பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த திரையிசைப்பாடல்களின் தொகுப்பு இது.
பாடல்களைக் கண்டறிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை, ஏராளமான பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வரிசைப்படுத்துததலில் தான் சிரமம் இருக்கிறது. எனவே இதனில் களம் இறங்க பதிவர்களை அன்போடு அழைக்கிறோம்...
10.தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா..
படம்: கோபுர வாசலிலே...
அடுத்த முறை இந்த பாடலைக் கேட்கும்போது பாடல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் புல்லாங்குழலை மட்டும் தனியே கவனித்துப் பாருங்கள். பாடலின் மிகப்பெரிய சுகமே அதுதான்.

//நள்ளிரவில் நான் கண் விழிக்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்..


9.ராசாவே உன்ன நம்பி இந்த ரோசா பூ இருக்குதுங்க...
படம்: முதல் மரியாதை.

//பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம பயிரும் விளைஞ்சாச்சு//
இரண்டு மணி நேர படத்தின் திரைக்கதையின் சூட்சுமத்தை  பாடலின் இந்த இரண்டு வரிகள்வெளிப்படுத்துகிறது.
ரசித்த வரிகள்..

//களங்கம் வந்தா என்னப் பாரு,
அதுக்கும் நிலானுதான் பேரு.
மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித்தேரு..//



8.கள்ளியடி கள்ளி ..
படம்: நந்தா.                            இயக்கம்: பாலா.
இலங்கையிலிருந்து இங்கே வாழ வந்த பெண்ணின் திருமணத்திற்கு முன்பாக வரும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் "மானமுள்ள தமிழச்சி" தாமரை.
நமது உறவெல்லாம் நம் நாட்டில் தான் என்று நினைத்தோம் தவறாகத்தான்,  இங்கும் உறவு உள்ளது; தமிழர் மரபு நல்லது, இது இந்த பாடலின் வரிகள் -

தமிழகத்தமிழர்களை உறவாகி எண்ணி நாம் கைக்கொடுப்போம் எண்ணி இருந்தவர்களும், நாம் தான் ஏதும் செய்யாமல் வெக்கம் கெட்டுப் போய்விட்டோம். 
ஒரு விதவை , ஒரு இன பெண்களையே விதவையாக்கிய வரலாற்றை மிக எளிமையான எடுத்துக்கொண்டு விட்டோம்.
 இறுதியாய் கூட ஏதும் செய்யாமல் விட்டுவிட்டவர்களை பார்த்து,   ஈழதமிழர்கள் காறித்துப்பியது ஆறு அரைக் கோடி தமிழர்கள் மீதும் விழுந்திருக்கிறது.
 உங்க டூத் போஸ்ட்டி(லாவது) உப்பு இருக்கா?-னு   விளம்பரங்கள் கூட நம்மை கேலி செய்கின்றன. 

பாடலில் முடிவில் அந்த பெண் மட்டும் தனியாக நிற்பாள். பார்க்கும் போதே மனசுக்குள் "ஏதோ" கவலையாய் ஓடும்.

7.கொஞ்சும் மைனாக்களே..கொஞ்சும் மைனாக்களே..
படம்: கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்.

//நாளை வெறும் கனவு நான் ஏன் நம்பணும்...
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா..
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவையில்லாமல் வாழ்க்கையா..//

மே மாதம் படத்திலுள்ள மார்கழிப் பூவே பாடலும் இந்தப் பாடலுக்கு
இணையான பாடல் தான்.

6.பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி, குங்குமம் வந்ததம்மா...
படம்: அழகி.
சாதனா சர்கத்தின் இனிய குரலில், ராஜாவின் இசை திருவிழா இந்தப்பாடல்.. இந்தப் பாடலிலும் அருண்மொழியின் புல்லாங்குழல் விளையாடி இருக்கும்.

//வான வில்லின் வரவு தனை யாரறிவார்?
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாருரைப்பார்?//
                       
// செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா..//

/அன்று சென்ற இளம் பருவம் -அதை
எண்ண எண்ண மனம் நிறையும்//

5.நெஞ்சினிலே...நெஞ்சினிலே...
படம்: உயிரே.
                                     
திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணின் சந்தோஷத்தை காட்டும்
"வைர"வரிகளைக் கொண்ட பாடல்..

//ஓரப்பார்வை வீசுவாய் உயிரின் கயிறு அவிழுமே..
உலகின் ஓசை தொடங்கும் போது ,
 உயிரின் ஓசை தொடங்குமே..//

ஜானகியின் குரல்,சொந்த மாநிலத்தில் ஓடும் சந்தோஷ் சிவனின் கேமரா, ஷாருக்கானின் சுறுசுறுப்பு இவையெல்லாம் இப்பாடலின் பிளஸ் பாயிண்டுகள்...

4.பாடவா உன் பாடலை..
படம், கதை,எழுதியவர்,பாடியவர், காட்சியாக்கம்
ஏதும் தெரியவில்லை ஆனால் பாடலில் வழியும் உணர்ச்சிகள் மனதை நெருடிச்செல்கிறது, எப்போது கேட்டாலும்..

//தேங்கும் கண்ணீரில் உந்தன் பிம்பம்..
பூவின் நெஞ்சில் பூகம்பம்..
உன் பாதை எங்கே என் பாதம் அங்கே.
வளராமல் தேயாமல் வாழும் நிலா இங்கே..//

3.யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே....
படம்: தளபதி. குரல்: மித்தாலி குழுவினர்.
சின்னஞ்சிறு பாடல். பாடல் மனதிற்கு இனிமை.பாடலின்
காட்சியாக்கம் கண்ணுக்கு இனிமை. பெரும்பாலானோர்க்கு மிக பிடித்த பாடல்.

// ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..
ஆசை வைப்பதே அன்புத்தொல்லையோ...
பாவம் ராதா..//


2.விடிகின்ற பொழுது தெரிந்திடுமா.. கடலலை கரையை கடந்திடுமா...
படம்: ராம்.                                                           இயக்கம்: அமீர்.

இந்தப் பாடலை எத்தனைப்பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அன்பின் வலியை சிநேகனின் வரிகளில், யுவனின் இசையில்....
அடஅட...கேட்டால் மட்டுமே உணர முடியும்..

//தீயில் என்னை நிற்கவைத்து சிரிக்கிறதே...
தீர்ப்பு என்ன, எந்தன் நெஞ்சம் கேட்கிறதே...
காட்டுத்தீ போல கண் மூடித்தனமாய்
என்  சோகம் சுடர்விட்டு எரியுதடா...
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா..
உன்னை விட கல்லறையே பக்கமடா..//

1.உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...

படம்: இதய கமலம்.  குரல்: பி.சுசிலா.
பாடலாசிரியர்:கண்ணதாசன்.

//இங்கு நீயொரு பாதி, நானொரு பாதி,
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி. //
//நீ அந்தக் கோவில்; நான் அங்கு தீபம்.
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல... //
 
//என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே//

ஏராளமான பழையப் பாடல்கள் பெண் மனதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன, அவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தேடுக்க, அது முதலிடத்தைத் தட்டிச் சென்று விட்டது. Old is Gold என்பதில் கொஞ்சமல்ல, நிறையவே உண்மை இருக்கிறது.




பெண் மனசினை வெளிப்படுத்தும் திரைப்படப் பாடல்களை வரிசைப்படுத்தி, தொடர் பதிவு இட
தினேஷ் குமார், நீரோடை மலிக்கா, அருண் பிரசாத் , ப.செல்வக்குமார் ஆகியோரை ஆவலாய் அழைக்கிறோம்.(ஒருத்தராவது  வருவாங்களா?)

இவர்களில் யாரும்  பதிவிடவில்லை, நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொடூரத்தாக்குதல் நிகழ்த்துவோம் என வலையுலகை செல்லமாய் எச்சரிக்கை செய்கிறோம்..

20 கருத்துரைகள்:

வினோ said...

அருமையான பாடல்கள்.... நல்ல தொகுப்பு...

NaSo said...

எனக்கு பிடித்த பாடல்கள் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், அனல் மேலே பனித்துளி இவை இரண்டும்.

அம்பிகா said...

4 வது பாடல், பாடவா, உன் பாடலை...
படம் .நான் பாடும் பாடல்.
இசை .இளையராஜா.
எழுதியவர் .வாலி.
பாடியவர் .ஜானகி.
முதல்முறை பாடல் ரெகார்ட் ஆகும் நேரம் கணவன் வருகையை எதிர்பார்க்கும் மனைவியின் ஏக்கம்.
அருமையான பகிர்வு.
முதல் பாடல் மிக அருமை.

தினேஷ்குமார் said...

மக்கா சிக்க வச்சுட்டீகளே மக்கா

சரி யாரும் தல தெரிச்சு ஓடாம இருந்ததா சரி

தினேஷ்குமார் said...

அருமையான பகிர்வு

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்பு, நல்ல விளக்கம்.....

கண்டிப்பாய் எழுதுகிறேன்....

வாழ்த்துக்கள்.

ஆமினா said...

நல்ல தொகுப்பு! எல்லா பாடல்களும் ரசிக்கும்படியானது. 2 வது இடத்தில் உள்ள பாடலை முதல் இடத்தில் போட்டிருந்தால் இன்னும் அதிகமாகவே பாராட்டியிருப்பேன் :)

வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

//நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொடூரத்தாக்குதல் நிகழ்த்துவோம் என வலையுலகை செல்லமாய் எச்சரிக்கை செய்கிறோம்.//

என்னங்க மிரட்டுறீங்க.

அந்நியன் 2 said...

பாட்டுப் போட்டிகளில் எனக்கு விருப்பம் இல்லை,ஆனால் நீங்கள் என்ன பேசிக் கொள்கிறிர்கள் என்று உங்கள் வாய் அசைப்பு மூலம் பார்க்கிறேன்,நீங்கள் விளையாடுங்கள் நான் ஒரு ஓரமா நின்னு பார்க்கிறேன்.
ஆனால் ஒன்னும் மட்டும் நல்லா தெரியுது,நம்ம நாடு வறுமையில் வாடுவதற்கு இந்த சினிமாதான் முழுக் காரணம். இருபது ரூபாய்க்கு எடுக்க வேண்டிய சினிமா டிக்கட்டை மூவாயிரத்திற்கு எடுத்திருக்கும் (முட்டாள் ) ரசிகன்.

பள்ளிக் குழைந்தகளாகிய நீங்களாவது,நல்ல சமுதாயக் கருத்துக்களை புதியக் கோணத்துடன் தருவிர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

அந்நியன் 2

சிவகுமாரன் said...

நல்ல தொகுப்பு.
நந்தா பாடல் பற்றிய கருத்து நெத்தியடி.
:பேசுகிறேன் பேசுகிறேன்" என்னும் பாடலையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்

அன்புடன் மலிக்கா said...

அட இதில் நானுமிருக்கேனா..
சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப தூரமாச்சே.

என்பதிவில் இடனுமா? இல்லை இங்கேவா?

முயற்சிப்போம் ரசனைமிகுந்த படால்களை அணிவகுக்க..

எஸ்.கே said...

எல்லாமே அருமையான பாடல்கள்! நன்றாக உள்ளது!

செல்வா said...

பாடல்கள் எல்லமே அருமைங்க .

செல்வா said...

//பெண் மனசினை வெளிப்படுத்தும் திரைப்படப் பாடல்களை வரிசைப்படுத்தி, தொடர் பதிவு இட
தினேஷ் குமார், நீரோடை மலிக்கா, அருண் பிரசாத் ,ப.செல்வக்குமார் ஆகியோரை ஆவலாய் அழைக்கிறோம்.(ஒருத்தராவது வருவாங்களா?)/

கண்டிப்பா எழுதறேங்க ., என்னோட லிஸ்ட் ல கண்டிப்பா அந்த விடின்கிற பொழுது பாட்டு இருக்கும் ., அது நான் அடிக்கடி , சொல்லப்போனா ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்பேன்..!!

தினேஷ்குமார் said...

தங்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவை தொடரும் பதிவாக தொடுத்துள்ளேன் பார்ப்பதற்கு இங்கே வரவும் http://marumlogam.blogspot.com/2010/11/top-ten.html

Unknown said...

//உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...//
இது மட்டும் என்னைக்கவர்ந்த பாடல்

காமராஜ் said...

உங்கள் பதிவுகளில் பாதி படித்துவிட்டேன்.
ஆர்வமும்,தேர்ச்சியும் நிறம்பிய சமூக மதிப்பீடுகள் கிடைக்கிறது.அது இந்தக்காலத்துக்கான அத்தியாவசியம். வாழ்த்துக்கள்.

THOPPITHOPPI said...

ஒவ்வொரு பாடல்களின் தேர்வையும் பார்க்கும்போது நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் உங்களை பற்றி எங்குமே தெரிந்து கொள்ள முடியவில்லை. தவறாக இருந்தால் வருத்தம். ryt?

மாணவன் said...

பாடல்களின் தேர்வு அருமை,

சிறப்பாக உள்ளது

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

//இவர்களில் யாரும் பதிவிடவில்லை, நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொடூரத்தாக்குதல் நிகழ்த்துவோம் என வலையுலகை செல்லமாய் எச்சரிக்கை செய்கிறோம்..//

என்னா ஒரு வில்லத்தனம்...

ஆமினா said...

நீங்க பாத்தீங்களா என்னன்னு தெரியல!!!

பாக்கலைன்னா பாத்துடுங்க :

http://amuthakrish.blogspot.com/2010/11/blog-post_29.html

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்