💥 குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது.
💥 வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.
💥 பெண்களுக்கு திருமணம் ஆனதும் - அவருக்கு - அவரது கணவர் வீட்டு குலதெய்வமே உரிமையானது.
தலைக்கட்டு பூஜைகள் அங்கேதான் தொடங்குகின்றன. எனவே - தாங்கள் தங்களுடைய மாமனார் வீட்டு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வரலாமே தவிர, அந்தக் கோயில் தங்களுக்கு பாத்யப் பட்டதாக ஆகாது!...
💥 எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குல தெய்வக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில் குலதெய்வம் என்பது ஒரு நிலையில் தங்களது முன்னோரே ஆவர்.
💥 குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்பார்கள்.
💥பிழைப்பு தேடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம்,புலம் பெயர்ந்து திசைக்கொன்றாய் போன பின்னும், குலதெய்வ வழிபாடு என்பது அவர்களை இணைக்கும் பிணைப்பாக இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது.
No comments:
Post a Comment
பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:
வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.