dineshkumar அவர்களின் படைப்பு இது.--அதிரடி கவிதை போட்டி...

குழந்தைகள் தின விழா சிறப்புக்கவிதை

அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூலரைத்து கொட்டமடக்கு
அடிபனியானின்????
வாள்யுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்.

--dineshkumar


http://marumlogam.blogspot.com

10 கருத்துரைகள்:

எல் கே said...

கவிதை அருமை. எழுதிய தினேஷுக்கும், வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Unknown said...

//களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு//

தினேஷ்குமார் said...

சிறப்பித்தமைக்கு வணக்கம் ரோசாப்பூந்தோட்டமே

Unknown said...

//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//

சுவையான வார்த்தைகள்

Unknown said...

சொல்லும், பொருளும் அருமை தினேஷ் .. வாழ்த்தும், பாராட்டும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

NaSo said...

தினேஷ்க்கு வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

நல்ல கவிதை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமையான கவிதை எழுதிய தினேஷுக்கு வாழ்த்துக்கள்!

பல உதவி ஆசிரியர்களைக் கொண்டு கவிதைகள்,
கட்டுரைகள், குறும்புகள் என்று வித்தியாசமாய்
இடுகைகளிட்டு பளபளப்பாய் பதிவுகள் இடும்
உங்களுக்கும் (பாரத் பாரதி) நல்வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் என் பனிவான வணக்கங்கள் ரோசா பூந்தோட்டமே உமக்கும்தான்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்