அம்மா என்னும் உலகமொழி - தமிழ்த்தேனீயின் கவிதை.அம்மா...
ஐந்தறிவு ஜீவன்களும்
கூட
உச்சரிக்கும்
ஒரு உலகமொழி!

அம்மா..
உலகத்தை
அறிமுகப்படுத்தி
உலவவிட்டவள்!

அம்மா...
அன்பின் அர்த்தம்
எளிதில் புரிகிற இனிய மொழி
பேசிப்பார்த்தவர்களுக்கு மட்டும்!

அம்மா...
கருவறைக்குச்
சொந்தக்காரி..
அன்புள்ளங்களை மட்டும்
பெற்றெடுக்கும்
அதிசியக்காரி..

அம்மா...
நடமாடும் கடவுளுக்கு
நாம் சொல்வோம்
என்றென்றும் நன்றி..

 -கவிதையாக்கம்.
   தமிழ்த்தேனீ.  

15 கருத்துரைகள்:

Mahan.Thamesh said...

அருமையாய் உள்ளது . சார்

கவி அழகன் said...

அம்மா கவிதை அருமை
வாழ்த்துக்கள்

Anonymous said...

அம்மா என்னா சும்மாவா ----

சசிகுமார் said...

பாரதி கவிதை சூப்பர்

Ramani said...

அருமையான கவிதை
ஐந்தறிவு ஜீவன்களும் உச்சரிக்கும்
உலக்ப் பொது மொழி என்பது
வித்தியாசமான சிந்தனை
தமிழ் தேனீக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அர்த்தமுள்ள கவிதை...
அம்மா மட்டுமே இந்த உலகில் உண்மையான கடவுள்

தமிழ்வாசி - Prakash said...

இந்த அருமையான கவிதைக்கு தமிழ்மணம் ஏழு...

சென்னை பித்தன் said...

நம்முடனே இருக்கும் தெய்வம் பற்றி நல்ல கவிதை.

Anonymous said...

தமிழ்த்தேனீ கவிதை அருமை...

செங்கோவி said...

நல்ல டச்சிங்கான கவிதை..வாழ்த்துகள்.

கோகுல் said...

பேசிப்ப்பார்தவர்களுக்கு மட்டும் புரியும் இனிய மொழிதான்.அம்மா!

பகிர்வுக்கு நன்றி!

மாய உலகம் said...

அம்மாவுக்கு நன்றியை காலத்திற்கு சொல்வோம் அன்பரே!... கவிதை அருமை

நிரூபன் said...

அன்னையின் பெருமையினைச் சொல்லும் அழகிய கவிதையினைப் எழுத்துவாக்கம் செய்த தமிழ்தேனீ அவர்களுக்கு மிக்க நன்றி.


பகிர்ந்த உங்களுக்கும் நன்றி பாஸ்.

அமைதிச்சாரல் said...

அழகான கவிதை..

ஆயிஷா அபுல் said...

கவிதை அருமை
வாழ்த்துக்கள்

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்