அப்ப இனி சசி முதல்வர்.,ஜெ. பிரதமர் - அந்த பிம்பிளிக்கி பிளாக்கி அறிக்கையின் பின்ணணி.வழக்கமா கலைஞர் ஆட்சியில் இருந்த போது நடக்குற பிரச்சனைகளின்  போது வந்த அறிக்கைகள் தான், "கெடக்குறது கெடக்கட்டும், கெழவியைத் தூக்கி மனையில வை"-ங்கிற ரேஞ்சுல இருக்கும் ஆனா, அதுக்கு கொஞ்சமும் கொஞ்சமும் கொறைஞ்சவங்க இல்லைங்கிற ரீதியில இருக்கு, நேற்று ஜெயா டிவியில் "ப்ளாஷ்" ஆகி அதனால் எல்லா ஊடகங்களிலும் "ப்ளீச்" ஆகியிருக்கிற "உடன் பிறவா" அறிக்கை.

ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் பண்ணின பட்ஜெட்-ல இருந்த, "முதலமைச்சர் அம்மாவின் ஆணைக்கிணங்க" என்ற வார்த்தைகளின் எண்ணிக்கையை, விட அதிக முறை அக்கா... அக்கா.. என்று ஒரே பாசமலர் - பார்ட் 14 ரேஞ்சுக்கு இருந்தது சசிகலாவின் நேற்றைய அறிக்கை.

"கண்கள் பனிக்க, இதயம் இனிக்க" என்ற கலைஞரின் வசன உதவியோடு, இனி கூடிய விரைவில் போயஸ் தோட்டத்தில், "இரட்டை இலையில்,  இரட்டை ரோஜா பூக்கும்" என வானிலை முன்னறிவிப்புகள் சொல்கின்றன.

சசிகலா வெளியேற்றப்பட்ட போது, "எம்ஜிஆரின் உண்மைத்தொண்டர்களுக்கு இனி மதிப்பிருக்கும்" என்று பட்டாசு வெடிச்சு கொண்டாடுனான் பாருங்க.. அவன் தான் இப்ப கிலி அடிச்சு, "விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க போல"னு புலம்பிக்கிட்டு இருக்கான். (மெய்யாலுமே அப்படி பொலம்புன ஒருத்தரோட தாக்கம் தான் இந்த பதிவு, கடைசியா அவரு மனச தேத்திக்கிட்டு சொன்ன வார்த்தைகள் தான் தலைப்பில், உங்களைக் கடுப்பாக்கிய வார்த்தைகள்.. ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம்.. அட.. குஷ்பு முதல்வர் ஆவார்-னு ஒரு கூட்டம் கும்மியடிச்சதையே பாத்தவங்க நாங்க)
 
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில் கூட, "அக்கும்பலை நானே ஒதுக்கிட்டேன். உங்களுக்கு என்ன உறவு வேண்டியிருக்கிறது, இனிமேல் நடவடிக்கை தான்" என்று ஜெயலலிதா எச்சரித்த சில நாட்களுக்குள், ஜெயா டீவியில் சின்னம்மாவின் அறிக்கை.

அதிமுகவில் சின்னதாய் ஒரு விஷயம் நடந்தால் கூட "அம்மாவின் ஆணைக்கிணங்க" தான் நடக்கும். இந்த அறிக்கை மட்டும் எப்படி அம்மாவின்  யாணை இல்லாமல் வெளிவந்திருக்கும்? அதுவும் ஜெயா டீவியில். ( ஒரு வேளை ஜெயா டீவி, கனிமொழியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அடபோங்கப்பா அவுங்க கலைஞர் டீவியின் வாசலைக் கூட மிதித்ததில்லையாம்... அப்புறம் எப்படி போய்...  ஜெயா டீவி???  ஹி..ஹி..ஹி..)

பெங்களூரூலு கோர்ட்லலூ ச்சே... பெங்களூரு கோர்ட்ல, "ஜெயலலிதா குற்றமற்றவர்., நானே அனைத்திற்கும் பொறுப்பு" என்றார் சசிகலா. சரி ஜெயலலிதாவை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க என்பதால் அப்படி சொன்னார் எனில், இப்போது "எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை" என்கிறார். யார் தப்பிக்க? இது இயக்குனர் திரைக்கதை அமைப்பிலும், கதை வசனத்திலும், கோட்டை விட்ட இடமாகவே தெரிகிறதே!.

இது சசிக்கலாவின் அறிக்கையின் ஒரு பகுதி " என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விருப்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டடது என்பதையும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது, நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை."

முதலில் ஜெயலலிதா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாம் சசிகலா தான் செய்கிறார் என்றார்கள். (சட்டமன்ற தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியான போது, சசிகலா அன் கோ தான் பட்டியலை வெளியிட்டு விட்டது என்று "தமிழின் நம்பர் ஒன், நம்பர் டூ பத்திரிக்கைகள் கூட எழுதின. - தமிழில் ஏதையா நெம்பர் டூ? தமிழில் பத்திரிக்கைகள் எல்லாமே நம்பர் ஒன் தான் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அதுவும் சரிதான். )

சரி விஷயத்திற்கு வருவோம், ஜெயலலிதாவுக்கு ஒன்றும் தெரியாது, சசிகலா தான் என்றார்கள். இப்போது எனக்கு ஒன்றும் தெரியாது, என்னுடைய நண்பர்களும், உறவினர்களும் தான் என்று சசிகலா சொல்கிறார். அதனையும் நம் தமிழ்கூறும் நல்லுலகம் அப்படியே ஏற்றுகொள்வதாக வைத்துகொள்க. நாளை நாங்களும் ஒன்றும் செய்யவில்லை என்று சசிகலாவின் உறவினர்கள் சொல்லிவிட்டால்???

யாரும் எதையும் செய்யவில்லை, எதுவும் நடக்கவில்லை, எல்லாம் ஆரிய,திராவிட மாயை - என்று கலைஞர் பாணியில் தமிழக மக்களை கலாய்க்க தயாராகி விட்டார்கள் என்று தானே அர்த்தம்.

"ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க., ஏற்போர் அதிகம் இருப்பதாக கருதுவதால்.. அதுவே உண்மை என தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது" என சபாநாயகர் ஜெயக்குமாரின் "கட கட" பாணியில் ஏற்றுக்கொள்ள மக்களும் காத்திருப்பார்களா?

ஒரு மிகப்பெரிய கூட்டமே அதிகாரத்தில் தலையிட்டதால் தான் திமுக வீழ்த்தப்பட்டது என்பதை முதல்வர் இன்னும் மறந்திருக்க மாட்டார். ஏனெனில் அதை சொல்லி தானே வாக்குகளை வாங்கி, இன்று அசுர பலதோடு ஆள்கிறார். மீண்டும் அதே தவறு நிகழ காரணமானால், கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிறப்பிடம் கொடுத்த பெருமை ஜெயலலிதாவுக்கு வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

சாமானியனாக எமது விருப்பம்.., ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பளித்தவர்கள் மட்டும் ஆட்சி செய்க.. அவர்களை அண்டிப் பிழைப்போர், ஆட்சியிலிருந்து தள்ளி நிற்க..

13 கருத்துரைகள்:

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

நல்லா காமெடி பண்றாங்க பாஸு... நாமளும் சிரிச்சு வெக்க வேண்டியதுதான்

விக்கியுலகம் said...

"அம்மாவின் யாணை"

>>>>>>

இது எழுத்துப்பிழையா இல்ல கலாய்க்கறீங்களா!

NKS.ஹாஜா மைதீன் said...

#( ஒரு வேளை ஜெயா டீவி, கனிமொழியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? #

சும்மா சுருக்குன்னு கேட்டு இருக்கிங்க...

Yoga.S.FR said...

என்னமோ போங்கண்ணே!டெய்லி இப்புடி கிச்சு,கிச்சு மூட்டுறதே வேலையாப் போச்சு,அவங்களுக்கும்,உங்களுக்கும்!நாஸ்தா துன்ன வழியக் காணும்!சும்மா ஏத்தி விடுறீங்க .......................!

Yoga.S.FR said...

பின்னூட்டம் இடுவோர் நலவாரியம் சார்பில் சில டெம்பிளேட் பின்னூட்டங்கள்:////ஏண்ணே,ஏன் இந்த கொலவெறி????

பாலா said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... கவுண்டமணி எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி....

பாரத்... பாரதி... said...

//விக்கியுலகம் said...
"அம்மாவின் யாணை"

>>>>>>

இது எழுத்துப்பிழையா இல்ல கலாய்க்கறீங்களா!//


கலாய்ப்பு தான் தல..

Anonymous said...

இவங்க தினசரி நடவடிக்கைக்கு ஒரு சானல் தொடங்கி காமடி டி வி ன்னு தான் பேர் வைக்கணும்...

அப்பவும் நம்ம பணத்துல தான் விளம்பரம்...

நன்றி நண்பரே என் வலைப்பூவை சரி செய்ததற்கு...

PREM.S said...

ஒவ்வொரு வரியும் உண்மைஆனால் சிரிக்கவும் முடிகிறது உங்கள் எழுத்து நடை நன்று

Sara said...

Paavam Makkal mental aagividuvargal..........ivargal adikum koothil

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ ஐயோ நான் எங்கேயாவது மலைக்கு போயி கீழே குதிக்க போறேன் சாமியோவ் வாங்க யாராவது என்கூட கம்பெனிக்கு.....

முனைவர் பரமசிவம் said...

நீங்கள் எடுத்துரைத்த ’உண்மைகளை’சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்; விழிப்புணர்ச்சி பெற வேண்டும்.
பாராட்டுகள் சகோ.
மேலும்.............
பதிவைத் திருடு கொடுத்து மனம் தளர்ந்த எனக்குத் தைரியம் ஊட்டிய தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி.
மிக்க நன்றி.

முனைவர் பரமசிவம் said...

நீங்கள் எடுத்துரைத்த ’உண்மைகளை’சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்; விழிப்புணர்ச்சி பெற வேண்டும்.
பாராட்டுகள் சகோ.
மேலும்.............
பதிவைத் திருடு கொடுத்து மனம் தளர்ந்த எனக்குத் தைரியம் ஊட்டிய தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி.
மிக்க நன்றி.

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்