யாரை நானும் குற்றம் சொல்ல...

எங்கெங்கு
சென்றாலும்
"வேலை காலியில்லை"
வாசகம்
முகத்தில்
அறைகிறது.


பணம்
சேர்க்க வேண்டிய
கட்டாயமும்,
விரக்தி கலந்த
வெறுமையும்
கழுத்தை பிடிக்காமலே
நெறிக்கின்றன.


மெத்தப்படித்தவர்கள்
கூட
ஒரு சில ஆயிரங்களுக்காக
வளைந்து
  நெ
        ளி
    ந்
        து
கூழைக்கும்பிடுகளுடன்...

அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...

எஸ்.பாரத்.
(விருந்தினர் பக்கம்)
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

28 கருத்துரைகள்:

செல்வா said...

நான்தான் முதல் போல ., வடை வாங்கிக்கிறேன் ..!!

செல்வா said...

//அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...//

உண்மைதாங்க ., எனது நண்பர்கள் பலர் பட்டப்படிப்பினை முடித்துக்கொண்டு வேலைதேடிகொண்டிருப்பது வேதனையளிக்கிறது ..!

வார்த்தை said...

முப்பது வருடங்கள் முன் இந்த நிலை இருந்தது.....
இன்றைய காலகட்டத்தில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன, திறமையான நபர்கள் தான் அரிதாகியுள்ளனர்.
Every other person, now has a degree in paper; but only a few have the stuff in them to prove it).
பள்ளிக்கூட புள்ளைங்க நீங்க சந்தேகம், கவல, பயம் இல்லாம நல்லா படிங்க, வருங்காலம் நல்லா இருக்கும்.

Athiban said...

உங்கள் பதிவை சிலநாட்களாக படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

இந்தப் பக்கமும் வர்றது..
http://senthilathiban.blogspot.com

ராஜவம்சம் said...

வேலையை தேடுபவனை விட
உருவாக்குபவன் அறிவாலி...
நீ அறிவாலியாக முயற்ச்சி செய்

வாழ்த்துக்கள்.

அன்பானவன் said...

இன்றைய தேதிக்கு படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியதே.
எம்.சி.ஏ. முடித்து விட்டு மாதம் வெறும் இரண்டாயிரம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள், மாதம் ஒரு லட்சம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
ஒரே வயதினரின் இந்த வாழ்வியல் வேறுபாடு பற்றி நிச்சயம் நாம் சிந்திக்க வேண்டும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையா இருக்கு...

ஆனந்தி.. said...

அந்த நெளிந்து பான்ட் மாடுலேசன் சூப்பர்..குட்...!!:))

arasan said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே...
வாழ்த்துக்கள்..

ம.தி.சுதா said...

இவை உண்மையம் சோகமுமான கதைகளே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Chitra said...

நம்பிக்கையே வாழ்க்கை.

அன்பரசன் said...

//நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...//

????

தினேஷ்குமார் said...

என்வென்று சொல்வதம்மா
வேலை காலி இல்லையென்று
சொல்ல மொழி இல்லையம்மா
நாங்க வேலைதேடிய வழிதனை
பல நூறு வாயிற்படிகள் ஏறி இறங்கி பலமைல் தூர பயன்கள் பசியும் மறந்து போன நேரமது மறுத்து போன இதயங்களில் விரக்க்த்தியான பயணம்
அடிமாட்டு விலைக்கு சில சமயம்
என்ன செய்வது நம்பிக்கை கையில் இருந்ததால் இன்று ஏதோ ஒரு வழி கிட்டியது மனம் தளர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எமக்கே தெரியாது..........

நம்பு உன்னை நம்பு
உன் முடிவுள்ளவரை

Unknown said...

எனக்கும் இது போல் நிறைய அனுபவம் உண்டு ஆனால் இப்பொழுது நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன்

சென்னை பித்தன் said...

//அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...//
இரவுக்குப்பின் ஒரு விடியல் நிச்சயமுண்டு.மாறிக் கொண்டி ருக்கிறது,மாறும்,மாற்றுவார்கள் அடுத்த தலைமுறையினர்.
நல்ல இடுகை

வினோ said...

நீங்கள் சொல்வது இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை..

கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

R. Gopi said...

வேலையில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் சமயத்தில் சரியான வேலை நாம் தேடும் நேரத்தில் கிடைப்பதில்லை.

சாந்தி மாரியப்பன் said...

//அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...//

ஐயோ!! கொடுமைங்க அவங்க நிலைமை..

Anonymous said...

வேலை இல்லாதவங்க
வேலை இல்லாத
விஷயங்களை
வேலையாக நினைப்பார்களே ...

ஹேமா said...

படித்தவன் நெளிந்து வளைந்து நின்றாலும் பணம்தான் எதையும் சாதிக்கும் !

வைகை said...

படிக்கும்போதே வேலையை நினைத்து படிக்க வேண்டாம்! இந்த உலகில் அடுத்தவர் வாய்ப்பை யாரும் தட்டிப்பறிக்க முடியாது! அந்த வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள் அல்லது கண்டுபிடியுங்கள்!! இப்பிடி வைகைன்னு ஒரு ஞானி சொல்லியிருக்கார்!!

Unknown said...

படிக்கும் போது வெறும் புத்தக புழுக்களாக இருப்பவர்களும், வெறும் காகித பட்டம் பெறுபவர்கள் மட்டுமே இக்காலத்தில் அதிகம். அதனால் தான் நாளைய சமூகம் சற்று பயத்துடன் பார்க்கிறது.

ஆமினா said...

என் வேலை இல்ல? அதெல்லாம் கொட்டி தான் கிடக்கு. அரசு வேலை வேணும்னு அலைஞ்சுட்டு இருந்தா இப்படி தான். இப்போதைக்கு சமாளிக்க எதாவது வேலைன்னு பாத்தா அது அனுபவமா மாறும். ஆனா யாரும் அப்படி நெனைக்கிறதே இல்ல. போனா அந்த வேலக்கு தான் போவேன்னு அடம்பிடிக்கிறது. மத்திய ப்ரதேஷ், உ.பி, பீகார் மாதிரி இருக்குற இடத்துல படிக்காத மக்கள் அதிகம். ஆனா வேலையில்லா திண்டாட்டம் இல்ல. தனக்கு கிடைச்ச வேலைய பாக்குறாங்க. 3 வருஷத்துல 10 பேருக்கு வேலைகொடுக்குறவங்களா மாறிடுறாங்க. அழகான பாதை இருக்கு. ஆனா பயணிக்க தெரியாதவர்களும், பயணிக்க அடம்பிடிப்பவர்களும் தான் இங்கே அதிகம்

அருண் பிரசாத் said...

நல்ல சிந்தனை... ஆனா இப்படி ஒரு நெகட்டிவ் தாட் உருவாக்கிகாதீங்க... வேலை எல்லா இடத்திலும் இருக்கிறது... நீங்கள் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் உங்களிடம் திறமை இருந்தால்...

survival of the fittest

THOPPITHOPPI said...

படம் தேர்வு அருமை

சங்கரியின் செய்திகள்.. said...

உண்மைதாங்க.......புலம்புவதைவிட வேறு என்ன செய்வது?

NaSo said...

//ஆமினா said...

அழகான பாதை இருக்கு. ஆனா பயணிக்க தெரியாதவர்களும், பயணிக்க அடம்பிடிப்பவர்களும் தான் இங்கே அதிகம்//


இதுதான் உண்மை. கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு இந்த நாடு எனக்கு என்ன செய்தது எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.

Anonymous said...

Nice kavithai plse enrich ur writing with positivethoughts LEELA

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்