விகடன் பாணியில் இது வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு.


இந்த வாரம் ட்விட்டரில் கண்டெடுத்த பல்சுவை அதிரடி ட்விட்டுகளின் தொகுப்பு இது. உங்களை மிக ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு பாராட்டலாமே...

 "வெந்தயம் போட்டு ஆட்டினால் இட்லி மிருதுவாக இருக்கும்" என்ற டிப்ஸை சர்வரிடம் சொன்னேன், சர்வர் டிப்ஸ் கேட்டபோது !

 கட் பண்ணி ஓப்பன் பண்ணா கரண்ட் போயிருது....


 நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்



 வீட்டில் மனைவியை கோபப்படுத்தாமல் இருந்தாலே பாதியளவு உலக வெப்பமாதலை தடுக்கலாம்!


 பந்தின்னா பந்திதான்! வாழையிலை, ச்சீவீட்டு, இட்லி,தோசை,பொங்கலு....ஹி..ஹி! ~இதையெல்லாம் கண்டுபிடித்த முன்னோர்கள் வாழ்க!


 கர்நாடகாவில் இருந்து வந்தாலும் அட்சர சுத்தமாய் தமிழ் பேச முடியும் என்பதை ரஜினி பிரகாஷ்ராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
 டிராபிக் ஜாமை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இன்று பெட்ரோல் பங்கில் டிராபிக் ஜாம் #எகொசா


 திருமணமாகி வீட்டிற்கு வரும் மகளிடம் எப்டிம்மா இருக்கன்னு அம்மா கேட்பது,எப்டியாவது இருந்துவிடு என்ற பதிலையும் உள்ளடக்கியுள்ளது.


  : பேஸ்டுல உப்பு இல்லாட்டி கூட திரிஷா, அனுஷ்கா வராங்க; நாட்டுல பல பேரு சோறு இல்லாம இருக்கான், எவனும் வரமாட்டேன்கிறான்.!!!


 தற்காலிக சுகமென்றாலும் கொள்ளிக்கட்டையால் சொறிந்துக்கொள்வது மனித இயல்புதான்.


: கிழிந்த ரூபாய் நோட்டை மாத்தும் ஒவ்வொருவரும் சிறந்த நடிகர்களே ..."



 உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்

 இங்க்லீஷ்ல பல இடங்களில் சில வார்த்தைகள் சைலன்ட்டா வந்தாலும்,எல்லா இடங்களிலும் இங்க்லிஷ்ன்னாலே நான் சைலன்ட் தான்...
 ”சிலர் என்னிடம் பிச்சை கேட்கும்போது, என்னை, அவன், கிண்டல் செய்கிறானோ என்று அஞ்சுகிறேன்!”

: துன்பமற்ற முதல் மனிதன் இறந்தே பிறந்தான்.



@iPorukki: ஆயிரம் முறை தேவதையென்று வர்ணிக்கும் போது தேவதையாய் உருமாறாத மனைவி, பேயென்று திட்டும்போது, அரை நொடியில் உருமாறுகிறாள்.

: இரண்டாவது முறை செய்யப்படும் தவறு, முதல் முறை போல கவனிக்கப்படுவதில்லை. #பாஜக-பிட்டு

 ஆனா ஒண்ணு குஷ்பக்கா பத்துவிரலை முறிச்சு சொடக்கு போட்டு விட்டசாபம் பலிக்குது,10 மாசத்துல#அனுபவிப்பீங்கடா ஓட்டு போட்டதுக்கு:)

 திடீர்ன்னு ஒருநாள் லெட்டர் எழுதி வெச்சுட்டு கலைஞர் காணாமல் போனா என்ன நடக்கும்??# தேடுவாங்களா இல்ல கட்சிய புடிப்பாங்களா?



 ராஜபக்சே வும் அவனது மகன்களும் ஏன் எய்ட்ஸ் லோகோவை கழுத்தில் மாட்டிக்கொண்டு அலைகின்றனர் ..... டவுட்டு!!! 


 :தசாவதாரம் பற்றி இன்னும் புரியாத ஒரே கேள்வி... அசினாகவும் ஏன் கமலே நடிக்கலை?



 பெப்ருவரி சம்பளத்தில் ரூ.200 பாக்கி இருக்கிறது. குறைந்த விலைக்கு டாக்டர் பட்டம் கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

  மதம் வேண்டாம்; இறைவன் போதும் எனக்கு!


writernaayon அருங்காட்சியக பழங்கால ஓலைச்சுவடி எழுத்துக்களைப் பார்த்து திகைத்து நின்றேன் #தற்போதைய என் எழுத்துக்களைப்போலவே இருக்கிறது!




 நமது இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியுமெனில் நாம் தோற்றுக் கொண்டிருப்பதாக அர்த்தம் !

 புத்தகங்கள் படிக்கும் போது மூலையை மடக்கி வைப்போர் மூளை முடங்கியோரே!”


 நீங்க முன்னால வந்துடுங்க சார்னு சற்றுமுன் என் ஒழுக்கத்தை சந்தேகித்தவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் #இதயம் கிழியும் ஒலி கேட்டேன்


 இதை புரிய வைக்க ரொம்ப நேரமாகுன்னு மேனேஜர் சொன்னாருன்னா, அவருக்கே இன்னமும் விளங்கலைன்னு அர்த்தம்.!


 கொள்ளயர்கள் எல்லாம் ஆந்த்ராவுக்கு போயிட்டதா சொன்னாங்க அப்பிடியே கரண்ட்டு எந்தஸ்டேட்டுக்கு போச்சு-னு கண்டுபிடிச்சு சொல்லுங்க


 ஏழாவது ரவுண்ட் முடிஞ்சும் கேப்டன் நாலாவது இடமா? ஓ...சங்கரன்கோவில் இடைத்தேர்தல்  ஓட்டு எண்ணிக்கையைப் பத்தி பேசுறீங்களா...


 சில காதலர்களுக்கும் மேதகு தமிழக மக்களுக்கும் அட்வான்ஸ் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள் :‍)


 நான் வணங்கும் கோவிலில்தான் என் எதிரியும் பிரார்த்திக்கிறான்


: நீ சாப்பிடும் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயை நம்பாதே.! #பழமொழி


 ஒருமணி நேரத்திற்கெல்லாம் கோபப்பட முடியாது என்னால் ; என்னுடையது தணியாதது; அது என்னோடு எப்போதுமிருக்கும் !


 அப்படி முந்திக் கொண்டு போய் எமனை பார்ப்பதில் என்ன சுகமோ..


: வாழ்க்கைல நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ணா மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்.. பழிய யார் மேல போடலாம்னு..


டிரைலர் டைம்:

அடுத்த பதிவாக "கலவரபூமியில் காத்து வாங்க வந்த ரஞ்சிக்கோட்டை வாலிபன்" - ட்விட்டரில் வலது கால் வைத்து அடியெடுத்து வைத்திருக்கும் ச்ச்ச்சுவாமிசீ நித்தியானந்தா பற்றிய ஒரு சீரியஸான காமெடி பதிவு ..(சன் டிவியில் தமிழ் டப்பிங் ஹாலிவுட் படத்தின் டிரைலரின் பின்ணணியில் ஒலிக்கும் "ஹஸ்கி - பஸ்கி வாய்சில்" படிக்கவும்)

11 comments:

  1. விகடன் பாணியில் இது வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு."

    கலக்ல கலக்கல் பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. எல்லா ட்வீத்ஸ் நல்லா இருக்கு.

    @naiyandi புத்தகங்கள் படிக்கும் போது மூலையை மடக்கி வைப்போர் மூளை முடங்கியோரே!” ....... இது ஓகே

    ReplyDelete
  3. எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிரது

    ReplyDelete
  4. //நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்//
    அனுபவம் பலருக்கு இருக்கும்
    உண்மை

    ReplyDelete
  5. தினமும் போடுங்க பாஸ்

    ReplyDelete
  6. /*@Kaniyen "வெந்தயம் போட்டு ஆட்டினால் இட்லி மிருதுவாக இருக்கும்" என்ற டிப்ஸை சர்வரிடம் சொன்னேன், சர்வர் டிப்ஸ் கேட்டபோது ! */அருமை !!

    பாரதி தினமும் பகிருங்க !!

    ReplyDelete
  7. // அருங்காட்சியக பழங்கால ஓலைச்சுவடி எழுத்துக்களைப் பார்த்து திகைத்து நின்றேன் #தற்போதைய என் எழுத்துக்களைப்போலவே இருக்கிறது!//

    ஹா ஹா என் எழுத்தும் அப்படித்தான்!

    ReplyDelete
  8. நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்
    ...
    பிடித்தது...
    தொடருங்கள் உங்கள் த்வீட்சை...

    ReplyDelete
  9. நண்பரே என் தளத்தில் வந்து கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டு சென்றுள்ளீர்கள்...

    //நண்பரே இந்த பதிவுகளை படித்து, உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில், ஓட்டுப்பட்டைகளில் வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும்.
    http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html

    http://ponmalars.blogspot.com/2012/01/blog-post.html

    http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html//

    முதலில் உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி நண்பரே...
    நான் அந்த ஒட்டுப்பட்டைகளை பதிவுகளை திரட்டிகளில் இணைக்க மட்டுமே வைத்திருந்தேன்...

    மற்றவர்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாம் என்று பல நேரம் அவற்றை தூக்கிவிடுவேன்...

    நீங்கள் அதில் ஓட்டளிக்கும் போது ஏதாவது பிரச்னை கண்டீர்களா?

    முடிந்தால் தெரியப்படுத்தவும்...

    மீண்டும் நன்றி...

    ரெவெரி
    reverie1947@gmail.com

    ReplyDelete
  10. @thoatta : பேஸ்டுல உப்பு இல்லாட்டி கூட திரிஷா, அனுஷ்கா வராங்க; நாட்டுல பல பேரு சோறு இல்லாம இருக்கான், எவனும் வரமாட்டேன்கிறான்.!!!


    படித்ததில் பிடித்தது அது!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. ?>@kannamoochi :தசாவதாரம் பற்றி இன்னும் புரியாத ஒரே கேள்வி... அசினாகவும் ஏன் கமலே நடிக்கலை?

    டாப்

    வாரா வாரம் 1 போடுங்க.. டெயிலி போட்டா திகட்டிடும்

    ReplyDelete

பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.