இது பூக்கள் உதிரும் தருணம்...

எல்லாவற்றையும் நான் சொல்லிவிடப்போவதில்லை.
சொல்லியவற்றால்; சொல்லாதவற்றின் பொருள் புலப்படக்கூடும் உங்களுக்கு..


சாரல் மழையாய் 
தொடர்ந்து 
என் அலைப்பேசி 
சிணுங்கிக்கொண்டே 
இருக்கிறது.

அதன் 
சின்னத்திரையில் 
உன் பெயர் 
மின்னி மின்னி 
மறைகிறது.

சூடுபட்ட நத்தையாய்
எடுக்காமல்; 
எதுவும் பேசவும் 
தோணாமல் 
நான்.

"கடன் 
அன்பை முறிக்கும்.
எடுத்தால் 
அன்பு முறியும்"

படம்
deviyar-illam.blogspot.com
manjusampath.blogspot.com

17 கருத்துரைகள்:

Anonymous said...

கடன் அன்பை மட்டுமல்ல...
எலும்பையும் முறிக்கும்...

Anonymous said...

டும்டும்...டும்டும்...
இறைவா... நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்

middleclassmadhavi said...

//சொல்லியவற்றால்; சொல்லாதவற்றின் பொருள் புலப்படக்கூடும் உங்களுக்கு..// !!!

தமிழ் 007 said...

வரிகள் நன்றாக உள்ளது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கடன் பட்ட நொஞ்சம்...

உண்மையில் கொடுமையிலும் கொடுமை..

கவிதை அருமை தலைவரே...

இராஜராஜேஸ்வரி said...

"கடன்
அன்பை முறிக்கும்.
எடுத்தால்
அன்பு முறியும்//
what a pity!

sathishsangkavi.blogspot.com said...

நச் கவிதை...

Yaathoramani.blogspot.com said...

உறவு தொடரவேண்டுமாயின்
சில சமயம் தொடர்பு கொள்ளாமலும்
இருக்கவேண்டியிருக்கிற கொடுமை
சொல்லாமலும் புரிகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

கவிதையும்,படமும் அழகு.

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை எளிய தமிழில் அழகு..

Anonymous said...

//சொல்லியவற்றால்; சொல்லாதவற்றின் பொருள் புலப்படக்கூடும் உங்களுக்கு..//


இது புரியாம தான் இருந்துச்சு..

//"கடன்
அன்பை முறிக்கும்.
எடுத்தால்
அன்பு முறியும்"//

இப்ப தெளிவ்வ்வ்வா புரிஞ்சிடுச்சு.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை

சென்னை பித்தன் said...

அழகாகச் சொன்னீர்கள்!எனவேதான் கம்பன் சொன்னான்”கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று!

Unknown said...

super lines

MANO நாஞ்சில் மனோ said...

அடடா இப்பிடி எல்லாம் கூட கவிதை எழுதலாமா அருமையா இருக்கு மக்கா...

வைகை said...

எதிர்பாராத முடிவு.. நான் இல்ல...

ஹேமா said...

காதல் கவிதை மாதிரியும் நட்பின் கவிதை மாதிரியும் இருக்கு.நல்லாயிருக்கு பாரத் !

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்