புத்தர் மீண்டு(ம்) வந்தார். - 5 நிமிடப்பதிவு


புத்தர் மீண்டு(ம்) வந்தார்.


"தாங்கள் ஞானம் பெற்றது எங்கு?" ஆர்வமுடன் வினவினேன்.
"போதி மரம்" என்றார்.

"அந்த மரத்தில் கிளைகள் ஏராளம் இருக்குமே?"
"ஏராளமான கிளைகளில் ஏராளமான பறவைகள் இளைப்பாறுமே?"
"இளைப்பாறும் பறவைகள் அடிக்கடி எச்சமிடுமே?"


"ஓ... எச்சங்களை பொருட்படுத்தாது, அமர்ந்திருந்தால் தானோ என்னவோ உங்களுக்கு ஞானம் கிட்டியது...!"


வரிசையாய் வினாக்களை எழுப்பி, நானே விடையைக் கண்டுகொண்டேன். 


நீதி:
அவமானங்களைத் தாண்டு, ஞானம்/ஞாலம் வசப்படும்.


டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.

விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - அசத்தல் ட்விட்களின் தொகுப்பு

@krajesh4u 
 
என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன். அம்மா வருகிறார், மனைவி வருகிறார், மகள் வருகிறார் #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.


 
எடியூரப்பாவாகியா நான்.. யோவ் இறங்கு, கவுடா மேல போங்க , கவுடாவாகிய நான், யோவ் இறங்கு , ஷெட்டர் நீங்க மேல போங்க..  ப்ளீஸ்


 
பாரம் பெருசா இருந்தா கடவுள் மேலயும் பாரம் சிறுசா இருந்தா கடவுள் துகள் மேலயும் போட்டுவிட்டு அமைதி காக்கவும்..


: தினத்தந்தி பெயர் தினக்கோழி என மாற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை # ஈமுக்கோழி விளம்பரம் போட்டே கொல்றாங்கய்யா


 
நல்ல நட்புக்கு அடையாளம் எப்பொழுது விலகி இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது தான்.


 
அடுத்த தடவ இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு சொல்றவங்ககிட்ட ஒரு துடைப்பத்த கொடுத்து பெருக்க சொல்லலாம்னு இருக்கேன் !!


 
கமல் வயதானால் எந்தப்படத்தில்வரும் கமல் போல் இருப்பார் என்று யோசித்தால், சட்டென மனம் சொல்கிறது, ஆமா கமலுக்கு எப்ப வயசாகும்?

 
ஷேவிங் செய்துவிட்டு வீட்டுக்கு போக சாலையை கடக்க காத்திருந்தேன், அடடா மீண்டும் தாடி வளர்ந்து விட்டது.!


 
அடுப்பில் பூனை தூங்குகிறது’என்றால்- அது இந்தியா! ’அடுப்பில் பூனை வேகிறது’ என்றால் -அது சீனா.


 
நேர்மைச் சட்டையை கம்பீரமாய் அணியுங்கள்,இல்லையேல் கழட்டி வைத்திடுங்கள்.தொழதொழாவென அணியாதீர்கள்,சகிக்கல,அதைவிட அம்மணம் அழகு.


 
இஞ்சி தின்ன கொரங்குனு சொல்றத விட ரெகார்ட தொலைச்ச இஞ்சினியரிங் ஸ்டூடண்ட்னு சொல்லுங்க உதாரணம் ரொம்ப அழகா பொருந்தும்


 
பாரம் பெருசா இருந்தா கடவுள் மேலயும் பாரம் சிறுசா இருந்தா கடவுள் துகள் மேலயும் போட்டுவிட்டு அமைதி காக்கவும்..


 
காதலில் தோல்வியுற்ற பெண்களும் தாடி வளர்த்தி இருந்தால் இந்த உலகம் எவ்வளவு அசிங்கமா இருந்திருக்கும் என எண்ணி பார்க்கிறேன்.!


@RenugaRain 
கடவுள் துகள்னு ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்களாம்!நெத்தியில வச்சுக்கிட்டா வேண்டிக்கிட்டது நடக்குமாம்!ஒரு கிராம் ஒரு லட்சமாம்!


 
இணையத்தை விட்டுச் செல்பவரை தேடாதீர்கள்..வாழ்வில் ஏதோ உருப்படியாக செய்து கொண்டிருக்கிறார் அவர் !
@krajesh4u 
 
தெரு கிரிக்கெட்டில் ஒரு ரன் அவுட்டுக்கு சாட்சி சொல்லி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறேன். சின்ன பசங்க சாவுகாசமே ஆகாது !


 
என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் டாயஸ்க்கு கார்டூன் டிவி எல்லாம் போட்டு காட்டணுமாம் #ரைட்டு :-)


 
தமிழனின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனங்களில் ஒன்று வண்டியின் ஹாரன்!


 
முன்பெல்லாம் கொசு கடித்தால் 'டார்ட்டாய்ஸ்' போடுவார்கள், இப்போ Facebookல் ஸ்டேடஸ் போடுகிறார்கள்.!


 
புத்தர் வந்தார்..சத்தமாய் சிரித்தார்..என்ன என்று கேட்டேன்..நான் "LAUGHING BUDDHA" டா என்றார்!!!




 
சர்க்கார் ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவோடு நேரு மாமாவையும் சேர்த்து அச்சடித்தால்,பெருசுங்க பேச்சு துணைக்கு சரியா இருக்கும்!


 
மன்மதன் 2-ல் திரிஷா,அனுஷ்கா,தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!#ஆறு அக்காக்களை கரை சேர்க்கும் ஒரு தம்பியின் கதையா இருக்கும்


 
யாராவது உதவி செய்தால் அவருக்கு நன்றி சொல்லாவிட்டாலும்,அந்த உதவியை செம்மையாக பயன்படுத்திக்கொண்டாலே மிக்க நன்றியாக இருக்கும்!!


 
முதிர்கன்னி - வினைத்தொகையல்ல... தொகையின் வினை.!


 
சந்தானம் ஜோக்ஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள் => அட்டு ஃபிகர், குவாட்டர், கட்டிங், கவுண்டரின் நையாண்டி சிறு சிட்டிகை


  
பி'ம்பி'ல்'லிக்காபி'லா'பி யின் சுருக்கம் தான் "பில்லா" #ஆயிரம் இரண்டாயிரம்

டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!

புத்தர் வந்தார்.. கொலைவெறி கொண்டார்...



புத்தர் வந்தார்.
"உங்களால் அநாதையாய் விடப்பட்ட உங்கள் மனைவி, குழந்தைகள் சௌக்கியமா? என்றேன்.
"நான் ஆசையைத் துறந்தவன்" என்றார்.
"ஆனால் அவர்கள் ஆசையை துறக்கவில்லையே" என்றேன்.
இப்படியாய், இன்னுமாய் சில கேள்விகள் கேட்டேன்.
அன்றைய இரவை புத்தர் சிறைச்சாலையில் கழிக்க நேரிட்டது.
என்னைக் கொன்ற குற்றத்திற்காக....


டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.


ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்