விகடன் பார்வைக்கு சில அசத்தல் ட்விட்டுகள் - சிறப்பு வலைபாயுதே...

: நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற !

: குருட்டு பிச்சைக்காரன் தொலைத்த புல்லாங்குழலை எடுத்து கொடுக்கிறான் பார் - அவன் கடவுள். 


 பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு... பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)


 உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.


 "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி குறிப்பிடுவது இளையராஜாவைத் தானோ!


 கற்பனையில் பறக்கும் சில குதிரைகள், நிஜ வாழ்வில், கழுதைகளிடம் தோற்றுப்போகின்றன!


 ஈழ தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுனா, காங்கிரஸ் அகராதியில் மிச்சமிருப்பவர்களையும் முடிச்சிடுனு அர்த்தம்!


 ஏண்டா எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பன்றத தவிர வேற வேலயே இல்லயா#டிவி விளம்பரம் பாத்தாலே கடுப்பு ஆகுது.


 மின்வெட்டு குறித்து கருணாநிதியை எச்சரித்தேன்- சிதம்பரம்# அதான் சட்டினிய கரண்ட் போறத்துக்குள்ள மிக்சில அரைச்சுகிட்டாங்க.!!


 சாலையில் கிடக்கிறது சல்லி சல்லியாய்..... மலையின் ஆணவம்!
http://bharathbharathi.blogspot.com

 கோமதியை கோம்ஸ் என்று கூப்டுவதை போல ஈமு கோழியை #ஈம்ஸ் என்று சுருக்கி கூப்பிடலாமே !

 டேமேஜர்ங்கிறவன் "ஒரு சப்ப மேட்டர குழப்புற மாதிரி சொல்லி அந்த குழப்புத்துக்கு காரணம் நீங்கதான்னு உங்களையே நம்ம வைக்கிறவன்!"

: பாகிஸ்தானிற்கு மின்சாரம் வழங்குகிறது இந்தியா # சானியா மிர்சாவையே சம்சாரமா கொடுத்தாச்சு, இனி எதை கொடுத்தா என்ன?

 பட்ஜெட் அறிக்கையை கிழித்து கருணாநிதி முகத்தில் எறிந்தது யார்? ஜெவுக்கு ஸ்டாலின் கேள்வி#முக: விடுப்பா. அதான் எறிஞ்சாச்சுல!

 பூவா தலையா? பூ விழுந்தால் நான் உனக்கு, தலை விழுந்தால் நீ எனக்கு..

 நல்ல தூக்கத்தில்...நம் குறட்டை `சப்தம்` நமக்கே கேட்காமல் இருப்பதுதான்...நாம் செய்த பூர்வ புண்ணியம்!

 நம்மை கடுப்பேற்றவே படைக்கப்பட்டவர்கள்# பார்க்கிங் ஏரியாவில் வேலை செய்யும் செக்கியுரிட்டீக்கள்..
 IPL 2012 - Complete Schedule.

 அரசியல் பாதையை தேர்வு செய்தது தவறு,டென்னிஸிலேயே இருந்திருக்கலாம் .ப.சி #அங்க வீடியோ எடுப்பாங்க,கோல்மால் செஞ்சு ஜெயிக்கமுடியாது

 கோயிலில் சாமியாடும் போது மட்டும் பாய்ந்து வரும் கடவுள்கள் ஏனோ வரவேண்டிய நேரங்களில் வருவதில்லை.

: மனைவியை முழுமையாக புரிந்துகொள்ளும் போது மணிவிழா கொண்டாடப்படுகிறது!”

 எல்லா நகைச்சுவையாளனுக்குள்ளும் ஓர் ஆறாத காயம் பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்கிறது எப்போதும்!

 ஜெ.வை போயஸ்கார்டனில் சந்தித்தார் சசி#சசிகலாவை திருமணத்தில் சந்தித்தார் நடராஜன்#நடராஜன் திருமணத்தை நடத்திவைத்தார் கலைஞர்.
 வடகரை வேலன் #FB

 திமுக தலைவருக்கு ஒரு கேள்வி "அந்த தியாகிய வெளிய கொண்டுவர ஏதாவது திட்டம் இருக்கா? இல்லையா?"

 காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!

 கடந்த 24 வருஷத்தில் கரகாட்டக்காரன் சண்முகசுந்தரத்துக்கு அடுத்து இத்தனை அக்கா போட்டது இந்த தங்கச்சிக்காதான் #சசிகலாஅறிக்கை

 ஐசோட மூணு நெலவரத்த பாத்தா சவுந்தர்யாவோட கோச்சடயான்.? கலவரமா இருக்குப்பா

 உலகின் பயங்கரமான தீவிரவாதகுழுக்கள்;அல்கொய்தா,லஸ்கர்- இ-தொய்பா,ஹிஜுபுல் முகாஜுதின் மற்றும் கும்பலாக இருக்கும் கல்லூரி பெண்கள்.

 மின்சாரம் போனதிலிருந்து அழுது கொண்டேயிருக்கிறது பக்கத்து வீட்டுக் குழந்தை #அம்மாவின் திராணி குழந்தைக்கு இல்லை.

  மின்சாரப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு...

 ஏம்ப்பா இந்த விகடன்ல ட்விட் வர்றதுக்கு எதாவது காச கீச குடுத்து மூவ் பண்ண முடியுமா?

 வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

 ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதை விட...ஊழல் செய்ய கற்று கொடுங்கள்;அது அவன் பரம்பரைக்கே பயன்படும்:-)

 எல்லாக் கட்டணத்தையும் உயர்த்திய அம்மாக்கு ஒரு வேண்டுகோள்: சம்பளத்தையும் கட்டணமா நினச்சு ஒரு 50% உயர்த்திருங்க!!

 விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலாம்.

 எல்லா காலையும் கவலையுடனும் எல்லா மாலையும் கேள்வியுடனும் முடிந்தால் உன் வேலையை மற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்றர்த்தம் !

 விலையேற்றத்தை முன்னிட்டு காற்றடிக்க சைக்கிள் வீல் ஒன்றுக்கு RS.2 ,டூ வீலர்களுக்கு வீல் ஒன்றுக்கு RS.5 # டேய் டக்ளஸு நீயுமாடா???

 நான் எனக்குப் போட்டுக்கிற சோப்பு ஒரே பிராண்ட்தான். ஆனா மத்தவங்களுக்குப் போட்ற சோப்பு வேற வேற பிராண்ட்ஸ்.
இதுல எதுவும் விகடனாருக்கு பிடிக்கலைனா... பெரும் அக்கப்போராக அல்லவா போய்விடும்..டும்..டும்..'
டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!

31 comments:

  1. \\\@naanenaan பூவா தலையா? பூ விழுந்தால் நான் உனக்கு, தலை விழுந்தால் நீ எனக்கு..\\\ ரொம்ப புத்திசாலித்தனம்!

    ReplyDelete
  2. ||@Pattapatti விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலாம்.||

    எனக்கு பிடிச்ச ட்வீட்!..

    ReplyDelete
  3. @iKaruppiah பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு... பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)

    ReplyDelete
  4. All r super.....
    Ithai...thodarnthu.....
    Seiyavum.....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. டுவிட்டுகள் மிக அருமை. முதல் பாலிலேய சிக்சர் அடித்த மாதிரி இருந்தது முதல் டுவிட்

    ReplyDelete
  7. @kaattuvaasi டேமேஜர்ங்கிறவன் "ஒரு சப்ப மேட்டர குழப்புற மாதிரி சொல்லி அந்த குழப்புத்துக்கு காரணம் நீங்கதான்னு உங்களையே நம்ம வைக்கிறவன்!"

    ReplyDelete
  8. எனக்கு பிடிச்ச ட்வீட்!..@charlesjeyamoon திமுக தலைவருக்கு ஒரு கேள்வி "அந்த தியாகிய வெளிய கொண்டுவர ஏதாவது திட்டம் இருக்கா? இல்லையா?"

    ReplyDelete
  9. @Nambiyaaru ஈழ தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுனா, காங்கிரஸ் அகராதியில் மிச்சமிருப்பவர்களையும் முடிச்சிடுனு அர்த்தம்!

    ReplyDelete
  10. #ஏண்டா எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பன்றத தவிர வேற வேலயே இல்லயா#டிவி விளம்பரம் பாத்தாலே கடுப்பு ஆகுது.#

    இது கலக்கல்


    @writercsk "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி குறிப்பிடுவது இளையராஜாவைத் தானோ!


    இது சொதப்பல்..

    ReplyDelete
  11. @Kaniyen: நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற !

    @naiyandi ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதை விட...ஊழல் செய்ய கற்று கொடுங்கள்;அது அவன் பரம்பரைக்கே பயன்படும்:-)

    ReplyDelete
  12. @Nmangai மின்சாரம் போனதிலிருந்து அழுது கொண்டேயிருக்கிறது பக்கத்து வீட்டுக் குழந்தை #அம்மாவின் திராணி குழந்தைக்கு இல்லை

    >>>>

    இதுதாங்கோ டாப்பு

    ReplyDelete
  13. அருமைமிகு தொகுப்பு

    ReplyDelete
  14. சாலையில் கிடக்கிறது சல்லி சல்லியாய்..... மலையின் ஆணவம்!

    ReplyDelete
  15. @thoatta: பாகிஸ்தானிற்கு மின்சாரம் வழங்குகிறது இந்தியா # சானியா மிர்சாவையே சம்சாரமா கொடுத்தாச்சு, இனி எதை கொடுத்தா என்ன?

    ReplyDelete
  16. @kans04 வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..///

    போலி அட்டைகளும் போலி சிம் வாங்க யூஸ் ஆகுது,,,,,

    ReplyDelete
  17. கோயிலில் சாமியாடும் போது மட்டும் பாய்ந்து வரும் கடவுள்கள் ஏனோ வரவேண்டிய நேரங்களில் வருவதில்லை.....எல்லாம் எல்லாம் எல்லாமே அருமை !

    ReplyDelete
  18. different thought

    @riyazdentist கோமதியை கோம்ஸ் என்று கூப்டுவதை போல ஈமு கோழியை #ஈம்ஸ் என்று சுருக்கி கூப்பிடலாமே !

    ReplyDelete
  19. \\கடந்த 24 வருஷத்தில் கரகாட்டக்காரன் சண்முகசுந்தரத்துக்கு அடுத்து இத்தனை அக்கா போட்டது இந்த தங்கச்சிக்காதான் #சசிகலாஅறிக்கை
    \\ Super

    ReplyDelete
  20. அத்தனையும் அசத்தல் ட்வீட்ஸ்தான். என்னைக் கவர்ந்தது

    //கற்பனையில் பறக்கும் சில குதிரைகள், நிஜ வாழ்வில், கழுதைகளிடம் தோற்றுப்போகின்றன!//

    - தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  21. all r super...

    this is mine..

    கலாப க் காதலன்... ‏ @aruvai_sigichai
    sms ல பசங்க அனுப்புற :) க்கும் பொண்ணுங்க அனுப்புற :) க்கும் சில நூற்றாண்டு வித்தியாசம் இருக்குது

    ReplyDelete
  22. கலாப க் காதலன்... ‏ @aruvai_sigichai

    தேவி டியர் என்று காதல் கடிதம் எழுதும் போது சொற்களின் இடைவெளி குறைந்ததால் காதல் தோல்வி #depression

    ReplyDelete
  23. வணக்கம் நண்பா,
    நல்லா இருக்கீங்களா?

    நீண்ட நாளுக்கு பின்னர் வந்திருக்கேன்!
    எல்லா டுவிட்களும் அருமை. ஆனால் அசத்தலான டுவிட்டைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினம்!

    இங்கே உள்ள டுவிட்ட்களில்...
    பட்டா பட்டியின் இந்த டுவிட் ரொம்ப ஜோரா இருக்கு.

    @Pattapatti விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலா

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

    ReplyDelete
  25. //பூவா தலையா? பூ விழுந்தால் நான் உனக்கு, தலை விழுந்தால் நீ எனக்கு..//
    நல்ல ஐடியா!
    நல்ல தொகுப்பு

    ReplyDelete
  26. @Pattapatti விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலாம்
    >>>
    எனக்கு பிடிச்ச ட்விட்

    ReplyDelete
  27. அலைக்கற்றாஇயில் பணக்கற்றை வரும் என்று கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு நோபல் பரிசு ப்ளீஸ்- யாரென்று தெரியாது. ஆனால், படித்ததில் பிடித்தது

    ReplyDelete
  28. அருண்பிரபுApril 3, 2012 at 9:03 PM

    ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதை விட...ஊழல் செய்ய கற்று கொடுங்கள்;அது அவன் பரம்பரைக்கே பயன்படும்:-)
    இது மேட்டரு...

    ReplyDelete
  29. எல்லாக் கட்டணத்தையும் உயர்த்திய அம்மாக்கு ஒரு வேண்டுகோள்: சம்பளத்தையும் கட்டணமா நினச்சு ஒரு 50% உயர்த்திருங்க!!

    அரசு ஊழியர்களுக்கு ஏழாவது அகவிலைப்படி உயர்வாம். தனியார் ஊழியர்களுக்கு (அக)மனசாட்சிப்படி முதல்தடவையாவது சம்பளத்த கூட்டுங்கப்பா. அதனால இந்த ட்வீட் ரொம்ப பிடித்தது. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  30. //விகடன் பார்வைக்கு சில அசத்தல் டிவிட்டுகள்//
    கற்பனையில் பறக்கும் சில குதிரைகள், நிஜ வாழ்வில், கழுதைகளிடம் தோற்றுப்போகின்றன!
    இரண்டுக்கும் தொடர்பு இருக்காது என்பது என் எண்ண்ம்

    ReplyDelete

பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.