பின்தொடர 50+ பேர் தயார் - ட்விட்டருக்கு வாங்க...

@bharathiee
140 வார்த்தைகளுக்குள் இந்த 'உலகத்தை' வார்த்தைகளில் அடக்க முடியுமா உங்களால்? முடியும் என்றால் உங்களுக்காக இடம் டிவிட்டர் தான்..


வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.


கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.


ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.


அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.


நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.


உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.


RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)


ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.


ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.


எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)


நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)

விகடன் பாணியில் வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு...

பாரத்...பாரதி...

 "நன்றி" காய்ச்சல்ன்னு ஒன்னு வந்தா அது சரத்குமாருக்கு தான் முதல்ல வரும்!!


   இந்த உலகம் எவ்ளோ அமைதியானது என்பது பொதிகையில் செய்திகள் பாக்கறப்பதான் தெரியுது..


  நல்லவேளையாக இரும்பு வில்''லை காமனின் ஆயுதமாக வைக்கவில்லை..கரும்புவில்''லுக்கே இவ்வளவு சேதாரம்


   மீண்டும் குழந்தைப்பருவதிற்கு போக ஆசைபடுபவர்கள், ஒரு முறை உங்கள் குழந்தையின் HOMEWORK டைரியை பார்த்துவிடுங்கள்.!!!


  செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும். 


  ஒவ்வொரு தமிழக கல்யாணத்திலும் பழைய பகைகள் பைசல் செய்யப்பட்டு, புதிய பகைகள் பிரசவிக்கப்படுகின்றன.


   கோடை விடுமுறையிலும் குழந்தைகளை ஏதாவது சம்மர் கோர்ஸில் தள்ளினால் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள கூடும்.


  சிலுவை சுமக்க தயாராயிருந்தால் மட்டும்தான், செத்தும் பிழைக்கக்கூடிய வரம் கிடைக்கும்.! #ஈஸ்டர்
பாரத்...பாரதி...
  தங்கள் குழந்தைகள் புத்திசாலிகள் என்று நிரூபிக்க பெற்றோர்கள் குட்டிகரணம் கூட அடிப்பார்கள் போல.


  யாரும் துரோகம் இழைப்பதில்லை! அவர்களை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகிறார்கள்!


  இரவை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும் பகலின் கால்கள் தெரிகிறது நிலவாய் !


  எல்லோரும் பினாமி பேர்ல சொத்து வச்சிருப்பாங்க, ஆனா அதிமுக -ல மட்டும் தான் பினாமி பேர்ல கட்சியே வச்சிருக்காங்க # ச. ம. க.


 மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து துவங்குவதாய் சொல்கிறது ஆண்களின் வரலாறு..!


   கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்


  எந்த கோவிலிலும் கண்டதில்லை உண்டியலுக்கு முன் கடவுளை.....!


 " விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். ""
பாரத்...பாரதி... ‏
  பாட்டுல பின்னாடி டான்ஸ்தான் ஆடுவாகனு பார்த்தா இந்த கெளதம்மேனன் எடுக்குற பாட்டுல பூராம் பின்னாடி பல்டி அடிச்சுகிட்டு கெடக்காய்ங்க


  டைம்பாம் வச்ச வீட்ல இருக்க மாதிரி ரசிக்கிறேன் வாழ்க்கையை.8.15- 9.00 மின் தடை ஓவர்.அடுத்து 9.45




  நல்லா படி என்று மகனிடம் அட்வைஸ் செய்தால், என் 10th மார்க் லிஸ்ட் கேட்கிறான் :( 
  
 http://bharathbharathi.blogspot.com

உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும்..


bharath...bharathi..
இப்போதைய பயணங்களில் எல்லாம்; மீதி கட்டப்படாமல், பாதியில் நிற்கும் கட்டிடங்கள் அதிகம் பார்க்க நேரிடுகிறது. உள்ளுக்குள் இனம் புரியாத அழுத்தம் மனசுக்குள் குடிகொள்கிறது.

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இயலாது, பாதியில் மரித்து போகும் கூட்டுப்புழுக்கள் போல, வீடு என்னும் அந்தஸ்து பெறாமல் மரித்துப்போகும் கட்டிடங்கள் ஏராளம்.

பணம், ஆட்கள் தகராறு, வடிவமைப்பு குழப்பம்(வாஸ்து),
இன்னும் ஏதோ வெளியே சொல்ல முடியாத காரணங்களால், கட்டிடங்கள், வீடாக பரிமாண மாற்றம் கொள்ள இயலாமல் நிற்கின்றன.

தயங்கி, தயங்கி நின்றதால், சொல்லாத காதலாக நீர்த்துப்போன, தோற்றுப் போன காதல்காரர்கள் இங்கே ஏராளம்.

காதல் தடுக்கி விழுந்தவர்களை விட, கட்டிடம் தடுக்கி விழுந்தவர்கள் எண்ணிக்கை இந்த தேசத்தில் மிக அதிகம்.
bharath...bharathi..

பாதியில் நிற்கும் வீடுகளின் முகப்புகளில், வாரப்படாத தலையோடு, ஒரு வார தாடியோடு, சற்றே கனந்த சிந்தனையோடு நிற்க்கும் மனிதரிடம் பேசிப்பாருங்கள். வாழ்க்கையின் அத்துணைச் சொல்லும் அர்த்தம் அவரிடம் இருக்கும்.

"அட... போன மாசம் கூட கேட்டு இருக்கலாமே? இப்ப பாருங்க கையில சுத்தமா காசு இல்லை"

"அட... போங்கண்ணே.. நானே உங்ககிட்டே கேட்கலாமுன்னு இருந்தேன்.."

"நீங்க காசு கொடுங்க சார்..., அடுத்த நாள்ல இருந்து, நிறுத்துன வேலையை ஆரம்பிச்சுடலாம்..."

"அப்பா.. நாம எப்ப புது வீட்டுக்கு போவோம்.. என்னோட பிரண்ட்ஸ் - கிட்ட எல்லாம் சொல்லி வெச்சுட்டேன்.."

"என்னங்க.., இந்த நகையை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமா?"

உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும், இந்த உரையாடல்களின் பின், முன் நிகழ்ந்தவைகளை யூகிக்க முடிந்தால்...
bharath...bharathi..
"கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டை கட்டிப்பார்.."

"ஏதேனும் தடங்கல் வந்து விடுமோ" என்ற கவலையோடும், தவிப்போடும் யாரோ ஒருவர் நடமாடிக்கொண்டே இருப்பார்.., எல்லா புதுமனை புகுவிழா, திருமண விழா நிகழும் எல்லா இல்லங்களிலும்..., விழா நிகழும் நாளின் முந்திய இரவில் கூட...

எல்லா வீட்டின் சுவர்களிலும், பல உயிர்களின் வேதனை குழைத்து பூசப்படுகின்றன. சுவர்களின் வனப்புமிக்க, வண்ணங்களைத் தாண்டி, உணர்வு துடிப்பை எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை..

என்னால் ஏதும் செய்ய இயலாது என்றாலும் கூட, இதழ்கள் வழி நம்பிக்கையூட்டுகிறேன்..

உள்ளுக்குள் பிரார்த்திக்கிறேன்.. எங்கேனும் பாதியில் நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது,  பாதி பேச்சுவார்த்தையில் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்களைப் பார்க்கும் போதும்.



பலரால் கண்டு கொள்ளப்படத முந்தைய பதிவு:
எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.


bharathbharathi

அது என்னவோ எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் வரும் மனிதர்கள் ரொம்ப நாள் பழகியது போல, மனதில் பச்சக்-கென்று ஒட்டிக்கொள்கிறார்கள். இது துணையெழுத்து முதல் கொண்டு நிரூபணமாகி கொண்டே இருக்கிறது. அவரின் உபபாண்டவம், நெடுங்குருதி எல்லாம் எப்படி என்று தெரியவில்லை. விகடன் வழி வாசித்த அனைத்திலும் எஸ்.ரா.வின் கதை மாந்தர்கள் மனதை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வழக்கமா அவரின் எழுத்துகளை படிக்கும் போது, "இவையெல்லாம் உண்மையாகவே நடந்திருக்குமா, இல்ல வெறும் புனையப்பட்டவையா?" என்ற எண்ணம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் முதல் முறையாக சிறுகதை-னு சொல்றாங்க ஆனா உண்மை சம்பவம் மாதிரி இருக்குதே அப்படினு ஆச்சர்யப்படவைத்தது, விகடன் தீபாவளி மலரில் வந்த (நடிகை அனுஷ்கா முகப்பு அட்டையில்) "கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" என்ற சிறுகதை.
நிச்சயமா இனி எப்போதும் கோகிலவாணியை எனக்கு மறக்காது, அப்படி மனதில் பதியவைத்துவிட்டார் எஸ்.ரா.
bharathbharathi

கதை என்பது இது தான், மிக அழகு என்று சொல்லமுடியாத, கருத்த தேகமுடைய கோகிலவாணி, தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, காதலிப்பது பற்றிய கற்பனைகளை மனதில் புகுத்திக்கொண்டு, காதலிக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டே இருக்கிறாள். நீண்ட காலம் காத்திருந்து, கற்பனைக் காதலனோடு கொஞ்சி குலாவினாலும், யாரும் அவளை காதலிப்பதாக இல்லை.

காதலிப்பது மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் பற்றுக்கோல் போல நினைத்துக்கொண்டிருந்த அவளின் வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் மகேஷை, தன்னுடைய காதலனாக வரித்துக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் மகேஷின் அன்பை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் போது, அவள் வாழ்க்கையில் துரை குறுக்கிடுகிறாள்.

தன்னை காதலிக்க வேண்டும் என கோகிலவாணியை கட்டாயப்படுத்துகிறான் துரை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவள் துரையை மறுத்தளிக்க, ஒரு கட்டத்தில் கடுப்பில் துரை அவள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான்.

பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வழக்கு நடந்து, முடிவில் துரை தண்டிக்கப்படுகிறான். இடையில் நமக்கு இதெல்லாம் ஒத்துவராது என மகேஷும் கழண்டு கொள்ள, தனிமரமாக மாறுகிறாள் கோகிலவாணி.

குடும்பமும் தூற்றி, விலக்கி விட்டநிலையில், ஆசிட் வீசப்பட்ட முகத்தோடு, உபாசனா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்கிறாள்.

"எதற்காகக் காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா?'
"ஏன் துரை இப்படி தன் முகத்தில் ஆசிட் ஊற்றினான்?"
"தன் காதலை உலகம் ஏன் ஏற்கமறுத்தது? எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனையை வழங்கப்பட்டது? என்ற கேள்விகளோடு விடையில்லாது நீள்கிறது கோகிலவாணியின் வாழ்வு.
bharathbharathi
இந்த கதை 90களில் நடந்தது போல, எஸ்.ரா. காட்டியிருக்கிறார், ஏனெனில் காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவது என்பது அப்போது தான் கலாச்சாரமாகவே இருந்தது என்று கூறலாம்.

தன் மீது ஆசிட் ஊற்றப்பட்டது மற்றவர்களைப் பொறுத்தவரை; சின்னஞ்சிறு நிகழ்வாக மாறிவிட்டாலும், தன்னுடைய தந்தை, அண்ணன்; ஏன் மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர், வழக்கில் ஆஜராகிய வக்கீல் என அனைவராலும் கேவலப்படுத்தப்படும் கோகிலவாணி, ஒரு நாள் தன் மீது ஆசிட் வீசிய துரையை கடற்கரையில் அவன் மனைவி மற்றும்  குழந்தையுடன் பார்க்கிறாள்.

கோகிலவாணியைப் பார்த்தவுடன், மனைவிடம் ஏதோ சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிடுகிறான் துரை. கண்ணில் இருந்து துரை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கடற்கரையெங்கும் அப்போது கூட காதலர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இவர்களில் ஏதோவொரு பெண் தன்னைப்போல்
முகம் எரிந்து போகக்கூடும். அல்லது வன்கொலை செய்யப்படப்படவும் கூடலாம். வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? காதல் வன்முறையில் தான் வேர் ஊன்றியிருக்கிறதா? என நிர்கதிக்கு உள்ளாகிய கோகிலவாணியின் எண்ணவோட்டமாய் வெளிப்படுகிறார் எஸ்.ரா.

இந்த கதையில் வருவது போல் இல்லாமல், ஒரு வேளை மகேஷ்-க்கு முன்பாக துரையை அவள் பார்த்திருந்தால் , துரையைக் காதலிக்கத் தொடங்கியிருப்பாள் என்பது தான் உண்மை. ஏனெனில் யாரோ ஒருவரை காதலித்தே ஆக வேண்டும் எனபதைத் தான் வாழ்நாள் லட்சியமாக கொண்டவளாக சிறுவயதில் இருந்தே கற்பனைக்கோட்டை கட்டியவள் தானே கோகிலவாணி?.
   
இது கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயமாக நான் கருதவில்லை. இன்றைய சூழ்நிலையில் பருவ வயதின் தொடக்கத்தில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இந்த மனநிலைக்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் சிறுமிகள் கூட காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் தங்களுக்கான சமூக அங்கீகாரமாக நினைக்கத்தொடங்கியிருப்பது உண்மை.

யாரோ ஒருவன் காதலிக்க தேவை என்று நினைப்பவர்கள், மிக மோசமான மனநிலையில் இருப்பவர்களிடம் கிடைத்தால் என்ன ஆவார்கள்; யோசிக்கவே வருத்தமாக இருக்கிறது.

காதலிப்பதற்காகவே கல்லூரியில் படிக்கிறார்கள் எனபது போன்ற தோற்றத்தை முன்பு ஏற்ப்படுத்தி வந்த சினிமா போன்ற மீடியா, இப்போதெல்லாம் பள்ளியில் காதல் வருவது போல காட்டுவது தான், இளம் பிஞ்சுகளிடம் காதலிப்பது மட்டுமே, பள்ளியில் படிப்பதற்கு அர்த்தம் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் காதல் எனபது தொற்றுநோய் போல, ஒருவர் அதில் பாதிக்கப்பட்டால், கூட இருக்கும் அனைவருக்கும் அது பரவி விடும் அல்லது பரப்பப்படும்.
bharathbharathi
இந்த கதையில் கூட, காதல் பற்றிய கிளர்ச்சிகளை, கோகிலவாணி தன்னுடைய தோழி இந்திராவிடம் பகிர்ந்து கொள்ள, அவளும் காதலுக்கு தயாராகி, பக்கத்து வீட்டில் இருந்த முரளி என்பனிடம் உதட்டைக் கடிக்க கொடுத்துவிடுகிறார். அவன் கணக்கில் காதல் என்பது இப்படியாக இருந்திருக்கிறது.

காதல் என்பது சரியா தவறா என்பது யாரால், யார் காதலிக்கப்படுகிறார்கள்; வாழ்வின் எந்த கட்டத்தில் காதலிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

காதல் எண்ணம் வந்ததே என்பது வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுமா என கேட்பவர்களுக்கு இந்த சிறுகதையை படிக்கக்கொடுங்கள். குறைந்தபட்சம் எஸ்.ரா.வின் வார்த்தை விளையாட்டாவது அவர்களைக் கட்டிப்போடும். வாழ்க்கையின் விசித்திரங்கள் எனபது ஏராளம் என்பதும், பால் திரிந்து விடுவது போல அடுத்தடுத்த கணத்தில் வாழ்க்கை சட்டென்று மாறிவிடும் என்பதும் புலப்படும்.


bharathbharathi

எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு அறிமுகம்.

எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறு கிராமத்தில் 1966இல் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறுதைத் தொகுப்புகள்: எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள், நடந்து செல்லும் நீரூற்று. நாவல்: உப பாண்டவம், நெடுங்குருதி, உறுபசி. கட்டுரைத் தொகுப்புகள்: விழித்திருப்பவனின் இரவு, இலைகளை வியக்கும் மரம், என்றார் போர்ஹே, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி. திரைப்பட நூல்கள்: பதேர் பாஞ்சாலி-நிதர்சனத்தின் பதிவுகள், அயல் சினிமா, உலக சினிமா. குழந்தைகள் நூல்கள்: கால் முளைத்த கதைகள், ஏழு தலை நகரம், கிறுகிறு வானம்.நாடகத் தொகுப்பு: அரவான். நேர்காணல் தொகுப்பு: எப்போதுமிருக்கும் கதை.

எஸ்.ரா.வின் இணையதளம் http://www.sramakrishnan.com/ 

விகடன் பார்வைக்கு சில அசத்தல் ட்விட்டுகள் - சிறப்பு வலைபாயுதே...

: நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற !

: குருட்டு பிச்சைக்காரன் தொலைத்த புல்லாங்குழலை எடுத்து கொடுக்கிறான் பார் - அவன் கடவுள். 


 பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு... பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)


 உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.


 "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி குறிப்பிடுவது இளையராஜாவைத் தானோ!


 கற்பனையில் பறக்கும் சில குதிரைகள், நிஜ வாழ்வில், கழுதைகளிடம் தோற்றுப்போகின்றன!


 ஈழ தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுனா, காங்கிரஸ் அகராதியில் மிச்சமிருப்பவர்களையும் முடிச்சிடுனு அர்த்தம்!


 ஏண்டா எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பன்றத தவிர வேற வேலயே இல்லயா#டிவி விளம்பரம் பாத்தாலே கடுப்பு ஆகுது.


 மின்வெட்டு குறித்து கருணாநிதியை எச்சரித்தேன்- சிதம்பரம்# அதான் சட்டினிய கரண்ட் போறத்துக்குள்ள மிக்சில அரைச்சுகிட்டாங்க.!!


 சாலையில் கிடக்கிறது சல்லி சல்லியாய்..... மலையின் ஆணவம்!
http://bharathbharathi.blogspot.com

 கோமதியை கோம்ஸ் என்று கூப்டுவதை போல ஈமு கோழியை #ஈம்ஸ் என்று சுருக்கி கூப்பிடலாமே !

 டேமேஜர்ங்கிறவன் "ஒரு சப்ப மேட்டர குழப்புற மாதிரி சொல்லி அந்த குழப்புத்துக்கு காரணம் நீங்கதான்னு உங்களையே நம்ம வைக்கிறவன்!"

: பாகிஸ்தானிற்கு மின்சாரம் வழங்குகிறது இந்தியா # சானியா மிர்சாவையே சம்சாரமா கொடுத்தாச்சு, இனி எதை கொடுத்தா என்ன?

 பட்ஜெட் அறிக்கையை கிழித்து கருணாநிதி முகத்தில் எறிந்தது யார்? ஜெவுக்கு ஸ்டாலின் கேள்வி#முக: விடுப்பா. அதான் எறிஞ்சாச்சுல!

 பூவா தலையா? பூ விழுந்தால் நான் உனக்கு, தலை விழுந்தால் நீ எனக்கு..

 நல்ல தூக்கத்தில்...நம் குறட்டை `சப்தம்` நமக்கே கேட்காமல் இருப்பதுதான்...நாம் செய்த பூர்வ புண்ணியம்!

 நம்மை கடுப்பேற்றவே படைக்கப்பட்டவர்கள்# பார்க்கிங் ஏரியாவில் வேலை செய்யும் செக்கியுரிட்டீக்கள்..
 IPL 2012 - Complete Schedule.

 அரசியல் பாதையை தேர்வு செய்தது தவறு,டென்னிஸிலேயே இருந்திருக்கலாம் .ப.சி #அங்க வீடியோ எடுப்பாங்க,கோல்மால் செஞ்சு ஜெயிக்கமுடியாது

 கோயிலில் சாமியாடும் போது மட்டும் பாய்ந்து வரும் கடவுள்கள் ஏனோ வரவேண்டிய நேரங்களில் வருவதில்லை.

: மனைவியை முழுமையாக புரிந்துகொள்ளும் போது மணிவிழா கொண்டாடப்படுகிறது!”

 எல்லா நகைச்சுவையாளனுக்குள்ளும் ஓர் ஆறாத காயம் பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்கிறது எப்போதும்!

 ஜெ.வை போயஸ்கார்டனில் சந்தித்தார் சசி#சசிகலாவை திருமணத்தில் சந்தித்தார் நடராஜன்#நடராஜன் திருமணத்தை நடத்திவைத்தார் கலைஞர்.
 வடகரை வேலன் #FB

 திமுக தலைவருக்கு ஒரு கேள்வி "அந்த தியாகிய வெளிய கொண்டுவர ஏதாவது திட்டம் இருக்கா? இல்லையா?"

 காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!

 கடந்த 24 வருஷத்தில் கரகாட்டக்காரன் சண்முகசுந்தரத்துக்கு அடுத்து இத்தனை அக்கா போட்டது இந்த தங்கச்சிக்காதான் #சசிகலாஅறிக்கை

 ஐசோட மூணு நெலவரத்த பாத்தா சவுந்தர்யாவோட கோச்சடயான்.? கலவரமா இருக்குப்பா

 உலகின் பயங்கரமான தீவிரவாதகுழுக்கள்;அல்கொய்தா,லஸ்கர்- இ-தொய்பா,ஹிஜுபுல் முகாஜுதின் மற்றும் கும்பலாக இருக்கும் கல்லூரி பெண்கள்.

 மின்சாரம் போனதிலிருந்து அழுது கொண்டேயிருக்கிறது பக்கத்து வீட்டுக் குழந்தை #அம்மாவின் திராணி குழந்தைக்கு இல்லை.

  மின்சாரப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு...

 ஏம்ப்பா இந்த விகடன்ல ட்விட் வர்றதுக்கு எதாவது காச கீச குடுத்து மூவ் பண்ண முடியுமா?

 வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

 ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதை விட...ஊழல் செய்ய கற்று கொடுங்கள்;அது அவன் பரம்பரைக்கே பயன்படும்:-)

 எல்லாக் கட்டணத்தையும் உயர்த்திய அம்மாக்கு ஒரு வேண்டுகோள்: சம்பளத்தையும் கட்டணமா நினச்சு ஒரு 50% உயர்த்திருங்க!!

 விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலாம்.

 எல்லா காலையும் கவலையுடனும் எல்லா மாலையும் கேள்வியுடனும் முடிந்தால் உன் வேலையை மற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்றர்த்தம் !

 விலையேற்றத்தை முன்னிட்டு காற்றடிக்க சைக்கிள் வீல் ஒன்றுக்கு RS.2 ,டூ வீலர்களுக்கு வீல் ஒன்றுக்கு RS.5 # டேய் டக்ளஸு நீயுமாடா???

 நான் எனக்குப் போட்டுக்கிற சோப்பு ஒரே பிராண்ட்தான். ஆனா மத்தவங்களுக்குப் போட்ற சோப்பு வேற வேற பிராண்ட்ஸ்.
இதுல எதுவும் விகடனாருக்கு பிடிக்கலைனா... பெரும் அக்கப்போராக அல்லவா போய்விடும்..டும்..டும்..'
டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்