திமுக மீண்டும் ஜெயித்தால்... முரட்டுத்தனமான அரசியல் நையாண்டி...


முன்பு அடுத்து அதிமுக ஜெயித்தால்... என்ற பதிவின் தொடர்ச்சியாக இப்போது..மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்...

அதிமுக கூடாரத்தை காலியாக்கி, சின்னதொரு குட்டிச்சுவராக மாற்றிவிடுவார்கள். அம்மா கோட நாடு போகாமல் இங்கேயே இருந்தாலும் கூட, அனைத்து அதிமுக முன்ணனி தலைவர்களும் அழகிரியின் அசைன்மெண்டுக்கு பலியாவார்கள். முத்துச்சாமி தலைமையில் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு தனிப்பிரிவு கூட ஆரம்பிக்கப்படலாம். (ஆட்சியில்லாத போது கட்சியை காப்பாற்றுவது தான் ஒரு தலைமை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய சவாலாகும்)

நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி, ஏங்கும் சக்தி மற்றும் தூங்கும் சக்தி அதிகரிக்கும்.

ரஜினியின் ராணா படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது. அதாவது
ராணா படத்துக்கு ஆயிரத்து எட்டாவது தடை உருவாகும்.(ஜக்கு பாய் பார்ட் 2) ரஜினியின் வாழ்க்கை முறை ஆறு மாதம் இமயமலை, ஆறுமாதம் சென்னையில், பாராட்டு விழாக்களில் பங்கேற்பது என மாறும்.

இப்போது பச்சை வண்னத்தில் இருக்கும் பல வலைப்பதிவர்கள் புதிய முகவரியில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.( மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே... )

ஆட்சியில் பங்கு கேட்கும் தலைவர்கள் வெளியிலிருந்து கரடியாய் கத்தி, தமிழகம் முழுவதும் நடையாய் நடக்க, கலைஞர் ஆதரவு கதர்சட்டைகள் காலை, மாலை என்று இரு வேளையும் அறிவாலயம் சென்று, அதன் வாசற்படியை தேய்ப்பார்கள்.

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் பதிவர்கள் சிறப்பான முறையில், மூன்று கால் மற்றும் ஆயிரம் கரங்கள் உள்ள ஆட்டோ அனுப்பி கவனிக்கப்படுவார்கள்.

ராமதாஸ் கொஞ்சம் சந்தம் போட்டு, கவனத்தை ஈர்த்து விட்டு, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற மாம்பழ தாகம் தீர்த்துகொண்டு, திமுக கூட்டணியில் நீடிப்பார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிரிகரிக்கும் (வார்டு கவுன்சிலர்கள் தங்கள் தாத்தா பாட்டிகளின் நினைவாக கல்லூரிகளை மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை உருவாக்கி, டாக்டர் பட்டங்களை "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் வழங்கிக்கொள்வார்கள்)

இந்த தேர்தலை மதிமுக புறக்கணித்தது போல,அடுத்த வரும் இடைத்தேர்தல்களை தேர்தல் கமிசனே புறக்கணிக்கும்.

கூட்டுக்குடும்பத்தின் பெருமையை உலகம் அறியும். விழுதுகளோடு இருக்கும் ஆலமரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்படும்.

ஆரியர்களை ஒடுக்கும் விதமாக செம்மொழி சாகித்திய அகடமி விருது உருவாக்கப்படும். இரண்டாம் ஆண்டு விருது கவிஞர் மன்னிக்கவும் கவிபேரரசர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும்.( முதல் ஆண்டு யாருக்கு என்று உங்கள் மனதில் கேள்வி உங்கள் மனதில் வந்தால்... போய் தயவு செய்து "சுட்டி டிவி" பார்க்கவும்.

வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு, காப்பீடு திட்டம் விரிவு படுத்தப்படும் (ஹா...ஹா...ஹா..)
அடுத்த செம்மொழி மாநாட்டு தலைவி???சுர்ஜித் சிங் பர்னாலா மீண்டும் கவர்னராக நியமிக்கப்படுவார்.
தமிழ்நாட்டுக்கு நிரந்தர முதல்வரும், நிரந்தர கவர்னரும் கிடைத்த மகிழ்ச்சியை, மாண்புமிகு மக்கள் புதிய மற்றும் பழைய தமிழ்புத்தாண்டு தினத்தில் கொண்டாடி மகிழ்வர்.

தனக்கு கிடைக்கும் சிறிய உணவு இடைவேளைகளின், வேலைகளின் பரிசாக நாட்டுமக்களுக்கு பெண் சிறுத்தை, பொன்னர்- சங்கர் பாகம் 2,
அர்பணிக்கப்படும்.

அனைத்து தொலைக்காட்சிகளிலிலும், சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு படங்களின் விளம்பர  இடைவெளியில், மற்ற
நிகழ்ச்சிகள் ஒளிபரப்படும்.

வடிவேலு தகத்தாய தளபதியாக நீடிப்பார்.(ராகுல் காந்தி தமிழகம் வரும் போது, கைப்புள்ளை அவரை மொரட்டுத்தனமாக கலாய்ப்பார்.... என்ன கைய புடிச்சு இழுத்தியா?)

ஸ்பெக்ட்ரம், ஆ.ராசா, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, ஜே.பி.சி. எக்ஸ், ஒய், இசட், ஜனகனமண.

மிக முக்கியமான ஒன்று:

அதற்கு அடுத்த 2016 தேர்தலிலும் திமுக ஜெயிக்கும்.

13 கருத்துரைகள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

கலக்கல்.. கை குடுங்க...

koodal bala said...

இன்னும் 24 மணி நேரம்தான் no tension .....

பாலா said...

நெனச்சாலே அடிவயிறு கலங்குது. நல்லா கெளப்புராங்கய்யா பீதிய...

Chitra said...

இப்போவே கண்ணை கட்டுதே.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்போது பச்சை வண்னத்தில் இருக்கும் பல வலைப்பதிவர்கள் புதிய முகவரியில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.( மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே... )///

பதிவுலகில் இதெல்லாம் சாதாரணமப்பா!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி, ஏங்கும் சக்தி மற்றும் தூங்கும் சக்தி அதிகரிக்கும்.//

ஆஹா! கரெக்டா சொன்னீங்க பாஸ்! வேதனை கலந்த உண்மை!!

சென்னை பித்தன் said...

//விழுதுகளோடு இருக்கும் ஆலமரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்படும்.//
அட்டகாசமான ஐடியா!

Speed Master said...

//நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் வழங்கிக்கொள்வார்கள்)

இது என் திட்டமாச்சே

=+=+=+=+=+=+=+=+=+=+=+
காலம் செய்த கோலம்

http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாவங்க தமிழகம்..

கக்கு - மாணிக்கம் said...

///கலைஞர் ஆதரவு கதர்சட்டைகள் காலை, மாலை என்று இரு வேளையும் அறிவாலயம்சென்று, அதன் வாசற்படியை தேய்ப்பார்கள்.///


சிறப்போ சிரிப்பு . எது நடக்குதோ இல்லையோ இது நிச்சயம் நடக்கும். வாசற்படிதான் தேய்ந்துபோகும். காரியம் ஒன்றும் ஆகாது பாருங்கள்.

சசிகுமார் said...

பதிவு அருமை இந்த பச்சை வண்ணம் மேட்டர் கொஞ்சம் புரியல ஆலமர சின்னம் சூப்பர்.

NKS.ஹாஜா மைதீன் said...

#நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி, ஏங்கும் சக்தி மற்றும் தூங்கும் சக்தி அதிகரிக்கும்.#


சூப்பர்....கலக்கல்....

சசிகுமார் said...

திமுக ஜெயித்தால்............. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவ்வளவு தொகை அடிக்க படல வெறும் ஆயிரம் ரூபா தான் எடுத்தோம் அதுவும் போற வர்ற வழியில் உள்ள பிச்சைகாரர்களுக்கு கொடுக்கவே எடுத்தோம்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்