வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை.



"கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆச்சி, அதுல என் படிப்பு நரம்பு கட்டாயிடிச்சு, அதுக்கு முன்னாடி எல்லாம் நான் நிறைய படிப்பேன்.இப்ப படிக்க முடியறதில்ல...பொன்னியின் செல்வன், துணையெழுத்து எனக்கு புடிச்ச புத்தகங்கள்"என முன்பு படித்ததை மட்டுமே பெருமை பேசிக்கொண்டிருந்த காலம் இப்போது மாறி இருக்கிறது. 

ஒரு குழந்தையின் வரவிற்கு பின் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கை புரட்டிப் போடப்படுவது போல, இந்த வலைப்பூ வந்த பிறகு எங்கள் வாழ்க்கைப் பாதை மிக மாறியிருக்கிறது. 

எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை.
உலகத்து சந்தோஷங்களை எங்களுக்கும்,  
எங்கள் சந்தோஷங்களை உலகத்திற்கும் அடையாளம் காட்டிய உயிரோவியம். 

எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை,  
சூல் கொள்ளாது சுமந்த குழந்தை,  
மனதில் சுமந்த குழந்தை. உயிர் கொண்ட ரோஜா. 

குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து. 
நீங்கள் எங்களின் வலைப்பூ குழந்தையைக் கொண்டாடுகிறீர்கள். 
இங்கே நாங்கள் மற்றவர்களால் கொண்டாடப்படுகிறோம்.


வலைப்பூவால் எங்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  

ஆசிரியர்களைப் பார்த்து , பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த நாங்கள் இப்பொழுதெல்லாம், அவர்களுடன் கதைத்து, கலாய்த்து, உரையாடி, வலைப்பூவுக்கான உரம் சேர்க்கிறோம். 

நிறைய படிக்கிறோம் , நிறைய யோசிக்கிறோம்... 

வகுப்பறையில் அமைதிக்காக்கிறோம். வலைஉலகில் வாலாட்டுகிறோம்.. 

வகுப்பறையில் வாலாட்டினால் நறுக்கப்படுகிறது. 
வலைப்பூவில் வாலாட்டினால் வாக்குகள் விழுகிறது. 

எப்படியோ ஆன்லைனில், ஆள் இல்லாது அநாதையாய் கிடந்த எங்கள் ரோஜாப்பூந்தோட்டத்தில்; இப்போது ஆட்கள் நடமாட்டம் தென்படுகிறது.

கொஞ்சம் நம்பிக்கையும் சுடர் விடுகிறது. ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் பதிவுலகில்,இந்த வாயுள்ள பிள்ளைகள், வார்த்தைகள் உள்ள பிள்ளைகளாய் பிழைத்துக்கொள்வோம் என நம்பிக்கையும் வருகிறது. 

பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. 

இனி அச்சமடையவும் ஒன்றுமில்லை, ஏனெனில் வலைஉலகில் நாங்கள் அநாதைகளும் அல்ல... 

எது எப்படியோ, புத்தகம் வாசித்தலை நிறுத்தியதால் இற்றுப்போயிருந்த "படிப்பு நரம்பு" மீண்டும் முழுவேகத்தில்;புது ரத்தம் பாய்ச்சப்பட்டு... 

அதற்காகவும், ஆரம்பம் முதல் தொடரும் உங்களின் அன்புக்காகவும்,தமிழர்கள் வாழும் திசைகள் எட்டும் நோக்கி எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.

(
.... அது சரி, பதில் வணக்கம் சொல்லாம போனா எப்படி?வணக்கத்த வார்த்தைல சொல்லுங்க, இன்ட்லியில் வாக்களித்தும் சொல்லுங்க...)

SMS-ல் கடுப்பேத்தறாங்க யுவர் ஆனர்..

இது கலாய்ப்பு சிறப்பிதழ்.


தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...


எந்த பொருளின் மீது உனக்கு ஆசை அதிகமோ,
அந்தப்பொருளால் உனக்கு துன்பமும் அதிகம்..
- புத்தர்.


12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ கூட உன் புன்னகையை பார்த்துவிட்டால்.........................................................................................................................................................................................................................................................................................................................................................................
ஜென்மத்துக்கும் பூக்காது.


புதிர் வினா (புத்திசாலிகளுக்கு மட்டும்):
ஒரு யானையின் மீது கிளி உக்கார்ந்ததால், யானை இறந்து விட்டது. எப்படி? (விடை பின்னூட்டத்தில்)




பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
"பேப்பர்ல பதில் எழுதறதுக்கு எவ்ளா கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு பாத்தியாடா?"
"விட்றா, திருத்துறதுக்கு அவங்க எவ்ளா கஷ்டப்படுவாங்கில"
நண்பேன்டா...


நிறுத்துங்க சார், பரீட்சைக்கு படிக்கிற பையனைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிறீங்க...
சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டு இருக்கான்...


டவுட் தங்க மணி..
"தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் அடிச்சா உடம்பு குறையும்னு சொல்லறாங்க. ஆனா சுறா மீனு இறுபத்தி மணி நேரமும் நீச்சல் அடிக்குது ஆனா ஏன் குண்டா இருக்குது.


பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால்,
அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது.




பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
அவனவன் டிரைன் டிக்கெட், பஸ் டிக்கெட், பிளைட் டிக்கெட், சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வச்சுட்டு சந்தோஷமா இருக்கான், பரீட்சை ஹால் டிக்கெட் ஒண்ண வச்சுட்டு , நா படுற பாடு... நண்பேன்டா...

ஏன் இப்ப தமிழ் நாட்ல மழை கொட்டுதுனு தெரியுமா?
நேத்து நான் புக்க தொட்டேன்(டேபிள் சுத்தம் பண்ணறதுக்காக)....
நாங்க புக்க தொட்டதுக்கே மழை கொட்டுது, படிச்சா என்னாகும்னு யோசிச்சு பாருங்க...

"யோவ்.. கரண்ட் பியூஸ் போயி ஒரு மாசம் ஆச்சு, இப்ப வந்து சொல்லறியே?"
"அது வந்துங்க, நான் வழக்கமான மின்தடை-னு நெனைச்சங்க..."


பின்னூட்டம் மற்றும் இன்ட்லியில் வாக்களிக்க மறவாதீர்..தவறினால் உங்கள் பதிவில் ஆயிரம், காலி பின்னூட்டம் இடப்படும். (எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)

கறார் வாத்தியாரான உச்ச நீதிமன்றம்


இந்த வார ஹிட் செய்தி:
பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து  எந்தக்கட்சிக்கும் இல்லை. 

இடித்துரைக்கும் எதிக்கட்சி இல்லா மன்னன் நிதீஷ் குமார்.
(திருக்குறள் படியுங்கள், மனச்சாட்சியே எதிர்க்கட்சியாகும்.)

என் மன வாலில்.... இது மனக்குரங்கு

யாருமில்லா
பேருந்து...,
மெல்லியதாய்
பண்பலை பாடல்;

கேட்கவும்,
ரசிக்கவும்
யாருமில்லை.

இருக்கை தேடி
அமர்கிறேன்..

V.ராதா கிருஷ்ணன் அவர்களின் சவால் கவிதை.

நாங்கள் அழைத்த குழந்தைகள் பற்றிய
 அதிரடி கவிதை போட்டிக்கு அதீதகனவுகள்
V.ராதா கிருஷ்ணன் அவர்கள் அனுப்பிய கவிதை.


யார் தவறுக்கு யாருக்கு தண்டனை? உமா மகேஸ்வரி.எம்.

ஒரு இருபத்தைந்து
வயதாகி
இருந்திருக்குமா
இப்போது
உனக்கு...

மருத்துவம்
சட்டமோ
தொழில்நுட்பமோ
படித்திருப்பாயோ என்னவோ...

ஏமாற்றாதே... ஏமாறாதே.... எம்.பிரியங்கா. 12-A

   
காம்பு பூக்களை நம்புகிறது! ஆனால்
பூக்கள் உதிர்ந்து    ஏமாற்றுகிறது.

கிளைகள் இலைகளை நம்புகிறது! ஆனால்
இலைகள் உதிர்ந்து ஏமாற்றுகிறது!

மனிதன் இதய துடிப்பை நம்புகிறான்; ஆனால்
இதயமும் ஒரு நாள் நின்று விடுகிறது..

-எம்.பிரியங்கா..
பன்னிரெண்டாம் வகுப்பு அ பிரிவு...

இன்றைய தகவல்:

இந்தியாவில்  8 பேரில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு ஆள்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.
(இனிக்கற  சக்கர, கசக்கிற செய்தி...
மக்களே ஹெல்த்த "ரைஸ்" பண்ணுங்க...)

இன்றைய கருத்து:

 
இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரே பரிசு, தோற்றால் கேலியும், ஜெயித்தால் பொறாமையும்...
- வால்டேர்.

இன்றைய கேள்வி...
(தெரிந்து கொள்வதற்காக கேட்கிறோம்).

வழக்குரைஞர் என்பதற்கும் வழக்கறிஞர் என்பதற்கும் என்ன வேறுபாடு?


தட்ஸ் ஆல் ; யுவர் ஹானர்...

வேற்றுகிரக வாசி...... BY வி.ஸ்டெல்லா.


நான் விண்வெளியில் மிதந்துக் கொண்டுருந்தேன். ஆச்சர்யமாக அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து, நிலவில்
திடீரென பறக்கும் தட்டுக்கள் என்னை சூழ்ந்துக் கொண்டன. 
அதிலிருந்து ஏலியன்ஸ், அதாங்க
வேற்றுகிரக வாசிகள் இறங்கினர். உயரமாக இரு கொம்புகளுடன், பெரிய கண்களும் , பருமனான உடலும் கொண்டு வினோதமாக இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் காலையில் சாப்பிட்ட உப்புமா ஜீரணமாக மறுத்தது.

என் கண்கள் இமைக்க மறுத்தன. ஆச்சர்யமாக அவர்களைப் பார்க்க, அதைத் தாண்டி, மண்டைக்குள் "எச்சரிக்கை பல்ப்" எரிந்தது. பின்பு நான் எதிர்பார்த்த அது சுலபமாய் நடந்தேறியது. அவர்கள் என்னை சிறைப் பிடித்து, அவர்களின் அரசனிடம் அழைத்துச் சென்றனர், இல்லையில்லை பிடித்துச்சென்றனர்.

அரசன் வழவழப்பான உடலும்,ஒளிரும் கொம்புகளுடனும் இருந்தான். அவனை நான் உற்றுப்பார்க்க, பார்க்க எனக்கும் கொம்பு முளைப்பது போன்று இருந்தது.

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அரசனின் இரு கரங்கள், நான்காக மாறியது. ஒன்றில் லேசர் துப்பாக்கி நிமிர்ந்தது. எனக்கு கண்கள் கூசியது.

கூசும் அந்த வெளிச்சத்தில், எனக்கு இருட்டிக்கொண்டு வந்தது, இருப்பினும் யாரோ மெல்லியதாய் என் பேர் சொல்லி அழைத்ததுப் போன்றிருந்தது.
"ஸ்டெல்லா.... ஏஏ...ஸ்டெல்லா..."

"எந்திரி,எந்திரி... நா(ன்) பாடம் நடத்துறது உனக்கு தாலாட்டு பாடறது மாதிரி இருக்கா...
மத்தியானம் பிஸிக்ஸ் கிளாஸ் வெக்கக்கூடாதுனா கேக்கறாங்களா...

"ஆ.. பிஸிக்ஸ் மிஸ்...."

அப்புறம் என்ன, எனக்கு எல்லாமே பிச்சுகிச்சு....


வி.ஸ்டெல்லா.
பன்னிரெண்டாம் வகுப்பு அ1 பிரிவு.


படம்:
mujeebu.blogspot.com

நீரோடை மலிக்கா அவர்கள் எழுதிய சவால் கவிதை.

நீரோடை மலிக்கா அவர்கள் எழுதிய சவால் கவிதை.
 குழந்தைகள் பற்றி நாங்கள் அழைத்திருந்த
அதிரடி கவிதை போட்டிக்கு நீரோடை மலிக்கா அவர்கள்
அனுப்பிய கவிதை ....

உன்னத மலர்கள்...

பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த திரையிசைப்பாடல்களின் தொகுப்பு இது.
பாடல்களைக் கண்டறிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை, ஏராளமான பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வரிசைப்படுத்துததலில் தான் சிரமம் இருக்கிறது. எனவே இதனில் களம் இறங்க பதிவர்களை அன்போடு அழைக்கிறோம்...
10.தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா..
படம்: கோபுர வாசலிலே...
அடுத்த முறை இந்த பாடலைக் கேட்கும்போது பாடல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் புல்லாங்குழலை மட்டும் தனியே கவனித்துப் பாருங்கள். பாடலின் மிகப்பெரிய சுகமே அதுதான்.

//நள்ளிரவில் நான் கண் விழிக்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்..

இரயில் சினேகம்...


உறவு....

இரயிலை உறவாய்
நினைத்து,
கையசைத்து
மகிழும் மழலை,
வளர்ந்ததும்,
உறவை இரயிலாய்
நினைத்து
ஏன் சென்றது
தாயைப் பார்க்க...

முதியோர் இல்லம்...

மன வீடும்,.மீதமான ஒரு கண்ணாடிச் சில்லும்...

நேற்று  திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் வெளியிட்ட கவிதையின் நிகழ்களத்தை மையமாகக் கொண்டு(இரவலாகப் பெறப்பட்டு)
எழுதப்பட்ட  கவிதை இது..



மன வீட்டில் 
நீ கல்லெறிந்து விட்டுப்
போனபின்
மிச்சமிருந்தது 

சில கண்ணாடிச் சில்லுகள் மட்டும்..

சுக்கு நூறாகி தெறித்த 

அத்தனை சில்லுகளிலும்
உன் முகம் தெரிந்தது

அந்த காலம்...

அதில் ஒன்றை மட்டும்
பத்திரப்படுத்தி 

வைத்திருந்தேன்.

தொடர்பின் நரம்புகள் 

பலவீனமாகிப் போனதில்
அதுவும் காலப்போக்கில்
ரசம் தொலைத்து 

வெளிறிப்போனது..

சாலை திருப்பத்தில்
உன்னுடன் 

கைக்குலுக்கிக் கொண்ட
சந்திப்பு நிகழ்ந்த
நேற்றைய நாளின் 

இரவில்
அது 

மிக ஒளிந்ததாய் தெரிந்தது.

கைத்தடுமாறி
தொலைப்பதைப் போன்று
தவறவிட்டேன்,
அந்த ஒற்றைச்சில்லை...

மீண்டும் அதனை தேட
முயற்சிப்பதாய் இல்லை நான்..

என் மன வீட்டில்
வாசல் வரை 

வருவதற்கு மட்டுமே
உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது

போலும்.













பூஜை அறை 
அப்படியே
தொடரட்டும் 

பரிசுத்தமாய்...

மிரட்டல்.. By ஜன்னத்துள் பிர்தௌஸ் எட்டாம் வகுப்பு-ஈ பிரிவு.

ஒரு முன் கதைச் சுருக்கம்:

"இது வரைக்கும் எத்தன கவித குடுத்துருக்கேன். 

ஏ(ன்)  இன்னும் ஒரு கவித கூட போடல..."

"இல்லமா ... ஜன்னத்துள், டைமே கிடைக்கல,  கண்டிப்பா வெளியிட்டறோம்,

நீ நாளாக்கி வந்து பாரு, வலைப்பூவில் வெளியான கவிதை-னு  உங் கவிதை நாளக்கி நம்ம ஸ்கூல் நோட்டிஸ் போர்ட்-ல இருக்கும்"

(கவிதை நல்ல இல்லைனா, பின்னூட்டத்தல்  பின்னி எடுக்கப் போறது, என்னத்தானே,
கவித வெளியானா அவுங்க திட்டுவாங்க.. இல்லைனா நீ திட்டுவே, என்ன தா(
ன்) பண்ணறது...  அவ்வ்வ்வ்வ்...)   
********************************************************************************************

சுந்தரா அவர்களின் சவால் கவிதை.

குழந்தைகள் தினத்துக்காக நாங்கள் நடத்திய
அதிரடி  கவிதை போட்டிக்காக
சுந்தரா அவர்கள் அனுப்பிய கவிதை இது..


************************************************************

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!





எனக்கு, எல்ல்ல்லாம் தெரியும்,
எடுத்துச் சொன்னால் பிடிக்காது,
முன்னாள் கதையெல்லாம்
இந்நாளில் எனக்கெதற்கு?
முன்னாலிருக்கிறது
என்
விரிந்த உலகமென்று
கண்ணாடித் திரைக்குமுன்னால்
கவிழ்ந்துகிடக்கிற தளிர்கள்...

இது,
சுட்டும் விழிச்சுடர்களின்
சுதந்திரம் கைப்பற்றிக்
கணினியும் தொலைக்காட்சியும்
ஆட்சிநடத்துகிற காலம்...

எட்டுக்கேள்வி யெழுப்பியபின்
தட்டுத் தடுமாறிவரும்
ஒற்றைப் பதிலும்கூட
சுற்றிச்சுற்றி வருகிறது
கற்பனை உருவங்களோடு...

கனவு காணச்சொன்ன 

கலாம் ஐயா,
இவர்களின்
உறக்கத்திற்கு உதவவும்
வழியொன்றைச் சொல்லுங்கள்...

ஏனெனில்,
இரவுகளைக்கூட ஆக்கிரமித்திருக்கிறது
இளைய தலைமுறையின்
இன்டர்நெட் மோகம்...

எழும்காலையில் தேடிப்படித்தும்
விழும் மாலையில் கூடிக்களித்தும்
விளையாடி மகிழவேண்டிய வயதில்,
அலைபேசியும் கையுமாய்
அடைந்துகிடக்கிறது வீட்டில்...

நிஜம்தொலைத்துத் தளிர்களை
நிழலோடு பழக்கிவிடும்,
மாய உலகத்தின்
மயக்கத்திலிருந்து விடுபட,
வீட்டுக்கு வெளியே
சிறகுவிரிக்கக் கற்றுக்கொடுங்கள்...

புத்தகத்துப் படிப்பும்
கற்றுத்தரக் கணினியுமென்று
கோடுபோட்ட வாழ்க்கையாய்க்
கொஞ்சநேரம் கழிந்தாலும்,
மிச்சமாகும் நேரங்களில்
சிகரம்தொடப் பயிற்றுங்கள்...

காலத்தின் கோலத்தில்
கருநிழல் சூழுகையில்,
எரிதழல் கொண்டுவாவென்று
எதிர்காலம் அழைக்கக்கூடும்...

அதற்கு,
அக்கினிக் குஞ்சுகள்
நிச்சயம் அவசியம்!


சுந்தரா. 

http://kurinjimalargal.blogspot.com/


ஊழல் - ஒரு சுவையான பயோ-டேட்டா.



பெயர்: ஊழல்.
இயற்பெயர்:ஊ...ழலலல...
(பொருள்:கட்சி பாகுபாடற்றது).
சின்னம்: பெருச்சாளி (எங்கும் இருப்பது).
பலம்:மக்களின் மறதி (அடுத்த ஊழல் வரை).
பலவீனம்: ஊடகங்களின் கண்கள்.
சமீபத்திய சாதனை: வாக்காளர்களுக்கு பணம்.
நீண்ட கால சாதனை: விசாரணை "கமிஷன்"
எதிரிகள் : மனசாட்சியுள்ள மனிதர்கள்.
பிடித்தவசனம்:அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக.
பிடித்த கேள்வி : நீ மட்டும் யோக்கியமா? 
பிடித்த TOP 5 பாடல்கள்:
5)''ராசா''வின் மனசிலே...
(படம்: "அலை"கள் ஓய்வதில்லை).
4)"கல்"லிலே கலை வண்ணம் கண்டார்.
(படம்:டெல்லி ஸ்பெஷல்).
3)மாடி மீது மாடி கட்டி...விஸ்வநாதன் வேலை வேணும்.
(படம்:மும்பை எக்ஸ்பிரஸ்).
லேட்டஸ்ட் ஹிட்:
2)குருவா"யூரப்பா"...குருவா"யூரப்பா"...
(படம்: பி குவாட்டர் "கட்டிங்".
B FOR பெங்களூரு).
ஆல் டைம் ஹிட்:
1)கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு....
(படம்: சம்திங் சம்திங்.. எனக்கு மட்டும்).




யோசனை : மிஸ்டர் பொது ஜனம்.
( விருந்தினர் பக்கத்திற்காக).






அமைதிச் சாரல் அவர்களின் சவால் கவிதை.

குழந்தைகள் தினத்துக்காக நாங்கள் நடத்திய அதிரடி  கவிதை போட்டிக்காக  அமைதிச் சாரல் அவர்கள் அனுப்பிய கவிதை இது..
      

கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் சவால் கவிதை-காற்றின் மீதேறி ...

குழந்தைகள் தினத்துக்காக நாங்கள் நடத்திய அதிரடி  கவிதை போட்டிக்காக திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்கள் அனுப்பிய கவிதை இது..


காற்றின் மீதேறி ...

அவ்வைப்பாட்டியோ,  
பாரதியோ  இன்றில்லை,
அவர்தம் பாடல்களும்
இல்லவே இல்லை 
சலிக்காமல் 
படம் காட்டும் 
சின்னத்திரைகளும் 
வலிக்காமல் 
உள்ளுக்குள் புகும் 
கார்டூன் சித்திரங்களும் 
நிரம்பி வழியும் 
குழந்தைகள் உலகம்..

இப்போதைய உலகம்
உங்களுக்கு 
பாதி வரம் ;
மீதி சாபம். 

வரங்களின் மீதேறி 
பயணிப்பதைவிட 
சாபங்களுடன் 
விளையாட விரும்புகிறீர்கள்..

இனி 
உங்களை 
கடவுள்களைக் காட்டி 
பயமுறுத்த முடியாது,
கண்களை குத்த முடியாத 
கடவுள்கள் ;
பவர் ரேஞ்சர்களால்
அழிக்கப்பட்டு விட்டன..

பெற்றோரின் 
விருப்பங்களை 
புறந்தள்ளி ;
உங்கள் ஆசைகள் 
முன்னிறுத்தப்படும் 
காலங்கள் 
இன்னும் உங்களுக்கு 
கனவாகவே இருக்கிறது..

டாக்டர், 
எஞ்சினியர்,
பைலட் ,
ஐ. ஏ.எஸ், 
திணிப்புகளை ,
தகர்த்து எறிந்து
விவசாயி, 
தொழிலதிபன் ,
விஞ்ஞானி
என மாறுங்கள்..

இந்த உலகின் 
மாறாத விதிகளை 
மாற்றி எழுதி 
சரித்திரம் காணுங்கள்..

முதலில் 
செவ்வகபெட்டிகளில் இருந்து 
வெளியே வாருங்கள், 
டோராவின் பயணத்தில் இருக்கும் 
காடுகளை விடவும் 
அற்புதமானது நமது வீதிகள் 
அதனை விதிகளை மீறாமல் 
பயன்படுத்த துவங்குங்கள்..

இப்படி ஆரம்பித்தால்தான் 
காற்றின் மீதேறி 
விண்ணையும் சாடலாம்..
-- கே.ஆர்.பி.செந்தில்
http://krpsenthil.blogspot.com/



இன்றைய தேதிக்கான TOP TEN பாடல்கள்..


எல்லா மனிதர்களுக்குள்ளும் மீண்டும் குழந்தையாக வேண்டும் என்ற ஆசை உள் மனதில் நிச்சயம் உறைந்திருக்கும்.அதனால் தான் நாம் தூங்கும் போது குறுகி படுக்கிறோம். தாயின் கருவறையில் இருந்த, இருப்பதான ஆள்மன வெளிப்பாடு அது.

மீண்டும் குழந்தையாக மாறுவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் குழந்தைகள் பற்றிய திரைப்பட பாடல்களை 'பாடல் வரிசை பத்து' என வரிசைப்படுத்தி ஆறுதல் தேடலே இந்தப் பதிவு.

dineshkumar அவர்களின் படைப்பு இது.--அதிரடி கவிதை போட்டி...

குழந்தைகள் தின விழா சிறப்புக்கவிதை

அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூலரைத்து கொட்டமடக்கு
அடிபனியானின்????
வாள்யுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்.

--dineshkumar


http://marumlogam.blogspot.com

B.நந்தினி - பிளஸ் டூ மாணவியுடன் ஒரு சந்திப்பு.


பெயர் & வகுப்பு : B.நந்தினி 12-1 

செல்லப்பெயர் : நந்து. 

பொழுது போக்கு : வகுப்பறை நினைவுகள், கவிதை எழுதுதல். 

பிடித்த விஷயங்கள்: இயற்கை, புதிய  புத்தக வாசம், அழகான பூக்கள். 

பிடித்த புத்தகம்: ஜெயகாந்தன் எழுதிய அனைத்தும். 

பிடித்த பாடல்: காற்றே பூங்காற்றே ஒரு கவிதை... 

பிடித்த தமிழ் வரிகள் :"மாய்ந்து போன இதயங்களுக்கு உயிரூட்டுபவள் பெண்" 

பிடித்த தோழிகள்: தனிமைக்கு ஈடான தோழியை கண்டதில்லை. 

எதிரிகள்: எனக்கு நானே.
எதிர்கால லட்சியம்
எனது தேவைகளுக்கு மற்றவர்களை நாடாதிருத்தல். 


பிளஸ் டூ-வில் லட்சியம்: எனது திறமைகளை உலகிற்கு உணர்த்த வேண்டும். 

சமீபத்திய சந்தோஷம்: என் இயற்பியல் மதிப்பெண்னை கண்டு மகிழ்ந்தேன். 

சமீபத்திய வருத்தம்: என்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ளாதிருத்தல். 

வாழ்க்கை என்பது: அனுபவம்.( வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். 

வகுப்பறை என்பது: நான் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளும் சொர்க்கம். 

உங்களிடம் உங்களுக்கு பிடித்தது: நான் ஒரு போதும் எனக்கு பிடித்தவர்களை ஏமாற்ற மாட்டேன். 

உங்களிடம் உங்களுக்கு பிடிக்காதது: ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மனம், பயம். 

உங்களைப் பற்றி ஒரு வரி: நான் நானாக இருப்பேன். யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

வலையுலக பிரம்மாக்கள்...-

                                  
இந்த வாரம் வலைப்பூக்களில் ஊடே வலம் வந்தப்போது என்னை பிரம்மிக்க வைத்த பதிவர்கள் பற்றிய பகிர்வு. 
வலை வலம் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் இதன் பட்டியல் நீளும்.
 

அதிரடி கவிதை போட்டி...

குழந்தைகள் தினம்  அல்ல அல்ல...

சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை  மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.


எரிதழல் கொண்டு வா...

பாதகம் செய்பவரைக் கண்டால்...

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா..

ரௌத்ரம் பழகு...

என்ற ரீதியில் இருக்கட்டும் கவிதைகள்.

எது மதிப்பு, எது மதிப்பில்லை

அழகுக்கு இல்லை மதிப்பு;  
அறிவுக்கு தான்  மதிப்பு.

சிரிப்பதற்கு இல்லை  மதிப்பு; 

சிந்திப்பதற்கு தான் மதிப்பு.

தூங்குவதற்கு இல்லை மதிப்பு; 

துன்பத்தை துடைப்பதற்கு தான் மதிப்பு.

சண்டை போடுவதற்கு இல்லை மதிப்பு; 

சாதிப்பதற்கு தான் மதிப்பு.

நிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு; 

நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.

முயன்றால் முடியவில்லை
என்பதற்கு இல்லை மதிப்பு; 

முயற்சிக்கு முடிவில்லை
என்பதுதான் மதிப்பு.


- வித்யா..  

    பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.


ஒரே ஒரு சின்னஞ்சிறு கவிதை படிக்க நேரம் இருக்குமா உங்களுக்கு...



பான்பாரக் எச்சம்
துப்பிவிட்டுப் போனது
ஸ்கூட்டர் காகம்

   -
எஸ்.பாரத்

இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை.
                             
                                                
கோவை பெற்றோர்கள் பேட்டி:

இரத்த சரித்திரம்..

அதிகாலை பனியில்
மூச்சிரைக்க
சைக்கிள் மிதித்து
பேப்பர் போடும் பையன்;


கையில் உள்ள
சில்லறைகளை
இறுக்கப் பிடித்தப்படியே
நகர பேருந்தை
தேர்ந்தெடுத்து
ஏறும் சிறுவன்;

பாக்கெட்டில் உள்ள
காசினை
எண்ணி தந்துவிட்டு
பின் "ஒரு டீ"எனஆர்டர் கொடுக்கும்
கல்லூரி மாணவன்;




நூலகத்தில்
தேநீர் கொண்டு
பசியடக்கி
போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களில்

தவமிருக்கும் இளைஞன்;

இப்படியாய்
யாரேனும் ஒருவரை
யாங்கேணும்
காண நேர்கையில்


தவிர்க்க இயலாது
நினைவுக்கு வருகிறது
என் இளமைக்காலம்...




- எஸ்.பாரத்.
உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காத; வாழ்க்கைப் பாடங்களைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் "வறுமை" எனும் பல்கலைக் கழகத்தில் பயின்றவன்.

காற்றும் கறுப்பும்... ஒபாமா பற்றி கவிஞர் வாலி.

விகடனில் ரசித்தவை

பரம்பரை கவிதை...

அப்பாவோட தாத்தா பேரு
தாத்தா கூட
பொறந்தவங்க பேருன்னு
மொத்தப் பரம்பரையும்

அத்துப்படியாச்சு
அப்பா மேல

சித்தப்பா போட்ட
சொத்து வழக்கை
படிச்சு படிச்சு

-க.ஆனந்த்
---------------------------------------------------------------------------------

எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?

சைல்ட் ஹெல்ப் லைன் 1098 என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் , வீட்டிலோ, வெளியிலோ தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் இந்த எண்ணுக்கு அழைத்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூறலாம் என்பதே இந்த எண் உருவாக்கப்பட்டதன் நோக்கம்.




ஆனால் இந்த சைல்ட் ஹெல்ப் லைனுக்கு வரக்கூடிய அழைப்புகளில் நான்கில் ஒரு பங்கு அழைப்புக்கள் மௌனமாகவே இருக்கிறதாம். இந்த மௌனம் பற்றி கண்டிப்பாக நாம் பேசியே ஆக வேண்டும்

குழந்தைக்களுக்கு எதிரான கொடுமைகள் சமீபத்தில் பெருகி விட்டன என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இவ்வாறு நிகழும் பெரும்பாலான கொடுமைகள், அவர்களின் குடும்பத்தாராலோ அல்லது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றவர்களாலோ நிகழ்த்தப்படுவதாக முன்பு ஒரு முறை இந்தியா டுடே இதழில்,படித்தப்போது, நம்பமுடியாத செய்தியாக இருந்தது.



பதவி...பதவி..பதவி...

இந்த வார செய்தி:
மஹாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாணை பதவியிலிருந்து நீக்க பா... செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை..


கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அரசியல் சட்டத்திற்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.- வெங்கய்ய நாயுடு.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அ.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தி.மு.. வினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார் - தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின்.
(சென்ற வாரம் ராஜினாமா கோரும் வாரம்?)


Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்