நேற்றைய பொழுது உன்னோடு....

நானும் அவளும்
கை கோர்த்து
கடந்த தொலைவுகளை
தேசிய நெடுஞ்சாலையில்
நடந்திருந்தால்
காஷ்மீர்
கடந்திருக்கக்கூடும்...

 நானும் அவளும்
விளையாட்டாய் பேசி
அதிரடியாய் சிரித்ததில்
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழுந்ததுண்டு...

 நானும் அவளும்
தொலைபேசி வழி
சண்டையிட்டுக் கொண்டதில்
சூடான இரவுகள்
ஏராளம்...

 ஆயினும்..
 திருமணம்
எங்களை
பிரித்துப்போட்டது...
அவள்
அமெரிக்காவுக்கு
வாழ்க்கைப்பட்டு போனாள்.
 நான் உள்ளூரில்.

 சபதங்கள்
செய்திருந்த போதும்
ஏனோ
சில நாட்களில்
தொடர்பு அற்றுப்போனது...

 
 அவள் நினைவு
வரும்போதெல்லாம்;

நேரில் சென்று
பார்த்து
பசியாறிக்கொள்வதுண்டு...
      அந்த
      பெண்கள் பள்ளில்
      நாங்கள் இருந்த
     வகுப்பறையின் சுவர்களை...
 .அனார்கலி.

-

டிஸ்கி:
இரு பள்ளித்தோழிகள் பற்றிய கவிதை இது.
- வேற மாதிரி எதிர்பாத்தீங்களா...ஆசை, தோசை,அப்பளம், வடை

மாத்தி யோசித்தவர்களுக்கு பரிசு கீழே உள்ள படத்தில்..

ஓவியம்:kavioosai.wordpress.com

26 கருத்துரைகள்:

Unknown said...

வடை எனக்கே, கவிதை நான் எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தது

Arun Prasath said...

ரூம் போட்டு, சே கிளாஸ் ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

Unknown said...

தோழிமார் கதைகள் ...

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு.... :-)))))

மாணவன் said...

யதார்த்தம் கலந்த நட்பின் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும் வரிகள்....

நல்லாருக்குங்க....

அனார்கலிக்கு வாழ்த்துக்கள்

பாலா said...

//அவள்
அமெரிக்காவுக்கு
வாழ்க்கைப்பட்டு போனாள்.
நான் உள்ளூரில்.


இந்த வரிகளைப் பார்த்தவுடன் நான் கண்டுபிடித்து விட்டேன். கவிதை நன்றாக இருந்தது. நன்றி

இளங்கோ said...

பல்பு குடுத்ததே குடுத்தீங்க.. கொஞ்சம் பெரிய பல்பா கொடுத்திருக்கக் கூடாது. :)

NKS.ஹாஜா மைதீன் said...

ரொம்ப குசும்புதான்....super

அருண் பிரசாத் said...

நான் ஏற்கனவே நிறைய பல்பு வாங்கி வெச்சி இருக்கேன்... இதை நீங்களே வெச்சுக்கோங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி:
இரு பள்ளித்தோழிகள் பற்றிய கவிதை இது.
- வேற மாதிரி எதிர்பாத்தீங்களா...ஆசை, தோசை,அப்பளம், வடை
///

நான்தான் படிக்கவே இல்லியே

ராஜவம்சம் said...

பல்ப் எனக்கு தான்!

Unknown said...

Super! :-)

Unknown said...

ஆஹா இது காதல் கவிதை இல்லையா

ஆனந்தி.. said...

தலைப்பும் சூப்பர்..அந்த படமும் சூப்பர்...:))

karthikkumar said...

//டிஸ்கி:
இரு பள்ளித்தோழிகள் பற்றிய கவிதை இது.
- வேற மாதிரி எதிர்பாத்தீங்களா...ஆசை, தோசை,அப்பளம், வடை
///

நான்தான் படிக்கவே இல்லியே///

(குறிப்பு நேற்றைய பதிவில் என்னுடைய கமெண்டை அப்படியே காப்பி செய்துள்ளார் இந்த டுபாகூர் போலிஸ். அதனால்தான் இன்று பழிக்குபழி.)

karthikkumar said...

பல்ப் எனக்கில்ல.....

kumar said...

இந்த கவிதைய படிக்கிறவங்கள பார்த்தா
உங்களுக்கு காமெடியா இருக்கா. என்னதுசின்னபுள்ளதமா இருக்கு.
எங்கள வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.

செல்வா said...

//நானும் அவளும்
விளையாட்டாய் பேசி
அதிரடியாய் சிரித்ததில்
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழுந்ததுண்டு..//

செம செம ..!! உங்க பின்குறிப்பும் நல்லா இருக்கு .!!

செங்கோவி said...

பல்பு குடுத்ததிற்கு நன்றி..ஆமா, ஏன் கதையை ஒரு வரிக்கு ஒரு வார்த்தைங்கிற ரேஞ்சுல எழுதியிருக்கீங்க..ஓ..கவிதையாக்கும்!

Meena said...

எதிர்பார்க்கவே இல்லை சார் தோழிகள் என்று. சும்மா புகுந்து விளையாடிட்டீங்க

Meena said...

சிறந்த கற்பனை உள்ளம் சார் உங்களுக்கு . மிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள்

தினேஷ்குமார் said...

கவிதை சூப்பர் வாழ்த்துக்கள் பிரிவை தேடும் தோழமை அருமை

தினேஷ்குமார் said...

Meena said...
சிறந்த கற்பனை உள்ளம் சார் உங்களுக்கு . மிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள்


சாரி மேடம் அவங்க சார் இல்ல வாருங்கள சிங்கங்கள் பதிவுலக சகோதரிகள்

ஆமினா said...

நான் சத்தியமா மாத்தி யோசிக்கல. ஏன்னா நல்ல வரிகள் இருக்கும் கவிதையில் கள்ள காதலை மேன்படுத்தி வார்த்தை வராது. நீ அமெரிக்காலையும் நான் இங்கேயும்னு வரும் போதே கண்டுபிடிச்சுட்டேன் :))

வினோ said...

நல்ல கவிதை...

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_04.html

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்