ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....இந்த வார அதிரடி.

                                         
இந்த வார ஹிட் செய்தி:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பு விழிப்புணர்வு பாடலை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி அறிவிப்பு...

(அப்படியே எங்க வலைப்பதிவுகளுக்கும் ஓட்டுப் போட சொல்லி, ஒரு பாட்டப்போட்டா நல்லாத்தான் இருக்கும்.)

இந்த வார பரிகாரம்:

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் நம்ம இந்தியா இருக்கு, முதலிடத்தில் இருக்கிற ஆஸ்திரேலியாவின் பதக்க எண்ணிக்கையில் பாதி கூட நாம இல்ல. இருந்தாலும் " காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து இந்தியா ஆதிக்கம்", "இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது", "தொடர்ந்து இந்தியா அசத்தல்", என எழுதித்தள்ளும் நமது ஊடகங்கள்..

இந்த வார சான்றோர் சிந்தனை:

முடிந்தால் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கைத்தூக்கி விடுங்கள். அவர்களது ஆற்றலை இழந்து விடும்படி செய்யும் இழிசெயலை ஒருபோதும் செய்யாதீர்கள்...

--- அரவிந்தர்
(நல்ல வலைப்பதிவுகளை பார்க்கும் போது, மறவாமல் ஓட்டுப்போடுங்கோ.....)

இந்த வார தகவல்:

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

(அக்டோபர்-9ம் சர்வதேச தபால் அலுவலக தினம்)

இந்த வார அறக்கட்டளை:

ஆதரவற்று, அனாதையாக இறப்போரின் பிரேதங்களை கோவை அரசு மருத்துவமனையில் பெற்று, அடக்கம் செய்யும் கோவை தோழர் அறக்கட்டளை.

(ஆயிரமாவது பிரேதத்தை அடக்கம் செய்ய இவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்ற புகைப்படம் அக்-8 தேதியிட்ட தினமலரில் வெளியாகியுள்ளது.)



இந்த வார சாதனையாளர்:

காமன்வெல்த் போட்டிகளில், வில் வித்தை "காம்பவுண்ட்" பிரிவில் , வறுமையைத் தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்ற பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர்..CONGRATS..

(அடுத்த காமன்வெல்த் போட்டியில் வில்வித்தை இல்லை)

இந்தவார பஞ்ச்:

“ஊரார் வலைப்பதிவிற்கு ஓட்டுப்போட்டால், தன் வலைப்பதிவிற்கு ஓட்டுக்கள் தானே குவியும்”

- சொன்னவரைக் கண்டுபிடியுங்களேன்.

இந்த வார ஹைக்கூ:

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

-- அறிவுமதி.

பிளஸ் டூ ஸ்டார் உடன் ஒரு சந்திப்பு…..


பெயர் & வகுப்பு: எஸ்.சண்முகப்பிரியா  12-

பொழுதுபோக்கு:பேசிக்கொண்டே இருத்தல்
               தோட்டவேலை  செய்தல்.

பிடித்தவிஷயங்கள்:வகுப்பறைநினைவுகள்,சகிப்புத்தன்மை, 
                  எதிர்கால  நினைவுகள்.



பிடித்தபுத்தகம்:பொன்னியின் செல்வன்,கல்கியின்  புத்தகங்கள்.



பிடித்தபாடல்:பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
             (செம்மொழி  மாநாட்டுப்  பாடல்)


பிடித்ததமிழ்வரிகள்:உன்னிடம்உண்டாதுணிவும்,துடிப்பும்
                  இருந்தால் எழுந்து வா...



பிடித்த தோழிகள்: என்னை நன்கு அறிந்த, என்னை 
                நன்கு புரிந்துக்கொண்ட தோழி "நான்"

எதிரிகள்: என்னுடைய  கோபம்,அலட்சியம்.



எதிர்கால லட்சியம்:சமுதாயத்தில்மதிக்கப்படுவர்களுக்குள்     
              நானும் ஒருவள் (அதுவும் முதலிடத்தில்)

PlusTwo-ல் லட்சியம்:நான் பார்த்து  ஆச்சரியப்பட்டவங்க
              என்ன  பாத்து  ஆச்சரியப்படனும்.



சமீபத்தியசந்தோஷம்: இயற்பியல் விடைத்தாளை கொடுத்து   
           விட்டு எங்களிடம் ஆசிரியர் கூறிய comment.


சமீபத்திய வருத்தம்:இலங்கை தமிழர்களை பற்றி அறிந்த 
                   உண்மைகள்.


வாழ்க்கை என்பது... அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்தது.



வகுப்பறை என்பது...வருங்கால சாதனையாளர்களை சிகரம் 
                  தொட  வைக்குமிடம்.



உங்களிடம்  உங்களுக்கு  பிடித்தது: நான் தப்பு  
 பண்ணுனா பயப்படுவேன்.மத்ததுக்கு பயப்பட மாட்டேன்.



உங்களிடம்  உங்களுக்கு  பிடிக்காதது:நா தப்பு  பண்னாம 
யாராவது திட்டுனா நா அத மறக்க மாட்டேன்.



உங்களைப்பற்றி ஒரு வரி: எனக்கு நான் உண்மையா  
                         இருப்பேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...

“ஊரார் வலைப்பதிவிற்கு ஓட்டுப்போட்டால், தன் வலைப்பதிவிற்கு ஓட்டுக்கள் தானே குவியும்” இது
வலைப்பதிவர்களுக்கான புதுமொழி.

இஸ்ரோ ரேஞ்சுக்கு ஒரு  பெரிய ஆராய்ச்சி செய்து, ஒரு வழியாக இன்ட்லி ஓட்டுப்பதிவை எங்கள் வலைப்பூவில் இணைத்துவிட்டோம்.

வாங்கய்யா  எங்க வலைப்பதிவிற்கு…, புதுசா ரெண்டு இடுகையை பதிவாக்கியிருக்கோம். புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க….(புடிக்கலனா-லும் ஓட்டுப்போடுங்க)  

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க அன்புடன் அழைக்கும்….  பாரத்...பாரதி.




நானும் பிரபல எழுத்தாளர்களும்.. நிலாபர் நிஷா.

                                 
அன்று எண்ணற்ற
எழுத்தாளர்கள்
கூடியிருந்தார்கள்.

பாரதிதாசனை பார்த்தேன்
என் கரங்கள்
அவரை வரவேற்றது.

பாரதியார் என்னை பார்த்துவிட்டார்..
அவருக்கு வணக்கம் கூறினேன்.

திரும்பிப் பார்த்தேன்
திடுக்கிட்டேன்...
வலது புறத்திலோ
வைரமுத்து அமர்ந்திருந்தார்.
அவரோ, என்னை
வருக! வருக! என வரவேற்றார்.

சற்று நேரத்தில் கண்ணதாசன்
என் கண் முன் தோன்றி
கவிதை பாடினார்.

இவர்களை நேரில்
சந்தித்துப் பேசிய மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினேன்...

நூலகத்திலிருந்து..

படித்ததில் பிடித்தது...

நிலாபர் நிஷா.   XI-B 

puthiya parithi அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயிருந்தேன்

         
"நான் இறந்து போயிருந்தேன்"

அறிவுமதி பெற்றடுத்த


கவிதை குழந்தைக்கு


நான் முடிவு கட்டுகிறேன்


என நினைக்கும் பொழுது


உண்மையிலேயே


நான் இறந்து போயிருந்தேன்.



puthiya19@gmail.com

ரவிஉதயன் அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
 

எனக்கு தெரியவில்லை.

காத்திருப்போர் பட்டியலிருந்து


வரிசைக்கிரமத்தில் காலியான 


படுக்கைவசதிக்கு

என் பெயர் வந்ததும்

கையசைத்து வழியனுப்ப


ஒருவரும் அருகில் இல்லாதிருந்ததும்


துயிலும்  படுக்கைவசதி


சவப் பெட்டியாகியிருந்ததும்


பயணமற்ற பயணத்திற்க்கு


மரண ஜங்ஷனிலிருந்து 


பச்சைக் கொடியசைத்து

விடைகொடுத்து அனுப்பிவைத்தவர் 


கடவுளென்பதும்

எனக்குத் தெரியவில்லை

ஏனெனில்
நான் இறந்து போயிருந்தேன்.


raviudayan@gmail.com

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்