உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...


எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன்  தொடர்ச்சியாய் யோசித்ததில்;  
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ச்சர்யம்  என்னவென்றால்  சில 
உடன்பாடுகளும்  அதே வேலையைச் செய்தன.

உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.

காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதைச் சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.

எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
 

"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன

அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
 
அருகருகே வாழும் மனிதர்களின்
மனங்களிடையானஇடைவெளியாய்  மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை  மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.

அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.

எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே  கிடந்தார்கள்.

வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று 
உலகத்தார்க்கு  முரசரைந்து  அறிவித்தனர்

நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள். 
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.

உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.

காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.

விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள். 
உறவாடிக் கெடுத்தப்பின்..

பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,  
எது வேடம்; எது நிஜம்  என கணிக்க இயலாது 
போனது சக நடிகர்களால் கூட...

எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால்  முன்பே  அது 
தெரியாமல்  பார்த்துக்கொண்டார்கள்.

எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே  தெரிகிறது.

இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.

அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே... 

எனக்கு என்னைப் பிடிக்கும்;  

மேலே சொன்ன    அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும்   எனக்குள்ளும்  நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்.... 

14 கருத்துரைகள்:

தமிழ் அமுதன் said...

ஒவ்வொரு பாராவும் தனித்தனி தத்துவங்கள் போல மின்னுகிறது..!

அனைத்தையும் கோர்த்த விதம் மிக அருமை..!

வாழ்த்துக்கள்...!

Unknown said...

முதல் பின்னூட்டம் வழங்கிய தமிழ் அமுதன் அவர்களுக்கு நன்றிகள்.. ஓட்டுப்போட்டு அனைவரையும் சென்று சேர வழிவகுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

தீதும் நன்றும்... said...

முடித்திருந்த விதம் அருமையாக இருக்கிறது.. நாம் அனைவரும் முரண்பாடுகளின் ஊர்வலம் தானே..
நான் வாக்களித்து விட்டேன்..

Unknown said...

நன்றி தீதும் நன்றும் . கருத்துரை வழங்கியதற்கும், ஓட்டளித்தற்கும்..

மதுரை சரவணன் said...

//எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே தெரிகிறது.//

s its human nature. thanks for sharing . good post.

எஸ்.கே said...

விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் //அருமையாக உள்ளது.
நிறைய தத்துவங்கள்! வித்தியாசமான கட்டுரை! நன்றி!

ராம்ஜி_யாஹூ said...

அருமை

Unknown said...

கருத்துரை வழங்கிய மதுரை சரவணன், எஸ்.கே., மற்றும் ராம்ஜி_யாஹூ அனைவருக்கும் நன்றிகள்..

வினோ said...

/ எனக்கு என்னைப் பிடிக்கும்; /

:)

அருமையான பதிவு.. நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வித்தியாசமான கட்டுரை!

Unknown said...

வினோ அவர்களுக்கும், பிரஷா அவர்களுக்கும் நன்றிகள்..

அன்பு said...

முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே மனிதன். பலவித தத்துவங்களை கோர்த்த கதம்ப மாலை. வாழ்த்துக்கள்

Unknown said...

கருத்துரைத்த அன்பு அவர்களுக்கு நன்றிகள்.

cheena (சீனா) said...

அன்பின் பாரதி,

முரண்பட்டுகள் நிறைந்த மனைத் வாழ்க்கையினை அலசி ஆய்ந்து இடுகையாக இட்டது நன்று. அத்தனையும் தன்க்குள்ளேயும் இருப்பதால் தன்னையே தனக்குப் பிடிக்கும் என ஆசிரியர் முடித்தது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்