ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்- யார் புத்திசாலிகள்?


அட போங்கப்பா, ரசிகர்களாக இருப்பதே ஒரு முட்டாள்தனம், அதுல அந்த ரஜினி,கமல்-னு பெரிய வித்தியாசம் வேற அப்படினு நீங்க கடுப்பாகக்கூடும்.

உண்மையில் நம் மனதை உள்நோக்கி பார்த்தால் நாம் சந்தித்த மனிதர்களின், நம்மை ஈர்த்த மனிதர்களின் தாக்கம், ஆழ்மனதில் இருக்கக்கூடும். அதன் பாதிப்பாக நம் நடவடிக்கைகளில் ஒரு சில மேனரிஸங்களும் நம்மை அறியாமல் வெளிப்படக்கூடும். ஆழ்ந்து கவனித்தால் அது யாரோ ஒருவரிடமிருந்து நாம் ரசித்த விஷயமாக இருக்கும்.

புராணக்கதை கேட்ட காலங்களில் அதன் கதை மாந்தர்களை ரசித்தவர்கள் இப்போது சினிமா கதாநாயன்-களுள் மூழ்கி இருப்பதனை காலக்கொடுமை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர யதார்த்தம் இதுதான்.

முன்பு புத்தக வாசிப்பு அதிகம் இருந்த காலத்தில், தன்னை வந்தியதேவனாகவும், அரவிந்தனாவும் வரிந்து கொண்டவர்கள், சினிமாவின் தாக்கம் அதிகரித்த பின் தன்னை சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பாவித்துக்கொண்டார்கள்.இன்று ரஜினி, கமல் என்னும் பிம்பங்களை தாண்டி, அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறார்கள்.

நான் யாருடைய ரசிகனும் இல்லை என்று காட்டிக்கொள்பவர்களின் மனதிலும் தான் ரசித்த யாரோ ஒருவரின் பிம்பம் ஒளிந்திருக்கும் என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஈர்ப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் தாக்கமும், நடிப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் ஏற்றமும் இருக்கும்.

எம்.ஜி.ஆர். ஈர்ப்பு வகை. சிவாஜி நடிப்பு வகை.

ரஜினியை பொறுத்தவரை ஈர்ப்பு அடிப்படையிலான ரசிகர்கள் தான் ஏராளம். அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வகையில் ரஜினியின் கவர்ச்சி எடுபட்டிருப்பதை பார்க்கலாம். இப்போது இணையத்தில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் குவிந்திருப்பதற்கான காரணமும், முன்பு சிறுவர்களாக இருந்தவர்களை ரஜினி கவர்ந்தது தான்.

கமலை பொறுத்தவரை நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தது தான் அதிகம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் கமல் ரசிகர் என்ற அடையாளத்தையே கொண்டிருக்கிறார்கள்.

சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் தெரிந்து வைத்திருப்பது கூட இதற்கு காரணமாக இருக்கிறது. அனந்து முதல் வையாபுரி வரை அத்துணை சினிமா மனிதர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்வதுடன், அவர்களையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்துவது கமலினை (மேல்தட்டு) ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

சில பல காரணங்களால் சிவப்பாக இருக்கும் கமலை விட, ரஜினிக்கு அதிகமான பெண்களின் ஈர்ப்பை பெற்றியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம், கேமராவை பார்த்து பஞ்ச் பேசுவது இதெல்லாம் ரஜினிக்கே கைவந்த ரசிகர்களை ஈர்ப்பதற்க்கான வித்தை.

படம் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அரசியல் வருவதாக பேசுவது கூட,ரசிகர்களை தக்கவைக்க ரஜினி மேற்கொள்ளும் "சினிமா அரசியல்" தந்திரம் தான் என்பது இன்றும் உயிருடன் இருக்கும் குற்றச்சாட்டுதான்.

ஆனால் ரஜினி அளவு ரசிகர்களின் ஈர்ப்பை இனி ஒரு நடிகர் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.இப்போது கூட ரஜினியின் ரோபோ படவியாபாரம் பார்த்து திகைத்து போய் கிடக்கிறது இந்திய திரையுலகம்.

ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் கூட, தங்களின் சொந்த பணத்தை போட்டுதான் கோலாகலம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் தலைமுறையை தாண்டி வரும்போது, இனி வரும் காலங்களில் இந்த கூத்துக்களும் ஒரு முடிவினை அடையும் என்று நம்பலாம்.

இனி ரசிகர் மன்றங்கள் தீண்டதகாததாக மாறிவிடும் சூழ்நிலையும் விரைவில் வரும், அதற்கு ஈடாக இணைய ரசிகர் மன்றங்கள் உருவாகக்கூடும்.

ரசிகர் மன்றம் நடிகர்களுக்கு கூடாரம்;
குடும்பங்களுக்கு சேதாரம்.
டிஸ்கி:
இது ஒரு மீள்பதிவு.

டிரைலர் டைம்ஸ்:

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய ஈர்ப்பியல் விதிகள் - விரைவில்...



விகடன் பாணியில் இது வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு.


இந்த வாரம் ட்விட்டரில் கண்டெடுத்த பல்சுவை அதிரடி ட்விட்டுகளின் தொகுப்பு இது. உங்களை மிக ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு பாராட்டலாமே...

 "வெந்தயம் போட்டு ஆட்டினால் இட்லி மிருதுவாக இருக்கும்" என்ற டிப்ஸை சர்வரிடம் சொன்னேன், சர்வர் டிப்ஸ் கேட்டபோது !

 கட் பண்ணி ஓப்பன் பண்ணா கரண்ட் போயிருது....


 நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்



 வீட்டில் மனைவியை கோபப்படுத்தாமல் இருந்தாலே பாதியளவு உலக வெப்பமாதலை தடுக்கலாம்!


 பந்தின்னா பந்திதான்! வாழையிலை, ச்சீவீட்டு, இட்லி,தோசை,பொங்கலு....ஹி..ஹி! ~இதையெல்லாம் கண்டுபிடித்த முன்னோர்கள் வாழ்க!


 கர்நாடகாவில் இருந்து வந்தாலும் அட்சர சுத்தமாய் தமிழ் பேச முடியும் என்பதை ரஜினி பிரகாஷ்ராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
 டிராபிக் ஜாமை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இன்று பெட்ரோல் பங்கில் டிராபிக் ஜாம் #எகொசா


 திருமணமாகி வீட்டிற்கு வரும் மகளிடம் எப்டிம்மா இருக்கன்னு அம்மா கேட்பது,எப்டியாவது இருந்துவிடு என்ற பதிலையும் உள்ளடக்கியுள்ளது.


  : பேஸ்டுல உப்பு இல்லாட்டி கூட திரிஷா, அனுஷ்கா வராங்க; நாட்டுல பல பேரு சோறு இல்லாம இருக்கான், எவனும் வரமாட்டேன்கிறான்.!!!


 தற்காலிக சுகமென்றாலும் கொள்ளிக்கட்டையால் சொறிந்துக்கொள்வது மனித இயல்புதான்.


: கிழிந்த ரூபாய் நோட்டை மாத்தும் ஒவ்வொருவரும் சிறந்த நடிகர்களே ..."



 உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்

 இங்க்லீஷ்ல பல இடங்களில் சில வார்த்தைகள் சைலன்ட்டா வந்தாலும்,எல்லா இடங்களிலும் இங்க்லிஷ்ன்னாலே நான் சைலன்ட் தான்...
 ”சிலர் என்னிடம் பிச்சை கேட்கும்போது, என்னை, அவன், கிண்டல் செய்கிறானோ என்று அஞ்சுகிறேன்!”

: துன்பமற்ற முதல் மனிதன் இறந்தே பிறந்தான்.



@iPorukki: ஆயிரம் முறை தேவதையென்று வர்ணிக்கும் போது தேவதையாய் உருமாறாத மனைவி, பேயென்று திட்டும்போது, அரை நொடியில் உருமாறுகிறாள்.

: இரண்டாவது முறை செய்யப்படும் தவறு, முதல் முறை போல கவனிக்கப்படுவதில்லை. #பாஜக-பிட்டு

 ஆனா ஒண்ணு குஷ்பக்கா பத்துவிரலை முறிச்சு சொடக்கு போட்டு விட்டசாபம் பலிக்குது,10 மாசத்துல#அனுபவிப்பீங்கடா ஓட்டு போட்டதுக்கு:)

 திடீர்ன்னு ஒருநாள் லெட்டர் எழுதி வெச்சுட்டு கலைஞர் காணாமல் போனா என்ன நடக்கும்??# தேடுவாங்களா இல்ல கட்சிய புடிப்பாங்களா?



 ராஜபக்சே வும் அவனது மகன்களும் ஏன் எய்ட்ஸ் லோகோவை கழுத்தில் மாட்டிக்கொண்டு அலைகின்றனர் ..... டவுட்டு!!! 


 :தசாவதாரம் பற்றி இன்னும் புரியாத ஒரே கேள்வி... அசினாகவும் ஏன் கமலே நடிக்கலை?



 பெப்ருவரி சம்பளத்தில் ரூ.200 பாக்கி இருக்கிறது. குறைந்த விலைக்கு டாக்டர் பட்டம் கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

  மதம் வேண்டாம்; இறைவன் போதும் எனக்கு!


writernaayon அருங்காட்சியக பழங்கால ஓலைச்சுவடி எழுத்துக்களைப் பார்த்து திகைத்து நின்றேன் #தற்போதைய என் எழுத்துக்களைப்போலவே இருக்கிறது!




 நமது இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியுமெனில் நாம் தோற்றுக் கொண்டிருப்பதாக அர்த்தம் !

 புத்தகங்கள் படிக்கும் போது மூலையை மடக்கி வைப்போர் மூளை முடங்கியோரே!”


 நீங்க முன்னால வந்துடுங்க சார்னு சற்றுமுன் என் ஒழுக்கத்தை சந்தேகித்தவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் #இதயம் கிழியும் ஒலி கேட்டேன்


 இதை புரிய வைக்க ரொம்ப நேரமாகுன்னு மேனேஜர் சொன்னாருன்னா, அவருக்கே இன்னமும் விளங்கலைன்னு அர்த்தம்.!


 கொள்ளயர்கள் எல்லாம் ஆந்த்ராவுக்கு போயிட்டதா சொன்னாங்க அப்பிடியே கரண்ட்டு எந்தஸ்டேட்டுக்கு போச்சு-னு கண்டுபிடிச்சு சொல்லுங்க


 ஏழாவது ரவுண்ட் முடிஞ்சும் கேப்டன் நாலாவது இடமா? ஓ...சங்கரன்கோவில் இடைத்தேர்தல்  ஓட்டு எண்ணிக்கையைப் பத்தி பேசுறீங்களா...


 சில காதலர்களுக்கும் மேதகு தமிழக மக்களுக்கும் அட்வான்ஸ் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள் :‍)


 நான் வணங்கும் கோவிலில்தான் என் எதிரியும் பிரார்த்திக்கிறான்


: நீ சாப்பிடும் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயை நம்பாதே.! #பழமொழி


 ஒருமணி நேரத்திற்கெல்லாம் கோபப்பட முடியாது என்னால் ; என்னுடையது தணியாதது; அது என்னோடு எப்போதுமிருக்கும் !


 அப்படி முந்திக் கொண்டு போய் எமனை பார்ப்பதில் என்ன சுகமோ..


: வாழ்க்கைல நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ணா மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்.. பழிய யார் மேல போடலாம்னு..


டிரைலர் டைம்:

அடுத்த பதிவாக "கலவரபூமியில் காத்து வாங்க வந்த ரஞ்சிக்கோட்டை வாலிபன்" - ட்விட்டரில் வலது கால் வைத்து அடியெடுத்து வைத்திருக்கும் ச்ச்ச்சுவாமிசீ நித்தியானந்தா பற்றிய ஒரு சீரியஸான காமெடி பதிவு ..(சன் டிவியில் தமிழ் டப்பிங் ஹாலிவுட் படத்தின் டிரைலரின் பின்ணணியில் ஒலிக்கும் "ஹஸ்கி - பஸ்கி வாய்சில்" படிக்கவும்)