார்.

சென்னை யிலிருந்து  கிளம்புவதற்க்கு  முன்;  ரோட்டோர 
டீக்கடையில்  ஒரு டீ சாப்பிடப்போனார். சூடான டீயோடு 
சுடசுடவந்தது கண்ணதாசனின் அந்த பாட்டு..
."மயக்கமா?கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?" 
பாடலைக்கேட்டதும்  ரங்கராஜனுக்குள்  புது  ரத்தப்பாய்ச்சல். 
அது  சுற்றி  மிரட்டுகிற  தடைகளை  சுக்குநூறாக உடைத்தது.  
 இன்னும்  புதியவேகத்தோடு  கணைகளைத்  தொடுத்தார்.  
 அதன் பின் அவர் பெற்ற புகழ்  அன்றைய திரையுலகையே அதிர வைத்தது.
பாடல் வரிகளாலே தனக்கான  வரலாற்றைப் படைத்த 
இவர்  நடையில்  முத்தமிழும்  பூச்சொரியும்.

அந்த  ரங்கராஜன் இன்றும், எழுபத்தொரு வயதிலும்அசர வைக்கிற  "காவியக்கவிஞர்  வாலி"  

             ---  நந்தினி  .B.    12-ஆ1  
SOURCE: புதிய  தலைமுறை  Weekly.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சலி.
உதயன்  உறங்கிக்  கொண்டிருந்த  நேரம்;
சந்திரன்  சாந்தமாய்  சிரித்த  நேரம்;
பனித்துளி  படர்ந்த  நேரம்;
குளிர்காற்று  வாசல்  வரும்  நேரம்;
தாயின்  தாலாட்டு  கேட்ட  நேரம்;
இமைமூடி  இன்பமாய்  உறங்க 
கண்  இமைக்க  மறந்து, 
இவ்வுலகத்தை  விட்டு  பிரிந்த 
நடிகர்  முரளி  அவர்களுக்கு
எங்களின்  கண்ணீர்  அஞ்சலி.  
-- சித்ரா.பூ. 12-À   


5 கருத்துரைகள்:

Unknown said...

Endrum Illaimai kavingar, Thalai naraithum sorkal naraikkatha padaippalli

Unknown said...

Hi,This is Vinoth.K working in chennai.My native is Alankombu.i would like to appreciate this blog , it saying that our town school have best competitive communication facility. from my wonderful village lot of students studying here, now i have hope that they can become best powerful doctors,engineers..etc in future.i am heartily thanking this blog team and expecting more motivational activities to shape the students and provide world class education to them.
Regrads
Vinoth.K

Unknown said...

Thank you. VINOTH.. Please follow this blog..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

வாலியினைப் பற்றிய கட்டுரை அருமை - // எட்ட முடியவில்லையே எதிர்பார்த்த உயரம். எத்தனை நாள் தான் இப்படியோர் துயரம் // - அடடா அடடா !

கவியரசரின் பாடல் கொடுத்த ஊக்கம் இன்று வாலி முடி சூடா மன்னனாகத் திகழ்கிறார்.

படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்த நந்தினிக்கு நல்வாழ்த்துகள்

சித்ராவின் கண்ணீர் அஞ்சலி - மறைந்த முரளிக்கு ஒரு அருமை அஞ்சலி -

நல்வாழ்த்துகள் நந்தினி - சித்ரா

நட்புடன் சீனா

Anand said...

NALLA UUKKAMIKKAA SAEIDIIII... ANNAIVARUKUM ORU THUNDHUKOLLAGA AMMAIAAA



VALTHUKKALLLL

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்