நீயும் நானும் - நானும் நீயும் - தமிழ்த்தேனீயின் கவிதை.காணும் இடத்தில் இல்லை
கற்சிலைகளிலும் இல்லை
வானும் பூமியும்
வலம் வந்தாலும்
தென்படுவதொன்றுமில்லை
கடவுள் என்ற ஒன்று!

உலகின் வல்லமை ஆயுதமா?
உணர்வீர் தோழர்களே...

உலகையே ஆளும் வல்லமை
சர்வ நிச்சயமாய்
அன்பே தான்! உயர் அன்பே தான்!

செல்வத்தை வாரிக்கொடுப்பதால்
மட்டும் வள்ளல் அல்லவே!
கள்ளமில்லா அன்புதனை
அள்ளிக் கொடுப்பவரும்
வள்ளல் அல்லவோ?

இருப்பதைக் கொடுத்து
இதயத்தைத் தெரிவிப்போம்!

அன்பால் அனைவரும்
வள்ளல்கள் தாம்.
அன்பு காட்டி
கடவுளை காண்பிப்போம்.
நம்முள்ளே..
நமக்குள்ளே!

 -கவிதையாக்கம்.
  தமிழ்த்தேனீ.

26 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா நான்தான் முதல் ஆளா...???

விக்கியுலகம் said...

கலக்கல் கவிதை மாப்ள!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

# கவிதை வீதி # சௌந்தர் said...

அன்பால் ஒன்றினைவோம்...

அர்த்தமுள்ள கவிதை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்த்துக்கள்...

கோகுல் said...

அன்பே கடவுள்!
அன்பிருந்தால் நாமும் கடவுளே!

தமிழ்வாசி - Prakash said...

நல்ல கவிதை பகிர்வு

சசிகுமார் said...

கவிதை சூப்பர்

middleclassmadhavi said...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

அருமையான கவிதை

இராஜராஜேஸ்வரி said...

உலகையே ஆளும் வல்லமை
சர்வ நிச்சயமாய்
அன்பே தான்! உயர் அன்பே தான்!/

உண்மை! உணமையைத்தவிர வேறில்லை.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

சண்டே என்பதால் கொஞ்சம் பிசியாகிட்டேன்.

நிரூபன் said...

அன்பின் மகிமைதனைச் சொல்லும் அருமையான கவிதையினைத் தமிழ்த் தேனீ அவர்கள் படைத்திருக்கிறார்.

தமிழ் தேனீக்கு என்னுடைய பாராட்டுக்களையும் சொல்லி விடுங்கள்.

kavithai (kovaikkavi) said...

''..கள்ளமில்லா அன்புதனை
அள்ளிக் கொடுப்பவரும்
வள்ளல் அல்லவோ?...''
மிக நல்ல கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

பாலா said...

அன்பு இருந்தால் மற்ற எல்லாமே நமக்கு கிடைக்கும். அருமை.

ரெவெரி said...

அருமையான கவிதை...நல்ல வரிகள்...பாராட்டுக்கள்...

மாய உலகம் said...

அருமையான கவிதை- அன்பால் ஒன்றிணைவோம்.. வாழ்த்துக்கள்

vidivelli said...

மிக மிக அருமையான கவிதை..
உண்மைதான் அன்பு என்பது மனிதரைக்கவரும் பெரும் ஆயுதம்..
அன்பால் எதையும் சாதிக்க முடியும்..
இணைவோம் அன்பாலே..
எனது அன்பான பாராட்டுக்கள் தேனீக்கு.கவிதை பகிர்வுக்கு நன்றி சகோ.

சி.பி.செந்தில்குமார் said...

அட..நம்மகட்சி..அன்பே சிவம்.

சின்னதூரல் said...

செல்வத்தை வாரிக்கொடுப்பதால்
மட்டும் வள்ளல் அல்லவே!
கள்ளமில்லா அன்புதனை
அள்ளிக் கொடுப்பவரும்
வள்ளல் அல்லவோ?

நல்ல வரிகள்...

middleclassmadhavi said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன், http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_02.ஹ்த்ம்ல் - முடிந்த போது பார்க்கவும்

அ.முத்து பிரகாஷ் said...

கடவுளின் பெயரால் மதங்கள் சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் வன்மம் வளர்ந்து பெருகிக் கொண்டுவரும் சூழலில்.. தங்களின் வரிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்க்கமாக சுட்டிக் காட்டுகின்றது..

அன்பினால் உலகை ரோஜாப் பூந்தோட்டமாக்குவோம்..

MUTHARASU said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ...
அருமையான கவிதை...

Powder Star - Dr. ஐடியாமணி said...

அன்பு பற்றிய அன்பான கவிதை! வாழ்த்துக்கள்!

கவி அழகன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

அ. வேல்முருகன் said...

அன்போடு இருப்போம்
ஆட்சேபனை இல்லை
அதற்கெதற்கு
இன்னொரு பெயர்
கடவுள் என்று

கடவுள் இல்லாதது
அன்பு இருப்பது
இருப்பதற்கு ஏன் இல்லை என பெயர் சூட்டுகிறீர்கள்

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்