பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.


1.பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, சன்னமாக அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும்.யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.


6.ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.


8.அழுகை,பூ,பூஜை,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது. 

அது சரி , ஆண்களுக்கு என்ன பிடிக்கும்?

சரி... சரி... யாருக்கு என்ன பிடிச்சாலும் எங்களுக்கு, நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பிடிக்கும். (ரோஜாப்பூந்தோட்டம் வளர வாக்களியுங்கள்)

கலாய்ப்பு சிறப்பிதழ் 2 - SMS-ல் கடுப்பேத்தறாங்க எசமான்..


நாட்டாமை: என்னம்மா பிராது?
பெண்: அய்யா, எம் புருஷன் என்ன கொடும பண்றாரு, நீங்க தான் எங்கள பிரிச்சு வைக்கணும்.
நாட்டாமை: பிரிஞ்சு போற அளவு என்ன கொடும பண்ணுனா ?
பெண்: அய்யா, டெய்லியும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருங்க...
நாட்ஸ்: ஆ... செல்லாது,செல்லாது, வேற சொல்லு...
பெண்: கீவலன் படத்துக்கும், வருத்தகிரி படத்துக்கும் மொத காட்சிக்கு கூட்டிட்டு போறேனு  சொல்லாருங்க....
நாட்ஸ்: ஆ.. அவ்வளவு கொடுமக்காரனா..,
அப்படினா சரி.. உங்களுக்கு விவாகரத்து கொடுத்துரேன்...
***************************************************************************************
என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்ச டாக்டரா இருந்தாலும்,
கம்பியூட்டர் வைரஸ் -க்கு மாத்திர குடுக்க முடியாது.
இப்படிக்கு, கம்பியூட்டர் மவுஸ் -க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்.
*******************************************************************************************
அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...


மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?
*******************************************************************************************
தவறுகள் என்பது வெற்றியின் முதல் படி என்றுச் சொல்கிறார்கள். உண்மையில் தவறுகளைத் திருத்திக்கொள்வதே வெற்றியின் முதல் படி .
*******************************************************************************************

பரீட்ச்சையில் பெயில் ஆனா திரும்பவும் படிச்சு பாஸ் ஆகலாம், ஆனால் பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு, பெயில் ஆக முடியுமா?

*************************************************************************************,  சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின் விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத் தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.
****************************************************************************************
வடிவேலு: இங்க ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்...

பார்த்திபன்: அப்ப ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை குடுங்க.
*********************************************************************************

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?

படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.
***************************************************************************

அழகான ஓவியம் என்று ரசிக்கும் உலகத்தார்க்கு எப்படி புரிய வைப்பேன், அது என் புகைப்படம் என்று...
**********************************************************************
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் , நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டுத்தான் வந்திருப்பார்கள்..
********************************************************************************

இன்றைய பழமொழிகள்:

1. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு குண்டா குழம்பு.

2.தம்பி உடையார்;
அண்ணன் செட்டியார்..


3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...


4.சுத்தம் சோறுப்போடும், சுகாதாரம் குழம்பு ஊற்றும்.

************************************************************
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது,
எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
****************************************************************************
டேய், ஏன் சட்டையில நூறு ரூபா வச்சிருந்தேன், இப்ப பத்து ரூபா தான் இருக்கு, ஏன்டா பணத்த எடுத்த?
நீ தான நூத்துக்கு, தொன்னூறு எடுக்கணும்னு சொன்ன!
******************************************************************************************

யாருடைய இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள், ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம் தான். (எலும்பு 206 இருக்கு எசமான்)

*********************************************************************************************

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால் உன் பெருமை யாருக்கும் தெரியாமல் போய்விடும்...
****************************************************************************************
சிரிப்பு வந்தால் சிரிக்க முடியும், அழுகை வந்தால் அழுக முடியும்; ஆனால் காய்ச்சல் வந்தால் காய்ச்ச முடியுமா?

***********************************************************************************
முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது.
******************************************************************************

இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில்  நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)

இருட்டில் கிடக்கும் வெளிச்ச பறவைகள்....

வேட்டையாடி...விளையாடி...











பொம்மியின் வார்த்தைகளில் வளர் கன்னி.

காத்திருந்து, காத்திருந்து தேயும் 
இந்த முதிர்(கன்னி) நிலவுக்கு
யார் ஆறுதல் சொல்வது...

இது ஆயுதம் சேகரிக்கும் காலம்.

மிக விலையுயர்ந்த "ரேமான்ட்ஸ்" துணியின் உள்ளே, பழைய செருப்பை வைத்து அடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு... மிக நாகரீகமாக அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள். நான் மௌனம் காத்து வெளியேறினேன், ஏனெனில் இது போர் புரியும் காலம் அல்ல.ஆயுதம் சேகரிக்கும் காலம் மட்டுமே
 
இது தவம்; 

என் தனிமைத்தவம்.
 
விரைவில் நான் 

விஸ்வரூபமெடுப்பேன்;
 
அதன் பின்னர்
உங்களின் உலகம்
என் அறையை
தேடி வந்து
விறைப்பாய்
"சல்யூட்" அடிக்கும்.

 
இது 

எனக்கு
"வலிமை ஆயுதம்" 

சேகரிக்கும் காலம்
மட்டுமே. 


இப்போது
யாருடனும்
வீண்விவாதம்
செய்வதாய் இல்லை.

 
அட முட்டாள்
மனிதர்களே...

 
உங்களுக்கு
தெய்வ நம்பிக்கை
இருக்கிறதோ
இல்லையோ
"வேண்டிக்கொள்ளுங்கள்" 

எனக்காக அல்ல, 
உங்களுக்காக ...
 
பின்னொருப் பொழுதில்
நீங்கள்
என்னைத் தேடி
வரும் போது
துரோகம் மறந்து
நான்
புன்னகை செய்ய...


  -எஸ்.பாரத்.
(இன்றைய விருந்தினர்)

இந்த கவிதை உங்கள் ரசனைக்குரிய அளவில் இருப்பின்  இன்ட்லியில் வாக்களிக்க அன்புடன் கோருகிறோம்..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்