ஐயோ... யாராவது தெளிய வைய்யுங்களேன்..

தளபதி, நாயகன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஜி.வி. எனப்படும் ஜி.வெங்கடேஸ்வரன் அவர்களை உங்களுக்கு மறந்திருக்காது. மணி ரத்னம் அவர்களை திரையுலகில் ஆளாக்கியவர்.மெத்த படித்தவர். அமெரிக்கா சென்று சி.ஏ. முடித்தவர். திடீரென தற்கொலை செய்துக் கொண்டார்.

இறக்கும் போது கூட அவர் பெயரில் 50 கோடி வரை சொத்துக்கள் இருந்தன. ஆனால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டார் என அப்போது ஊடகங்கள் எழுதின. ரஜினி காந்த் கூட நாங்கள் எல்லாம் இருக்கும் போது ஜி.வி. பணப்பிரச்சனையால் இறந்தது, எங்களுக்கெல்லாம் வெட்கக்கேடு எனக்கூறினார்.

எமது கேள்வி இது தான். அவர் படித்த படிப்புக்கள் ஏன் அவருக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை ஏற்படித்தவில்லை.
(கடன் எனபது மட்டும் காரணம் காட்டக்கூடாது, ஜி.வி. கடனாளியாக ஒரு காரணமாக இருந்த மைக்கல் ஜாக்சன் இறக்கும் போது, ஜாக்சனுக்கு ஆயிரத்து இருநூறு கோடி கடன் இருந்ததாக அறிகிறோம்.)

ஜி.வி. அவர்கள் வெறும் உதாரணத்திற்கு மட்டுமே. தயவு செய்து அவரை விட்டு இந்த சூழலை ஆராயவும்.

வாழ நம்பிக்கையளிக்காத கல்வியா நாம் கற்றுக்கொண்டிருப்பது? வெறும் புத்தக புழுக்களை உருவாக்குவது மட்டுமே நமது கல்வியா?

வாழ்க்கையின் இடர்பாடுகளை எதிர்கொள்ள கற்றுத்தராத கல்வி, என்ன கல்வி?
மிக பாதுகாப்பாய், சகல வசதிகளுடன் ஆளாக்கப்படுவனும் வாழ்வை ரசிக்க முடியாது தற்கொலையாகிறான்.

தட்டு தடுமாறி, எழுந்து, மீண்டும் விழுந்து, தானே சுயமாய் கை ஊன்றி நிற்கும் ஒருவனும், வாழ்க்கையின் நிம்மதியை ரசிக்கும் நிலைக்கு வரும்போது, கிட்டதட்ட வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இது குறித்து யோசிக்க, யோசிக்க நிறைய கேள்விகள் மட்டுமே எம்மிடம் மீதமிருக்கிறது,


இந்த பதிவு குழப்பமான சில கேள்விகளை எழுப்புவதோடு நின்று விட்டதால், உங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெளிவாக்க சில கேள்விகள் உங்களிடம்.

1.வாழ்க்கையை புரிந்துக்கொண்டு, அதன் படி வாழ்வதற்குரிய தகவமைப்புக்களை நமது கல்வி முறை உருவாக்கவில்லை என்பது உண்மையா?

2.வேகம் கற்றுத்தரும் நம் கல்வி விவேகம் கற்றுத்தருகிறதா?

3.அறம் செய்ய விரும்பு, ஆறுபது சினம், உள்ளத்தனைய உயர்வு என உள்வாங்கியவர்களின் நிலையே சிரமம் எனில் வெறும் "ரெயின் ரெயின் கோ அவே"குழந்தைகள் எப்படி வாழ்க்கையை...?

4.உங்களால் உள்ளங்கையில் தாங்கப்பட்டு, மிக பாதுகாப்பாய் வளர்க்கப்படும் ஜானி ஜானி யெஸ் பாப்பாக்களுக்கு, வாழ்க்கை என்றைக்காவது நோ சொல்லும் போது அதனை எப்படி எதிர் கொள்வார்கள்?

5. தன் வாழ்வு பற்றியே புரிதல் இல்லாதவர்களால் எப்படி அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை புரிந்துக்கொள்ள முடியும்?

6. இந்த பதிவில் யோசித்த விதம் தவறா? தவறு எனில் எப்படி யோசித்திருக்க வேண்டும்.

இது சமக்கால கல்வி பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம்.


முதல் பாகம் இப்படித்தான் இருக்க வேணும்.

படங்கள்: http://vizhiyan.wordpress.com/

38 கருத்துரைகள்:

karthikkumar said...

:))

Arun Prasath said...

நீங்க கேட்ட கேள்வி கெல்லாம் ஒரே பதில் தான்.... நம்ம சிஸ்டம்ல அதுக்கெல்லாம் பதில் கிடைக்காது. வாழ்ந்து தான் கத்துக்கணும். அது தான் அனுபவம்....

sathishsangkavi.blogspot.com said...

Good & Useful Post.....

Unknown said...

தற்கொலை எண்ணம் என்பது தான் இனி தப்பிக்கவே முடியாது என மனநிலைக்கு தள்ளப்படும் வேலையில் ஏற்ப்படும் அதீத உடல் ரசாயான மாற்றங்களால் தீர்மானிக்கப்பட்டு நடைபெறுவது. இதற்கான காரணங்களை அலசினால், காதல், துரோகம், நஷ்டம் அதீத மன அழுத்தம் என மாறுபடும், படிக்காத ஆட்களையும் படித்த ஆட்களையும் ஒப்பிட்டால், படித்த ஆட்களின் மத்தியில்தான் இது அதிகம். இதற்கு ஒரு கட்டுரையில் அல்லது ஒரு சிறிய பின்னூட்டத்தில் தீர்வு சொல்லிவிட முடியாது.

ம.தி.சுதா said...

சகோதரா நல்லதொரு பதிவு... தற்கொலை என்பது அவர் மன நிலையை பொறுத்தது உலகத்திலெயே துணிகரமான செயல் தன்னைத் தான் கொல்வது தான்.. இந்த மன நிலையை கல்வி மட்டும் தராது என நினைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வாழ நம்பிக்கையளிக்காத கல்வியா நாம் கற்றுக்கொண்டிருப்பது? வெறும் புத்தக புழுக்களை உருவாக்குவது மட்டுமே நமது கல்வியா?////

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கல்வி எப்படி பொறுப்பாகும்? சமூக, சுற்றுப்புறக் காரணிகள் நிறைய உள்ளன. ஒரே வகுப்பில் பல வருடங்களாகப் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்று போலவேயா சிந்திக்கிறார்கள், முடிவு எடுக்கிறார்கள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குறீப்பாக, தற்கொலை எண்ணம் வருவதற்கு அதீத மன உளைச்சல், டிப்ரசன் போன்றவையே காரணம்...!

pichaikaaran said...

மாற்றம் எல்லாவற்றிலும் வேண்டும் என்ற வகையில் நம் அமைப்பிலும் மாற்றம் வேண்டும்தான் . ஆனால் நம்ம சிஸ்டமே தப்பு சார் என சொல்வதை பலர் தமது உழைப்பு குறைவை மறைக்கும் முகமூடியாக பயன்படுத்துவதை மறந்துவிட கூடாது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னை பொறுத்தவரை தற்கொலை என்பது.. முட்டாள்கள் மற்றும் கோழைகளின் கடைசி ஆயுதம்..

நம் நாட்டு கல்வியை பொறுத்த வரை அது வெறுமனமே ஏட்டுக்கல்வி.. அவர்கள் வாழ்க்கை கல்வியை கர்ப்பிப்பதில்லை. அதனால் தானோ என்னவோ அதிகம் படித்தவர்களே பெரும்பாலும் தற்கொலைக்கு முயல்கிறார்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

நொறுங்கித்தான் போவார்கள் ( 4 வது கேள்விக்கான பதில் இது.) அவசியமான நேரங்களில் நாமும் குழந்தைகளிடம் "நோ" சொல்லி அதற்கான காரணத்தையும் கூறி புரிய வைத்தல் நலம்.

வைகை said...

நல்லவேள! தலைப்ப பாத்துட்டு யாரும் சரக்கடிச்சுட்டு கவுந்துடங்கலான்னு பார்த்தேன்!

மாணவன் said...

கல்விபற்றியும் வாழ்க்கை சூழலைப்பற்றியும் நிறைய... கேள்விகளால் யோசிக்க வைத்திருக்கிறீர்கள்....

இளங்கோ said...

கல்வி எப்போதுமே வாழ்க்கையை கற்றுத் தருவதில்லை.

Unknown said...

நீங்கள் ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்கிறீர்கள், யாரும் மிக பாதுகாப்பாய் வாழவில்லை, அது குழந்தைகள் ஆக இருப்பினும் அவர்களுக்கான நெருக்கடிகளும் இருக்கவே செய்கின்றன. மேலும் ஒவ்வொரு ஜீனும் தங்கள் வாழ்வின் கட்டமைப்பை கொண்டிருப்பதால், சொகுசாக வாழும் குழந்தைகள் சிறிது சிரமப்படும் ஆனால் சீக்கிரமே தங்கள் நிலைகளில் மாறுபாடு செய்துகொண்டு தங்களை புதுப்பித்துக்கொண்டு விடும்.

கவனியுங்கள்! நாம் சார்ந்து வாழும் வாழ்வைத்தான் கொண்டிருக்கிறோம், தனித்து யாராலுமே இருக்க முடியாத சூழல் இப்போது எல்லோருக்குமே பொதுவானதாக வந்து விட்டது.

So, everybody is survival of the fittest...

வைகை said...

ஒருவனின் தற்கொலைக்கு எந்த ஒரு தனி மனிதனோ கல்வியோ காரணம் அல்ல இந்த சமூகம்தான் அதற்க்கு பொறுப்பு!

சென்னை பித்தன் said...

கல்வியைக் குறை கூறிப் பயனில்லை .
அவரவர்,மன உறுதியையும்,இடர்களை எதிர் கொள்ளும் மன வலிமையையும்
பொறுத்தது இது.அனுபவங்களும், இளமை முதல் வளர்ந்த சூழலுமே இதில் முக்கியமாகத் தோன்றுகிறது.இது மனோதத்துவ ரீதியாக அணுக வேண்டிய ஒரு பிரச்சினை.

தினேஷ்குமார் said...

எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை நம்மை எதிர் கொள்ளும் நேரம் பலவீன படும் மனம். தளராது எதிர்கொண்டால் மாற்றலாம் ஒரு வழி இருக்கு மனோதத்துவ முறை இன்றைய கல்வியில் ஒரு பாடமாக இடம்பெற்றால் மாற வாய்ப்புண்டு என் ஒரு நம்பிக்கை அனுபவம் பேசுகிறது என்னிடம் என்னை பொறுத்தவரை நான் என் பால்ய பருவத்தில் அதாவது பத்தாவது படிக்கும்போது அயலார் புதியவர்களிடம் பேசவே ரொம்பவும் தயங்குவேன் மேடையில் மைக் பிடித்தாலே கை நடுங்கும் அந்த அளவுக்கு பயம் என்னை ஆட்கொண்ட நேரம் அது அந்த சமயம் அப்பா அவர் கம்பனியில் குழந்தைகள் தின விழா போட்டிக்கு கலந்துகொள்ள அழைத்து சென்றார் கம்பனியில் சோஷியல் டிப்பார்ட்மென்ட் என்று தனிபிரிவு உண்டு அவர்களுடைய ஏற்பாடுதான் இவை எல்லாம் என் மனநிலை அறிந்த அவர்கள் எனக்கு மட்டும் பாடமெடுக்காமல் மாதமிருமுறை மனோதத்துவ நிபுணர்களை வைத்து தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு செமினார் எடுக்க தொடங்கினர் அதுவே என்னில் என்னை அறியவைத்தது பின் மூன்று வருடம் குழந்தைகள் தின விழா ஆர்கனைசராக நான் அரங்கேற்ற மேடையில்

அருண் பிரசாத் said...

கே ஆர் பி அண்ணன் சொன்னது போல survival of fittestதான் நடைமுறை வாழ்க்கை....

தற்கொலைக்கும் கல்விக்கு சம்பந்தம் இல்லை

தினேஷ்குமார் said...

குழந்தைகள் தின விழா அரங்கேற்ற மேடையில் நான் அதவும் ஆர்கனைசராக குழந்தைகளுக்கு வழிக்காட்டும் ஒருவனாக நான் மாறியிருந்தேன் என்னில் என்னை அறிந்ததனாலா?? இன்னுமொரு விஷயம் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்துச்சு (நல்லாத்தான் எழுதியிருந்தேன் என்ன ஒரு சப்ஜக்ட் மட்டும் சரியாக எழுதவில்லை ) மாலை மலர் நாளிதழில் கடைத்தெருவுக்கு வந்து நம்பர தேடுறேன் காணோம் கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருந்துச்சு அப்புடியே வீட்டுக்கு வந்தேன் அம்மா அப்பா அக்கா அண்ணன் எல்லோரும் இருக்காங்க அம்மா தான் கேட்டாங்க என்னடா ஆச்சு ரிசல்ட்னு நான் பேப்பர்ல பிரிண்டிங் மிஸ்டேக் மா நாளைக்கு காலைல பார்த்துக்கலாம்னு சொன்னேன் யாருமே ஒன்னும் பேசல தோட்டத்து பக்கம் போனேன் உள்ள பேசுறது கேட்டுச்சு அப்பா நான் பார்த்துபுட்டு படிக்கற புள்ள பெயில் ஆகிடுச்சு மனசு கஷ்டப்படுவான் எப்படி ஆறுதல் சொல்லுவோம்னு பார்த்தா நமக்கு சொல்லிட்டு போறான் அவன் மனச அவன் கட்டுப்படுத்த அறிந்த்துவிட்டான் என்று அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்தார்
அதவிட இன்னும் ஒரு கொடுமை என்ன வென்றால் மறுநாள் கலைலயிம் இதே பதில்தான் என்னிடமிருந்து வந்ததது நண்பர்கள் அனைவரும் கூடி ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் வாழ்த்து சொல்லிக்கிட்டு இருந்தோம் மதிய நேரமிருக்கும் சதீஷ்னு ஒரு நண்பன் வீட்டுக்கு போனோம் சதீஷ் எங்கன்னு கேட்டோம் காலைல இருந்து அழுதுகிட்டு இருக்கான் பா அவன் தங்கச்சி பாசாகிடுச்சிஅவன் ஆகல அதான் எல்லோரும் உள்ள போனோம் நம்ம பசங்க ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தானுக நான் சும்மாவா இருந்தேன் டேய் மாப்ள நானும் பார்த்தண்டா பேப்பர எதோ பிரிண்டிங் மிஷ்டேக்காம் அதான் என் நம்பர் கூட வர்லடான்னு சொன்னதுதான் அவன் அழுதுகிட்டு இருந்த அவனும் அவங்க வீட்ல இருந்தவர்களும் சிரிச்ச சிரிப்பிருக்கே அங்க நான் ஜோக்கர் தான் ஜோக்கரானாலும் மற்றவர்களை சிரிக்க வைக்கறதுல ஒரு சிறப்பு சந்தோசம் இதுவும் எனக்குள்ள இருந்து வெளிக்கொணர வைத்த அந்த கம்பனி சோஷியல் அதிகாரிகளின் முயற்ச்சியே காரணம் மனநிலையை நம்மால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் வேண்டும் அதனால் மனோதத்துவமுறை இக்கால கல்வி முறையில் ஒரு பாடமாக அங்கம் வகித்தால் நன்கிருக்கும் என்பது என் கூற்று அதிகமா பேசிட்டனோ

அன்பரசன் said...

கல்விக்கும் இதுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.

கல்வியினால் கிடைக்கும் தெளிவானது ஒரு நல்வாழ்வு வாழ உதவும். அவ்வளவுதான்.

தற்கொலை என்பது ஒரு நொடித்தவறு என்றே சொல்லலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:((. Sorry for late

செல்வா said...

//வாழ நம்பிக்கையளிக்காத கல்வியா நாம் கற்றுக்கொண்டிருப்பது? வெறும் புத்தக புழுக்களை உருவாக்குவது மட்டுமே நமது கல்வியா?//

ரொம்ப சரியான கேள்விங்க ..!! நிச்சயம் நீங்க எழுதினாதான்( மாணவர்கள் & ஆசிரியர்கள் ) சமகால கல்வி பற்றி கொஞ்சம் தெளிவா சொல்ல முடியும்னு நான் நினைச்சது நீங்க உண்மைலேயே நிருபிச்சுட்டீங்க ..!! மேல நிறைய சொல்லிருகாங்க .. உண்மைதான் .. ஆனாலும் கல்வி கற்கும் போதே சில விசயங்களை கற்றுகொடுத்து அவர்களின் மனதினை எந்த ஒரு சூழலுக்கும் தகுந்தாற்போல் வாழ சொல்லிக்கொடுக்கப்படால் நிச்சயம் மாற்றம் வரலாம் .!!

ஆனந்தி.. said...

கல்விக்கும்..தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை...அப்போ படிக்காத ஒருவர் தற்கொலை பண்ணிக்கிட்டால் கல்வி அறிவு இல்லாததாலே பண்ணிக்கிட்டாரா...?? கல்வியின் நடைமுறைகளை பற்றி ஏகப்பட்டது சொல்லலாம்..அது வேற விஷயம்...ஆனால் ஒருவனின் தற்கொலை விஷயம் அவன் கல்வி,பகுத்தறிவை தாண்டிய ஒரு விஷயம்...இது அந்த செகண்ட் இல் எடுக்கப்படும் ஒரு emotional முடிவு...அங்கே அவன் எந்த கல்வி கத்து இருந்தாலும் அந்த சிந்தனை வராது..எந்த காரணத்தாலோ அதிகமா depress ஆகி இருக்கானோ அது மட்டுமே மனசில் நிக்கும்..முழுக்க முழுக்க உளவியல் சார்ந்த விஷயம் இது...ஜீ வீ தற்கொலைக்கு அவரின் கோழைத்தனம் மட்டுமே காரணமா இருக்க முடியும்...

ஐயையோ நான் தமிழன் said...

தற்கொலை செய்வது முட்டாள்தனம் என்று எத்தனையோ பேர் கூறி விட்டார்கள்.....................

ஆனாலும் அதைச்செய்வதோ அதிகம் படித்த புத்திசாலிகள் மட்டும்தான்.......
முடிந்தால் ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள் உலகில் அதிகமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் படித்தவர்களாக மட்டும்தான் இருப்பார்கள்.

ஆக

இதற்கு பள்ளிக்கல்வியோ இல்லை வேறு வ்ழி கல்வியோ உகந்ததல்ல ஒவ்வொருவரும் வாழ்வை பற்றி சிந்தித்தாலன்றி இதற்கு சரியான தீர்வே கிடையாது.

Anonymous said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

R. Gopi said...

\\அமெரிக்கா சென்று சி.ஏ. முடித்தவர்\\

அமெரிக்காவில் சி.ஏ. கிடையாது. சி.பி.ஏ. தான்.

நிறைய கற்றால் நிறைய பயம் வரும் என்று எங்கோ படித்தேன்.

நம் சூழலில் பெரிய சிக்கல் என்னவென்றால் உயர்படிப்புப் படித்து ஒரு குமாஸ்தா ஆகி விட வேண்டும் என்ற மனநிலையே. நாம் தொழில் முனைவோர்களை (entrepreneur)என்றுமே உருவாக்குவதில்லை.

ஒருவர் அவருக்குப் பிடித்த தொழிலைச் செய்ய நம் கல்வி சூழ்நிலை என்றுமே அனுமதிப்பதில்லை. சமூகம், குடும்பம் கூட.

பிடித்த விஷயங்கள் செய்யும்போது தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் பெருமளவு குறைந்துவிடும் என்பது என் எண்ணம்.

செங்கோவி said...

பள்ளிகளில் தற்பொழுது சொல்லித்தரப்படுவது படிப்பு மட்டுமே..கல்வியல்ல..தற்பொழுது பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுகின்றனவா?..நூலகங்கள் சரியான முறையில் பராமரிக்கப் படுகின்றனவா?..வாழ்வைப் புரிந்துகொள்ள நமக்குத் தேவை கல்வி, படிப்பல்ல..திருவள்ளுவரையும் ஔவையாரையும் நான் எனது கல்லூரிக் காலம் முடிந்தபின்னே புரிந்துகொண்டேன்..படிக்கும் காலத்தில் அவை வெறும் மனப்பாடப் பாடல்கள் மட்டுமே..

தற்கொலை என்பதை பிரபலமான எழுத்தாளர்கள் கூட செய்திருக்கிறார்கள்..அதைத் தவிர்ப்பதற்குத் தேவை தோள் சாய அனுமதிக்கும் சொந்தபந்தங்களே. கல்வி பெரிய அளவில் இதற்கு உதவாது. அப்புறம் ஏன் மேலே கல்வியைப் பற்றி அவ்வளவு பேசினேன்னு கேட்கிறீங்களா..அவை நம்மை அடுத்தவர்க்கு தோள் கொடுப்பவராய் மாற்றும் என்ற நம்பிக்கையில்தான்!

Unknown said...

இன்றைக்கு இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் அடிப்படை தேவைகளையும், ஆடம்பர தேவைகளையும் மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், நாம் படிக்கும் போது எல்லாம் எல்.கே.ஜி, பிரி. கே.ஜி எல்லாமா இருந்தது? அங்கன்வாடியில் சத்துணவோடு கூட படிக்கும் மாணவர்களோடு பழகி வாழ ஒரு சந்தர்ப்பம் அமைந்தது, ஆனால் இப்போது? எல்லாமே இரு இயந்தரதனமான வாழ்வாக உள்ளது, குழந்தைகள் குழந்தைகளாகவா வளர்க்கப்படிகிறார்கள், ஏதோ போருக்கு தயாராவதை போல சம்பாதிக்க தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளை அவர்களின் இயல்போடு வாழ விட்டாலே, அதற்கு சமுதாயம் புரிந்து விடும், இந்த கல்வி எல்லாம் அறிவை வளர்க்கவே அன்றி வாழ்க்கையை புரிய வைப்பதற்காக அல்ல, வெறுமனே மனப்பாடம் பண்ணிவிட்டு பரிட்சையில் வாந்தி எடுக்கும் குழந்தை பிற்காலத்தில் துன்பம் என வரும்போது தற்கொலைதான் பண்ணும்.

arasan said...

தற்கொலை என்பது இபோது சர்வ சாதரணமாய் மாறிவிட்டது ...

என்னை பொறுத்தவரை அதிகம் படித்தவரே தற்கொலை முடிவை விரும்பி எடுக்கின்றனர்...

நல்ல புரிதலும், மனம் விட்டு பேச கூடிய நம்பிக்கை நபர்கள் இல்லாமல் போனதாலும் இந்த சூழ்நிலை என்று நான் கருதுகிறேன்...

கல்வியும் நல்ல முறையில் கற்பிக்க வில்லை ...

நல்ல பதிவு ...

அந்நியன் 2 said...

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .....
அது வரை நாமும் சென்றிடுவோம் !
விடைபெறும் நேரம் வரும்போது சிரிப்பினில்
நன்றி சொல்லிடுவோம் இறைவனுக்கு .

பணம் பதவி அந்தஸ்த்து மரியாதை கவுரவம் மற்றும் மானம் இவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்க மாட்டான் ரோசத்தை தவிர.... அவன்தான் படிக்காதவன்.

படித்தவனோ இவை அனைத்திலேயும் எதயாவது ஒன்றை இழக்க நேரிட்டால் முடிவு விபரிதமாகத்தான் இருக்கும்.

தன்னை அறிந்தவன் ஆசை படமாட்டான்...
உலகை அறிந்தவன் கோப படமாட்டான்..
இந்த ரெண்டையும் உணர்ந்தவன் கஷ்ட்டபடமாட்டான்.. மூச்சையும் தானா நிறுத்திக் கொள்ளமாட்டான்.

என் நண்பன் சொல்லுவதைப் போல.....

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீ­ராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீ­ர் மட்டும் மிட்சம் போல்... என்னை கேட்டால், வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்!. உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள், வாழுங்கள் என்பேன்!! நிறைய..இதுவும் என் நண்பன் சொன்னதுதான்.

ஆகவே மனிதனாய் பிறந்த நாம் ஏழை,பணக்காரன்,படிச்சவன்,
படிக்காதவன்,என்று பாகுப் பாடின்றி நல்ல மனிதர்களாக இவ்வுலகத்தில் வாழ்வோமேயானால் நிச்சயமாக தற்கொலை என்ற எண்ணம் யாருக்கும் வராது.

இந்த தலைப்பினை தேர்வு செய்த நீங்கள் பாராட்டக் கூடிய கூட்டங்கள் அதில் ரோஜா என்னும் மலரோடு.

தற்கொலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு கேள்வி ?

விரும்பினால் தான் விருப்பம் வரும்...
வெறுத்தால் தான் வெறுப்பு வரும்...
ஏன் இந்த விருப்பும் வெறுப்பும் ?..
பல முறை யோசி ஒரு முறை முடிவெடு
அவை நல்லவையாக இருக்கட்டும்.

இதுவும் என் நண்பன் சொன்னதுதான்.

Unknown said...

அன்பரசன் said...

கல்விக்கும் இதுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.

கல்வியினால் கிடைக்கும் தெளிவானது ஒரு நல்வாழ்வு வாழ உதவும். அவ்வளவுதான்.

தற்கொலை என்பது ஒரு நொடித்தவறு என்றே சொல்லலாம்./////

இதுதான் என் கருத்தும்..

puthuvayal said...

நீங்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது! காரணம், ஒரே வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டு பிரச்சினைகள் வரும் போது ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு மணி அடிக்க கற்றுக்கொண்ட செக்குமாடுகள் !!

OOthari said...

Dont expect that you will face all issues and happiness in your life time...Some thing we need to study/analyze from others life...As somebody explained, eductaion will not teach everything that you will face in your lifetime...Before doing any activity, please recall whether any of your friends/relatives come across such situation or not...If so, please recall the decision made by that person and continue the same if it suites for you. If you dont have option, please register that as a situation to others and let them learn it from you...We have to learn till our death..

லீலா said...

சமகால கல்வி வாழ்கையை எதிர்நோக்குவதற்குரிய வழிகளை தருவதில்லை என்பது உண்மை பெற்றோர்களும் வாழும் சுழலும் காரணம் ஜெயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாம் தோல்வியினால் கிடைக்கும் நன்மைகளையும் சொல்லியிருக்கவேண்டும் கல்வியை மட்டும் குறை கூறுவது தவறு

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

NKS.ஹாஜா மைதீன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.....

ஆமினா said...

பெரிய பெரிய கேள்வியா கேக்குறீங்களே....!!!

ஆனா சூப்பர் பதிவு!

சொல்ல வந்த விஷயத்தை அழகா கொண்உ வந்து அந்த புள்ளில நிப்பாட்டி இருக்கீங்க!!!

சூப்பர்

Anonymous said...

கோழைகள் மட்டுமே வாழப் பயந்து மரணத்தை தழுவுகிறார்கள்.......

தற்கொலை செய்யும் முன் ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்தாலே . பிரச்சனைக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்