navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் இறந்து போயிருந்தேன்

தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
 
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
 
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
 
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
 
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
 
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
 
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
 
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
 
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
 
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
 
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
 
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
 
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
 
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!
 

5 கருத்துரைகள்:

எஸ்.கே said...

//நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;//நல்ல வரிகள்
சிறப்பான கவிதை!

Unknown said...

கருத்துரை வழங்கிய எஸ்.கே. அவர்களின் தொடர்ந்த அன்புக்கு நன்றிகள்....

வினோ said...

அருமையான கவிதைங்க..

செல்வா said...

நல்லா இருக்குங்க ., வாழ்த்துக்கள் .!

cheena (சீனா) said...

அன்பின் பாரதி - பகிர்வினிற்கு நன்றி

நல்ல திசையில் சென்ற சிந்தனையில் எழுந்த நல்லதொரு கவிதை. உருவாக்கியவர் மறைந்து விட்டாரெனக் கேட்டவுடன் இறக்கும் நாற்று. இயற்கை சதி செய்தது.

நவீன் ராபின்ஸின் கவிதை மனதைத் தொடுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்