இன்னுமொரு ஞானக்குளியல்..



முன்னம் ஒரு காலத்துல

இன்னும் பிறந்திராத
எனக்கும் சேர்த்து
அடிமை விலங்கொடிக்க
போராடிய,
உயிர் துறந்த,

சுயமான குடியரசுக்காக
வீரம் சிந்திய
அத்துணை
தியாக உள்ளங்களுக்காகவது

சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;

என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்

"தாய் மண்ணே வணக்கம்..".

- பாரதி.

இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது,  நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?

சாப்பாட்டுக்கடை.



அன்னபூர்ணாவிலும், ஆர்யா-சிலும் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்த, ஒரு
சுபமுகூர்த்தநாளின் காலை நேரத்தில், அந்த சின்னதொரு உணவகத்திற்குள் செல்ல நேரிட்டது. கொஞ்சம் புகை மண்டிக்கிடந்த, பதினாறுக்கு பத்து அறையில் கணவனும், மனைவியும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

லேசாக ஆடிக்கொண்டிருந்த, நீண்ட மரப்பெஞ்சில் அமர்ந்தபோது, அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பண்பலையின் சப்தம் பெரும் இரைச்சலாகவே தோன்றியது. சாப்பிட்டுக்கொண்டிருப்பவரின் இருக்கைக்கு பின் காத்திருக்கும் புது நாகரீகத்தின் காலக்கொடுமையை விட, இந்த கடை உசத்தலாகவே தெரிந்தது. பிரமாண்டமாய் ஏதும் இல்லாதபோதும், ஏதோ ஒன்று ஈர்த்தது.

அதற்கு அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து அங்கே தான் என் காலை உணவு என்று விதிக்கப்பட்டிருந்தது போலும். பின் உட்கார்ந்த உடனே இரண்டு ஆப்பம் கொண்டு வந்து வைக்குமளவுக்கு புரிந்துக்கொண்டனர். ஒரு நாள் அல்சர் என்று சொன்னதும், அதன்பின்  கார சட்னி தவிர்த்தனர்.

ஒரு நாள் மதிய உணவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் பணி மார்க்கெட்டிங் என்பதால் மதியம் வேறு எங்காவது இருக்க நேர்ந்ததால், இயலாமலேயே போனது.

ஒரு நாள் பதினாறு ரூபாய்க்கு, நூறு ரூபாய் நீட்ட, அவர் வழக்கமான பரபரப்போடு  சில்லறை தேடி, இல்லாமல்போகவே நாளைக்கு குடுங்க என்றார்.

"வராம ஏமாத்திட்டா"    
"சாப்பாட்டுக்காசு. கண்டிப்பா வந்திரும்"

அதெல்லாம் சரிங்க, ஏன் எப்பவும் அழுக்கு பனியனையே போட்டிருக்கீங்க, கேட்க வாய் துடித்தது, ஆனால் தவிர்த்தேன். (சிவாஜி படத்துல வந்த பட்டிமன்ற ராஜாவோட பாதிப்பாக இருக்குமோ?)

அதற்கு அடுத்த சில நாட்கள் அங்கு போகமுடியாதவாறு வெளியூர் பயணமானேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கடைக்கு போனபோது, கடை வண்ணம் பூசப்பட்டு, தெளிவானதாய் மாறியிருந்தது.

அட ஆச்சர்யமே, எவ்ளோ பளிச்சுனு இருக்கு. அந்த பெண் ஆப்பம் சுட்டுக்கொண்டிருந்தாள். புதியதாய் இருந்த மற்றொரு பெண் இலைப்போட, சிறிது நேரத்திற்கு பிறகு அவங்க ஆப்பம் கொண்டு வரும்போது தான் கவனித்தேன், நெற்றியில் திருநீறு மட்டும் வைத்திருந்ததை.

என்னைப்பார்த்ததும், முகத்தில் அழுகைக்கான ஆயத்தம் தெரிந்தது. அவுங்ககிட்ட பேசியதில்லை என்பதால், நான் தவிர்க்க இயலாது தலைக்கவிழ்ந்தேன்.        

"நீங்க கொடுக்குற அஞ்சு லட்சம் எத்தன நாளு எங்கூட இருக்கும், அந்த காசு எம்புருஷனுக்கு ஈடாகுமா? இரண்டு நாளு எனக்காக பாவபட்டு பேசுவீங்க, அப்புறம் நாந்தானே தனியா அல்லாடனும்? உங்க அரசியல் விளையாட்டுல நான் அனாதையா ஆயிட்டேனே"  கணவனை, இலங்கை கடற்படையிடம் பறிக்கொடுத்த பெண் தொலைக்காட்சியில் கதறியது ஏனோ தொடர்பில்லாது நினைவுக்கு வந்தது. யாரால் பகிந்து கொள்ள முடியும் ஒரு மரணத்தின் உண்மையான வலியை...

தயக்கத்தோடு சாப்பிட்டு முடித்து, பணம் கொடுத்து மௌனமாய் வெளியேறினேன்.

அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன்.  

எஸ்.ராமகிருஷ்ணன் @ நீயா? நானா?



சென்ற வாரம் விஜய் டி.வி.யின்-  நீயா? நானா?  நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், புத்தகம் வாசித்தல் என்பது வெறும் பொழுது போக்கு அல்ல,  கதை என்பதும் வெற்று விஷயங்களை பேசுதல் அல்ல என்பதை வலியுறுத்திச் சொன்ன விஷயங்கள் இப்போது எமது வார்த்தைகளில்...

கதை, நாவல் என எளிதாக சொல்லிவிட முடிந்தாலும், எழுத்தாளனாக இருப்பது சாதாரணமான விஷயமல்ல. நாவல் என்பது ஒருவரின் வாழ்க்கை. மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்வாங்கி எழுதப்படுகிற ஒன்று.

எழுத்து என்பது வாழ்க்கைத்தொகுப்பு.

என் எழுத்து என்பது என் வாழ்க்கையோடு தொடர்புடையது.
என் வாழ்க்கை என்பதும் இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது.

புத்தகம் என்பதை வெறும் கதை வாசித்தல் என்று ஒதுக்குகிறார்கள்.

புத்தகம் என்பதன் ஆரம்பம் கதை கேட்டல்.
நானும் புத்தகம் படிக்கும் முன் கதை கேட்டேன்.

இங்கே எல்லாவற்றிலும் ஒரு கதை இருக்கிறது. உடல் மட்டுமல்ல, உணவு மட்டுமல்ல, பள்ளி,இலக்கியம் என எல்லாவற்றிலும் கதை என்பது ஒளிந்து இருக்கிறது. கதைக்கு என்று ஒரு இதயம் இருக்கிறது.

கதைகளின் உலகம் என்பது கற்பனை உலகம் அல்ல, அது இருப்பதில் இருந்து உருவாவது.

காக்கா வடையை எடுத்த கதை உங்களுக்குத் தெரியும், அது 2000 ஆண்டுகளைத் தாண்டி வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம். இவ்வளவு தான் கதை.

காக்காவும், வடையும் கதை கூட கிரேக்கம், பிரெஞ்ச், அரபு நாடுகளைத் தாண்டி இங்கே வந்திருக்கிறது. ஒவ்வொரு ஊரைத்தாண்டி வரும்போது, அந்த ஊரின் கலாச்சாரத்தை எடுத்து வந்திருக்கிறது.

இங்கே காக்கா தூக்கியது வடையை,  ஆனால் கிரேக்கத்தில் வெண்ணைத்துண்டை தூக்கியதாகத் தான் சொல்லப்படுகிறது .(காக்கா திருடியதாக கிரேக்கத்தில் இல்லை, எடுத்தது) பிரெஞ்ச் இலக்கியத்தில் அது இனிப்பு, அரபு நாடுகளில் அது மாமிசம், வட இந்தியாவில் அது ஜாங்கிரி, தென் இந்தியாவில் வடை.

காக்கா தூக்கிய பொருள் கூட, ஒவ்வொரு நாடுகளிலும் அங்குள்ள மனிதர்களின் விருப்பப்பொருளை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

முதலையும், குரங்கும் கதையும் கூட இப்படித்தான், பல்வேறு நாடுகளைத் தாண்டி, மாற்றங்களோடு மக்களிடையே பரவியிருக்கிறது.

கதைகள் என்பவை யாத்திரிகர்கள் போல, நீண்ட தூரம் பயணம் செய்து, மற்றொரு நாட்டிற்கு அறிமுகமாகிறது.

கதைகள் படிக்கும் நேரத்தில், பாடபுத்தகத்தை படிக்கலாமே என்பவர்களுக்கு ஒரு விஷயம்.

இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் பாடத்திட்டத்தை தாண்டி சிந்தித்தவர்கள் தான்.

விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் கற்பனை மூலம் வந்தது.

பாடத்திட்டத்தை மட்டும் படிப்பவனுக்கு நல்ல வேலைக்கிடைக்கும்,
பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

எந்த மதமானாலும் அதில் ஏராளமான கதைகள் உண்டு.
எல்லா கடவுள்களும் கதைகளின் வழியே தான் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டார்கள்.

கதைகள் என்பதை வெறும் பொழுதுப்போக்கு என்று ஒதுக்கி விடமுடியாது. கதை என்பது அறிதல்.  கதை சொல்பவர் மூலம் கற்றுக்கொள்வது. தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் கூட ஒரு அறிதல் இருக்கிறது. புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் அதே கதை, புதிய சூழலுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
    

சாப்பாடு ஊட்டும் போது, கதை சொல்லிகொண்டே ஊட்டுவது நம்மூர் வழக்கம். இன்னும் கொஞ்சம் சாப்பிடுவதற்காக, கதையும் ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீளும்.

நோயாளிகளிடன் பேசிப்பாருங்கள் அவர்களிடம் ஆயிரம் கதைகள் இருக்கும். கதை சொல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள்.

கதை என்பது பாடம்,  ஐரோப்பாவில் Bed Time Stories  என்றே வைத்திருக்கிறார்கள். இந்த கதைகள், கனவுகளைத் தூண்டும், வாழ்க்கையை வழிநடத்தும்.

வாசித்தலை குறைச்சொல்லுபவர்களை பற்றி ஒன்றும் வருத்தமில்லை, அவர்களுக்கும் படிக்க சந்தர்ப்பம் கொடுத்தால், விருப்பமில்லாதவர்களும் படிப்பார்கள்.

வாசித்தலால் நேரம் வீணாகிறது என்பதும் சரியல்ல, அலுவலகத்தில் தொடர்ந்து நீங்கள் வேலை செய்வதாக   சொல்லிக்கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் வீணடிக்கப்படுகிறது. (செயல்பாட்டின் பாதி  முன் தயாரிப்புக்காக செலவிடப்படுகிறது)

வாசித்தலும் எளிமையான,ஈர்ப்பான விஷயம் தான்.

புத்தகம் வாசிக்க வீடு அனுமதிப்பதில்லை என்பதை தாண்டி தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்று சாதித்துள்ள பெண்கள் அனைவரும் போராடித்தான் தடைகளை தாண்டி வந்துள்ளனர். எல்லாவற்றிலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது, புத்தகம் வாசிக்கவும் அப்படியே.

மதிப்பெண் வாங்கி விட்டு பின் புத்தகங்களை வாசிக்கலாமே, மறைச்சாவது வாசிக்கலாமே..

நல்ல விஷயத்தை சில சமயத்தில் மறைத்துத்தான் செய்ய வேண்டியுள்ளது. நல்ல புத்தகங்களை திருட்டுத்தனமாக கூட படிக்கலாம்.

புத்தக வாசிப்பு என்பது பெரிய அனுபவம்.  எந்த புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு பட்டியல் என் இணையதளத்தில் கிடைக்கிறது.


இணைப்பு :


கோக்கு மாக்கு பதில்கள் தேவை...

விகடன் மேடையில் பிரபலங்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
நாம வலையுலக பிரபலங்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்க வேண்டாமா?.. அதற்காகவே இந்த "வில்லங்க மேடை". அதில் ஜாலியாய் சில கேள்விகள்..

சீரிஸாய் பதில் சொல்பவர்களும் "அட.. உள்ள வாங்க சார்..."


1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?

2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?

4. மன்மோகன் சிங்கை திட்டினால் கூட பொறுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் ராஜபக்சே -வை திட்டினால் மட்டும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?

5. விண்ணோடும், முகிலோடும்..... ஓடாதது என்னவோ?

6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?

7. அப்புறம் குமுதம் பாணியில் ஒரு கேள்வி...பத்துப்பாட்டு, குத்துப்பாட்டு வேறுபடுத்துக..

8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

9. அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா?

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால்... இறங்கி அடிச்சு ஆடுங்க பாஸ், இது உங்க "ஆடு"களம்..

டிஸ்கி :
ஐ.பி.எல்.-க்காக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது போல, பதிவர்களுக்கான ஐ.பி.எல். ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்?
இதனை பற்றி யாராவது கலாய்ப்பு பதிவு எழுதலாமே...  

டிவிட்டரில் ரசித்தவை...



http://twitter.com/araathu 
தமிழ்நாட்டின் சாபக்கேடு- ஆன்மீகத்தின் அத்தாரிட்டி ரஜினி.நாத்திகத்தின் அத்தாரிட்டி கமல்.பெண்ணுரிமையின் அத்தாரிட்டி குஷ்பு.


http://twitter.com/LathaMagan
”2011ல நம்மகையில” னு சொன்னவங்கல்லாம் நியூ இயர் கேலண்டர் வாங்கிட்டாங்களான்னு செக் பண்ணுங்கப்பா!



http://twitter.com/araathu
நான் உன் அடிமை என்பவரிடமே அடிமையாகிவிடும் வினோத மனநிலை பெண்களிடம் ஆச்சரியமான ஒன்று.


http://twitter.com/mail2mesaru 
எல்லோரிடமும் சொல்லுவதற்கு ஏதோ இருக்கத்தான் செய்கிறது அதேபோல் சொல்லாமல் மறைத்து வைப்பதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது...

http://twitter.com/vivaji 
பெட்ரோல் விலை ஏத்தியிருக்காங்களே போராட்டம் பண்ணலையா? வாரத்துக்கு நாலு தடவை ஏத்தினா எப்படிய்யா போராடுறது?  

http://twitter.com/kolaaru 
ஒரே சமயத்தில் 12 & 21ம் நூற்றாண்டுகளில் இருக்கிறேன்,காய்சலுக்கு அலோபதியும் எடுத்துக்கொண்டு,அம்மாவின் மத்திரிச்ச தாயத்தையும் கட்டிக்கொண்டு...

http://twitter.com/raghuji 
சிலபேர் பெட்ரோல் விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். சில பேர் ரோட்டை எப்படிக் கடப்பது என்று கவலைப்படுகிறார்கள்.

http://twitter.com/jill_online 
கடைசி நிறுத்தம் வந்ததும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிடும் சகபயணி, மனிதத்தின் வடிவம் தான்

http://twitter.com/navish_senthil 
இந்த வாழ்க்கையை வாழ்வதைவிட, வாழ்வது போல நடிப்பதில்தான் நாட்கள் பல கழிகின்றன. #உண்மை.

http://twitter.com/swamiomkar 
சிஷ்யன் : குருவே தினமும் ஏன் சத்து மாவு சாப்பிடுகிறீர்கள்? குரு : அப்பொழுது தானே நான் ‘சத் குரு’ ஆக முடியும்? #குருகதை.

http://twitter.com/Sangakavi 
ராசா பெட்ரோல் மந்திரியாக ஆகியிருந்தால் முந்தைய ஆட்சியில் இருந்த விலைக்கே பெட்ரோல் கொடுத்திருப்பாரோ ## டவுட்டு

http://twitter.com/araathu 


தேவையில்லாத உரிமைகளை எடுத்துக்கொள்ளும்போது இருப்பவற்றையும் இழக்க நேரிடுகிறது.

http://twitter.com/raghuji 
விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கி கணக்கு லிஸ்ட் பயமின்றி தரமணி சிக்னலில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சில பிச்சைக்காரர்ஸ்.

http://twitter.com/v4vetri 
விட்டுக்கொடுப்பதுதான் காதல்..! அது என்றும் நீயாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பிக்கிறது மோதல்..!!

http://twitter.com/selvu 
மொக்கை : பள்ளிக்கூடத்துலேயே பிறந்து வளர்ந்தாலும் பல்லிக்கு எழுதப் படிக்கத் தெரியாது;அதுமாதிரிதான் நாம எங்க பிறக்கிறோம்கறது முக்கியம் இல்ல.

http://twitter.com/vivaji 
நம்ம குடும்பத்துக்குத்தானே உழைக்கிறேன் -குடும்பஸ்தான் சொன்னா பொறுப்பானவர். இதையே அரசியல்வாதி சொன்னா தப்பு. என்னாங்கடா டகால்டி உலகம் இது.

http://twitter.com/Thaamiraa 
மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது. 

http://twitter.com/bharathbharathi
சைனிக் பள்ளி காலண்டரில் ராஜபக்ஷே படம் # எதுக்குடா இவ்வளவு விசுவாசமா இருக்கீங்க

http://twitter.com/vivaji 
விஜயின் படம் "கண்டிப்பா தோல்விலிருந்து" , வெற்றியா தோல்வியாங்கிற நிலைக்கு வந்ததே வெற்றிதான். கொடைச்சல் sms கம்மியாகிரும்ல

http://twitter.com/sairam2000 
வெறுமை படர்ந்த கண்களும் சலித்து கிடக்கும் இதழ்களுமாய் பெருங்கூட்டம் முண்டியடித்து மெல்ல மெல்ல நகர்கிறது. எங்கு என தெரியாமல் அவர்களுடன் நான்.  

http://twitter.com/kolaaru 
இருமல் இருக்கோ இல்லையோ,சிகரெட் பழக்கம் இருக்கோ இல்லையோ ஹால்ஸ் மிட்டாய் எப்பவும் பாக்கெட்ல்ல இருக்கு # 50 பைசா தட்டுப்பாடு

http://twitter.com/bharathbharathi

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்