சுந்தரா அவர்களின் சவால் கவிதை.

குழந்தைகள் தினத்துக்காக நாங்கள் நடத்திய
அதிரடி  கவிதை போட்டிக்காக
சுந்தரா அவர்கள் அனுப்பிய கவிதை இது..


************************************************************

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!





எனக்கு, எல்ல்ல்லாம் தெரியும்,
எடுத்துச் சொன்னால் பிடிக்காது,
முன்னாள் கதையெல்லாம்
இந்நாளில் எனக்கெதற்கு?
முன்னாலிருக்கிறது
என்
விரிந்த உலகமென்று
கண்ணாடித் திரைக்குமுன்னால்
கவிழ்ந்துகிடக்கிற தளிர்கள்...

இது,
சுட்டும் விழிச்சுடர்களின்
சுதந்திரம் கைப்பற்றிக்
கணினியும் தொலைக்காட்சியும்
ஆட்சிநடத்துகிற காலம்...

எட்டுக்கேள்வி யெழுப்பியபின்
தட்டுத் தடுமாறிவரும்
ஒற்றைப் பதிலும்கூட
சுற்றிச்சுற்றி வருகிறது
கற்பனை உருவங்களோடு...

கனவு காணச்சொன்ன 

கலாம் ஐயா,
இவர்களின்
உறக்கத்திற்கு உதவவும்
வழியொன்றைச் சொல்லுங்கள்...

ஏனெனில்,
இரவுகளைக்கூட ஆக்கிரமித்திருக்கிறது
இளைய தலைமுறையின்
இன்டர்நெட் மோகம்...

எழும்காலையில் தேடிப்படித்தும்
விழும் மாலையில் கூடிக்களித்தும்
விளையாடி மகிழவேண்டிய வயதில்,
அலைபேசியும் கையுமாய்
அடைந்துகிடக்கிறது வீட்டில்...

நிஜம்தொலைத்துத் தளிர்களை
நிழலோடு பழக்கிவிடும்,
மாய உலகத்தின்
மயக்கத்திலிருந்து விடுபட,
வீட்டுக்கு வெளியே
சிறகுவிரிக்கக் கற்றுக்கொடுங்கள்...

புத்தகத்துப் படிப்பும்
கற்றுத்தரக் கணினியுமென்று
கோடுபோட்ட வாழ்க்கையாய்க்
கொஞ்சநேரம் கழிந்தாலும்,
மிச்சமாகும் நேரங்களில்
சிகரம்தொடப் பயிற்றுங்கள்...

காலத்தின் கோலத்தில்
கருநிழல் சூழுகையில்,
எரிதழல் கொண்டுவாவென்று
எதிர்காலம் அழைக்கக்கூடும்...

அதற்கு,
அக்கினிக் குஞ்சுகள்
நிச்சயம் அவசியம்!


சுந்தரா. 

http://kurinjimalargal.blogspot.com/


14 கருத்துரைகள்:

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை சுந்தரா..

Unknown said...

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!

அருமையான தலைப்பு..

குழந்தைகளுக்கு தங்களின் முதல் ஐந்து வருட கால கட்டங்களில் பெற்றோர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள். அவர்களை விட உலகில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று எண்ணமிடுவார்கள்.
பின்னர் ஆசிரியர்களே எல்லாம் தெரிந்தவர்கள் என்று சிந்திப்பார்கள். அதன் பின் குமாரப்பருவத்தில் தனக்கே எல்லாம் தெரியும் என எண்ண நினைப்பாரகள்.

ஆனால் தொலைக்காட்சியும், கணிணியும் வந்துவிட்ட பின் , மிக குறைந்த வயதிலேயே எனக்கு மட்டும் எல்லாம் தெரியும் எண்ணம் வந்துவிடுகிறது என்பதை கவிதையின் ஆரம்ப வரிகள் காட்டுகின்றன.

குழந்தைப் பருவத்தின் சந்தோஷங்களை தொலைந்து போய் விடக்கூடாது என்பதே கவிதையின் நோக்கம், விருப்பம், ஆசை ...

Arun Prasath said...

சுல்னு உறைக்கும் படி இருக்கு

Unknown said...

பிடித்த வரிகள்..


//கலாம் ஐயா,இவர்களின்உறக்கத்திற்கு உதவவும் வழியொன்றைச் சொல்லுங்கள்...//
//மிச்சமாகும் நேரங்களில்சிகரம்தொடப் பயிற்றுங்கள்... //

செல்வா said...

//விரிந்த உலகமென்று
கண்ணாடித் திரைக்குமுன்னால்
கவிழ்ந்துகிடக்கிற தளிர்கள்.../

இது உண்மைதாங்க .,

//இளைய தலைமுறையின்
இன்டர்நெட் மோகம்...//

நிதர்சனம் ..!

உண்மைலேயே கவிதை ரொம்ப அருமையா அதே சமயம் இந்தக் காலத்திற்கு ஏற்ற கவிதையா வந்திருக்குங்க .. !! கலக்கல் ..

தினேஷ்குமார் said...

"எழும்காலையில் தேடிப்படித்தும்
விழும் மாலையில் கூடிக்களித்தும்
விளையாடி மகிழவேண்டிய வயதில்,
அலைபேசியும் கையுமாய்
அடைந்துகிடக்கிறது வீட்டில்...""

எதிர்கால இளைய சமுதாயம் கேள்விக்குறியாக

vimalanperali said...

வணக்கம்,வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.
இளையவர்களுக்கு வெளி உலகம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடுகிறது.

அன்பரசன் said...

நல்ல கவிதை

NaSo said...

கவிதையும் அதற்கான படமும் அருமை.

வினோ said...

அருமையான கவிதை...

எஸ்.கே said...

அனல் தெறிக்கும் கவிதை! அருமை!

சுந்தரா said...

கவிதையை வெளியிட்ட பாரத்...பாரதிக்கும் பாராட்டிய நட்புக்களுக்கும் நன்றி!

ஆமினா said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!!!!

Jaleela Kamal said...

அருமை சுந்தரா வெ்்றி பெற வாழ்த்துக்கள்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்