பாக்.பிரதமரை கலாய்த்த மன்மோகன் சிங் - ராஜபக்சேவை வரவேற்க தயாராகும் சோனியா - கிரிக்கெட் ஜோக்ஸ்.
கிலானி : டேய் அப்ரிடி, என்னையை கூப்பிட்டு வச்சு, காமெடி, கீமெடி பண்ணலயே?

********************************************************************************

நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
மன்மோகன் சிங் : (வழக்கம் போல) எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நடந்தவைகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

********************************************************************************

மன்மோகன் சிங் : இந்தியா - பாகிஸ்தான் விளையாடின அரையிறுதிப்போட்டியை ஏன் மொஹாலியில வைச்சாங்க தெரியுமா?
கிலானி : ஏன்?
மன்மோகன் சிங் : இங்கிருந்து உங்க நாட்டுக்கு, சீக்கிரம் போயிறலாம் அதனாலதான், சரி..சரி.. கிளம்புங்கப்பா?

********************************************************************************

ஏர்போர்ட் அதிகாரி : என்ன, அப்ரிடி இன்னும் கிளம்பாம வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..,
அப்ரிடி : சங்ககரா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு, அதான் இருந்து கூட்டிட்டு போயிரலாமுன்னு காத்திருக்கேன்.

********************************************************************************

நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
சோனியா: இந்தியா- இலங்கை மேட்ச் பார்க்க வாங்க-னு, ராஜபக்சேவை கூப்பிட்டு,  தமிழர்களை கொன்னதுக்கு விருந்து இன்னொரு  தடவையும், விருந்து வைச்சு விசுவாசத்தை காட்டிரலாம்.

********************************************************************************

சோனியா : இறுதிப்போட்டியில் இலங்கை, இந்தியாவை ஜெயித்தால், கட்சத்தீவை இலங்கைக்கே கொடுத்துவிடலாம். இந்தியா ஜெயித்தால் கருணாநிதிக்கு விற்றுவிடலாம். எப்படினாலும் நமக்குத்தான் லாபம்.

********************************************************************************

நிருபர் : உங்க இந்திய பயணத்திட்டம் என்ன?
ராஜபக்சே : மும்பையில மேட்ச் பாத்துட்டு அப்படியே மயிலாப்பூருக்கு போய், தம்பி தங்கபாலுவுக்கு பிரச்சாரம் பண்ண  போலாமின்னு இருக்கேன். ஒரு நன்றி கடனுக்காக.

********************************************************************************


இந்த வரிகள் உண்மையா?

இந்த உலக கோப்பையில் SPIN தான் அசத்தியதே..
S - SRI LANAKA.
P - PAKISTHAN.
I - INDIA.
N - NEWZELAND

இதில் என்பது I மட்டும் தான் உயிரெழுத்து எனவே இந்தியா தான் கோப்பையை வெல்லும்.

1983 காலண்டரும், 2011 காலண்டரும் ஒன்று போலவே இருப்பதாக சொல்லப்படுவதால், அப்போது வென்ற இந்தியாதான், இப்போதும் வெல்லுமா?

*****************************************************************************

 ட்வுட் தங்கமணியின் கேள்விகள் :
இந்தியா, இலங்கை கிரிக்கெட் போட்டி பார்க்க, ராஜபக்சே இந்தியா வந்தால் நம்ம டக்ளஸ் அண்ணன் கூட வருவாரா? # ட்வுட்.

கிரிக்கெட்டில் தோற்ற கேப்டன் பதவிய ராஜினாமா பண்ணுறாங்க. தேர்தலில் தோற்றால் ஏன் கட்சி தலைவர் பதவியை ஏன் ராஜினாமா பண்ண மாட்டேங்கிறாங்க. # ட்வுட்.


சச்சின் செஞ்சுரி அடிக்காததால் தான் , இந்தியா ஜெயித்தது அப்படினு சொல்லுறவங்க - கேப்டனோட ஆளுகளா? # (தேர்தல் விதிமுறை மீறல் ஏதேனும் இதில் இருக்கிறதா? )


இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகப்போர் போல வடநாட்டு பத்திரிக்கைகள் சித்தரித்ததை போல, இந்தியா - இலங்கை போட்டியை  தென்னிந்திய பத்திரிக்கைகள் சித்தரித்து ரணகளமாக்குமா? # ட்வுட்.இந்தியா இலங்கை விளையாடும் போட்டியில், புலம் பெயர்ந்த தமிழர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள்? #ட்வுட் # இலங்கை தாய் நாடு , இந்தியா தந்தையர் நாடு. ஆனால் இரண்டுமே அவர்கள் வாழ்க்கையில் "விளையாடி" இருக்கிறது.


பிரச்சாரத்தில் தனது கட்சி வேட்பாளரை அடித்த விஜயகாந்த்.


சினிமா நடிகர், நடிகைகள் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்கிறேன் என்ற பேரில் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு தீனியாகி கொண்டிருக்கிறார்கள். (2011 நமக்குத்தான் என்றதன் அர்த்தம் இது தானோ?)

திருவாரூர் திமுக பொதுக்கூட்டத்தில் மொக்க சாமி வடிவேலு 
ஏகத்துக்கு வம்பு பேசி, வழக்கு கண்ட மாவீரனாகவும் மாறியாச்சு, தன் பிரச்சாரத்தால், தமிழன்னையை பீதிக்குள்ளாக்கிய "அவதாரபுருஷி" குஷ்பும் வழக்கு வாங்கியாச்சு.

அகில உலக சுனாமி சூப்பர் ஸ்டார், ஜே.கே. ரீத்தீஷ் கூட, வழக்கு வாங்கி, களி திங்கவும் போயாச்சு.

இப்போது நமது விஜயகாந்த் அவர்களும்  தனது கட்சி வேட்பாளரிடம், தன்னுடைய ஹீரோயிச வித்தையை காட்டியிருக்கிறார்.

இதன் நேரடிக்காட்சிகள், இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்ற பில்டப் ஏதுமின்றி , இப்போதைய (29-03-11 இரவு பத்து மணி) மக்கள் செய்திகளில், ஒளிபரப்பானது. (இதே வீடியோ சன் டிவிக்கு கிடைத்திருந்தால், சாமியாருக்கு கிடா வெட்டியது போல, பொங்க வைத்திருப்பார்கள்)

இன்றைய பிரச்சாரத்தின் போது, தன்னுடைய தேமுதிக தர்மபுரி வேட்பாளரை சரமாரியாக விஜயகாந்த் அடித்த காட்சிகளை பார்க்கும் போது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கிறது. (இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை இனி தான் வெளிப்படுத்த வேண்டும்)
குடி போதையில் விஜயகாந்த் இவ்வாறு வேட்பாளரை அடித்ததாக மக்கள் செய்திகளில் சொன்னார்கள்.

அதிமுக மற்றும் விஜய் ரசிகர் மன்ற கொடியை, விஜயகாந்த் இறக்கச்சொல்லும் காட்சியையும் மக்கள் தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.


விஜயகாந்த் கொங்கு என்பதை நொங்கு என கிண்டலடித்தது, பாமக வின் போராட்டங்களை கிண்டலடித்தது ஏற்கனவே பிரச்சனையை கிளப்பியுள்ள நேரத்தில், வேட்பாளரை விஜயகாந்த் அடித்த விஷயத்தை, அவரும், அதிமுகவும் எப்படி கையாளப் போகிறார்கள், என்பது தெரியவில்லை. (இவரு அதிரடியில் அம்மாவை மிஞ்சி விடுவார் போல)

சினிமாவில் , சுவற்றில் கால்வைத்து, சுழற்றி சுழற்றி அடிக்கும் அண்ணன் விஜயகாந்த், நிஜத்தில் தன் பிரச்சார வேனுக்குள் வைத்து அடித்தது சொந்த கட்சியின் "புள்ள பூச்சியை"  என்பதால் வழக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தப்பா நினைக்காதீங்க தங்கபாலு சார், இன்னிக்கு ஊரெல்லாம் உங்க பேச்சுதான்..# தங்கபாலு ஜோக்ஸ்


saandah 
வெங்கலபாலுவின் பின்வாசல் வழியை நினைச்சு அழகிரி ரொம்ப பெருமைபடுறாராம். அட,இது நமக்கு தெரியாம போச்சுன்னு ஃபீல்பண்றாராம்!

Pattapatti 
பாவம்யா தங்கபாலு. இந்த மண்டைக்குள் எவ்வளவு போராட்டங்கள்? பாலு ராக்ஸ்

மையிலாப்பூரை கைப்பற்றிய பூரிப்பில் தங்கபாலுவின் தலை தகதகவென மின்னுது...

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம் வேட்பாளரானார் தங்கபாலு! #பாரேன்..இந்தப்பயனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு

மொஹாலி மைதானத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு # தங்கபாலு வீட்டுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு .

Sangakavi 
தமிழகத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த அரசியல்வாதி தங்கபாலுதான் சொந்தக்கட்சிக்காரனையே சுழட்டி சுழட்டி அடிக்கறான்யா...

look4reality 
சேலத்துல வாங்கின அடி போதாதுன்னு இப்போ மயிலாப்பூரா... ஹ்ம்ம் தங்கபாலு.. என்சாய்...

bharathbharathi 
சத்தியமூர்த்தி பவனில் அரசியல் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.# தங்கபாலுவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், ஆனா..

saandah 
மயிலாப்பூர்ல, எஸ்.வி.சேகர் யாருக்கு ஓட்டு போடுவார்ர்ர்ர்ர்ர்? 

ஜெயந்தி தங்கபாலு: உங்களுக்கு தினமும் சோறு போட்ட என்னையே விரட்டிடீங்களே மக்களுக்கு என்ன செய்வீங்க? தங்கபாலு: அதேதான் #அன்னை சொல்.

Sangakavi 
மயிலாப்பூர் அதிமுக வேட்பாளருக்கு கொண்டாட்டம்..

மயிலாப்பூருல தயிர்தான் ஃபேமஸ்னு சொல்லுவாய்ங்க,இப்ப வெண்ணையும் ஃபேமஸாயிடும் போலருக்கே. :) 


தற்போதுள்ள காங்கிரசில் காமராசரைத் தேடுவோர்க்கு மைசூர்பாகில் மைசூர் கிடைக்க கூடும்! நல்லாத் தேடுங்கடே! 

அய்யோ! அம்மா! ரூமுக்குள்ள விட்டு கைய மடக்கி நெஞ்சுல அந்த குத்து குத்தரா சகலை- தங்கபாலு.

நான்கு இடங்கள் போட்டியிடுகிற துண்டு துக்கடா கட்சிகள் கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டு மார்த்தட்டிக்கொள்ளுகிற போது காங்கிரஸ் மட்டும் ஙே!

@athisha 63வித தேர்தல்அறிக்கை டெல்லி போயிருக்கு, அதை மன்மோகனு கம்போஸ் பண்ணிட்டிருக்கார். சோனியா ப்ரூஃப் படிச்சதுக்கு அப்புறம் வெளிவரும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைதான் மறந்து போகுமா... சூடு சொரணை தமிழனுக்குத் தொலைஞ்சு போகுமா?- கவிஞர் காப்பிராயன் #DefeatCongress தமிழின விரோதி காங்கிரசை ஒழிப்பதே எம் நோக்கம்! மாற்றுக்கட்சிகளுக்கு ஆதரவு தேடுவதல்ல! - http://tl.gd/9hcak4


"ஏன் தம்பி என்னைய மட்டும் இப்படி அடிக்கிறாங்க" - என கதறும் கோல்ட் மில்க் அவர்களுக்கு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்... இன்னும் சில டிவிட்டுக்கள்....  

காமராஜ், அண்ணா போன்றோரின் பேச்சை கேட்டு வாக்களித்த தமிழர்கள் இன்று குஷ்பு, வடிவேலுவின் பேச்சைக் கேட்டு வாக்களிக்கும் அவலத்தில் உள்ளன

சனீஸ்வரர் கோயிலில் ராஜாத்தியம்மாள் சிறப்பு பூஜை # அப்பனே சனி கனிய விட்டுறு உனக்கு ஸ்பெக்ட்ரம் மணி கொஞ்சம் தாரேன்

அண்ணாவின் ஆவி கூறியதால்தான் கூட்டணி: விஜயகாந்த்:// தேமுதிமுக கொபசே ஆவியுலகம் அமுதாவா?

தேசிய கட்சியின் மாநில தலைவர் சீட்டு வாங்கிய லட்சணம் அபாரம்.


சாதனைகளைச் சொல்லிவிட்டேன், நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன்: கருணாநிதி # அப்போ நீங்க சிங்கள நாட்டில் தான் நிக்கனும்.

அம்மையார் ஆட்சிக்கு வந்தால் நன்றிக்கடனாக சீமானை ஜெயிலுக்கு அனுப்பி அழகு பார்ப்பாரா?

ஏன் ஏரியாவுக்கு வா...ரோட்டுக்கு வா...வீட்டுக்கு வா என்று வடிவேலு நகரம் படத்தில் காட்டிய முறைப்பு இந்த தேர்தல் கூத்திலும் தெரிகின்றது

அதிமுக கூட்டணிக்கு 144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு # இத சன் -டிவி சொன்னதா அழகிரிகிட்ட போட்டுவிடுங்க


திமுககூட்டணி பெரும் வெற்றிபெறும் - வடிவேலு # ஒரு சாணு வயித்துக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன், இப்ப இங்க நிக்கிறேன், என் கதையை முடிக்கிறேன்


தேர்தல் ஆணையர் குரோஷி என்பதால் ஆரிய திராவிடர் பற்றி பேசவில்லை கருனாநிதி. கோபால்சாமியாக இருந்தால் கதையே வேற..மயிலாப்பூரில் கே.வீ. தங்கபாலு போட்டி - தமிழக அரசியலில் பரபரப்பு. - எதிர்ப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சி.வேட்பாளர் - விண்ணப்ப மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள், இரண்டினை இணைக்காததால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


மயிலை தொகுதியில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தானே மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக தங்க பாலு கூறியுள்ளார்.
மெகா டிவியின் நிர்வாகி என்ற தகவலை, ஜெயந்தி மறைத்துவிட்டதாக காங்கிரஸ் போட்டிவேட்பாளராக மயிலாப்பூரில் போட்டியிடும் சிவகாமி தெரிவித்துள்ளார்.


ஜெயந்தி மீது கிரிமினல் வழக்கு ஒன்றும் உள்ளதாக சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்..

ஏற்கனவே தங்கபாலு மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கும் போது, புதியதாக கிளம்பியுள்ள இந்த சர்ச்சைகள், காங்கிரஸின் மற்ற கோஷ்டியினரிடயே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடாமல் இருக்க ஹசீனா சையத் என்பவரிடமிருந்து ஐம்பது லட்சம் பெற்றுக்கொண்டு, காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜான் போட்டியிடாமல் தடுத்ததாக சென்னை மாநகராட்சியின் பெண் கவுன்சிலர், தமிழக தேர்தல் கமிஷ்னரிடம் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டாமை கருத்து : 
டே பசுபதி... நம்மகிட்ட வேல செய்யவங்களுக்கு படுக்க பாய் நாம தான்டா குடுக்கணும், அந்த பாயில நாமளே படுத்தா என்னடா அர்த்தம்..


#defeatcongress கருத்து 
டெரர் பீசாக- ஒரு காலத்தில் தவறாக கருதப்பட்ட தங்கபாலு, தாம் ஒரு காமெடி பீசு என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.நேற்று முதல் நடைப்பெற்று வரும் #defeatCongress # போராட்ட டிவிட்டுக்கள் :

காங்கிரஸ் "கை"ப்புள்ளைகளை தெளியவைத்து, தெளியவைத்து, அடிப்போம் #tnfisherman #defeatCongress #


டிவிட்டர் போரால் கைப்புள்ளைகள் கட்சி வீழ்த்தப்பட்டது# பேசட்டும் நாளைய வரலாறு #tnfisherman #defeatCongress #

63 "கை"ப்புள்ளைகள் காமெடி தர்பார் நடத்த தமிழரின் மானம்தான் விலையா?#tnfisherman #defeatCongress #

வாழ வைக்கும் தமிழனுக்கு, தலையறுக்கவும் தெரியும் #tnfisherman #defeatCongress #

எங்கள் ரணம் இன்னும் காயவில்லையடா #tnfisherman #defeatCongress #

வேடிக்கை பார்க்கும் தமிழா, டிவிட்டரில் வந்து போராடு #tnfisherman

டிவிட்டரில் காங்கிரஸ் வேட்டை # நீங்களும் இணையுங்கள், தமிழனத்து வேங்கைகளே #tnfisherman #defeatCongress #

தமிழன் ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட், பாக்குறீயா, பாக்குறீயா, # சிங்கம்டா #tnfisherman #defeatCongress #

காங்கிரஸை காலி செய்ய வந்த டிவிட்டர் சுனாமிகள் நாங்கள் #tnfisherman #defeatCongress #

ஓட்டுப்பிச்சை எடுக்கும் உனக்கே இவ்வளவு திமிர் என்றால், பிச்சை போடும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் #tnfisherman #defeatCongress #

எங்கள் டிவிட்டுகள் பார்த்து 63 கைப்புள்ளைகளும் பீதியாகி, பேதியாகட்டும்.#tnfisherman #defeatCongress ##

#defeatCongress # டிவிட்டரில் போராடும் கணங்கள், எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள் #tnfisherman#

#defeatCongress # # இது எங்கள் வாழ்வுரிமை போர், இதனில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கான பெருமிதம் #tnfisherman

#defeatCongress # இது எங்கள் வாழ்வுரிமை போர், இதனில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கான பெருமிதம் #tnfisherman

நீ காசுக்காக கத்துகிறாய், நாங்கள் மானத்துக்காக டிவிட்டுகிறோம் #tnfisherman #defeatCongress #

டிவிட்டர் போரால் கைப்புள்ளைகள் கட்சி வீழ்த்தப்பட்டது# பேசட்டும் நாளைய வரலாறு #tnfisherman #defeatCongress #

வீதியில் நின்று, வேடிக்கை பார்க்கும் தமிழா, வீதிக்கு வந்து போராடு #tnfisherman #defeatCongress #

நான் இந்திய ரத்தத்தை விரும்பி குடிப்பேன் - இலங்கை டிராகுலா - ஒழியட்டும். #tnfisherman #defeatCongress #

நான் இந்திய ரத்தத்தை விரும்பி குடிப்பேன் - இத்தாலிய டிராகுலா #tnfisherman #defeatCongress #

http://therthal.vikatan.com/index.php?eid=744நேற்றைய காமெடி பதிவு :
பிரபல பதிவரிடம் சிக்கி சின்னாபின்னமான காங். தலைவர் தங்கபாலு.

முஸ்கி:
ஈழத் தமிழர்களின் வலி, மீனவர்களின் வேதனையை உணராதவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரம்பு மீறிய நையாண்டியாக கூட தெரியலாம். அப்படிப்படடவர்களுக்கு ஒரு வரி....
வருகைக்கு நன்றி, நாளை மீண்டும் வருக.

ஆப் த ரெக்கார்டா சொல்லுகிறேன் நிருபர்களே, ஒரு பதிவரோட  தொல்ல தாங்க முடியல... படுத்தியெடுக்கிறான். கொலையா கொன்னு எடுக்கிறான். சரி கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கலாம் அப்படினு கண்ண மூடினா கனவுல கூட அந்தாளு ட்விட் தான் வருது...

சாம்பிளுக்கு ஒரு மூணு சொல்லுறேன், படிச்சு பாருங்க...

RajanLeaks ராஜன்
தங்கபாலு மண்டைல இடி உளுந்தாலும் ஒண்ணும் ஆகாது வழுக்கிட்டு போயிடும்! -ஈவீகேஎஸ் பேட்டி!

RajanLeaks ராஜன்
தங்கபாலு வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு # ஹா ஹா ஹா! இவன் தான்யா ஒரிஜினல் பீஸு! இவனுக்கு சப்ஸ்டியூட்டே கெடையாது

RajanLeaks ராஜன் 
தங்கபாலு தயாரித்த வேட்பாளர் பட்டியலைத் தூக்கி சொட்டைத்தலயிலேயே வீசியெறிந்தார் சொக்கத் தங்கம் சோனியா! புதிய பட்டியலுக்கு உத்திரவு!ஆகவே மக்களே,  ஆன் தி ரெக்கார்டாக சொல்கிறேன்.
தமிழகத்தை பொறுத்தவரை என்னுடைய ஒரே எதிரி கும்மி என்னும் பெயரில் எழுதும் பதிவர் தான். அவர்  ராஜன் லீக்ஸ் என்னும் பெயரில் டிவிட்டரிலும் எழுதிவருவதாக உளவுத்துறை என்னை எச்சரித்துள்ளது.

**************************************************************************
அடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தங்கபாலு அளித்த பதில்களின் தொகுப்பு மட்டும் இங்கே... (முழுவதும் எழுத இது என்ன மெகா டீவி காமெடி டைம் நிகழ்ச்சியா?)

என்னுடைய கொடும்பாவி எரிக்கப்பட்ட பின்ண்ணியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் கொடும்பாவி எரிக்கும் நிகழ்ச்சி இனியும் நடந்தால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எனது ஆதரவாளர்களை திரட்டி,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை புதைக்கும் போராட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் நடத்துவேன் என அவர்களை எச்சரிக்க விரும்புகிறேன்.

மேலும் என்னுடைய கொடும்பாவி என்று எரித்தவர்கள் உண்மையில் ஏமாந்துதான் போனார்கள். (தலையில் முடி இருந்தது எப்படி என்னுடைய கொடும்பாவியாக முடியும்)

என்னுடைய கொடும்பாவி எரிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் நான் கொடும்பாவி இல்லை அப்பாவி.
    

மயிலாப்பூரில் போட்டியிடும் எனது மனைவியும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்தான். அதனால் தான் அவருக்கு அன்னை சோனியா அவர்கள் போட்டியிட அனுமதி கொடுத்துள்ளார்கள். காந்தி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோமே, அதில் ஜெயந்தி என்பது என் மனைவியை தான்  குறிக்கிறது என்ற வரலாற்று உண்மையை அன்னையிடம் விளக்கிய பின் தான் அன்னை சீட் அளித்தார் என்பதை  கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


சத்திய மூர்த்தி பவனில் நான் நள்ளிரவு ரகசிய பூசையில் ஈடுபட்டதாக வந்திருக்கும் செய்தியும் எனக்கு எதிரான சதிதான். சம்பவம் நடந்த அன்று, கட்சியின் செயல்வீரர்கள்(???) கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது, அப்போது கொசுக்கடி அதிகமாக இருந்ததால், அன்னை  சோனியாவின் நல்லாசியுடன், இளந்தலைவர் ராகுல் காந்தியின் வழிக்காட்டுதலின் படி 63 கொசுவர்த்திகள் கொளுத்தப்பட்டன. அந்த புகையைத்தான் ரகசிய பூஜை என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.


எங்கள் கட்சி வேட்பாளர் ராஜபக்சே எனது நண்பர்தான் என்று சொன்னது உண்மைதான். முதலில் அவர் தங்கபாலு எனது நண்பர் என்றுதான் அதைக்கேட்டு நிருபர்கள் நக்கலாக சிரித்ததால் , கொஞ்சம் டெரர் எபக்ட் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் ராஜபக்சே எனது நண்பர் என்று கூறினார். இதில் என்ன தப்பு?

எங்கள் சார்பில் போட்டியிட 63 வேட்பாளர்கள் கூட இல்லை என்று முன்பு பதிவர்கள் எழுதியதையும் வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது பாருங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள்.

பதிவர்கள் என்னை "கைப்புள்ளை என்று கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். வேண்டுமென்றால் அரசியல் நாகரீகத்தோடு, அன்போடு கைப் பையன் என்று அழைத்தால் ஏற்றுகொள்வேன்.

என்னது 63 தொகுதிகளில் வெற்றி  வாய்ப்பு எப்படி உள்ளதா? எங்க வெளிய வந்து பார்க்க விடுறாங்க. கொடும்பாவி எரிக்கிறதுக்கு பதிலா என்னைய எரிச்சாலும் எரிச்சுடுவாங்க-னு வெளிய வரவே பயமா இருக்கிறது.

அண்மைச்செய்தி:

மயிலாப்பூர் எங்கே இருக்கிறது என்று தங்களிடம் அட்ரஸ் கேட்க வந்த தங்கபாலுவை #tnfisherman மற்றும் #defeatCongress  ட்விட்டர்கள் கடத்திக்கொண்டு போய், தெளியவைத்து, தெளிய வைத்து அடிப்பதாகச் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது. (ஏழு நாட்கள் வைத்து அடிப்பதாகத்தான் பேச்சு, இருந்த போதிலும் அவர் ஆறு நாட்களில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டத்துரை விஜயகாந்தும், கைப்புள்ள வடிவேலுவும் - அன்றைய அலப்பறை.

 
 ஒரு காமெடியனை ஹீரோவாகும் முயற்சியா இல்லை ஒரு ஹீரோவை காமெடியனாக்கும் முயற்சியா என இதுவரை அந்த அலப்பறைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

திருவாரூரில் நடைப்பெற்ற திமுகவின் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வடிவேலு, ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்கள் பற்றி பேசிய போது சாதாரணமாகத்தான் இருந்தது.

இப்ப நான் மேட்டருக்கு வரேன் என விஜயகாந்த் பற்றி ஆரம்பித்த
கொஞ்சநேரத்தில், திமுக தலைமை அவரை எப்படி பயன்படுத்த இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

தியாகங்கள் எதுவுமே செய்யாமல், நேற்று  கட்சி தொடங்கி , (அந்த கட்சி பேரு என்ன?  நாக்கமூக்கவா?) இன்று தேர்தலை சந்தித்து, நாளை ஆட்சியைப்பிடித்து முதல்வர் ஆகிவிடுவேன் என்று  நினைக்கிறார் விஜயகாந்த் என்று ஆரம்பித்த வடிவேலு அதன்பிறகு பேசியதெல்லாம் ஏகவசனம் தான்.

"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா"
என  வடிவேலு அள்ளி வீச, முதல்வர், ஸ்டாலின், அழகிரி உள்பட எல்லோரும் சிரித்தனர். சினிமாக்காரங்களே ஆகாது-னு சொன்ன நம்ம ராமதாஸ் கூட சிரிச்சுட்டார்னா பாத்துக்கோங்களேன்...
(நல்லவேள நீ ஒபாமா-னா நான் பின்லேடன் அப்படினு சொல்லல... )  

தண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?

இது வடிவேலு சொன்னதன் ஹைலைட்.

தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடைப்பெற்று கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த நிருபர்கள் கேட்டா, முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு அப்படினு அடுக்கிட்டே போனாங்க... கடைசியா ஒன்பதாவது ரவுண்ட் முடிஞ்சதுக்கு பின்னாடி மொத்தமா ஃபிளாட்-னு சொன்னாங்க.. இது தான் நீ பேச்சுவார்த்தை நடத்துற லட்சணமா?

ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற...

நான் கறுப்பு நேரு-னு  சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு குடுக்குமா?


41 சீட்டை வெச்சிட்டு எப்படி நீ முதலமைச்சர் ஆக முடியும்???

இதெல்லாம் வடிவேலு, வெடிவேலுவாய் மாறி  கேட்ட கேள்விகள்..
                           


திருவாரூர் கூட்டத்தில் வடிவேலு களமிறக்கப்பட்டதன் பின்ணணி:
* தனது சொந்த பிரச்சனையின் போது, தமிழகத்தில் எங்கே போட்டியிட்டாலும் விஜயகாந்தை எதிர்த்து களமிறங்குவேன் என சொல்லியிருந்த வடிவேலுவை எல்லா தொகுதிகளிலும் பயன்படுத்துவதுதான் திமுகவின் திட்டம்.

*தன் மதுரைக்கார பேச்சால் விஜயகாந்தின் வண்டவாளங்களை, மேடையில் ஏற்றுவது தான் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்.

*விஜயகாந்திற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் தென்மாவட்டங்களில், வடிவேலு மூலம் விஜயகாந்தை டேமேஜ் செய்வது தான் அழகிரியின் திட்டம்.

* நீ, வா, போ என்பது ஒரு கட்டத்தில் லூசு என நீண்டது வடிவேலுவின் அரசியல் பரிமாணத்தின் வளர்ச்சியோ?

*தமிழக அரசியல் மேடைகளில்  அடுத்த எஸ்.எஸ்.சந்திரனாகவோ அல்லது வெற்றி கொண்டானாகவோ இனிவரும் நாட்களில் வடிவேலுவை காணலாம்.

*அரசியல் மேடைகளில் தனிமனித தாக்குதல் சரியா, நாகரீகமா என
கேள்வி எழுப்புபவர்கள் அன்று மேடையில் இருந்தவர்களை விட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாக இருந்தால் மட்டும் பின்னூட்டதில் ருத்ர தாண்டவம் ஆடலாம். மற்றவர்கள் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்ளவும்.

*அதெல்லாம் சரிங்க, தன்னை கறுப்பு எம்ஜியார் அப்படினு சொல்லிக்கொள்ளும்  விஜயகாந்துடன், , எம்ஜியார் ஆரம்பித்த கட்சியை நடத்துபவர்கள் கூட்டணி வைத்திருப்பது என்ன லாஜிக்? (விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)
      

வலைபாயுதே : ட்விட்டரில் அரசியல் கும்மிkolaaru 
காலைல டீகடைல ஒரு சிங் பார்த்தேன்,நீங்க பிரதமரானு கேட்டேன் அதுக்கு அவர் “i dont know"னு சொன்னாரு #கன்ஃபர்மா அவர் மன்மோகன்சிங்தான்


mayavarathaan 
எலெக்‌ஷன் அன்னைக்கும் கரண்ட் கட் பண்ணி பழி வாங்கிடுங்க ஆற்காட்டாரண்ணா. உங்களுக்கு சீட் கொடுக்காததை சும்மா விட்டுட வேண்டாம்.


jill_online 
பணக்காரனோடு பழகினால் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறது. ஏழையோடு பழகினால் ஏழையாகி விட மாட்டீர்கள் #பழகுங்கள்


vivaji 
@jill_online //பணக்காரனோடு பழகினால் /தற்கொலை கூட செய்ய வேண்டி வருமே பர்வாயில்லையா?


karaiyaan 
உங்கள் குழந்தைக்கு மரம் வளர்க்க கற்றுக் கொடுங்கள்! அது உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளும்#TNeco
soundar87 
இனி நான் இட்லி மாவு விக்க போறேன் அரிசி ப்ரீ கிரைண்டர் ப்ரீ கலைஞர் எனக்கு தொழில் கொடுத்துட்டார் வாழ்க கலைஞர்...


Pattapatti 
திமுக தேர்தல் அறிக்கையால் வாக்கு சதவீதம் கூடுகிறது: ராமதாஸ்#ஹி..ஹி ஆட்றா ராமா..ஆட்றா ராமா...எங்கே மக்களுக்கு சலாம் சொல்லு..!!


 g_for_guru 
நடிச்சா ஹீரோ தான் சார் ..நான் வெயிட் பண்ணுறேன் # வைகோ


selvu
கிரிக்கெட் லைவ்ல ஓடிட்டு இருக்கும்போது லைவ்னு போடுறாங்க , அப்படின்னா அது மறுஒளிபரப்பு பண்ணும்போது ஏன் டெட்னு போடுறது இல்ல.? # சந்தேகம்


Pattapatti 
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா?.


LathaMagan 
வேலையில் சேருவதற்கே 16 வருடம் படிக்க வேண்டியிருக்கும்போது மற்றவர்களுக்கு பிடிக்குமாறு ‘எழுத’ எவ்வளவு வாசிக்கவேண்டும்?


Mind_Valley 
பார்க்கின்ற சீரியல்களைவிட ரியாலிட்டியில் டெரர் குறைவாக இருப்பதால் பெண்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.


kolaaru 
நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் “கோன் பனேகா குரோர்பதி”ய ரிவர்ஸ்ல ஆடுறாங்க, முதல்ல கோடிகள அடிச்சுடுறாங்க அப்புறம் பதில் சொல்றாங்க


Pattapatti 
தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுகிறது.#தலீவா.. அறிக்கையோ தந்தியோ, வேஸ்ட். ஏர்கூலரோட உண்ணாவிரததுக்கு ரெடியாகுங்க..


Mind_Valley 
எங்கள் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்கள் எனக்குப் பரிச்சயமான அளவுக்கு அதன் மனிதர்களைப் பரிச்சயமில்லை. நகர வாழ்க்கை.


gpradeesh 
அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்-பாப்பம்பட்டி கிரிக்கெட் அணி தலைவர் ஏகாதேசி! #யோவ் எந்திரியா, ஒன்னு தூங்குற, இல்ல தூர்வார்ர!


 kolaaru
தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா # வேட்பாளார் பட்டியல்ல திமுக கட்சிகாரங்க பேர எழுதிகொடுத்துட்டாராம் தங்கபாலு


VaanathiNadanam 
மழை "பற்றி" யோசிக்கும் பொழுதெல்லாம் கூடவே வருகிறது உனக்கான வரிகளும்.. #மழையோடு நீ..RajanLeaks
தலைவர் டீ ஆர் பாடிய ‘அரச்ச மாவ அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா’ என்பதையே கிரண்டர்,வாஷிங் மிசின் தருவதாக ஏனைய கட்சிகள் கூறுவது அபத்தம்!


VaanathiNadanam 
சில விஷயங்களை நேரில் சொல்வதை விட இப்படி எழுத்துகளாக பொதுவில் சொல்வது எளிது ... #கெரகம் புரிய வேண்டியவர்களுக்கு வெளங்க வேண்டுமே


minimeens 
நான் எதையும் மறந்துவிடுவேனோ என்று மனைவி பயக்கிறாள். அவள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பாளே என்று நான் பயப்படுகிறேன்.


kolaaru 
ஸ்டாலின் சொத்துக்கணக்குப்படி அவர்வீட்டுக்கே மாவரைக்கிறதுனா பக்கத்துவீட்டு கிரைண்டர்தான் # கலைஞரே அவருக்கு ஓரு கிரைண்டர் கொடுங்கKrishKumarS 
வேட்பாளர் பட்டியல் வெளியானது ஜெயலலிதாவுக்கு "தெரியாது" என்கிறார்கள்/ஒரு வேளை அவருக்கும் பிரதமர் ஆகும் ஆசையோ ? #TNAE11

RajanLeaks
சோனியா:பஜ்ஜில எண்ணே ஜாஸ்தியா இருந்தா இப்பிடித்தான் அமுக்கணும்! தங்க பாலு: ஜி! அது பஜ்ஜி அமுத்தற பேப்பர் இல்ல!நம்ம வேட்பாளர் பட்டியல்!
bharathbharathi
ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு # கலைஞர் காலம் போலவே என் காலத்திலும் ஒதுங்கியே இருங்கள் # பாராட்டு விழாவுக்கு மட்டும் வாங்க

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்