நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.

💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–

💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

💥வாழ்வில் ஜெயித்தவர்களும், நம் முன்னால் போகிறவர்களும் என்ன செய்தார்கள் என பார்க்கலாம். அவர்களையே பின்பற்ற தேவையில்லை.

💥முதலில் நாம் யார் என்று நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். சரியா? தவறா? என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். நம் முன்னால் இருக்கும் பிம்பத்தை உடைத்து, நமக்குள் இருக்கும் திறமையை நம்ப வேண்டும். அப்போதுதான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.

💥 என்னுடைய தந்தைதான் என் ‘ரோல் மாடல்’. அவர் என்னை எப்போதும், எந்த செயலிலும் தடுத்ததில்லை. நான் சம்பாதித்தால்தான் வீட்டை காப்பாற்ற முடியும் என்றிருந்த சூழலில், சினிமா துறைக்கு செல்ல வேண்டும் என சொன்னபோது தைரியம் கொடுத்தவர் என் தந்தை. அப்பாவிடம் இருந்து வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்.

💥 புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் ஜூனியர் நடிகராக நடித்தவன் நான்..

 அப்புறம்அவரது தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தேன். இது எனக்கு கிடைத்த கவுரவம்.

நட்பெனப்படுவது...

💥நட்பு என்பற்கான உருவகம் இங்கு மிக அதீதம். அதன் மீதான  எதிர்பார்ப்பு அப்படியே. என்னால் அதை ஈடு செய்ய என்னால் இயல்வது இல்லை எப்போதும்.

நட்பு என்பது எப்போதும் பொருந்தா கதாபாத்திரம்.


💥நீண்டதொரு�வாழ்க்கைப்பயணத்தில் நானொரு "சகபயணி"யாய் வந்து போகிறேன் ஒவ்வொருவரின் வாழ்விலும்.

என் வாழ்விலும் மற்றவர்களும் அப்படியே.

பின் நின்று, உடன் நடந்து, முன்னோக்கி கடந்து, பின் எங்கோ தொலைதூரத்தில் ஓடி, சின்னதொரு வெளிச்சப்புள்ளியாகி பின் மறைகிறார்கள்.

சிலர் மீண்டும் பின்னோக்கி பின் மறைகிறார்கள்..

💥எத்தனை மனிதர்கள் கடந்திருக்கிறார்கள், கடக்க இருக்கிறார்கள்.

💥மனதிற்கு இனியவர்களாக அடையாளப்படுத்திகொள்பவர்களுக்காக மெல்ல நடந்து காத்திருக்கிறோம்.
பொருந்தா அரைவேக்காடுகளையெல்லாம் அலட்சிய புன்னகையோடு கடந்து செல்லவே யத்தனிக்கிறோம்.

💥நீண்ட தொலைவு நீடித்திருக்கும் வல்லமையும், வாய்ப்பும் சிலருக்கே வாய்க்கிறது. சில வழித்துணை, சில வாழ்க்கைத்துணை.

💥யாருக்காக யாரை இழக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம்.

💥எங்கோ தூரத்தில் ஒலிக்கிறது வாலின் இந்த தூரத்துப்பாடல்

"ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம், தங்கமே ஞானத்தங்கமே.

ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே!!"
-பாரதி.

நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையும், சில பின்னூட்டங்களும்.

💥வெளி ஊருக்குப் பிழைக்கப் போகிறவர்கள், என்ன வேலை செய்தாலும் இங்கே வரும்போது தங்களை மிகவும் நல்லநிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படி காட்டிக் கொள்வதுதான் தனக்கு மரியாதை தரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

 தவிர காசு பணம் செலவழித்துத் தன்னை வெளியூருக்குச் சம்பாதிக்க அனுப்பிய சுற்றத்தின் மனம் கஷ்டப்படுமோ என்பதனால் அவர்கள் அப்படி நடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

 💥இது போலி என்பதை அவரின் உறவினர்களும் புரிந்து கொள்வதில்லை. மாறாக வருபவருக்குத் தொல்லைதந்து அவரை மீண்டும் பொருள் நிலையில் சிக்கலுக்காக்குகிறார்கள். இதை மையமாக்குவதுதான் “ஐந்தில் நான்கு” சிறுகதை.

💥வெளியூரில் வேலை செய்யும்  காத்தமுத்து, சொந்த ஊருக்கு சில நாள் விடுப்புக்காக,

 இரவல் வாங்கி வந்த டிரான்ஸ்சிஸ்டர்—கேஸட் பிளேயர், தவணையில் வாங்கிய கைக்கடிகாரம் ஆகியவற்றை அணிந்துக்கொண்டு , புது பணக்காரன் தோரணையில்  ஊருக்குள் நுழைகிறான்.

 ஒரு கட்டத்தில் அணிந்திருந்தவை எல்லாவற்றையும் உறவினர்கள் கேட்க மறுக்க முடியாமல் கொடுக்கிறான்.

💥திரும்ப பிழைப்புகாகப் போக வேண்டிய நாளில் அங்கு இன்னும் எத்தனை ஆண்டுகள், இதையெல்லாம் ஈடுசெய்ய, உழைக்க வேண்டுமோ என்று கண்கள் கலங்குகிறான்.

💥வழி அனுப்ப வந்த உறவோ “அருமாந்த பிள்ளை…..தூர தொலைக்குப் போறமோன்னு வருத்தப்படுது” என அனுதாப்படுகிறது.

💥நீண்ட தொலைவு சென்று பிழைப்பவர்கள் படும் பாடு, அவர்களின் நிஜ முகம், இங்கு உறவினர்கள் அவர்களைப் பற்றி எண்ணியுள்ள நிலை ஆகியவற்றை வைத்து இக்கதை பின்னப்பட்டாலும் வருபவன் காட்டும் போலி முகத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட நாஞ்சில் நாடன் கதை இது.

💐💐💐💐💐💐💐💐


💥பின்னூட்டங்கள்:

முற்றிலும் அவனையே குறைசொல்லவும் இயலாது. வெளியூருக்குச்சென்று சம்பாதித்தவன் பணக்காரனாகத்தான் திரும்புவான் என்ற ஓர் எதிர்பார்ப்பும் சமுதாயத்தில் இருக்கிறதல்லவா?

💐💐💐💐💐💐💐

💥ஏன் பணக்காரன் ஆகவேண்டும்?
மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கு தேவை:
1.சுவாசக்காற்று.
2.குடிக்க நீர்.
3.உண்ண உணவு.
4.உறங்க இடம்.
5.பழக நட்பு.
இவைகளை அடைய உழைப்பும், அறிவும், ஒழுக்கமும் தேவை.

பணம் என்ற "பேயை" உருவாக்கியவன் அயோக்கியன்!

குல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு


💥 குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது.

💥 வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.


💥 பெண்களுக்கு திருமணம் ஆனதும் - அவருக்கு - அவரது கணவர் வீட்டு குலதெய்வமே உரிமையானது.

தலைக்கட்டு பூஜைகள் அங்கேதான் தொடங்குகின்றன. எனவே - தாங்கள் தங்களுடைய மாமனார் வீட்டு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வரலாமே தவிர, அந்தக் கோயில் தங்களுக்கு பாத்யப் பட்டதாக ஆகாது!...


💥 எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குல தெய்வக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில் குலதெய்வம் என்பது ஒரு நிலையில் தங்களது முன்னோரே ஆவர்.

💥 குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்பார்கள்.

💥பிழைப்பு தேடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம்,புலம் பெயர்ந்து திசைக்கொன்றாய் போன பின்னும், குலதெய்வ வழிபாடு என்பது அவர்களை இணைக்கும் பிணைப்பாக இன்றைய சூழ்நிலையில்  இருக்கிறது.

ஆலோலம் பாடி... ரசனை நேரம்

💥ஒரு பாடலுக்கு உயிரை திருடும் வசியம் இருப்பது இயல்பு. ஆனால், ஆரம்பத்தில் வரும் இசையில் அதை விட வீரியம் வைத்து உயிரை சிதைத்துப்போடுகிறது "ஆலோலம் பாடி., அசைந்தாடும் காற்றே..."
#மொட்டையின் சந்நிதியில் தான் நின்று கொண்டிருக்கிறேன் இப்போதும்.

 💥புல்லாங்குழலிசை உயிரை திருடி, மனசை வசியப்படுத்தி , உயிரில் மிச்சமிருப்பதை எல்லாம் ஒரு புள்ளியாக்கி, இனி "கேளடா மானிடா" என மென்று, தின்று துப்பி ,என்னை அலங்கோலமாக்குகிறது  ஆலோலம்.

 "தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு"

#துணை நீ அல்லாது யாரடா ராஜா!!

💥கங்கை அமரனுக்கு வரலாற்றில் இடம் பிடிக்கும் ஆசை இருந்திருந்து, அதை உத்திரவாதமாக்கிருக்கிறது.

"மண்ணுலகில் வந்தோர்கெல்லாம் இன்ப துன்பம் என்றும் உண்டு.
தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றும் இல்லை"

💥 நதியோடு ,மிதந்து விரைந்தோடும் சின்னதொரு பூவைப்போல,  வாழ்க்கையை அதன்  போக்கில், ரசித்துக்கொண்டோட இதையே விதியாய் வைத்திருக்கிறேன்.
#வந்ததுண்டு போனதுண்டு, உன் கணக்கில் ரெண்டும் ஒன்று

வரவும் உண்டு செலவும் உண்டு, உன் கணக்கில் வரவே உண்டு.

💥இல்லை என்று ஏதுமில்லை எனக்கு. எங்கும் நிறைந்து, எனக்குள்ளும் நிறைவாய் இருக்கிறது மனநிறைவு.

"பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு.
நீங்கிடாத சொந்தம் என்று நீறும் காற்றும் எங்கும் உண்டு"

💥எதுவரினும்,எவர் வரினும், எப்படியாயினும், எது வரையிலும்...
"உலகம் உந்தன் சொந்தமென்று எந்தன் உள்ளம் பாடும்"
 -பாரத்

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்