மீண்டும் வெடித்தது சமச்சீர்கல்வி பிரச்சனை: இப்பவே கண்ணைக்கட்டுதே..



ஒரு வழியாக சமச்சீர் பாடத்திட்டத்தினால் உண்டான பிரச்சனையை உச்சநீதி மன்றம் வரை சென்று, தீர்த்துக்கொண்ட சமயத்தில், அடுத்ததாக தனியார் பள்ளிகளின் "பெயர்" காரணமாக மீண்டும் நீண்டதொரு விவாதம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மெட்ரிக் பாடத்திட்டத்தினை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் பெயரில் இருக்கும் "மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்" என்பதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சமமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின் அனைத்து பள்ளிகளும் சமம் என்ற நிலையை உறுதிப்படுத்த, தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளின் பெயரில் இருந்து, மெட்ரிக் என்னும் வார்த்தையை நீக்க வேண்டும், மெட்ரிக் என்றொரு பாடத்திட்டமே இல்லாத நிலையில் ஏன் பெயரில் "மெட்ரிக்" என்பது நீடிக்க வேண்டும் என்பது சமச்சீர் கல்வியாளர்களின் கருத்து.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்னும் பெயரை, பெயரளவில் வைத்துக்கொண்டு அதன் மூலம் மீண்டும் கட்டணக்கொள்ளையில் தனியார் பள்ளி முதலாளிகள் ஈடுபடுவார்கள் என்பது அவர்களின் வாதம்.

இந்த விஷயத்தில் தமிழக அரசால் தாங்கள் கட்டாயப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு போட இருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.

உண்மையில் சமச்சீர் கல்வி குறித்த முனைவர்.திரு.முத்துக்குமரனின் பரிந்துரைகள் மொத்தம் 109. அதில் ஒன்றுதான் பொதுப்பாடத்திட்டம். தற்போது சமச்சீர் பாடத்திட்டம் என்ற ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கே அரசியல் சாயம் பூசப்பட்டதால் நீண்ட இழுபறியாகிவிட்ட்து.

அடுத்தடுத்த கட்டத்திற்கு இன்னும் ஏராளமான சிக்கல்கள் உண்டாகும் என்பதற்கான அறிகுறியே இப்போதைய பெயர் மாற்ற பிரச்சனை. இதற்கும் தெளிவான முடிவு செய்யப்பட்டால் தான் உண்மையில் சமச்சீர் கல்வி வந்ததாக அர்த்தம்.

மெட்ரிக் என்னும் வார்த்தையை இதுவரை பயன்படுத்தியதே தவறு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஏனெனில் மெட்ரிக் என்னும் வார்த்தைக்கு மேற்படிப்புக்கு தகுதி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு என்பது தான் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நுழைவுத்தேர்வு என்ற வகையில், மாநில பாடத்திட்டத்தின் ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் ஏதற்காக அந்த பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தரப்பினர் முன் வைக்கும் வாதம்.

பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட்டால், பள்ளிக்கல்வியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்து , அவர்களின் கல்வி வியாபாரம் கொடி கட்டி பறக்கவே செய்யும் என்ற வாதத்தினையும் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கடந்த பத்து,பதினைந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் அடைந்த "அசுர வளர்ச்சி" மிக அதிகம். (பள்ளிக்கட்டணம் அதிகரித்த அளவும் மிக அதிகம்)

இப்போது கூட சமச்சீர் கல்விக்கான ஆங்கில வழி பாடபுத்தகங்களை தனியார் பதிப்பகங்களின் மூலம் பெறப்போவதாகவும், தமிழ் வழி பாடப்புத்தகங்களை மட்டும் தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன.

பாடத்திட்டம், கல்வி அமைப்பு, கட்டட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான ஆய்வக வசதிகள் என எல்லா வகையிலும் சமச்சீர் நிலை வந்தால் மட்டுமே உண்மையில் சமச்சீர் கல்வியை தமிழகம் அடைந்ததாக அர்த்தம். இல்லையெனில் அது வெறும் சமரச கல்வித்திட்டமாக மட்டுமே இருக்கும்.

எது எப்படியாலும், இந்த முறை எழுந்துள்ள பெயர் பிரச்சனையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கப்படக்கூடிய விஷயமாகும்.

18 கருத்துரைகள்:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உலக வரலாற்றில் முதல் முறையாக பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் புத்தகமே கொடுக்கவில்லை என்று பெருமை வேணா அடித்துக் கொள்ளலாம்.
வேற என்ன சொல்றது? மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறது அரசியல்

Chitra said...

கல்வி பேரை சொல்லி இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் எல்லாம் வர போகுதோ? :-(

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல சமூக விழிப்புணர்வுப்பதிவு

ISR Selvakumar said...

தனியார் பள்ளிக் கொள்ளையர்களிடமிருந்து, இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ஆனால் வெகு சுலபமாக இந்தப் பிரச்சனை முறியடிக்கப்படும். அதுவுமின்றி இது ஒரு திசை திருப்ப பயன்படுத்தும் விஷயம்.

சமச்சீர் கல்வியின் மிக முக்கிய திருத்தங்களில் ஒன்று 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதே. இன்று பெரும்பாலான வகுப்புகளில் 60 மாணவர்கள் ஆட்டு மந்தைகள் போல, காற்று வசதி கூட இல்லாமல் அடைக்கப்படுகிறார்கள்.

அடுத்து இந்தப் பிரச்சனையை கல்வியாளர்கள் கையில் எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.

இதை அரசு ஏற்று பரிந்துரைத்தால், தமிழ்நாட்டில் ஒரு பள்ளி கூட இயங்க முடியாது. எனவே இது பெயர் பிரச்சனையை முன்னிறுத்தி தனியார் பள்ளிகள் தாங்களே தேவையற்ற திசை திருப்புதலில் ஈடுபடுகிறார்கள்.

அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்தப் பிரச்சனை முறியடிக்கப்படும். ஆனால் ஜெ அரசு முயலுமா என்பதுதான் கேள்வி.

Unknown said...

அரசியலில் குழந்தைகளையும் பயன் படுத்த நெனைக்கும் உள் நாட்டு சதியோ!

ஆமினா said...

தீர்ப்பை ஏற்க மறுப்பதற்காக நடத்தப்படும் திசை திருப்பும் முயற்சி தான் இது

சக்தி கல்வி மையம் said...

சமச்சீர் கல்வியின் மிக முக்கிய திருத்தங்களில் ஒன்று 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதே. இன்று பெரும்பாலான வகுப்புகளில் 60 மாணவர்கள் ஆட்டு மந்தைகள் போல, காற்று வசதி கூட இல்லாமல் அடைக்கப்படுகிறார்கள்.

அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்தப் பிரச்சனை முறியடிக்கப்படும். ஆனால் ஜெ அரசு முயலுமா என்பதுதான் கேள்வி.

Sariyaana alasal..

vidivelli said...

கைவைக்க இடமில்லாமல் அங்கேயா வைக்கிறது...
இவங்க அரசியல் வாதிகளா அல்ல என்ன மனிசர்..
மாறி மாறி நினைத்தபடி செய்வது அவங்க தொழிலாக போட்டுது..
நல்ல பதிவு...

rajamelaiyur said...

Anyhow student always suffer by the politicians

நாய் நக்ஸ் said...

Nalla pathivu....
Super,,,,Nalla pathivu....
Super,,,,

Anonymous said...

கட்டண கொள்ளையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்

ராஜ நடராஜன் said...

இந்த வருடம் குழந்தைகள் படித்து முடிக்கட்டும்.ஆண்டு இறுதி விடுமுறையில் அறிக்கை கொடுத்து புதிய ஆண்டில் மெட்ரிக்கை தூக்கி விடலாம்.

நாட்டாமை தீர்ப்பு சரிதானே:)

செங்கோவி said...

கொஞ்ச நாளைக்கு நிம்மதியா படிக்க விடுங்கய்யா..அப்புறம் அடுத்த வருசம் பார்க்கலாம்..

Mohammed Nowshath said...

இப்போதைக்கு பசங்களோட கேள்வி

லீவ் கிடைக்குமா ??????

சென்னை பித்தன் said...

பாவம் மாணவர்கள்!இன்னும் எத்தனை நாள் இந்த இழுபறி நிலை?

சாந்தி மாரியப்பன் said...

//பாடத்திட்டம், கல்வி அமைப்பு, கட்டட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான ஆய்வக வசதிகள் என எல்லா வகையிலும் சமச்சீர் நிலை வந்தால் மட்டுமே உண்மையில் சமச்சீர் கல்வியை தமிழகம் அடைந்ததாக அர்த்தம். இல்லையெனில் அது வெறும் சமரச கல்வித்திட்டமாக மட்டுமே இருக்கும்//

ரொம்ப சரி. ஆட்சியாளர்கள் மனசு வைப்பார்களா..

கவி அழகன் said...

வலி தரும் கல்வி

அ.முத்து பிரகாஷ் said...

// பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட்டால்... //

அவசியம் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
கொள்வார்களா?

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்