விகடன் பாணியில் வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு...

பாரத்...பாரதி...

 "நன்றி" காய்ச்சல்ன்னு ஒன்னு வந்தா அது சரத்குமாருக்கு தான் முதல்ல வரும்!!


   இந்த உலகம் எவ்ளோ அமைதியானது என்பது பொதிகையில் செய்திகள் பாக்கறப்பதான் தெரியுது..


  நல்லவேளையாக இரும்பு வில்''லை காமனின் ஆயுதமாக வைக்கவில்லை..கரும்புவில்''லுக்கே இவ்வளவு சேதாரம்


   மீண்டும் குழந்தைப்பருவதிற்கு போக ஆசைபடுபவர்கள், ஒரு முறை உங்கள் குழந்தையின் HOMEWORK டைரியை பார்த்துவிடுங்கள்.!!!


  செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும். 


  ஒவ்வொரு தமிழக கல்யாணத்திலும் பழைய பகைகள் பைசல் செய்யப்பட்டு, புதிய பகைகள் பிரசவிக்கப்படுகின்றன.


   கோடை விடுமுறையிலும் குழந்தைகளை ஏதாவது சம்மர் கோர்ஸில் தள்ளினால் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள கூடும்.


  சிலுவை சுமக்க தயாராயிருந்தால் மட்டும்தான், செத்தும் பிழைக்கக்கூடிய வரம் கிடைக்கும்.! #ஈஸ்டர்
பாரத்...பாரதி...
  தங்கள் குழந்தைகள் புத்திசாலிகள் என்று நிரூபிக்க பெற்றோர்கள் குட்டிகரணம் கூட அடிப்பார்கள் போல.


  யாரும் துரோகம் இழைப்பதில்லை! அவர்களை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகிறார்கள்!


  இரவை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும் பகலின் கால்கள் தெரிகிறது நிலவாய் !


  எல்லோரும் பினாமி பேர்ல சொத்து வச்சிருப்பாங்க, ஆனா அதிமுக -ல மட்டும் தான் பினாமி பேர்ல கட்சியே வச்சிருக்காங்க # ச. ம. க.


 மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து துவங்குவதாய் சொல்கிறது ஆண்களின் வரலாறு..!


   கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்


  எந்த கோவிலிலும் கண்டதில்லை உண்டியலுக்கு முன் கடவுளை.....!


 " விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். ""
பாரத்...பாரதி... ‏
  பாட்டுல பின்னாடி டான்ஸ்தான் ஆடுவாகனு பார்த்தா இந்த கெளதம்மேனன் எடுக்குற பாட்டுல பூராம் பின்னாடி பல்டி அடிச்சுகிட்டு கெடக்காய்ங்க


  டைம்பாம் வச்ச வீட்ல இருக்க மாதிரி ரசிக்கிறேன் வாழ்க்கையை.8.15- 9.00 மின் தடை ஓவர்.அடுத்து 9.45




  நல்லா படி என்று மகனிடம் அட்வைஸ் செய்தால், என் 10th மார்க் லிஸ்ட் கேட்கிறான் :( 
  
 http://bharathbharathi.blogspot.com

23 கருத்துரைகள்:

நாய் நக்ஸ் said...

Super....
Thodarnthu.....
Kalakkungal....

nellai அண்ணாச்சி said...
This comment has been removed by the author.
nellai அண்ணாச்சி said...

@Shanthhi செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும்.

nellai அண்ணாச்சி said...

@g_for_Guru "நன்றி" காய்ச்சல்ன்னு ஒன்னு வந்தா அது சரத்குமாருக்கு தான் முதல்ல வரும்!!

shanthi said...

எனது ட்வீட் உங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றது மிக்க மகிழ்ச்சி...நன்றிகள் பல:)))) @shanthhi

@krpthiru இரைவ இழுத்து ேபார்த்திக் ெகாண்டு உறங்கும் பகலின் கால்கள் ெதரிகிறது நிலவாய்

chinnapiyan said...

என்னத்த சொல்ல ? ஒவ்வொன்றும் அருமை. எல்லாமே சூப்பர். நன்றி வாழ்த்துகள்

ம.தி.சுதா said...

good collaction bro

Unknown said...

@arattaigirl கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார் --அருமையான கலெக்ஷன்

முத்தரசு said...

// @thoatta கடிதத்தை எவ்வேகத்தில் பரிசீலிப்பதென பிரதமர் அம்மாவிடமும்,பரிசீலிக்கும்படி கடிதம் எழுதுவதை அம்மா சின்னம்மாவிடமும் கற்க வேண்டும்//

தினேஷ்குமார் said...

@yazhini_appa கோடை விடுமுறையிலும் குழந்தைகளை ஏதாவது சம்மர் கோர்ஸில் தள்ளினால் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள கூடும்.

கூடல் பாலா said...

அனைத்தும் அருமை!

Anonymous said...

@growin_young இந்த பூமி வேற ஒரு கிரகத்தோட நரகமா இருக்குமோ....

Yoga.S. said...

"விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும்."

Jayadev Das said...

\\செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும்.\\ Same blood, it happened to me!!

ஹேமா said...

எல்லாமே அருமையாக இருந்தாலும்...

எந்த கோவிலிலும் கண்டதில்லை உண்டியலுக்கு முன் கடவுளை.....!

Unknown said...

@arattaigirl கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்

Yoga.S. said...

ஸ்கூட்டரிலும்,மோட்டார் சைக்கிளிலும் எழுதியிருக்கிற வாசகங்கள் யாருடைய கண்ணையாச்சும் தொறக்குமா?(தலை பொண்ணா அது?செம க்யூட்!கண்ணு பட்டுறப் போவுது,த்தூ,தூ,தூ!!!!)

மாலதி said...

மிகசிறந்யாக்கம் பாராட்டுகள்

இராஜராஜேஸ்வரி said...

My dear thala daughter! Chooooooo chweeet :)

இனிமை!

Yoga.S. said...

காலை வணக்கம்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

MARI The Great said...

//////கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்/////

அருமையான சிந்தனை ..!

Anonymous said...

all the time i used to read smaller posts which also clear
their motive, and that is also happening with
this paragraph which I am reading at this time.

My page: airplane simulator

nellai அண்ணாச்சி said...

@Rocket_Rajesh மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து துவங்குவதாய் சொல்கிறது ஆண்களின் வரலாறு..!

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்