சபதம் செய்யலாம் வாங்க...

2010 முடிந்து, 2011 வெற்றிகரமாக துவக்கவிருக்கும் தருணம் இது.
வழக்கமா ஒரு வருஷம் முடியும் போது சபதங்கள் செய்வது உலகவழக்கம்.

வரும் ஆண்டிற்க்கான உங்களுடைய சபதம்..., உறுதி மொழி என்னவாக இருக்கும்...,

(அந்த சபதத்தை தொடந்து கடைப்பிடிக்க, முயற்சி செய்து தான் பார்ப்போமே...ஒரு விஷயத்தை செய்யாமல் விட்டுவிட்டு வருத்தப்படுவதை விட, செய்ய ஆரம்பித்து விட்டு இயன்ற வரை தொடருவது சிறப்பு தானே)  


சென்ற வருடம் செய்த சபதங்கள்(ஒரு மீள்பார்வைக்காக) அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
யார் மனதையும் நோகடிக்கக்கூடாது
நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்
அதிகம் பேசக்கூடாது
உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

 
சரி உங்களுடைய சபதங்களை சொல்லுங்கள், .
நல்லவை இருந்தால் நாமும் பின்பற்றுவோமே....
,

கலங்கடிக்கும் பின்னூட்ட ஊழல்.


தமிழ் பூந்தோட்டத்தில் ரோஜா மணம்.

சென்ற வாரத்திய தமிழ்மணத்தில் முதல் இருபது இடங்களுக்கான பட்டியலில் எட்டாம் இடத்தை நமது ரோஜாப்பூந்தோட்டம் பெற்றிருப்பதை, உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியுறுகிறோம்.

தமிழ்மணம் பட்டியலில் வருவது இதுவே முதல் முறை என்பது கொஞ்சம் பயம் கலந்த மகிழ்ச்சியாகவே தெரிகிறது.எங்கள் பதிவுகளை ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும்
தமது பின்னூட்டம் மூலம் இந்த தகவலை எங்களுக்கு தெரிவித்த ரஹீம் கஸாலி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர்க்கும் நன்றிகள்.


(பின்னூட்டம் இடுபவர்கள் வசதிக்காக,
கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பின்னூட்டம் இடலாம்)
தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஊட்ட பின் ஊழல் :

ரோஜாப்பூந்தோட்டத்தில் பின்னூட்டம் இடும் கமிட்டியில் இருந்தவர்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, பின்னூட்டம் இடும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஊழல் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால், எங்கள் வலைப்பூ பொறுப்பாளர்களிடம் பெருத்த குழப்பம் நிலவி வருகிறது.

மற்ற பதிவர்களின் பதிவுகளை முழுவதும் படிக்காமல், ஆரம்ப மற்றும் இறுதி வரிகளைக் கொண்டு மற்றவர்களுக்கு பின்னூட்டம் வழங்கியுள்ளதே பின்னூட்ட ஊழல்.

அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

பின்னூட்டம் இடுபவர்கள் வசதிக்காக,
கீழே உள்ள் வரிகளை காப்பி செய்து பின்னூட்டம் இடலாம்)

பெரும்பாலான பதிவர்கள் நேரம் கருதி இதைத்தான் செய்கிறார்கள், எனவே விட்டுவிடலாம்.

அல்லது

பின்னூட்ட ஊழல் செய்தவர்களை அழுகை வரும் வரை காஸ்ட்லியான வெங்காயத்தை உரிக்க வைக்கலாம்.

ஆண்டு புது யாருக்கு?

வரும் 1111 நாளை கொண்டாட உலகம் முழுவதும் கொண்டாட தயாரகி விட்ட நிலையில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மன்னிக்கவும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருவது தமிழ் புத்தாண்டு அல்லவே, ஆதலால் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?

புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்.

இப்போதேல்லாம் கோவில் வேறு பன்னிரெண்டு மணிக்கு திறந்து, வரம் கேட்கும் வழக்கம் வேறு தொடங்கியிருக்கிறது.

இதெல்லாம் எதைக்காட்டுகிறது.
கலாச்சாரக்காவலர்களின் கருத்து இதனில் என்ன?

தனிப்பட்ட முறையில் உங்கள் பதில் என்ன?

(இதுக்கு பின்னூட்டம் நீங்கள் தான் போட வேண்டும்.)

டிஸ்கி:
இந்த பதிவில் உள்ள தலைப்புகளில் உள்ள தவறுகளை கண்டும், காணாமல் இருந்தது போல், 2010ல் உங்கள் அன்புக்குரியவர்கள் செய்த தவறுகளை கண்டும், காணாமல் இருந்து விட்டு, 2011 அவர்களுடன் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.
சரியான தலைப்புக்கள்.
தமிழ் மணத்தில் ரோஜாப்பூந்தோட்டம்.
பின்னூட்ட ஊழல்
புதுஆண்டு யாருக்கு. ?

பஸ்கி:
இந்த பதில் பின்னூட்டம் இடுபவர்களின் வசதிக்காக நாங்களே பின்னூட்ட வரிகளை இணைத்துளோம்..(இதுவும் ஒரு வகை பின்னூட்ட ஊழல் தான்)


இந்த பதிவிலுள்ள மூன்று விஷயங்களிலும் பின்னூட்டம் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால்இந்த பதிவு பின்னூட்ட சிறப்பிதழ் என அன்போடு அழைக்கப்படுகிறது.

வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய்

வணக்கம் நேயர்களே, இன்றைய நமது நிகழ்ச்சியில் பதிவுலக தாதாவாக மாறத்துடிக்கும் ஒரு சாதா  என்ன அறிகுறிகளை கொண்டிருக்கக்கூடும் என்பது பற்றிய மருத்துவக் குறிப்புக்களை பார்க்கப்போகிறோம்.

இது வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய், இதன் அறிகுறிகளை நீங்களும் கடந்து வந்திருக்கக்கூடும், அல்லது இப்போதும் இந்த அறிகுறிகள் உங்களுக்குள் இருக்கக்கூடும்.

எப்போதும் Stats பார்த்துக்கொண்டே இருப்பது.

பின்தொடருபவர்கள்  அதிகரிக்கும் போது, புது சொத்து வாங்கின மாதிரி சந்தோஷப்படுவது.

ஆன்- லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்வது, தான் மட்டும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் விரக்தியாவது.

பிரபல பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, நம்மள விட கேவலமா எழுதியிருக்கிறான் (கவனிக்க அன் விகுதி) ஆனா இவ்வளவு பேர் வந்து பாக்குறாங்களே என கலங்குவது.

அரசியல் கூட்டமா இருந்தா, பிரியாணி குடுத்து ஆள் தேத்தலாம் இப்ப என்ன பண்றது என மருகுவது.

பின்னூட்டமே இல்லாமல் இருப்பதால், தானே மச்சம் வைத்து, மாறு வேடத்தில் வந்து, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவது.


கம்பியூட்டர் தெரியாதுனு சொல்லி, எஸ்கேப் ஆகுற சொந்தகாரங்ககிட்ட, நீங்க தாங்க சின்ன பில்கேட்ஸ் அப்படினு புளுகி ஃப்ளாக் ஆரம்பிக்க மார்க்கெட்டிங் செய்வது-- அட ஓட்டுப்போட ஆள் கிடைக்குமில்ல.

யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், தானே கள்ள ஓட்டு போட களமிறங்குவது. ஆனா பாருங்க இப்பவெல்லாம் திரட்டிகள் ரொம்ப உஷாராயிட்டாங்க.(அப்படினா முன்னாடி கள்ள ஓட்டு போட்டிங்களானு கேட்டா..ஹி ஹி ஹி, நமக்கு தற்பெருமை புடிக்காதுங்க)

புதிய பதிவர்களின் பதிவுகளை தேடிப்போய் நீளநீளமாய் பின்னுட்டுவது, (நம்ம இனமில்ல.)பிரபல பதிவர்களுக்கு ஒற்றை வரியில், ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு கடுப்படிப்பது.

நல்ல டெரர் பதிவரா பாத்து, அவர்களுடன் சண்டையிடுவது. அடுத்த கட்டமா பஞ்சாயித்த கூட்டுனா "என்ன கைய புடிச்சு இழுத்தாங்க" ரேஞ்சுக்கு என்ன என்ன என கூத்தடிப்பது.

போட்டி வைப்பது, தொடர் பதிவுக்கு வெத்தல பாக்கு தட்டுடன் தடபுடலா கிளம்பி, நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன் என பீதிய கிளப்புவது.

பதிவிட விஷயம் கிடைக்காத போது விஜய், விஜயகாந்த்,ராசா என இவர்களின் வயிற்றெரிச்சலை கிண்டுவது.

கும்மியடிக்கும் கூட்டத்தாரோடு சேர்ந்து, "நானும் பெரிய ரௌடிதாங்க" வாலண்டிரியா ஜீப் ஏறுவது.


சமயத்தில் கும்மி கூட்டத்தாரின் போதைக்கு ஊறுகாயாக மாறி தவிப்பது.

கொஞ்ச நாள் பதிவு போடாமல் இருந்து விட்டு, தமிழர்களே தமிழர்களே என ஆரம்பித்து, ரொம்ப ஆணீ அதனால.. என இழுவை போடுவது.

சில பதிவர்கள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு,ஓட்டுப்போட்டு ஹிட்டடிப்பதாக, பார்லிமெண்டை கலங்கடித்து, ஜே.பி.சி. விசாரணையை கோருவது.

விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும்.

இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி, ஈரோடு பதிவர் சந்திப்பில் கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.

நேற்றைய பொழுது உன்னோடு....

நானும் அவளும்
கை கோர்த்து
கடந்த தொலைவுகளை
தேசிய நெடுஞ்சாலையில்
நடந்திருந்தால்
காஷ்மீர்
கடந்திருக்கக்கூடும்...

 நானும் அவளும்
விளையாட்டாய் பேசி
அதிரடியாய் சிரித்ததில்
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழுந்ததுண்டு...

 நானும் அவளும்
தொலைபேசி வழி
சண்டையிட்டுக் கொண்டதில்
சூடான இரவுகள்
ஏராளம்...

 ஆயினும்..
 திருமணம்
எங்களை
பிரித்துப்போட்டது...
அவள்
அமெரிக்காவுக்கு
வாழ்க்கைப்பட்டு போனாள்.
 நான் உள்ளூரில்.

 சபதங்கள்
செய்திருந்த போதும்
ஏனோ
சில நாட்களில்
தொடர்பு அற்றுப்போனது...

 
 அவள் நினைவு
வரும்போதெல்லாம்;

நேரில் சென்று
பார்த்து
பசியாறிக்கொள்வதுண்டு...
      அந்த
      பெண்கள் பள்ளில்
      நாங்கள் இருந்த
     வகுப்பறையின் சுவர்களை...
 .அனார்கலி.

-

டிஸ்கி:
இரு பள்ளித்தோழிகள் பற்றிய கவிதை இது.
- வேற மாதிரி எதிர்பாத்தீங்களா...ஆசை, தோசை,அப்பளம், வடை

மாத்தி யோசித்தவர்களுக்கு பரிசு கீழே உள்ள படத்தில்..

ஓவியம்:kavioosai.wordpress.com

கே.ஆர்.பி.செந்தில் - ஒரு சுவையான பயோடேட்டா.



பெயர்: ரமணா (நாங்க வச்சது). 


பட்டப்பெயர்: பதிவுலக தாதா. (பாவங்க அன்பரசன்).

அடையாளம்: "பணம்" படைத்தவர்.

நண்பர்கள்: புல்லட்டில் வரும் தொப்பை கணபதி
            முதல் மாமூல் வாங்கும் போலீஸ் வரை அனைவரும்.

எதிரிகள்: வரவேற்க்கப்படுகிறார்கள்.

பலம்: ஷாக் அடிக்கும் கவிதையின் இறுதி வரி (பதிவுலக பாலா).

பலவீனம்: தற்போது ஜனரஞ்சக பாதைக்கு மாற முயற்சித்து, தடுமாறிக்கொண்டிருப்பது.

மறக்க நினைப்பது: செட்டு மாத்திரைகளையும், அதற்கு முந்தைய கவிதையும்.

நீண்ட கால சாதனை: யதார்த்தமான எழுத்துக்கள்.

சமீபத்திய சாதனை: ஒரு விவாகரத்து.(நாட்டாம தீர்ப்ப மாத்து).

எதிர்கால திட்டம்: விவசாயம். (அப்ப கேபிளார் படத்துல ராஜா
சார்  மியூசிக்ல பாட்டு எழுத வேணாமா?)

பொதுவான கருத்து: விலங்குகளோடு திரியும் "சுதந்திர" மனிதன்.

தீம் சாங்:  புலி உறுமுது, புலி உறுமுது....

கேட்க விரும்பும் கேள்விகள்:விந்தை மனிதன் நல்லவரா, கெட்டவரா?

உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?

ஐயோ... யாராவது தெளிய வைய்யுங்களேன்..

தளபதி, நாயகன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஜி.வி. எனப்படும் ஜி.வெங்கடேஸ்வரன் அவர்களை உங்களுக்கு மறந்திருக்காது. மணி ரத்னம் அவர்களை திரையுலகில் ஆளாக்கியவர்.மெத்த படித்தவர். அமெரிக்கா சென்று சி.ஏ. முடித்தவர். திடீரென தற்கொலை செய்துக் கொண்டார்.

இறக்கும் போது கூட அவர் பெயரில் 50 கோடி வரை சொத்துக்கள் இருந்தன. ஆனால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டார் என அப்போது ஊடகங்கள் எழுதின. ரஜினி காந்த் கூட நாங்கள் எல்லாம் இருக்கும் போது ஜி.வி. பணப்பிரச்சனையால் இறந்தது, எங்களுக்கெல்லாம் வெட்கக்கேடு எனக்கூறினார்.

எமது கேள்வி இது தான். அவர் படித்த படிப்புக்கள் ஏன் அவருக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை ஏற்படித்தவில்லை.
(கடன் எனபது மட்டும் காரணம் காட்டக்கூடாது, ஜி.வி. கடனாளியாக ஒரு காரணமாக இருந்த மைக்கல் ஜாக்சன் இறக்கும் போது, ஜாக்சனுக்கு ஆயிரத்து இருநூறு கோடி கடன் இருந்ததாக அறிகிறோம்.)

ஜி.வி. அவர்கள் வெறும் உதாரணத்திற்கு மட்டுமே. தயவு செய்து அவரை விட்டு இந்த சூழலை ஆராயவும்.

வாழ நம்பிக்கையளிக்காத கல்வியா நாம் கற்றுக்கொண்டிருப்பது? வெறும் புத்தக புழுக்களை உருவாக்குவது மட்டுமே நமது கல்வியா?

வாழ்க்கையின் இடர்பாடுகளை எதிர்கொள்ள கற்றுத்தராத கல்வி, என்ன கல்வி?
மிக பாதுகாப்பாய், சகல வசதிகளுடன் ஆளாக்கப்படுவனும் வாழ்வை ரசிக்க முடியாது தற்கொலையாகிறான்.

தட்டு தடுமாறி, எழுந்து, மீண்டும் விழுந்து, தானே சுயமாய் கை ஊன்றி நிற்கும் ஒருவனும், வாழ்க்கையின் நிம்மதியை ரசிக்கும் நிலைக்கு வரும்போது, கிட்டதட்ட வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இது குறித்து யோசிக்க, யோசிக்க நிறைய கேள்விகள் மட்டுமே எம்மிடம் மீதமிருக்கிறது,


இந்த பதிவு குழப்பமான சில கேள்விகளை எழுப்புவதோடு நின்று விட்டதால், உங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெளிவாக்க சில கேள்விகள் உங்களிடம்.

1.வாழ்க்கையை புரிந்துக்கொண்டு, அதன் படி வாழ்வதற்குரிய தகவமைப்புக்களை நமது கல்வி முறை உருவாக்கவில்லை என்பது உண்மையா?

2.வேகம் கற்றுத்தரும் நம் கல்வி விவேகம் கற்றுத்தருகிறதா?

3.அறம் செய்ய விரும்பு, ஆறுபது சினம், உள்ளத்தனைய உயர்வு என உள்வாங்கியவர்களின் நிலையே சிரமம் எனில் வெறும் "ரெயின் ரெயின் கோ அவே"குழந்தைகள் எப்படி வாழ்க்கையை...?

4.உங்களால் உள்ளங்கையில் தாங்கப்பட்டு, மிக பாதுகாப்பாய் வளர்க்கப்படும் ஜானி ஜானி யெஸ் பாப்பாக்களுக்கு, வாழ்க்கை என்றைக்காவது நோ சொல்லும் போது அதனை எப்படி எதிர் கொள்வார்கள்?

5. தன் வாழ்வு பற்றியே புரிதல் இல்லாதவர்களால் எப்படி அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை புரிந்துக்கொள்ள முடியும்?

6. இந்த பதிவில் யோசித்த விதம் தவறா? தவறு எனில் எப்படி யோசித்திருக்க வேண்டும்.

இது சமக்கால கல்வி பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம்.


முதல் பாகம் இப்படித்தான் இருக்க வேணும்.

படங்கள்: http://vizhiyan.wordpress.com/

கலாய்ப்பு திருவிழா-4 டெரர் SMS கள்.

குறிப்பு: சில SMS கள் ஓவர் டெரராக இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பெறுப்பேற்க்காது,
ரொம்ப நல்லவர்கள் படிக்க வேண்டாம்.
 எந்ந்ந்திரா
ரொம்ப நாளைக்கி முன்னாடி, நம்ம ரஜினிகாந்த்; மொபைல் வைபிரட் மோடுல வச்சுட்டு,கடலில் நீச்சல் அடிச்சிட்டு இருந்தபோது, அவருடைய மொபைல்-க்கு போன் வந்துச்சு.
அதனால உண்டானதுதான் 2006ல் வந்த சுனாமி.
(ரஜினினா சும்மாவா)

முத்ததின் மணம்... இயற்கையா? செயற்கையா?


கூந்தல்...

பெண் புத்தகத்தின்
சில ஆயிரம்
வரி கவிதை....

செயற்கை மின்னலை 
தோற்றுவிக்கும்
இயற்கை மேகம்...

விழியை ஈர்க்கும் 
புதிய கருப்பு விசை...

பெண்களின் பெரும் பகுதி
நேரத்தை
சொல்லிச்சொல்லி
களவாடும்
செல்லமான திருடி...

கூந்தலுக்கு 
மலர்கள் தரும்  
மணம் 
கொஞ்ச நேரம் தான்...

அது சரி... 

எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து 
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...

 



 - பாரதி.

ரசித்தவைகளும், யோசிக்கவைத்தவைகளும்...

இந்த வார திகில் :
 ஏனோ இந்த வாரம், வலையுலகில் எமக்கு போதாத காலம் போலும்.பின்னூட்டமிட நேரமே அமையவில்லை, முன்னதாக திங்கள் கிழமை எங்கள் வலைப்பூ தொலைந்து போனது.

"வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை" இது எங்களின் முந்தைய பதிவின் தலைப்பு.எங்கள் வலைப்பூ முன்று மாதமே ஆன குழந்தை, திருவிழாவில் தொலைத்திருந்தால் கூட பரவாயில்லை, வீட்டிற்குள்ளேயே அதை தொலைத்துவிட்டோம்.

 மீண்டும் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, பதிவுகளை உருவாக்கி, பின்தொடருபவர்களை சம்பாதிக்க வேண்டும், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து, ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தபோதே தலைச்சுற்றியது.

 அந்த இக்கட்டான நேரத்தில் நிறைய அன்பு உள்ளங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு காட்டினார்கள்.ஆறுதல் சொன்னார்கள்... அவர்களுக்காகவோ என்னவோ அப்படியே திரும்பக்கிடைத்தது ரோஜாப்பூந்தோட்டம்.
வடைப்போனால் பரவாயில்லை, கடையே காணவில்லை என்றால்...
அன்பு காட்டிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குழந்தைகள் கடத்தல் இன்னும் தொடர்கிறதா?பிள்ளை பிடிக்கும் கும்பலிடமிருந்து, பாதுகாப்பாய் இருந்துகொள்ள மேலதிக தகவல்கள் தேவை.

 இந்த வார உலகம்:

 ராமதாஸின் மாம்பழ தாகத்திற்கும் மாஸா தான் தீர்வா?
saranram@facebook.com

 சுதந்திரமாக வந்து செல்வதற்கு இது இந்தியா இல்லை என்று ராஜபக்ஷேவுக்குக் காட்டியிருக்கிறார்கள் பிரிட்டன் தமிழர்கள்.
podiyan@twitter.com


 குற்றம் சொல்லுதல் தேசிய வியாதி ஆகிவிட்டது, குற்றம் செய்தல் தேசிய தொழிலாகி விட்டதால்.
kuttisuvaru@twitter.com


 விருதகிரி விமர்சனம்@ விகடன்...

 ஸ்காட்லாந்து யார்டில் பயிற்சி எடுக்கச் செல்லும் விஜயகாந்த், அந்த நாட்டு பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றி ஸ்காட்லாந்து யார்டுக்கே பயிற்சி கொடுக்கிறார். இருக்காதா பின்னே....

 இந்த வார தகவல்:

 உலகம் முழுவதும் 20 கோடி பேர் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். இது உலக மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம்.

இலங்கையில் போரால் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இவர்களில்30,000க்கும் மேற்பட்டவர்கள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.போருக்குப்பின் 98,000 பெண்கள் விதவைகளாக குடும்பத்துக்கு தலைமை வகிக்கின்றனர்.
சர்வதேச இடம் பெயர்வோர் தினம்-டிசம்பர்18.
 நன்றி: தினமலர் & தினமணி.

 இந்த வார பின்னூட்டங்கள்:

 அன்பரசன் அவர்களது கவிதைக்கான பின்னூட்டத்தில்
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது....காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள்... - அம்மாடியோவ்..

 நடிகர் விஜய் பற்றிய ஒரு பதிவில்  ம.தி. சுதா பின்னூட்டமிட்டது
 " நல்ல கதையம்சம் உள்ள படத்தில் விஜய் நடித்தால், முதலாவதாய் ரசிக்கத்தயார்"
-இன்னும் எத்தனை பேர் இதனை வழிமொழிகிறீர்கள்.

 இந்த வார வருத்தம்:

ஈசன் படம் நல்லாயில்லை என்று எழுதப்பட்டிருந்த ஒரு பதிவு.
-சசி குமாருக்கே சறுக்கலா?

 இந்த வார பெண்:

கனடா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, திருக்குறள் சாட்சியாக பதவி ஏற்றுக்கொண்ட ஈழத் தமிழ்ப்பெண் ஜூனிதா நாதன்.

 ரத்த சரித்திரம் - Why பிளட், Same பிளட்  :


 ஸ்பெக்ட்ரம் பற்றி முழுவிபரங்கள் தெரிந்துக் கொள்ளுவதற்காக சன், கலைஞர் செய்திகளை மாறி,மாறி பார்த்ததில் சித்தம் குழம்பி, பித்த சரித்திரம் ஆனது தான் மிச்சம். தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோனு பயமாயிருக்கு...
-அய்யோ பூச்சாண்டி...

மறவாமல் வாக்களிக்கவும்.

கனம் கோர்ட்டார் அவர்களே...

இங்கே ஒரு தரப்பு வாதம் வைக்கப்படுகிறது.எதிர்தரப்பாக ஆஜராகி வாதாட நீங்கள் தயாரா?

தர்மத்திற்கும்,அதர்மத்திற்குமான போரில்; வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள், அதர்மத்திற்கு துணையாக நிற்பவராகிறார்கள் என்பது பகவத் கீதை.
என்ன செய்வதாய் உத்தேசம்....



இப்படித்தான் இருக்க வேணும்...

சம காலக்கல்வி-1

மாணவிகளின் பார்வையில்...
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...



மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.


பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும்.
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும்
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.


எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என எங்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)

இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.(நீங்கள் இதனில் முரண்பாடுகளை கொண்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்)


சம காலக்கல்வி பற்றிய மற்ற பதிவர்களின் அலசல்கள்.
கோமாளி  , வெறும்பய , எஸ்.கே. , இம்சை அரசன் பாபு, கௌசல்யா

பரிந்துரைக்கப்பட்ட அசத்தல் கவிதை...

ஏனோ சில கவிதைகள் படித்த உடன் மனதில் சட்டென ஒட்டிக்கொள்ளும், அப்படிப்பட்ட கவிதையாக இது தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி என்று தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.




கலைமகளின் வீணை..


விடுதிக்கென்று
விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்
நுழைய நுழைவுக் கட்டணம்
கராத்தே கற்றுக்கொள்ள
கறாராகக் கட்டணம்
தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு
தனியே கட்டணம்
சீருடைக்கென்று
சிறப்புக்கட்டணம்
பாடப்புத்தகம் வாங்க
பல நூறு கட்டணம்
கேள்வித்தாள்களுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்
விடைத்தாளுக்குக் கட்டணம்
இதுபோல் எத்தனையோ
விடை தெரியாக்கட்டணம்....
ஏதேதோ காரணம் சொல்லி
எக்கச்சக்கமாய்
கட்டணம் வாங்கிய பின்னும்
குழந்தைகள் சரியாகப்
படிக்கவில்லையே என்று கேட்டால்
பதில் சொல்கிறார்கள்
பள்ளியில்...
"வீட்டில் சொல்லிக்கொடுங்கள்"

- ஆதலையூர் சூரியகுமார்.


நன்றி: ஆனந்த விகடன்.
08.12.10

சமக்கால கல்வி பற்றி எம்மை தொடர் பதிவெழுத அழைத்த ப.செல்வக்குமார்http://koomaali.blogspot.com/2010/12/blog-post.html அவர்களுக்கு நன்றி.
இந்த கவிதைக்கூட அதற்க்கான டிரைலர் தான். மெயின் பிக்சர் தயாராகிக் கொண்டுள்ளது.

அன்புள்ள அம்மாவிற்கு,நலம் நலமறிய ஆவல்..

அன்புள்ள அம்மாவிற்கு, பொம்மி எழுதிக்கொள்வது..
நான் இங்கு நலம், எனக்கு இங்க ஹாஸ்டல்-ல எந்த பிரச்சனையும் இல்லை. நானும் பாரதி பாப்பாவும் நல்லா படிக்கிறோம்.

அங்க ஊருல நிறைய மழை பெய்ஞ்சதுனு சயின்ஸ் மிஸ் சொன்னாங்க, நம்ம  வீடு நிறையா ஒழுகுதா?. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா நீ சித்தி வீட்டுக்கு வேணா போயி இருந்துக்க. அவுங்க வீடு பங்களா தானே, அப்ப்டியே அப்பாவையும் தெனம் பாத்த மாதிரியும் இருக்கும். ஆனா சித்திகிட்ட நீ எதுவும் பேசாதே, சண்ட போடாதே.

இங்கியும் மழை தான். அதனால தான் நீ போன் போட்டுருந்தா கூட  கிடைக்காம போயிருக்கும். ஸ்கூல என்னை  அடுத்த மாச கடைசில  டெல்லி கூட்டிட்டு போறாங்க. அறிவியல் கண்காட்சியில நான் ஜெயிச்சதுக்கு அங்க தான் பரிசு தராங்களாம். மிஸ் எனக்கு எல்லாம் செலவும் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க.

நான் போட்டில ஜெயிச்சதால, நான் எவ்வளவு படிச்சாலும் அதுக்கான செலவ, எங்க ஸ்கூல் டீச்சர் எல்லாம் அவுங்க சங்கத்திலிருந்து குடுக்குறோம்-னு சொல்லிட்டாங்க. அதனால நான் காலேஜ் போயி பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன்.

நான் நல்லா படிச்சு, உனக்கு பெரிய பங்களா வீடு வாங்கி தாரேன். பாப்பாவையும் நல்லா படிக்க வைக்கப்போறேன்.


இங்க பாப்பா திடீர் தூக்கத்துல எந்திரிச்சு கத்துறா, நான் அவளுக்கு  நீ சொன்ன மாதிரி, நெத்தியில திருநீறு பூசி தூங்க வைக்குறேன்.

பொங்கலுக்கு கண்டிப்பா எங்கள வந்து கூட்டிட்டு போ...
தீபாவளிக்கு எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க, நாங்க மட்டும் இங்க இருந்தா கஷ்ட்மாயிருக்கு.

இந்த லட்டர படிச்சுக் காட்டும் லோகு அக்கா வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.

         இப்படிக்கு, 
           பொம்மி.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,  வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறோம்..

நடிகர் விஜய் - ஒரு சுவையான பயோடேட்டா.

ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா பற்றி எழுத விசா பெறப்பட்டுள்ளதால், இன்றைய பதிவு பிரபல நடிகர் விஜய் பற்றி ஆராய்கிறது, அவர் இல்லாமல் எப்படிங்க சினிமா,  எதிர்கால தமிழகம், வருங்கால பாடத்திட்டம்?


பெயர்: மாஸ் ஹீரோ.

பட்டம்: டாக்டர்(கொடுக்கப்பட்டது),
இளையதளபதி(வைத்துக்கொண்டது).            
பொழுது போக்கு: சமூக சேவை,                                    உண்ணாவிரதம்இருப்பது.            

பலம்: நன்றாக டான்ஸ் ஆடுவது, காமெடி செய்வது,


பலவீனம்: தனக்கேற்ற கதை என பழைய மாவை 

அரைப்பது, 
வித்தியாசமாக நடிக்க,ரிஸ்க்  எடுக்க  தயங்கி        
ரசிகர்களை ரிஸ்க்எடுக்க வைப்பது.           

விரும்புவது: பில்டப் காட்சிகள்.(ரஜினியே மிரளும் 

அளவுக்கு) 

ரசிப்பது:தன்னைத்தானே புகழும் பாடல்கள்.
(காதல் பாடல்களில் கூட சரவெடி, அதிரடி என ஹீரோ துதி)


சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.


சமீபத்திய கடுப்பு: 50 வது படமான சுறா வதந்திகளுக்கு இரையானது.,  3 இடியட்ஸ்.


நீண்ட கால சாதனை: முந்தைய படத்தின் ரிசல்ட் பற்றி கவலைப்படாமல்,வேற கலர் சட்டை, கர்ச்சீப் உடன் அடுத்த படத்திற்கு தயாராவது.  


வெறுப்பது: படம் வெளியாகும் போதெல்லாம் சூறாவளியாக கிளம்பி கும்மியடிக்கும் பதிவுகள் மற்றும் SMS கள்.


எதிர்கால திட்டம்: அரசியல் ஆர்வம்.

கோபால புரம் டூ  நியூ டெல்லி  டூ  போயஸ்கார்டன்.

டிஸ்கி: இது சீரிசான பதிவு. கலாய்ப்பு சிறப்பிதழ் அல்ல.
(பின்னூட்டத்தில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க்காது)

இந்த பதிவுக்கு உங்கள் வாக்குகளை வேண்டுகிறோம்..

கலாய்ப்பு சிறப்பிதழ்-3 கலக்கல்SMSகள்.


சூடான டெரர் செய்திகள்:
மாணவர்களுக்கு பரீட்சை வைக்கும் அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால், தமிழக மாணவர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் திட்டம்.
ஹென்றி ஃபிசல், வருத்தகிரி ஓடும் தியேட்டரில் மறைந்துள்ளதால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் பாதுகாப்பாக உள்ளார்- எமது சிறப்பு செய்தியாளர்.

கடவுள் என்னிடம், உனக்கு நூறு கோடி வேண்டுமா, உன்னைப் போன்ற உண்மை நண்பன் வேண்டுமா? என்றார். நான் நூறு கோடி தான் என்றேன். (நாம அப்புறமா பிரிச்சுக்கலாம் மச்சி)


"என்னங்க, நான் செத்ததுக்கு அப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிவீங்களா?"
"ஆமானு சொன்னா நீ கோவிச்சுக்குவ, மாட்டேன் சொன்னா உங் தங்கச்சி கோவிச்சுக்குவா"

"தோல்விகளால் நீ அடிபட்டு வீழ்ந்தால் உடனே எழுந்து விடு. இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.


"டேய்,பரீச்சையில எத்தன கேள்வி கேட்டாங்க"
"அஞ்சு கேள்வி கேட்டாங்க.."
"நீ எத்தன கேள்வி எழுதின?"
"முதல் மூணு கேள்வி, கடைசி ரெண்டு கேள்வி மட்டும் விட்டுட்டேன்"

"மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா"
"நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்"

"அமெரிக்காவில மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல மழைத்தண்ணி காணாம போயிடும்.
"இந்தியாவில் மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல ரோடு காணாம போயிடும்."

பிராங்களின் கருத்து: வற்றிப்போனால் தான் கிணறின் அருமை புரியும்.

"எல்லா கோழியும் கொக்கரகொ-னு கூவுது ஆனா ஒரு கோழி மட்டும் ஜெய்ஹிந்த்-னு கூவுது ஏன்னு தெரியுமா?"
"அது விஜயகாந்த் வீட்டு கோழி"
இப்படிக்கு தேசபக்தியை, கோழிகளுக்கும் ஊட்டுவோர் சங்கம்.
தலைவர்:விஜயகாந்த். செயலாளர்: அர்ஜூன். பொருளாளர்: சரத்குமார்.
(தலைமை அலுவலகம்: கார்கில். முக்கிய எதிரி: வாசிம் கான்).

இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.

திண்ணையுடைய வீடு...

நான் நேற்றைய மனிதன், 
அவர்களோ "இன்றைய வாழ்க்கை" வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். 
"நாளை" என்பது எல்லோருக்கும் பொது.
வெறும் சுவாசம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் யாரையும் குற்றம் சொல்ல போவதில்லை நான்....

மென்மை... மென்மை... மென்மை...

இன்றைய கவிதைகள்:
By  சௌமினா தஸ்ரின்   எட்டாம் வகுப்பு இ பிரிவு.


சூரியனைக் கண்டேன்;
என்னுள் வெளிச்சம் தோன்றியது.
சந்திரனைக் கண்டேன்;
என்னுள் குளிர்ச்சி தோன்றியது.
நட்சத்திரங்களைக் கண்டேன்;
என்னுள் மகிழ்ச்சி தோன்றியது.
பூக்களை கண்டேன்;
என்னுள் புத்துணர்வு தோன்றியது.
தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.
 

உங்க பக்கத்துல தான் நிக்குறாரு எமதர்மராசா...


மழைத்தண்ணியில 
வீடெல்லாம் மிதக்குதுன்னு
டீ.வி செய்தியில புலம்புறீங்க..
ஏரில வீடு கட்டுனா
எங்கதான் போயி நிக்கும் 
மழைத்தண்ணி?


ஊருக்குள்ள யானை வருதுன்னு
பட்டாசு வைக்குறீங்க;
ஏனுங்கனு கேட்டா
வாய் உங்களுக்கு நீளுதுங்க..
அதோட இடத்துல புகுந்துகிட்ட
உங்கள தொரத்த
ஆணைகுண்டு இல்ல இல்ல
அணுகுண்டு வெக்கலாங்களா?


கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...


விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..

மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..


இப்ப மொத்தமா மாட்டிகிட்டு
முழிக்குறீங்க...


வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...


என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து
புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...

                                                          - பாரதீ... 
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

யாரை நானும் குற்றம் சொல்ல...

எங்கெங்கு
சென்றாலும்
"வேலை காலியில்லை"
வாசகம்
முகத்தில்
அறைகிறது.


பணம்
சேர்க்க வேண்டிய
கட்டாயமும்,
விரக்தி கலந்த
வெறுமையும்
கழுத்தை பிடிக்காமலே
நெறிக்கின்றன.


மெத்தப்படித்தவர்கள்
கூட
ஒரு சில ஆயிரங்களுக்காக
வளைந்து
  நெ
        ளி
    ந்
        து
கூழைக்கும்பிடுகளுடன்...

அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...

எஸ்.பாரத்.
(விருந்தினர் பக்கம்)
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

பேர் சொல்லி புராணம்....

 "எம் பேரு எனக்கு பிடிக்கவே இல்லீங்க மிஸ்"
"உம் பேரு நந்தினி தானே, நல்ல பேரு தானே, ஏன் பிடிக்கல?"
 ஒரு நாள் எங்கள் வகுப்பறையில் பேர்கள் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்த போது வந்து விழுந்த விஷயம் இது.

பேர் பிடிக்காதததுக்கு அவள் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது.

"எல்லா சீரியலையும் வில்லியோட பேரு நந்தினினுதாங்க இருக்குது. நீங்க நல்லாயிருக்குனு சொன்ன பொன்னியின் செல்வன் கதையிலியும் வில்லி பேரு நந்தினிதாங்க".

"ஆனா அந்த கதையோட கடைசில, ஏன் அவங்க வில்லியா மாறுனாங்க அப்படிங்கிறது புரிஞ்சதால கொஞ்சம் ஆறுதலா இருந்தது"

மிஸ் ஆரம்பித்த பேர் சொல்லி புராணம் சுவாரஸியமான கட்டத்தை எட்டியிருந்ததை உணர முடிந்தது.
 "மிஸ், எனக்கு எம் பேர் ரொம்ப பிடிக்கும். 
ராஜா மணி-ங்கிற பேருக்கு பின்னால ஒரு கதை இருக்குங்க. சோழ ராஜாவின் அரண்மனை முன்பிருந்த அரசவை ஆராய்ச்சி மணியை நீதி கேட்டு அடித்த தாய் பசுவின் கதைதாங்க"

சுவாரசியமற்ற சாதாரண பதில்களின் இடைஇடையே பளீச் பதில்களும் வந்து விழுந்துக்கொண்டிருந்தன.

"எம் பேரு சண்முகப்பிரியா,
எனக்கு எம் பேரு ரொம்ப பிடிக்கும், சாமியோட பேரு. ஆனா சில புள்ளங்க சண்முகா-னு சுருக்கி கூப்பிட்டா கோவம் வரும்"

 "எம் பேரு சஃதானா பேகம். எம் பேர யாருமே சரியா சொல்ல மாட்டங்க, அப்பெல்லாம் கோவம் வரும்." (எங்கே நீஙக சொல்லுங்க சஃதானா பேகம்

"எம் பேரு எனக்கு புடிக்காது"
"காளியம்மாள்?"
"ஆமாங்க, மொதல எனக்கு ரம்யா-னு தான் பேரு வெச்சாங்க, ஆனா பாட்டி ஸ்கூல சேத்தும் போது, காளியம்மானு சொல்லிட்டாங்க, எனக்கு ரம்யாஸ்ரீ-ங்கிற பேரு ரொம்பபிடிக்கும்".
(இப்படித்தான் மக்களே, பாட்டிகள் பலபேர் வாழ்க்கையில விளையாடி இருக்காங்க )

நல்லது நண்பர்களே, எங்கள் வகுப்பறை கதை பேச ஆரம்பித்தால், ஆயுசு பத்தாது.

"உங்களுக்கு உங்கள் பேரு பிடிக்குமா?
"வேறு பேரு வைச்சுக்கிடறதுனா என்ன வெச்சுகுவீங்க"
"வலை உலகில் புனைப்பெயர வைத்துக்கொள்ள எப்படியெல்லாம் யோசித்தீர்கள்"
 

"கும்புடறேன் சாமி" இது ஒருவரின் பெயர்.
இதற்கு என்ன பின் புலம் இருக்கும் என யூகிக்க முடியுமா உங்களால்?

"கும்புடறேன் சாமி" என்ற பெயரில் இந்த சமூகத்தால் அவமானப்பட்ட ஒரு தகப்பனின் வெறி மிக்க கோபம் இருப்பதை உங்களால் உணர முடிகிறதா?

காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..


டிஸ்கி:1
பெரியார், இது போல "சாமி" என முடியும் பெயர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.
இது பற்றி முழுமையாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் மிக மகிழ்வோம்.
டிஸ்கி:2
இன்றைய தினத்தில் சட்டமேதை அம்பேத்கார் அவர்களை நினைவு கூறுவதில் ரோஜாப்பூந்தோட்டம் பெருமிதம் கொள்கிறது.
டிஸ்கி:3
நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். 
(யெச் சூஸ் மீ, இந்த பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் போட்டுட்டு அப்பறம் படிங்க).

டிஸ்கி :4
வகுப்பறையில இந்த நாயம் எல்லாம் பேசுறாங்க-னு தலைமை ஆசிரியரிடம் போட்டுக் குடுத்துறாதீங்க. 

பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.


1.பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, சன்னமாக அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும்.யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.


6.ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.


8.அழுகை,பூ,பூஜை,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது. 

அது சரி , ஆண்களுக்கு என்ன பிடிக்கும்?

சரி... சரி... யாருக்கு என்ன பிடிச்சாலும் எங்களுக்கு, நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பிடிக்கும். (ரோஜாப்பூந்தோட்டம் வளர வாக்களியுங்கள்)

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்