"கதவைத் திற; காற்று வரட்டும்" தொடர், குமுதத்தில் வந்த போது மிக அதிகமான பேர்களை ஈர்த்ததாக சொல்லப்பட்டது. அதை நித்தியானந்தா எழுதவில்லை, வலம்புரிஜான் தான் எழுதினார் என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு அந்த தொடர் நன்றாக இருந்தது. நித்தியானந்தாவின் ஆசி உரைகளிலும் "தத்ஸ்" ததும்பி வழிந்து பாயும்.
ஆனால் அத்துணை விஷயங்களையும், நித்தியானந்தா பற்றிய "வீடியோ காட்சி" தூக்கி சாப்பிட்டு விட்டது. நித்தியானந்தா என்றாலே வேறு எதுவும் மண்டைக்கு வருவதில்லை. அது நம்முடைய தவறும் அல்ல.
இத்துணை நிகழ்விற்கு பிறகு, கூச்சமே இல்லாமல் அதே ":பளீர்" சிரிப்புடன் சத்சங்கம் நடத்தும் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.
அதே துணிச்சலுடன் ட்விட்டரிலும் வலது கால் வைத்து, கணக்கு ஆரம்பித்திருக்கிறார் நித்தியானந்தா.
ட்விட்டர் என்பது பெரும்பாலான நாத்திகர்களின் உறைவிடமாகவே இருந்து வருகிறது. அதுவும் இலங்கையில் கொடூரமாக தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. (தெய்வம் என்று ஒன்று இருந்தால் இதனையெல்லாம் நின்றோ அல்லது அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ தட்டிக்கேட்டிருக்க வேண்டுமல்லவா?)
"இயேசு நாதரே வந்தாலும் எங்க ஆளுக ஓட்டி எடுத்துடுவாங்க, நீயெல்லாம் எம்மாத்திரம்" என்கின்ற அளவுக்கு நித்யானந்தாவை நித்யகண்டம் பண்ணிவிட்டார்கள் "ட்விட்டார் வாழ்" கலாய்ப்பாளர்கள்.
ஆரம்பத்தில் @SriNithyananda என்பது ராஜன் லீக்ஸ்-ன் ஃபேக் ஐடி-ன்னு கெளப்பி விட்டாங்க. அப்புறம் ராஜன் "நாலு நாள் தொடர்ந்து அவன் டைம் லைன் ஃபுல்லா நாறடிச்சு உட்ரணும்!" வீராவேசமாக வீச்சருவாளோடு கிளம்பிய பிறகு தான் "ம்யூஜிக்" ஸ்டார்ட் ஆனது.
இன்றைய நிலவரப்படி, நித்தியானந்தாவை பாலோ பண்ணும் ட்விட்டர்களின் எண்ணிக்கையை விட, அவர் கடுப்பில் ஃபிளாக் செய்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
ஆனால் நித்தியானந்தாவின் டைஹார்ட் "பேன்"கள் பலர், ச்ச்சுவாமீசீ யிடம் தங்கள் கேள்விகளை கேட்டு, அருளாசி பெற்றுவருவதை பார்க்க முடிந்தது.
அந்த பாணியில் களமிறங்கி, சுமார்ஜியின் குண்டலினி யோகத்தை கலைத்து, கடுப்பாக்கி ஃபிளாக் செய்யப்பட்டவர்களில் @gpradeesh , @thoatta , @RajanLeaks , @iLoosu ,@vandavaalam முதல் வரிசை ஆட்டக்காரர்கள்.
டி- டோன்டி ரேஞ்சுக்கு அடித்து ஆடி ஃபிளாக் ஆனாவர்கள் ட்விட்டர் சூப்பர் ஸ்டார் தோட்டாவும், கலாய்யோ கலாய் ராஜனும்.
இன்னும் மேட்ச் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அய்யோ அந்தாளு பாவங்க.., என சக ட்விட்டர்களே பரிதாபப்படும் அளவுக்கு, கலாய்ச்சி காய்ச்சி கய்வி ஊத்திட்டாங்க..
இது மாதிரியான தனிமனித தாக்குதல்களில், ட்விட்டரில் எழுதுபவர்கள் ஈடுபடலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமும் கூட.
நித்தியானந்தா என்பவர் தனிமனிதராக பார்க்கப்படுவர் அல்ல. மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயத்தை காட்டி, மக்களை ஏமாறிய மோசடி நபராகவே பார்க்கப்படுகிறார். இறைவன் தண்டிப்பான் என்ற உணர்வு கூட இல்லாத அவரால் எப்படி மற்றவர்களை நெறிப்படுத்தும் பணியை செய்ய முடியும்?
எத்தனையோ ஆண்டுகள் தாண்டி வந்த இந்து மதம், இறைவனை விட இறைவன் அடியார்களுக்கு மிக உன்னதமாக மதிப்பு கொடுத்து வந்த மதம். நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயத்தோடு தமிழையும் வளர்த்த பெரியவர்களையும் கொண்டிருந்த மதம்.
அதனையும், தன்னை நம்பி வந்த தனிப்பட்ட மக்களையும்,. "ஆராய்ச்சி செய்கிறேன்" என்ற சமாளிப்பிகேஷனோடு கோமாளிகள் ஆக்கிய ரஞ்சிக்கோட்டை வாலிபனை, மதத்தின் பெயரால் "தனியார் நிறுவனம்" நடத்தி வந்தவரை, கலாய்ப்பது தவறல்ல என்பது எம் துணிவு.
நீங்க சொன்னபடி ஃபாலோ பண்ணிட்டேன் ஹெஹெ!
ReplyDeleteஆனா இவ்ளோ நடந்தப்புரமும் அவரு சிரிச்சிக்கிட்டே அருளாசி வழங்குறாரே? விளங்குமா?
ReplyDeleteநித்தியானந்தாவின் அந்த நேர்மை[!] எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி....
ReplyDeleteஇலங்கையில் கொடூரமாக தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. (தெய்வம் என்று ஒன்று இருந்தால் இதனையெல்லாம் நின்றோ அல்லது அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ தட்டிக்கேட்டிருக்க வேண்டுமல்லவா?)//பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
ReplyDelete:))))))))))))))))))))))
ReplyDeleteஹா ஹா!செம
ReplyDeleteசகோ எனக்கும் இப்போ தான் ருவிட்டரில் ஆர்வம் அதிகரித்துள்ளது....
ReplyDeleteஃஃஃஃதெய்வம் என்று ஒன்று இருந்தால் இதனையெல்லாம் நின்றோ அல்லது அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ தட்டிக்கேட்டிருக்க வேண்டுமல்லவா?ஃஃஃ
ReplyDeleteஇல்லை சகோ கடவுள் இருக்கிறார்... ஒரு முடிவில் தான் பல ஆரம்பங்கள் இருக்கிறது என்பது என் நம்பிக்கை...
கற்சிலையாய் நிற்கும் சாமிகள் பால் அருந்துவதையும் கண்ணீர் வடிப்பதையும் நம்புகிற மூடர்கள் உள்ளவரை நித்தியானந்தாக்களை யாரும் முடக்கிப் போட்டுவிட முடியாது!
ReplyDeleteஅந்த டுவிட்டரில் கணக்கு ஆரம்பிக்கிறது அப்புறம் பயன்படுத்தறது யாரவது சொல்லுங்கப்பா... ரொம்ப அர்ஜென்ட்....
ReplyDeleteரஞ்சிக் கோட்டை வாலிபன்..... ரஞ்சிதானந்தா என்ற பெயருக்கப்புரம் இன்னொரு அருமையான பெயர்.... சூப்பரா இருக்கு......
ReplyDeleteரஞ்சிதானந்தாவை இந்து மதத்தின் representative ஆகவோ, அல்லது ஒரு இறை நம்பிக்கையாலனாகவோ கூட பார்க்க முடியாது. இறைவன் இருந்தால் நம்மை தண்டிப்பானே என்ற அச்ச உணர்வு மனதில் இருப்பவன் இவனைப் போல காவி உடையைப் போட்டுக் கொண்டு இன்னொருத்தன் மனைவியுடன் கூத்தடிக்க மாட்டான். இவனுக்கு பணம் சேர்க்க வேண்டும் அதற்க்கு மத நம்பிக்கையை கையில் எடுத்துக் கொண்டுவிட்டான். இவனது போதனைகள் எந்த விதத்திலும் இந்து சமய இறையடியார்களுக்கு ஏற்ப்புடையதல்ல. இவன் ஆத்திகனே இல்லை. இவன் ஒரு போலி.
ReplyDeleteஹா ஹா இவ்வ்வளவு நடந்திருக்கா? ட்விட்டர்ல இருந்தும் எனக்கு த்தெரியாம போச்சே
ReplyDelete