கனம் கோர்ட்டார் அவர்களே...

இங்கே ஒரு தரப்பு வாதம் வைக்கப்படுகிறது.எதிர்தரப்பாக ஆஜராகி வாதாட நீங்கள் தயாரா?

தர்மத்திற்கும்,அதர்மத்திற்குமான போரில்; வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள், அதர்மத்திற்கு துணையாக நிற்பவராகிறார்கள் என்பது பகவத் கீதை.
என்ன செய்வதாய் உத்தேசம்....




கனம் கோர்ட்டார் அவர்களே...
கறைபடியாத கையாக
இருக்கத்தான்
ஆசைப்பட்டேன், 
விட்டார்களா என்னை
இந்த மண்ணின் மைந்தர்கள்...
 
மக்களே;
நீங்கள் தான் என் கரங்களில்
கையூட்டு சொருகி
தூய்மைக்கு தார் ஊற்றினீர்கள்...
 
நேர்மையாய் இருந்த நாட்களில்
"பொழைக்கத் தெரியாதவன்"

என என் முதுகுக்குப் பின்
முத்திரைக் குத்தினீர்கள்...
 
 உங்கள் வேலைகள்
சுலபமாய் முடிய
என்னை 
உங்கள் குறுக்கு புத்தியால்
என்னை 
குறுக்குப் பாதையில்
பயணிக்க வைத்தீர்கள்.
பாதை மாறிய பின்
என்னை அரவணைத்து
"அன்பளிப்பு" காட்டினீர்கள்.
 
அன்றாட அலுவலக செலவுகளுக்கான
அரசாங்கம் தருவதை வைத்து
குண்டூசியின் முனை
கூட
வாங்க முடியவில்லை; 

அதற்க்காகவும்
கை நீட்டினேன்...
 

நெல்லுக்குப் பாய்ந்தது
கொஞ்சம் வீடு வரையும்
நீண்டது.
 

 உங்களில் உத்தமர் முதலில்
என் மீது கல் எறியட்டும்..,

முதலில் நீங்கள் திருந்துங்கள்
பின்னர் நாங்கள் மாறுகிறோம்..
இப்படிக்கு....

பணம் தந்தால் மட்டுமே பெயர் சொல்லுவேன்...
 


நீதிபதி: நர்மதா அனந்தகுமார்.
 

பின்னூட்டங்கள் ஊழல் உலக நாதன்-களுக்கும், லஞ்ச லாவண்யா-களுக்கும் எதிராக இருக்குமா அல்லது ஆதரவாக இருக்குமா?
  

 

27 கருத்துரைகள்:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

பணம் தந்தால் மட்டுமே பெயர் சொல்லுவேன்...//
இந்த வரி சூப்பர்.

karthikkumar said...

உண்மைதான் லஞ்சம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். தனக்கான காரியம் நடைபெற்றால் போதும் அதற்காக லஞ்சம் கொடுக்க தயார் என்ற மனநிலை மாற வேண்டும்.

வார்த்தை said...

rightu

மாணவன் said...

முதலில் இதுபோன்ற ஒரு பதிவை பதிவு செய்ததற்காக பாராட்டுக்களும் நன்றிகளும்....

தொடருங்கள்.......

மாணவன் said...

//"பொளைக்கத் தெரியாதவன்"//

இந்த வரிகளில் //பொ(ழை)க்கத் தெரியாதவன்// என்று இருந்தால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம் இது எனது கருத்து மட்டுமே...

மாணவன் said...

//பின்னூட்டங்கள் ஊழல் உலக நாதன்-களுக்கும், லஞ்ச லாவண்யா-களுக்கும் எதிராக இருக்குமா அல்லது ஆதரவாக இருக்குமா? //

நீதீ: “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்”

-பகவத் கீதை.

செங்கோவி said...

கடைசி வரிகள் சூப்பர்..அப்புறம் அது பிழைக்க / பொழைக்க தெரியாதவன்..குட்.

THOPPITHOPPI said...

நச்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superbbbbbbbbbbbbbb

ஆமினா said...

சூப்பர்.....

ப்லாக்கை மீட்டாச்சா???? சந்தோஷம்........

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃதர்மத்திற்கும்,அதர்மத்திற்குமான போரில்; வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள், அதர்மத்திற்கு துணையாக நிற்பவராகிறார்கள் என்பது பகவத் கீதை.ஃஃஃஃஃ

இந்த வசனம் அறிந்த தான் சிலர் எம் வாழ்வை அழிக்கிறார்கள் போலும்... (ஈழம்)

Chitra said...

லஞ்சத்தை ஒழிக்க பொது மக்கள் தான் முன்வரவேண்டும். ஆனால், லஞ்சம் கொடுக்காமல் முக்கிய வேலைகள் நடக்காமல் இழுபறியாக இருக்கும் போது, அவர்களின் பொறுமையும் சோதிக்க படுகிறது. பாம்பு தன் வாலையே விழுங்கி கொள்வதை போல......
முடிவைத் தேடி, பலர் காத்து இருக்கிறார்கள்.....

தாராபுரத்தான் said...

அருமைங்க..

வைகை said...

முதலில் நீங்கள் திருந்துங்கள்
பின்னர் நாங்கள் மாறுகிறோம்..
இப்படிக்கு///////////


மொதல்ல அவுங்கள நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துரம்!

Unknown said...

//"பொளைக்கத் தெரியாதவன்"//

இந்த வரிகளில் //பொ(ழை)க்கத் தெரியாதவன்// என்று இருந்தால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்,

மாற்றிவிட்டோம். தவறுக்கு மன்னிக்கவும்..

Unknown said...

அருமை

சென்னை பித்தன் said...

வாங்குபவன் இருப்பதால் கொடுப்பவன் இருக்கிறான்;கொடுப்பவன் இருப்பதால்தான் வாங்குபவனும் இருக்கிறான் என்ற நிலை இருந்தாலும், எந்நிலையிலும் வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் இருப்பவர் எண்ணிக்கை உயருமானால், நல்ல மாற்றம் நிச்சயம் வரும்.
நன்று

NKS.ஹாஜா மைதீன் said...

#உங்களில் உத்தமர் முதலில்
என் மீது கல் எறியட்டும்..,#
சூப்பர்........

பாரத்...பாரதி... said...

//#உங்களில் உத்தமர் முதலில்
என் மீது கல் எறியட்டும்..,#
சூப்பர்........//
இது இயேசு நாதர் சொன்ன புகழ் பெற்ற வரிகள்..

செல்வா said...

//உங்கள் வேலைகள்
சுலபமாய் முடிய
என்னை
உங்கள் குறுக்கு புத்தியால்
என்னை
குறுக்குப் பாதையில்
பயணிக்க வைத்தீர்கள்.///

செம செம .. மாற்றங்கள் முதலில் லஞ்சம் கொடுப்பவரிடம் இருந்து வர வேண்டும் ..!!

பாலா said...

நண்பரே நேர்மையாகவும் இருக்க வேண்டியதில்லை, அயோக்கியனாகவும் இருக்க வேண்டியதில்லை. கெட்டிக்காரனாக இருக்கலாம். அதாவது சமயோஜிதமாக நடக்க வேண்டும். ஒற்றை ஆளாக இவற்றை மாற்ற முடியாது. என்ன கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்ல நல்ல கருத்துக்கள்,
அழகான கவிதைகளில்,
பலரை ஈர்க்கும்.
பரபரத்து பின்னோட்டம் இட வைக்கும்.
நம் வீட்டு மழலை,
எட்டு எடுத்து வைப்பதைப் போல்,
பரவசப்பட வைக்கும்.
அழகான வலைப்பூ

தினேஷ்குமார் said...

நேர்மையாய் இருந்த நாட்களில்
"பொழைக்கத் தெரியாதவன்"

போற்றுவதும் தூற்றுவதும் நம்மில் மாறாத நிலை மாருமாயின் வழிகிட்டும்

Best Online Jobs said...

100% Real Money Making System

Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

kalathin kaiyil naam....
see this pictures...

http://goldframenagarajacholan.blogspot.com/2010/12/blog-post_17.html

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்