பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...


விகடன் தீபாவளி மலர் வந்தாச்சு-னா தீபாவளியே வந்தாச்சு என்று தான் அர்த்தம். அதன் விமர்சனம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,
பாலகுமாரன் பேட்டியில் மிக ரசித்த விஷயங்கள் மட்டும் உங்களுடன்  இப்போது பகிரப்படுகிறது... 

*சோறு போடும் உத்தியோகம்; அது சமூக அந்தஸ்து. மனதின் குதியலைக் காட்டக் கவிதை. வில் வளைத்து, லட்சியம் அடிப்பது போன்று படிப்பவரைத் தாக்கும் சிறுகதை, தவிர்க்கவே முடியாத சினிமா, இதற்கெல்லாம் நடுவே அடிஆழத்தில், இறைத்தேடல் இருந்தது.
ஆர்யக் கூத்தாடினாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்...

*வாழ்வில் எல்லா விஷயங்களிலும் விழுந்து புரண்டு ஓர் அமைதியான இடத்தை அடைந்திருக்கிறேன். எழுத்துதான் இதற்குக் காரணம்.

*எந்தப் புகழும் எனக்குள் ஓட்டவில்லை. எந்தப் போற்றுதலும் என்னைச் சாய்க்கவில்லை.

*என் வேலை இது; இதைத் துல்லியமாய் செய்தலே என் நோக்கம்.
இது பிடித்திருக்கிறதா சரி:
இல்லையா அதுவும் சரி என்று போய்க்கொண்டிருக்கிறேன்.

*வாசகருடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தலே என் விருப்பம்.
சந்திக்கும் போது, வாசகர் வணக்கம் சொல்வதே போதும்.

*சினிமாவை என்றும் நான் முழுமையாக ஏற்காததும், முழுமையாக கற்காததும்
நான் பின்வாங்கக் காரணம்.
நான் எழுத்தாளனாகவே இருந்தேன். எழுத்து வேறு: சினிமா வேறு!

*என் எழுத்து ஆன்மிகத்தின் பக்கம் திசை திரும்பியது என்பது தவறு. அதிகமாய் வெளிப்பட்டது எனலாம். இதற்கு என் வயது காரணம். 

*எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் ஒரு சக்தி இடையறாது அசைக்கிறது. அதுவே எல்லாம். அதற்கு ஆரம்பம்... முடிவு எதுவும் இல்லை...

*இங்கே எல்லா உறவும், எல்லா செயலும் நாடகம் என்பதும்,
இதை நடத்திக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
என்னை கவனித்தபடி இருக்கத் தூண்டப்பட்டேன். இது பெரிய கொடுப்பினை.

*ஒரு எழுத்தாளன், எல்லாம் எழுதிவிட்டேன் என்று சொல்லமாட்டான்.
எழுத்துச் சிந்தனை வற்றாத ஊற்று.

*எழுத்தாக்குவதற்கு உடல் வலு, மன வலு வேண்டும். எனக்கு இன்னமும் இருக்கிறது.
அடுத்ததாக எழுத, சுமார் ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கு, ராஜேந்திர சோழன் மனதளவில் தயார்.  கொஞ்சம் பயணப்பட வேண்டும். எழுதுவேன்...

5 கருத்துரைகள்:

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.
:)

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளன!

செல்வா said...

//*ஒரு எழுத்தாளன், எல்லாம் எழுதிவிட்டேன் என்று சொல்லமாட்டான்.
எழுத்துச் சிந்தனை வற்றாத ஊற்று.
//

இது உண்மைதாங்க ..!!

Unknown said...

வாழ்த்துரை வழங்கிய அன்பரசன், எஸ்.கே., ப.செல்வக்குமார் ஆகியோர்க்கு நன்றிகள்..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி - பாலகுமாரனின் பேட்டி நன்று. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்