காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை

கவிதையல்ல இது
என் பள்ளியின் குரல்...

நான் வெறும் கட்டிடம் அல்ல..


உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...

எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..

உதாரணங்கள் எப்போதும்
    அகிம்சைக்கு மகாத்மா...
    அன்புக்கு அன்னை தெரசா..
    வீரத்திற்கு கட்டபொம்மன்....

போதும்  பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....

--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...

12 கருத்துரைகள்:

தமிழ் அமுதன் said...

நல்ல சிந்தனை ..! அருமை...!

வாழ்த்துக்கள்...!

மதுரை சரவணன் said...

//எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..//

arumai . nalla palli . vaalththukkal

வினோ said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள் மணிமேகலை...

Unknown said...

மாணவி மாணிமேகலையின் கவிதைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வினோ, மதுரை சரவணன் மற்றும் தமிழ் அமுதன் ஆகியோர்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த பதிவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..

அன்பரசன் said...

அருமை...

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை... இன்னும் நிறைய எழுதுங்க மணிமேகலை...

செல்வா said...

பள்ளியைப்பற்றிய கவிதை அருமைங்க .,
வாழ்த்துக்கள்..!! பள்ளிக்கூடத்திலிருந்துதானே அனைத்து மகாத்மாகளைப் பற்றி கற்றுக்கொள்கிறோம் ..!!

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது கவிதை மாணவி மணிமேகலைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

வாழ்த்திய அன்பரசன், சங்கவி ,ப.செல்வக்குமார், மற்றும் எஸ்.கே. ஆகியோர்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...

Unknown said...

nice yaar...leave your footprints in your school so that your juniors likes to follow u and take away the memories that ll remain till the last breath...all the best manimekalai(to become a role model)..

Unknown said...

நன்றி வைஷ்...

cheena (சீனா) said...

அன்பின் மணிமேகலை

மகாத்மா - அன்னை தெரசா - கட்டபொம்மன் - எடுத்துக் காட்டுவதற்கு இனி இவர்களுடன் மாணவச் செல்வங்களையும் தயார் படுத்தும் பள்ளி - வாழ்க - நல்ல சிந்த்னை - நல்வாழ்த்துகள் மணிமேகலை - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்