கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த வலைப்பூவில் எழுத, என்னை கொத்து புரொட்டா போடப்போவதாய் வந்த ஒரு கொலைவெறி மிரட்டல் தான் காரணம்.
முன்னம் ஒரு காலத்துல (ரொம்ப காலத்துக்கு முன்னாடி போகக்கூடாதுங்க.. கொஞ்சம் மட்டும்...) ஸ்கூல் படிக்கிற பசங்ககிட்ட எல்லாம் "தம்பிகளா... கவிதை, கட்டுரை-னு ஏதாவது எழுதுனா குடுங்க... உங்க எழுத்துக்களை எங்களுடைய ரோஜாப்பூந்தோட்டம் வலைப்பூல போடலாம்...நீங்களும் உலகம் பூராவும் பாக்குற மாதிரி பேமஸ் ஆயிடலாம்" அப்படினு உதார் விட்டதுக்கு பலனா, இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும், "களவாணி ஹீரோ" சமீபத்தில் எழுதிக்கொடுத்த "பிரிவு கட்டுரை" தான் இன்றைய பதிவு.
"சார்...எப்ப என்னோட கவிதை(?!?!?) நெட்டுல வரும்னு , பயபுள்ள பாக்குறப்ப எல்லாம் மெரட்டுது..மொறைக்குது...
அவனோட பேரு விமல்... பயபுள்ள சினிமா மோகத்துல களவாணி ஹீரோ-னு "நிக் நேம்" வைச்சுக்கிட்டானாம்.. (நல்ல வேளை கலைவாணி ஹீரோ-னு பேரை மாத்தலை)...
ஆஹா.. நல்ல "புலோவா" எழுத வருதே.., மீண்டும் தொடர்ந்து எழுதுவதை ஆ"ரம்பம்' பண்ணிடலாமா? என்ற யோசனையுடன் இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.
- பாரத்...பாரதி.
கனவுகளுடன் அடியெடுத்து, கண்ணீருடன் பிரியப்போகும் மாணவர்கள் நாங்கள்.
வரம் பெற்று சொர்க்கத்தில் இருந்து விடைபெறுகிறோம். சொர்க்கத்தில் வாழ இன்னும் கூட ஆசை இருக்கு.
கருவறையில் ஆனந்தமாய் விட வகுப்பறையில் ஆனந்தமாய் இருந்தோம்.
குடும்பத்துடன், சொந்தங்களுடன் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என் வகுப்பறை நண்பர்களுடன், அது சாத்தியமா?
ஆற்றில் நீந்தும் மீன்கள் நாங்கள். இப்போது கடல் நோக்கி பயணிக்கிறோம். மீண்டும் ஆற்றில் இருக்க முடியுமா?
முழுமை அடையப்போகும் எங்கள் வாழ்க்கையில் சிறியதொரு கண்ணீர் மழை இன்று.
கரைகிறோம் குடையை மறந்துவிட்டு, மழையில் ஊர்வலம் போகும் சின்னஞ்சிறுவனாய்..
எடுத்துச்செல்கிறோம் பள்ளியில் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை...
விட்டுச்செல்கிறோம் எங்கள் இதயங்களை...
- தி.விமல்.
உண்மையில் நாம் கண்ட சொர்க்கம் பால்ய பள்ளிப்பருவம் .....
ReplyDeleteகளவானி கதாவிற்க்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சகோ.......
rompa naatkalukkupiraku pathivezutha vanthatharku vazththukaL
ReplyDeleteவரம் பெற்று சொர்க்கத்தில் இருந்து விடைபெறுகிறோம். சொர்க்கத்தில் வாழ இன்னும் கூட ஆசை இருக்கு.
ReplyDeleteஎல்லோருக்கும் இன்னும் ஆசை இருக்கிறது பள்ளியில் வாழ.
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
டைட்டில் பார்த்தே ஆடிப்போயிட்டோம்’ல்ல....
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
Welcome back sir..
ReplyDeleteவாங்க வாங்க
ReplyDeleteஅடப்பாவி இப்போதாவது வர தோணிச்சே....
ReplyDeleteசார் மறுபடியும் எழுத தொடங்கியதுக்கு மகிழ்ச்சி. புள்ளைங்க எக்ஸாம் எழுதி முடிச்சதும் வந்திருக்கீங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு டென்ஷன் இல்லாம எழுதுங்க
ReplyDeleteவாங்க சார் ..
ReplyDeleteநல்லா இருக்கு கள வாணியின் கவிதை ..
வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்
வாங்க வாங்க....உங்கள் வரவு நல் வரவாகட்டும்
ReplyDeleteவருக! தருக!
ReplyDeleteகவிதை நன்று
புலவர் சா இராமாநுசம்