💥வெளி ஊருக்குப் பிழைக்கப் போகிறவர்கள், என்ன வேலை செய்தாலும் இங்கே வரும்போது தங்களை மிகவும் நல்லநிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படி காட்டிக் கொள்வதுதான் தனக்கு மரியாதை தரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.
தவிர காசு பணம் செலவழித்துத் தன்னை வெளியூருக்குச் சம்பாதிக்க அனுப்பிய சுற்றத்தின் மனம் கஷ்டப்படுமோ என்பதனால் அவர்கள் அப்படி நடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
💥இது போலி என்பதை அவரின் உறவினர்களும் புரிந்து கொள்வதில்லை. மாறாக வருபவருக்குத் தொல்லைதந்து அவரை மீண்டும் பொருள் நிலையில் சிக்கலுக்காக்குகிறார்கள். இதை மையமாக்குவதுதான் “ஐந்தில் நான்கு” சிறுகதை.
💥வெளியூரில் வேலை செய்யும் காத்தமுத்து, சொந்த ஊருக்கு சில நாள் விடுப்புக்காக,
இரவல் வாங்கி வந்த டிரான்ஸ்சிஸ்டர்—கேஸட் பிளேயர், தவணையில் வாங்கிய கைக்கடிகாரம் ஆகியவற்றை அணிந்துக்கொண்டு , புது பணக்காரன் தோரணையில் ஊருக்குள் நுழைகிறான்.
ஒரு கட்டத்தில் அணிந்திருந்தவை எல்லாவற்றையும் உறவினர்கள் கேட்க மறுக்க முடியாமல் கொடுக்கிறான்.
💥திரும்ப பிழைப்புகாகப் போக வேண்டிய நாளில் அங்கு இன்னும் எத்தனை ஆண்டுகள், இதையெல்லாம் ஈடுசெய்ய, உழைக்க வேண்டுமோ என்று கண்கள் கலங்குகிறான்.
💥வழி அனுப்ப வந்த உறவோ “அருமாந்த பிள்ளை…..தூர தொலைக்குப் போறமோன்னு வருத்தப்படுது” என அனுதாப்படுகிறது.
💥நீண்ட தொலைவு சென்று பிழைப்பவர்கள் படும் பாடு, அவர்களின் நிஜ முகம், இங்கு உறவினர்கள் அவர்களைப் பற்றி எண்ணியுள்ள நிலை ஆகியவற்றை வைத்து இக்கதை பின்னப்பட்டாலும் வருபவன் காட்டும் போலி முகத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட நாஞ்சில் நாடன் கதை இது.
💐💐💐💐💐💐💐💐
💥பின்னூட்டங்கள்:
முற்றிலும் அவனையே குறைசொல்லவும் இயலாது. வெளியூருக்குச்சென்று சம்பாதித்தவன் பணக்காரனாகத்தான் திரும்புவான் என்ற ஓர் எதிர்பார்ப்பும் சமுதாயத்தில் இருக்கிறதல்லவா?
💐💐💐💐💐💐💐
💥ஏன் பணக்காரன் ஆகவேண்டும்?
மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கு தேவை:
1.சுவாசக்காற்று.
2.குடிக்க நீர்.
3.உண்ண உணவு.
4.உறங்க இடம்.
5.பழக நட்பு.
இவைகளை அடைய உழைப்பும், அறிவும், ஒழுக்கமும் தேவை.
பணம் என்ற "பேயை" உருவாக்கியவன் அயோக்கியன்!

No comments:
Post a Comment
பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:
வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.