இயந்திர வாழ்க்கை - துஷ்யந்தி.
உழைத்து வாழ்பவன் மனிதன்,
பிறர் ஆணையிட வாழ்பவன் இயந்திரம்,
ரசித்து வாழ்பவன் மனிதன்,
ரசனையைத் தொலைத்து இயங்குவது இயந்திரன்,
சோர்ந்து, மீண்டும் கிளர்வது மனிதன்,
சோர்வுறாமல் சொன்ன வேலையைச் செய்வது இயந்திரம்,
பணம் சம்பாதிப்பதாற்காக இயந்திரமாய்
மாறிக்கொண்டு இருக்கும் மனிதா...
கொஞ்சம் ரசனையோடு இளைப்பாறு..,
ஆறாம் அறிவு எனபது பணம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல..
- துஷ்யந்தி
(பதினொன்றாம் வகுப்பு மாணவி)
இன்றைய ஸ்டார்:
"இன்னிக்கு பெரியார் பிறந்த நாள். சாக்லேட் எடுத்துக்குங்க..." என தனக்கு பிடித்த பெரியாருக்காக எமக்கு இனிப்பு வழங்கிய
நிவேதா. சி (பன்னிரெண்டாம் வகுப்பு)
வெற்றி.
பயத்தை செலவளித்தால் பலம் வரவு.
வேகத்தை செலவளித்தால் விவேகம் வரவு.
கோபத்தை செலவளித்தால் கோலாகலம் வரவு.
தோல்வியை செலவளித்தால் வெற்றி வரவு.
-காவியப்பிரியா.ர.



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
25 கருத்துரைகள்:
சுட்டிகளின் கெட்டித்தனமான கவிதைக்கு வாழ்த்துக்கள்!
பெரியார் வாழ்க!
மானவர்களிடமும் பெரியாரிய சிந்தானைகள் வளர்ந்து வருவது மகிழ்வளிக்கிறது!
ஸ்வீட் எடு கொண்டாடு!
மாணவர்களின் திறமைக்கு உங்கள் வலைப்பூ இடம் கொடுக்கிறது... நல்ல முயற்சி
என் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை
தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு
அருமையான படைப்புகளைக் கொடுத்த
மூன்று மாணவிகளுக்கும் எனது மனம் கனிந்த
வாழ்த்துகளைச் சொல்லுங்கள்
உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜா மலர்களையெல்லாம்
மலர்ந்து மணம் வீசும் மலர்களாகச் செய்வதற்காக
உங்களுக்கு என் சிறப்பான வாழ்த்துக்கள்
த.ம 3
இனிவரும் காலங்களில் பெரியார் என்ற ஒருவர் இருந்ததே யாருக்கும் தெரிய வராது என்று கொக்கரித்தவர்களுக்கெல்லாம் இன்றைய மாணவர்கள் சிறப்பாக பதில் வழங்குகின்றார்கள்..
///உழைத்து வாழ்பவன் மனிதன்,
பிறர் ஆணையிட வாழ்பவன் இயந்திரம், ///
சிந்திக்கத் தூண்டும் உண்மை
ஆறாம் அறிவு எனபது பணம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல..// வாழ்த்துக்கள் துஸ்யந்தி..
ரசித்து வாழ்பவன் மனிதன்,
ரசனையைத் தொலைத்து இயங்குவது இயந்திரன்,//
ரசித்த வரிகள். பாராட்டுக்கள் இளம் தளிருக்கு.
மூன்று மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்!
voted 7 TM.
//
உழைத்து வாழ்பவன் மனிதன்,
பிறர் ஆணையிட வாழ்பவன் இயந்திரம்,
//
உண்மையான வரிகள்
அட்டகாசம்,அமர்க்களம்!
சுட்டி குழந்தைகளுக்கு வாழ்த்துகள்
மாணவிகளின் படைப்புகளுக்கு பாராட்டுக்கள்.
////ஆறாம் அறிவு எனபது பணம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல..
////
அருமையான வார்த்தைகள்..
/////கோபத்தை செலவளித்தால் கோலாகலம் வரவு.////
வெரிகுட்......
பெரியார் பிறந்த நாளுக்கு சாக்லேட், கேட்கவே இனிக்கிறது.
இவர்களை போய் கத்துக்குட்டிகள் என்பதா?
தொடருங்கள். வாழ்த்துக்கள்!
சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்...
அட!!!
கத்துக்குட்டிகள் இல்லை சார் கற்று கொடுக்கும் குட்டிகள்
குட்டிகளுக்கு வாழ்த்துக்கள்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
வணக்கம் பாஸ்..
சுட்டிகள் அருமையான கவிதையினைப் பகிர்ந்திருக்கிறார்கள்...
என் வாழ்த்துக்களையும் இரு கத்துகுட்டிகளுக்கும் இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.
Post a Comment