கோவையில் விஜயகாந்த் மிஸ்ஸிங் - ஒரு சூடான அலசல்.



கோவையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இப்போது வரை விஜயகாந்த் வந்து சேரவில்லை. ஒரு வேளை திரைப்படங்களில் வருவது போல, மேற்கூரையை கிழித்துக்கொண்டு வந்து மேடையில் வந்து இறங்குவாரா என்று தெரியவில்லை.


எங்கள் பிரச்சார கூட்டங்களில் எல்லா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சம மரியாதை கொடுக்கிறோம், பேச அழைக்கிறோம் என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவினர் கிண்டலடித்ததுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக கோவை பொதுக்கூட்டம் இருக்கும் என எதிர்பார்த்த அதிமுகவினருக்கு மீண்டும் "கொட்டு வைக்கும் பிரச்சனைக்கு" ஆளாகியிருக்கிறார் விஜயகாந்த்.


(விஜயகாந்த் கொட்டு வைத்தாரா அல்லது கொட்டு வாங்கினார என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையில் யாருக்கு யார் கொட்டு வைத்தார்கள் என்பதை சிபிஐ விசாரணை வைத்து தான் கண்டறிய வேண்டும் போல)


ஏன் விஜயகாந்த் வரவில்லை என்பதற்கு சால்ஜாப்பு பதில் கூட சொல்லப்படவில்லை. ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் ஒருசேர காண வேண்டும் என்று ஆசைப்பட்டால், மே 15ஆம் தேதி வரை பொறுத்துக்கொள்ளுங்கள் என்ற  பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சினை ஜெயலலிதா அப்படி ஒன்றும் ரசித்ததாக தெரியவில்லை. குறைந்த பட்சம், ஆளுங்கட்சியின் நையாண்டியிலிருந்து தப்பிக்கவாவது விஜயகாந்த் வந்திருக்கலாம். தன்னால் முடியாவிட்டால் கூட தனது மனைவி பிரேமலதாவை அனுப்பி வைத்தாவது சமாளித்திருக்கலாம்.


கோவையில் கூட்டம் நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் எங்கும் விஜயகாந்த் படம் இல்லை, சுற்றியுள்ள இடங்களிலும் விஜயகாந்த் படம் இல்லை. கூட்ட மைதானத்தில் மட்டும் மற்ற கூட்டணி கட்சி கொடிகளோடு தேமுதிக கொடிகள் காணப்படவில்லை.


எப்படியாயினும் விஜயகாந்த் கோவை பொதுக்கூட்டத்திற்கு ஆப்சென்ட் ஆனதால், சும்மாவே கலாய்க்கும் சன், கலைஞர் டிவிக்கு சுடசுட மேட்டர் கிடைச்சாச்சு.


ஜெயலலிதா- விஜயகாந்த் ஒரே மேடையில் பேசுவதா? அது போல எதுவும் கிடைக்காது. பார்க்கத்தானே போகிறோம் என்று நேற்று கிண்டலடித்த வடிவேலு சொன்னது இப்போது உண்மையாகி விட்டது. இனி இரண்டு நாளைக்கு வடிவேலு, வெடிவேலுதான் போங்க..


விஜயகாந்த் ஆப்சென்ட் எழுப்பி இருக்கும் கேள்விகள் 


ஆந்திரா, டெல்லியிருந்தெல்லாம் தலைவர்களை அள்ளி வந்திருக்கும் ஜெயலலிதா, "ரிஷிவந்திய" கதாநாயகனை அழைக்க முடியாதா என்ன?


விருப்பமில்லாத இருவருக்கு திருமண நிச்சயம் செய்து வைத்தது போல அதிமுக கூட்டணியின் நடவடிக்கைகள் இருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறதா?


தன்னை மீறி விஜயகாந்த் வளர்ந்து விடுவார் என்று நினைத்து, அவரை தவிர்க்கிறதா அதிமுக தலைமை.


தொகுதி உடன்பாட்டினை கூட நேரில் பார்த்துக்கொள்ளாமல் , பேக்ஸ்  செய்து கொண்ட தலைவர்கள், தேர்தலுக்கு பிறகா சந்தித்துக்கொள்ள போகிறார்கள்?


விஜயகாந்துடன் செய்து கொண்டது வெறும் தொகுதிபங்கீடுதான் என்று சொல்ல போகிறார்களா அதிமுகவினர்?


விஜயகாந்தின் 10 சதவீத வாக்கு வங்கியில்லாமல், தன்னால் முழு மெஜாரிட்டி பெற முடியும் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறாரா ஜெயலலிதா?


டிவிட்டரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் & விஜய காந்த் ஆப்சென்ட்:


saarvaakan 
இந்த தேர்தலில் வீஜயகாந்த் எப்படிப்பட்ட்வர் என்று மக்களுக்கு தெரிந்ததுதான் ஒரே பலன்

pathasari 
அட அட.. இப்போவும் "புரட்சித்தலைவர் MGR "ன்னு சொல்லும்போது அப்ளாஸ் அள்ளுது.. வாழ்ந்த அப்படி வாழனும்!

kolaaru 
பண்ருட்டி இன்னும் கொஞ்சம் பேசி இருந்தா,அம்மா எட்டி உதச்சு உருட்டி இருக்கும் # டெரிப்பிக் பேஸ் ரியாக்‌ஷ்ன்

losangelesram 
”தருமத்தின் வாழ்வுதன்னை சூ ..... கவ்வும்”- ஓ,பி. வேணாம்யா, என்னிய கெளப்பி வுடாத! அப்படியே பம்மிட்டுப் போயிடு! பாரதிய பேசறதுக்கு எவனுக்குமே...

bassiva 
தருமம் வெல்லுமாமே... அப்போ இவங்களும் வர மாட்டாங்களோ....

gpradeesh 
குறுகிய கால இடைவெளியில் எப்படி இத்தனை பெரிய கூட்டத்தை கூட்டினர்? ஆச்சர்யம்தான்! அப்போ கோவையில் இந்த முறையும் அம்மா கொடிதான் போல‌

arasu1691 
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் கேபிளில் ஜெயா டிவி மட்டும் நிறுத்தம் #JayaTVLive

Shaiju_SGR 
அண்ணன் வைகோ இல்லாத மேடை உள்வாங்கிய கடல் போல் உள்ளது

iamkarki 
அம்மாவின் கிரேஸ் குறைந்துக் கொண்டே வருகிறதா????? ஆளும் மொக்கையா இருக்காங்க. பேச்சும்..

mayavarathaan 
தமிழ் மொழிக்கு முன்னுரிமை என்று சொல்லி கனிமொழிக்கு முன்னுரிமை கொடுத்தவர் கருணாநிதி - ஜெ. #TNae11 #JayaTVLive #jayanews.co.in


karaiyaan 
சட்டம் ஒழுங்கு நல்லாத்தான் இருக்குனு சொன்ன நண்பர்களே! கொஞ்சம் அம்மா கொடுக்குற லிஸ்ட்ட கேளுங்கடே!


bassiva 
மணல் கொள்ளை திமுக ஆட்சியில் தான் - ஜெ # அப்போ வைகுண்டராஜன் யாருங்க அம்மா..


karaiyaan 
நேபாள் பூடான் பங்களாதேசோட உடன்பாட்டை மறுபரிசீலனை செய்கையில் ஏன் கச்சத்தீவு உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யகூடாது - டி.ராஜா


mayavarathaan 
விஜயகாந்த் வந்திருந்தா ஒருவேளை சந்திரபாபு நாயுடு என்ன பேசுறாருன்னு தெரிஞ்சிருக்கும் - கொல்டி


Shaiju_SGR 
ராசா இல்லாத திமுக கூட்டம் , விஜுயகாந்த் இல்லாத ஜெ கூட்டம் போல் உள்ளது


mayavarathaan 
இப்போ தான்யா தெரியுது.. சந்திரபாபு நாயுடு ஏன் தோத்துக்கிட்டே இருக்காருன்னு! 


losangelesram 
அம்மாவும் வி.காந்தும் ஒரே மேடையில் தோன்றுவதா அவ்வளவு முக்கியம்? ஒரே மாதிரி ஒத்த கருத்துகள் தான் முக்கியம்!


RajanLeaks 
தேமுதிக தயவுலதான் அதிமுக ஆட்சியமைக்கணும்ன்ற நெலம வந்தா செமையா இருக்கும்! ஆத்தா குடுமிய கேப்டன் ஆட்டிப்புடுவாரு போல!

mayavarathaan 
எம்.ஜி.ஆர்., கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார். புரட்சித் தலைவி அம்மா அதை முடிக்க இருக்கிறார் - பண்ருட்டி


Shaiju_SGR 
பண்ரூட்டி உளறுற மாதிரி தெரியுது.. கொஞ்சம் அடிச்ச மாதிரி தெரியுது #tnae11

kolaaru 
யாருப்பா அது அதிமுக கூட்டணி மேடைல,திருப்பதில லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுத்தாருன்னு சொல்லுவாங்களே அவரா # சந்திரபாபு நாயுடு


mayavarathaan 
ஆற்காடுக்கும், கோசிமணிக்கும் வயதாகிவிட்டது. சீட் இல்லை. கருணாநிதிக்கு மட்டும் வயதே ஆகவில்லை. - தா.பா


thennarasu 
தலித்' ராசா-ஜெ.வின் திடீர் பாசம்! //ராசாவை கைது செய்யச் சொல்லியதே 'ஜெ' தானே? இதே தலித் கருத்தை தானே திமுக தரப்பில் சொன்னார்கள்?


mayavarathaan 
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் போது கொள்கையை எடுத்துச் சொல்லி வோட்டு கேட்க வேண்டிய கொ.ப.செ. திஹாரில்! - தா.பா


mayavarathaan 
இன்னொரு காபினேட் மந்திரி மதுரையில் முன் ஜாமீனில் இருக்கிறார்.- தா.பா. 


mayavarathaan 
பேசாம சரத்குமாருக்கு 41 சீட் கொடுத்திட்டு விஜயகாந்துக்கு 2 கொடுத்திருக்கலாம்.


losangelesram 
அம்மாவை எதிர்க்காமல் வி.யை மட்டும் எதிர்ப்பதால் வடிவேலுவுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது!


salemdeva 
Best சமாளிப்பு திலகம் அவார்டு Goes to பன்ரொட்டி ராமச்சந்திரன்#விசயகாந்த் பொதுக்கூட்டத்திற்கு வராததற்கு காரணம் பிரச்சாரக்கூட்டமாம். :)


samugam 
சீக்கிரம் ஐபிஎல் ஆரம்பிங்க.. எந்த தமிழ் சேனலும் பார்க்க முடியவில்லை #TNAE11


rmuthukumar 
ஜெவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது அதிமுக அணிக்கு பலவீனம் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்படி?

18 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னமோ உள் குத்து வெளிக்குத்து நடந்திருக்குங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பொதுவாக விஜயகாந்த் தலைமைப் பண்போடு நடந்துக் கொள்ள வில்லை..
அவரது செயல்கள் சுகம் சுளிக்க கூடியதாக இருக்கிறது..என்பது உண்மைதான்..

MANO நாஞ்சில் மனோ said...

வடிவேலு வாயிக்கு இவிங்க அவல் ஆகிட்டு இருக்காங்க வேற என்னத்தை சொல்ல...

ம.தி.சுதா said...

ஃஃஃஃடிவிட்டரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் & விஜய காந்த் ஆப்சென்ட்:ஃஃஃஃ

அப்புடி என்ன தாம்பா பண்ணுறாரு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

டக்கால்டி said...

சன் டிவி டி.ஆர்.பி எகிற இன்றைய செய்திகளில் மட்டும் அதிமுக பொதுக்கூட்டம் காண்பிக்கப்படும். அதுவும் நக்கல் அடிக்கவே...

பொன் மாலை பொழுது said...

ஜெயலலிதாவுடன் அந்த எம்.ஜி.ஆறே வந்தாலும், கூட்டணி அமைத்தாலும் இப்படித்தான் இருக்கும். விஜயகாந்து வெறும் ஜுஜுபி. அந்த அளவிற்கு "மம்ம்மி " இடம் திமிரும், தான் உயர்ந்த சாதி(பாப்பாத்தி) என்ற எண்ணமும் மிக அதிகம். இதெல்லாம் நம்ம அண்ணாதே விசயகாந்துக்கும் நன்றாகத்தெரியும். கருணாநிதி என்ற ஒரு துரோகியினால்தான் விசயகாந்தும் மம்மியிடம் அடைக்கலமானார். இல்லையெனில் அவர் தி. மு.க. வுடன் வருபவர்தான். மம்மியும், தாத்தாவும் செத்து ஒழிந்தால்தான் தமிழ் நாட்டு அரசியல் சற்று மேம்படும்.

செங்கோவி said...

இந்தக் காமெடிப் பீசு தொல்லை தாங்கலை பாஸ்..நானும் இன்னைக்கு கும்மி இருக்கேன்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விஜயகாந்த் பிரச்சார போட்டோ செஷனுக்கு போய்ட்டாரு.

நிரூபன் said...

கோவையில் விஜயகாந்த் மிஸ்ஸிங் - ஒரு சூடான அலசல்.//

வணக்கம் சகோதரம், தலைப்பைப் பார்த்தால் ஒரு எழுத்து மிஸ்ஸிங் என்று வருகிறதே;-))

மிக்ஸிங்... குவாட்டருக்கு வாட்டர் மிக்கிஸிங்.

நிரூபன் said...

கோவையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இப்போது வரை விஜயகாந்த் வந்து சேரவில்லை. ஒரு வேளை திரைப்படங்களில் வருவது போல, மேற்கூரையை கிழித்துக்கொண்டு வந்து மேடையில் வந்து இறங்குவாரா என்று தெரியவில்லை.//

அவர் போதையிலை பாதை மாறியிருப்பாரோ?

நிரூபன் said...

தன்னால் முடியாவிட்டால் கூட தனது மனைவி பிரேமலதாவை அனுப்பி வைத்தாவது சமாளித்திருக்கலாம்.//

ஆஹா... ஆஹா... இதை மாதிரி ஒரு வசனத்தை கப்டன் கேள்விப்பட்டால், அழுதிடுவாரு.

நிரூபன் said...

விஜயகாந் முன்னறிவித்தல் ஏதுமின்றி, வருகை தராத செயல், வாக்களார்களினைக் காத்திருக்கச் செய்வதோடு, இவர் மீதான நம்பிக்கையினையும் குறைக்கும் என செயலாகவும் அமைந்து விடும்.

நீங்கள் ஜெயலலிதாவிடம் கேட்டிருக்கும் கேள்விகளிற்கான விடை எலக்‌ஷன் முடியும் வரை புதிராகத் தான் இருக்கும்.

நிரூபன் said...

பதிவினூடாக கோவையின் சம கால தேர்தல் பிரச்சார கூட்டம் பற்றிய தகவலை அறிய முடிந்தது.

Unknown said...

விடுங்க பாரதி அவரு ஆஃப் அடிச்சு ஆஃபாயிட்டார் போல :-)

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

நாமே ராஜா, நமக்கே விருது-5

http://speedsays.blogspot.com/2011/04/5.html

கவி அழகன் said...

நல்லா போகுது போல தேர்தல் வியாபாரம்

ராஜ நடராஜன் said...

//உண்மையில் யாருக்கு யார் கொட்டு வைத்தார்கள் என்பதை சிபிஐ விசாரணை வைத்து தான் கண்டறிய வேண்டும் போல)//

நம்ம பதிவர் சிபியைக் கூட விசாரணை செய்யச் சொல்லலாம்:)

Jana said...

இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசை கொஞ்சம்..... :)

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்