skip to main |
skip to sidebar
"தெரு முனையில் நின்று கொண்டிருக்கும் நாய் வருவோர் போவோரையெல்லாம் பார்த்து குலைத்துகொண்டிருப்பது போல, உங்களில் சில பதிவர்களும், டுவிட்டர்களும் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கடுமையானதொரு விமர்சனத்தை என் முன் வைத்தார் ஒருவர்.
இது கொஞ்சம் கர்ணகொடூரமான விமர்சனமாகவே தோன்றியது. நான் ஏதேனும் பதில் சொன்னால் நானும் கடிக்க வருகிறேன் என்று சொல்வாரோ என்று தயக்கமாக இருந்தது.(இளைஞ்சவங்ககிட்டதான் எகிறுவாங்க..)
முன்பு திண்ணைகளில் உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவார்கள் இப்போதெல்லாம் கணிணி வைத்து, இணையம் மூலம் முதல்வர் முதல் சகபதிவர்கள் வரை வம்பிழுக்கிறார்கள் என்று அவர் அடுத்த தாக்குதலை ஆரம்பிக்க, "தெரு நாய்களும், சில பதிவர்களும்" என்று தலைப்பை போட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவாக மாற்றலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த என் ஹிட்ஸ் ஆசையில் மண் விழுந்தது.
உங்களுக்கு தெரியாதுங்க, முன்னாடி ஒரு முறை வம்புச்சண்டை மூலமா ஹிட்ஸ் ஏத்திக்கொண்ட உங்க பதிவர், இப்பவும் பித்து பிடிச்சமாதிரி ஏகத்துக்கு கத்தி, ஆபாசமா எழுதியிருக்காரு" அவர் தொடர..


எனக்கு தெரியாத விஷயம் தெரியாததாகவே இருக்கட்டும் என்று மேற்கொண்டு ஏதும் விவாதிக்கவில்லை.
அவர் இன்னும் கொஞ்சமும் கூட பேசினார். அவர் வார்த்தைகள் என்னையும் கொஞ்சம் உலுக்கியது. நானும் இது போல ஏதேனும் செய்திருக்கிறேனா என்று எண்ணமிட தோன்றியது.
சங்கரனுக்கு விழுந்த சாட்டையடி சகல ஜீவராசிகள் மீது புராணத்தில் விழுந்தது போல, எங்கே யாருக்கோ அவர் வீசிய சாட்டை, அழுத்தமான சவுக்கடியாக என்மீதும் விழுந்தது.
"என்னிடம் எழுத்து என்னும் சவுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானலும் நான் அதனால் அடிப்பேன். கட்சி தலைவராக இருந்தாலும், சினிமா இயக்குனராக இருந்தாலும் விடமாட்டேன்
என்று சகட்டுமேனிக்கு பதிவு எழுதுபவர்கள், வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?"
வாசகர்கள் கண்டித்து எழுதும் கண்டன கமெண்ட்களை வெளிவிடாமல் ஸ்பெம் அல்லது டெலிட் செய்து விடலாம். ஆனால் அதிலிருக்கும் வார்த்தைகள் நிச்சயம் அவர்களை உறுத்தும் என்பது உண்மையே.

எல்லோராலும் சினிமாவுக்கு எழுத முடியாது, எல்லோராலும் ஆனந்த விகடனில் எழுத இயலாது என்பது யதார்த்தம். நமக்கான வெள்ளித்திரையாக, விகடனாக வலைப்பூ கிடைத்திருப்பது,இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதனை வெட்டி திண்ணைப்பேச்சாக மாற்றி விடாமல், எழுத்தை மிளிரச்செய்வதற்கான படியாக, சமுகம் மீதான கோபத்திற்கான நியாயமான வெளிப்பாடாக மாற்றிக்கொண்டால் நல்லதுதானே.
ஒவ்வொரு பதிவிலும் நம்முடைய எழுத்தின் வீரியம் அதிகரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டால் இது சாத்தியமே.
வலைப்பூக்களை சினிமா உலகத்திற்கு செல்ல வழியாகவும், பத்திரிக்கை ஊடகத்திற்கு செல்லும் வழியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மிகபெரிய ஊடக உலகத்திற்கு செல்ல விசிட்டிங் கார்டாக நம்முடைய வலைப்பூ எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
அப்படியான தேவையில்லாதவர்களுக்கு பழக பழக வரும் தமிழ் என்பதற்கு ஏற்ப, நம்முடைய எண்ணங்களை, எழுதும் விதத்தை மேம்படுத்த வலைப்பூக்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்.
டிஸ்கி :
நான் மானமில்லாதவன், நீ மானமுள்ளவன் எப்படி வசதி என்னும் வடிவேலு வசனம் சம்பந்தமில்லாது ஞாபகத்திற்கு வருகிறது.
ரொம்ப யோசித்தால் இனி மேல் பதிவே எழுத முடியாது போல தோன்றுகிறது. (அதனால் தானோ என்னவோ இந்த பதிவு முழுமையடையாத பதிவு போல, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லமுடியாத பதிவாகவே எனக்கு தோன்றுகிறது)
அருகான்மை தோட்டங்கள்
-
"அது "க்குக் கூட
-
அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம்
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்
"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய்...
1 day ago
-
ஒரு மடக்கு தேநீர்.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)
-
சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள்
நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என
எங்கிருந்தோ ...
1 day ago
-
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் - தூக்கு செல்வம்
-
செல்வன் பெற்றோர் வைத்த பெயர், செல்வம் காவல்துறை கொடுத்த பெயர், தூக்கு
செல்வம் சிறை அதிகாரிகள் வைத்த புதிய நாமகரணம். 'சிறை குறித்து சமூகம்
கொண்டிருக்கும் ...
2 weeks ago
-
வாசலில் நின்ற நிழல்
-
வாசலில் நின்ற நிழல்
காலை ஏழு மணி.
வீட்டு வாசலைத் திறந்தேன். தெருவில் யாரும் இல்லை. ஆனால், எதிர் வீட்டின்
வாசலில் ஒரு நிழல் மட்டும் நின்றிருந்தது. மனிதர...
5 weeks ago
-
Tìm hiểu về xổ số tại MU88 – Cơ hội làm giàu hiếm có
-
Xổ số đang là trò chơi hấp dẫn thu hút rất nhiều người chơi mỗi ngày tại
MU88. Đây là một tựa game có lối chơi đơn giản, mang đến trải nghiệm thú vị
cùng v...
1 year ago
-
ரமேஷ் கதைகள்
-
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில்
நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை
தொகுப...
3 years ago
-
11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24
-
11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24
QUESTION PAPER PDF LINK: DOWNLOAD
3 years ago
-
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
3 years ago
-
LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்
-
1996ல் பி வாசு இயக்கத்தில் பிரபு தேவா , நக்மா நடிப்பில் வெளியான
லவ்பேர்ட்ஸ் தமிழ் படத்துக்கும் , 2020 ல் ஆக்சன் அட்வென்ச்சர்
அமெரிக்கன் படமாக...
3 years ago
-
-
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
5 years ago
-
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
6 years ago
-
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
7 years ago
-
மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?
-
சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்த...
7 years ago
-
மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
7 years ago
-
சீமராஜா - சினிமா விமர்சனம்
-
சிவகார்த்திகேயன், சூரி, இமான், பொன்ராம் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது
படைப்பாக வெளிவந்திருக்கும் படம் சீமராஜா...
காதல், காமெடி, சண்டை, பன்ச் டயலாக் என...
8 years ago
-
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
8 years ago
-
*தமிழகம்- 61*
-
தமிழகம் 61
—�—�—�—�—�—�—�—�
தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு
நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்த...
8 years ago
-
கே டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பு - ஒரு இலக்கியப் பார்வை.
-
வழக்கமாக விமானப் பயணங்களில் நான் புத்தகங்கள் எதுவும் படிப்பதில்லை. இரண்டு
நாட்களுக்குத் தொடரும் பெரும் பயணங்களிலுமே நான் இதைத்தான் கடைப்பிடிக்கிறேன்.
சமீப...
9 years ago
-
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப...
9 years ago
-
ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....
-
ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான
விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்
பார்ப்ப...
9 years ago
-
கலியன் -4 (இறுதி)
-
பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை
பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா
தெரியவில்லை.
ப...
10 years ago
-
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
10 years ago
-
நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையும், சில பின்னூட்டங்களும்.
-
💥வெளி ஊருக்குப் பிழைக்கப் போகிறவர்கள், என்ன வேலை செய்தாலும் இங்கே
வரும்போது தங்களை மிகவும் நல்லநிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
அப்படி காட்டிக...
10 years ago
-
மதுராந்தகி
-
மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.
கனத்த மவுனம்’
உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த...
10 years ago
-
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!
-
ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின்
தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை
விசுவாசிக்க...
11 years ago
-
Portable மென்பொருளை Winrar மூலம் எளிதில் உருவாகுவது எப்படி
-
எந்த கணினியிலும் நிறுவாமல் நம் பென் டிரைவில் வைத்தே பயன்படுத்த
விண்டோஸ் மென்பொருள்களை Portable மென்பொருள்களாக எப்படி உருவாக்குவது என்று
பார்போம் .
மேலும...
11 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~
-
வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!
இரவு 12.30 மணி....
கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...
12 years ago
-
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ...
13 years ago
-
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ...
13 years ago
-
26 அக்டோபரில் வெளி வருகிறது Windows 8 சலுகை விலையில் அப்டேட் செய்ய
-
கணினி துறையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இயங்கு தளமான விண்டோசின்
அடுத்த பதிப்பை வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். முந்தைய
பதிப்புகளில் இரு...
14 years ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
-
இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று
கொட்ட வந்...
14 years ago
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
21 கருத்துரைகள்:
தலைப்பை போட்டு கலாய்க்கிறிங்க...
இருங்க மீதியை படிச்சிட்டு வுருகிறேன்..
உண்மைதான்...
நான் சில நேரங்களில் வாய் கிழிய பேசுகிறோம்..
மற்ற நேரங்களில் அதை மறந்து விடுகிறோம்....
பதிவானது எழுத்துக்கள் எல்லாம் இந்த சமுகத்தை முன்னேற்றுவதற்காக இருக்க வேண்டும்..
அப்படி இருந்தால் நம் பதிவுகள் எப்போதும் உயிர் வாழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
:-)
பதிவுலகில் பாரதி இருப்பது இம்மாதிரியான பதிவுகளின் மூலம் விளங்கும்.
//என்னிடம் எழுத்து என்னும் சவுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானலும் நான் அதனால் அடிப்பேன். கட்சி தலைவராக இருந்தாலும், சினிமா இயக்குனராக இருந்தாலும் விடமாட்டேன்
என்று சகட்டுமேனிக்கு பதிவு எழுதுபவர்கள், வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?"//
இந்த பதிவுக்கு வடை போச்சேன்னு பின்னூட்டம் போட்டா..
நம்ம வலைப்பதிவு எதற்க்காக துவங்கப் பட்டது என்று தெரிந்துவிடும்..
ரொம்ப சரியான பதிவுதாங்க :-)
பெரும்பாலும் ட்விட்டர் , ப்ளாக் எல்லாத்திலையும் யாரோ ஒருத்தர கிண்டல் பண்ணியோ , திட்டியோ எழுதி இருக்கிறததான் அதிகமா பாக்க முடியுது.
//சமுகம் மீதான கோபத்திற்கான நியாயமான வெளிப்பாடாக மாற்றிக்கொண்டால் நல்லதுதானே.
//
எனக்கு இது மட்டும்தாங்க குழப்பமாவே இருக்கு. சமூகத்தின் மீது எதுக்கு நாம கோபப்படனும் ? நாம சேர்ந்ததுதானே சமூகம், இதுல தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் . அத விட்டுட்டு கொபப்படுரதால தான் இத்தனை கிண்டல் , கேலி எல்லாம்னு தோணுது!
எப்படியோ சண்டை இல்லாம இருந்தா நல்லா இருக்கும் .. அத விட்டுட்டு எங்க பார்த்தாலும் யாரோ ஒருத்தர அடிச்சிட்டு , அவர் கண்ட படி திட்டிட்டு :-((
:-]]
உண்மையான கருத்துக்கள்
>>வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?
குட் ஒன்
//கோமாளி செல்வா said
எனக்கு இது மட்டும்தாங்க குழப்பமாவே இருக்கு. சமூகத்தின் மீது எதுக்கு நாம கோபப்படனும் ? நாம சேர்ந்ததுதானே சமூகம், இதுல தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் . அத விட்டுட்டு கொபப்படுரதால தான் இத்தனை கிண்டல் , கேலி எல்லாம்னு தோணுது!//
நீங்க சொல்றதும் சரிதான்
செல்வா கூறீயதே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன்
என்னத்த சொல்ல...
எனக்கு தலைப்பும் புரியல!பதிவுல இருக்குற உள்குத்தும் புரியல:)
ஆனா என்ன சொல்ல வர்றீங்க எனபது மட்டும் புரியது.
true
///////வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?" /////////
மறுக்க முடியாத உண்மைதான் .
நான் சொல்வதற்கு ஒன்னுமே இல்ல
நல்லாத்தான் குத்துகிறீர்கள் பதிவர்களை!
மிகபெரிய ஊடக உலகத்திற்கு செல்ல விசிட்டிங் கார்டாக நம்முடைய வலைப்பூ எழுத்துக்கள் இருக்க வேண்டும். //
சத்தியமான வார்த்தைகள் பாரதி.
தலைப்பிலேயே தெரிந்து விடும் இது போன்ற பதிவுகள். இவற்றை நாம் படித்தால் குழப்பம்தான் மேலிடும். இதிலெல்லாம் பாதிக்கப்படாமல் ,பாரதி போல சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகளை எழுதுங்கள்.
அருமையாகச் சொன்னீர்கள்..நம்மையே நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்!
பதிவுலகம் கொஞ்சம் ராங்காத்தான் போய்கிட்டிருக்கு...//
இல்லையே, நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு...ஏன்..ஏனு இந்தக் கொல வெறி.
உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன் சகோ, எமக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதமான இந்த பதிவு ஊடகத்தை நாம் பல வழிகளில் பயனுள்ளதாக மாற்றலாம். அதை வுட்டிட்டு....கண்டதையும் எழுதுத...?
Post a Comment