ஆட்சி மாற்றம் - ரணகளமான பிரபலங்கள் - ட்விட்டரில் காமெடி கலவரம்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததால் வந்து விழுந்த ட்விட்டுக்கள் ஏராளம்.  அந்த சமயத்தில் பிளாக்கர் வேறு வேலை செய்யாததால் நிறைய வலையுலக பிரபலங்கள், தமிழக அரசியல் பிரபலங்களை குத்தகைக்கு எடுத்து கலாய்த்தனர், அதற்காக ஒரு சிறப்பு வலைப்பாயுதே..

  திமுக - மூன்றெழுத்து, ஊழல் - மூன்றெழுத்து, ஆப்பு - மூன்றெழுத்து, ஜெயில் - மூன்றெழுத்து, பெயில் - மூன்றெழுத்து, தூக்கு - மூன்றெழுத்து.
: தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு.

: டேய் ராகுலு ! நம்ம பஞ்சாயத்து (தங்கபாலு) பாலிடாயிலை குடிச்சிட்டாண்டா !

 கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு நம்ம கேப்டனுக்கு கிடைத்த வெற்றி டாஸ்மாக் சங்கத்துகு கிடைத்த வெற்றி.

: டாய் செவல தாவுடா தாவு : எங்க தாவுரது நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் #ராமதாஸ்.

: எரிகிற இரண்டு கொள்ளிகளில் சிறந்த கொள்ளியாக அதிமுகவை தேர்வு செய்துள்ளனர் # இனியாவது மக்கள் தலைதப்புமா?

  நேற்று வரை திமுக கூட்டணி வெல்லும்னு கருத்துக் கணிப்பு சொன்ன மீடியா கம்பெனிகளின் இன்றைய விளக்கம் என்ன?
 பெரிய திருடர்களிடமிருந்து தப்பித்து சின்ன திருடர்களிடம் மாட்டிக்கொண்டோம் #அவ்வளவு தான் வித்தியாசம்.
   விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #ஆமாம் இவிங்க பெரிய வீனஸ் வில்லியம்சு பாரு.
 என்ன தான் சந்தோசமா இருந்தாலும் "இந்தம்மா" வந்து என்னென்னல்லாம் பண்ண காத்திருக்கோனு ஒரு பயம் இருக்க தானே செய்யுது?#மனசாட்சி

  இனி கூடிய சீக்கிரம் 500 கோடி செலவில் "சசிகலா பிக்சர்ஸ்" பெருமையுடன் வழங்கும் "எந்திரன் பார்ட் 2"-வை எதிர்பார்க்கலாமா? .

: விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

 ஏதோ அடிமைகள் போல வீட்டு வாசலில் காவல் காத்தவர்களுக்கு உயிர் கொடுத்த சகாயம் அவர்களுக்கு ஒரு சபாஷ்..
 ஊழல் பண்ணீட்டு.. வெட்கமேயில்லாமல் ஓட்டு கேட்டால் இதுதான் கதி..( இது அம்மாவுக்கு பொருந்தும் உடன்பிறப்பே..வெட்கம் தவீர்)

 RT : ரஜினி கிரிக்கெட் பார்க்க போனார். இந்தியா வென்றது. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டார். அதிமுக வெல்கிறது. ரஜினி ராக்ஸ்.


 ஏன் அதிமுக ஜெயிக்கும்போது மட்டும் மிருகபல மெஜாரிடி கிடைக்கிறது? இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
 
  திருடுனதாலயும் தான் திமுக,காங். தோத்துச்சு! ஆனா திருடுனதால மட்டும் இல்ல! - கபில் சிபல் # சூப்பர் கருத்துமுத்து.

 : சட்டு புட்டுன்னு ஒரு ஸ்கூல் ல இல்லேன்னா காலேஜ் ல join பண்ணனும் # லேப்டாப் கிடைக்கும்.@ நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு.

14 கருத்துரைகள்:

NKS.ஹாஜா மைதீன் said...

சும்மா நச்சுனு இருக்கு....நான்தான் முதல் குத்து...செல்ல குத்துதான்....

Speed Master said...

செம செம
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கல்கத்தா


http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

சி.பி.செந்தில்குமார் said...

haa haa

யாதவன் said...

@nirujah தோல்வியை பார்த்த போது ஒரு நிமிடம் கண்கள் பனித்தன. பழைய வடுக்களின் வெளிப்பாடோ! பழிதீர்த்த திருப்தியோ! #ஓர்_ஈழத்தமிழன்_உணர்வு

True

ரஹீம் கஸாலி said...

அட....நம்ம ட்வீட்டுமா? ஓகே..ஓகே

இரவு வானம் said...

சூப்பர் டிவீட்ஸ்

பாரத்... பாரதி... said...

@navi_n
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருப்பவனை விரட்டிவிட்டு விரட்டியவனையே கொண்டு வந்து வைப்பது தான் வழக்கம். :)

@losangelesram
'கருணாநிதிக்கு பல களங்கள் காத்திருக்கின்றன- வீரமணி’ - யோவ் திருவிழா எல்லாம் முடிஞ்சாச்சு. இன்னுமா மைக் செட் கழட்டலை ?!

@Kaniyen
தமிழகத்தில் காங்கிரசின் படுதோல்வியை கண்டு, ஈழத்தில் இறந்த எம் உடன்பிறப்புகளின் ஆவி இப்போது நிம்மதியாக சாந்தியடையும் !

@navi_n
அம்மா, திமுக விற்கு ஆப்பு எப்படி விழுந்தது என்று ஐந்தாண்டின் இறுதியில் நினைச்சுப்பார்க்கக் கூடாது. இப்பவே நினைச்சுப் பார்க்கணும்.

@jill_online
எம் பேரை "மாற்றம்" னு மாத்தி வச்சிகப்போறேன் # எல்லாரும் மாற்றத்தைத்தான் விரும்புறாங்கலாம்

@TBCD
தமிழகத்தை 5 வருடத்திற்கு ஒரு சூது கவ்வும், அடுத்த 5 ஆண்டு வேறொரு சூது கவ்வும். தர்மம் பிச்சைக்காரர்கள் தட்டில் மட்டுமே வாழும் !

@gpradeesh
ஆழிப்பேரலையிலும் சேப்பாக்கத்தில் திமுக கரைசேர்ந்ததற்கு காரணம், டாப் ஸ்டாரின் கடைசிநாள் பிரச்சாரமே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன!

@minimeens
கருணாநிதிக்கு பல களங்கள் காத்திருக்கின்றன -கி.வீரமணி #அய்யய்யோ இந்தாளு நம்மை எச்சரிக்கிறாரா அவரை எச்சரிக்கிறாரானு புரியலயே?

@mayavarathaan
சென்னையில் நேற்று இடித்த இடியில் காஞ்சிபுரத்தில் நெறி கட்ட ஆரம்பிட்த்து விட்டதாமே?!

@rsekar007
தங்க தாரகையே, தமிழர்களின் வாழ்வாதாரணியே, மாணிக்கமே, வைரமே, முத்தே.. நீ தான் தமிழகத்தின் சொத்தே : கி.வீரமணி#நீ இந்தப் பக்கம் வந்த செத்தே :ஜெ

பாரத்... பாரதி... said...

@onely1
கலைஞர் செய்திகளில் தலைப்பு செய்தியே என்டோசெல்ஃபான் குறித்து தான்..#தொண்டர்களே உணர்ச்சி வசப் பட்டுராதீங்க.

@vembaikrishna
#சத்தியமூர்த்தி பவனில் அடிதடி#ஓயாமல் பிறர் சிரித்துமகிழ வாய்ப்பு தந்தருளும் நொந்தபாலுவுக்கு சிறப்புஅடைமொழி யாரேனும் பரிந்துரைங்களேன்

@Kaniyen
தங்கபாலு தன்னுடைய ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் - உருவபொம்மை தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை.

@krpthiru
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜோசியக்காரர்களெல்லாம் சட்டசபையை சுற்றி வந்தே பிழைத்துக் கொள்ளலாம்! # அனுமானம்.

@sanakannan
கலைஞரால் டிராபிக் ஜாம் தொல்லைகள் இருந்ததில்லை. ஜெ ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே சென்னை அண்ணா சாலையில் கடுமையான டிராபிக் ஜாம்.

@sajeek
ஜெ சிலதை நினைவு வைத்திருக்க வேண்டும். 2016 என ஒன்று வரும். தேர்தல் என ஒன்றும் வரும். வேண்டுமானால் திமுக என ஒன்று வராது என வைத்துக்கொள்ளலாம்.

@parisalkaaran
இப்போது கலைஞர் பெண் சிங்கம் பார்ட் 2 எடுத்தால் பெண் சிங்கத்தை வில்லியாகத் தான் காட்டுவார் #அவதானிப்பு.

@drraman07
தீயா வேலை செய்யச் சொன்னா, இப்டி தீஞ்சு போற அளவுக்கு வேல செஞ்சிருக்கானுகளே # முக முனகல்.

@araathu
உளவத்துறை உருப்படியாக கொடுத்த ஒரே ஐடியா - தலைவரை சென்னைக்கு வெளியே நிற்கச்சொன்னதுதான்.

@jill_online
தேர்தல் நெருங்க நெருங்க உப்பு விற்பனை அதிகரித்த போதே நினைத்தேன் , இந்த மாதிரி ரோசமான முடிவு தான் வரும்னு. #

@writercsk:
காசு வாங்கி விட்டு எக்ஸிட் போலில் மட்டும் நச்சென்று ஓட்டு குத்திய‌ பெருமக்கள் எம் தமிழ் மக்கள்..

@Aravindank
பல நடுநிலை(?) நண்பர்களின் அம்மா பாசம் இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெளிப்படையாக தெரிந்தது.நன்றி தேர்தல் முடிவுகள்.

@Shaiju_SGR
"ஆடு வளர்ப்பது எப்படி ? " புத்தகம் கிடைக்குமா #விரைவில் இலவச ஆடு

பலே பிரபு said...

ஒவ்வொன்னும் கலக்கல்.

மதுரை சரவணன் said...

கலக்கல்... அருமை... வாழ்த்துக்கள்

செங்கோவி said...

கலக்கலோ கலக்கல்.

ந.ர.செ. ராஜ்குமார் said...

டிவிட்டர் குருவி சூப்பரா பறக்கது பாஸ்

விஜய்கோபால்சாமி said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

என்னுடைய கீச்சைப் பகிர்ந்தமைக்கு நன்றி. கீச்சுக் குருவி பக்கத்திற்கு நடுவில் பறப்பது படிக்க இடையூறாக இருக்கிறது. ஒரு ஓரத்துல பறக்கற மாதிரி பண்ணக் கூடாதா!

நிரூபன் said...

ஒரு அருமையான காமெடி கும்மியை மிஸ்ட் பண்ணிட்டேனே சகோ.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்