இது ஆயுதம் சேகரிக்கும் காலம்.

மிக விலையுயர்ந்த "ரேமான்ட்ஸ்" துணியின் உள்ளே, பழைய செருப்பை வைத்து அடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு... மிக நாகரீகமாக அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள். நான் மௌனம் காத்து வெளியேறினேன், ஏனெனில் இது போர் புரியும் காலம் அல்ல.ஆயுதம் சேகரிக்கும் காலம் மட்டுமே
 
இது தவம்; 

என் தனிமைத்தவம்.
 
விரைவில் நான் 

விஸ்வரூபமெடுப்பேன்;
 
அதன் பின்னர்
உங்களின் உலகம்
என் அறையை
தேடி வந்து
விறைப்பாய்
"சல்யூட்" அடிக்கும்.

 
இது 

எனக்கு
"வலிமை ஆயுதம்" 

சேகரிக்கும் காலம்
மட்டுமே. 


இப்போது
யாருடனும்
வீண்விவாதம்
செய்வதாய் இல்லை.

 
அட முட்டாள்
மனிதர்களே...

 
உங்களுக்கு
தெய்வ நம்பிக்கை
இருக்கிறதோ
இல்லையோ
"வேண்டிக்கொள்ளுங்கள்" 

எனக்காக அல்ல, 
உங்களுக்காக ...
 
பின்னொருப் பொழுதில்
நீங்கள்
என்னைத் தேடி
வரும் போது
துரோகம் மறந்து
நான்
புன்னகை செய்ய...


  -எஸ்.பாரத்.
(இன்றைய விருந்தினர்)

இந்த கவிதை உங்கள் ரசனைக்குரிய அளவில் இருப்பின்  இன்ட்லியில் வாக்களிக்க அன்புடன் கோருகிறோம்..

21 கருத்துரைகள்:

செல்வா said...

//அதன் பின்னர்
உங்களின் உலகம்
என் அறையை
தேடி வந்து
விறைப்பாய்
"சல்யூட்" அடிக்கும்.//

ரொம்ப கலக்கல்ங்க ..!!

Arun Prasath said...

புரிஞ்ச மாறி தான் இருக்கு

வினோ said...

நல்லா இருக்குங்க கவிதை..

ஆமினா said...

நல்ல கவிதைங்க!!!!

கலக்கலா இருக்கு!!! வாழ்த்துக்கள்

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

அழகு அழகு !.. காமெடி புகைப்படத்த வந்து பாருங்க !.. சிரி சிரி நு சரிப்ப! http://goldframenagarajacholan.blogspot.com/2010/11/blog-post.html

தினேஷ்குமார் said...

அன்புள்ள சகோ உன்னை அவமான படுத்தியவர்க்கு சுயமானம் இருக்கா.......

என் நெஞ்சம் கொதிக்கிறது

///மிக விலையுயர்ந்த "ரேமான்ட்ஸ்" துணியின் உள்ளே, பழைய செருப்பை வைத்து அடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு... மிக நாகரீகமாக அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள். நான் மௌனம் காத்து வெளியேறினேன்,////

முதல் வரி வாசிக்கும்போதே யார் அவர் என்று சொல்லம்மா என்னிடம் கண்டம் தாண்டி நானியிருக்கையிலும் காவல் தெய்வமாக அங்குதான் தமிழ் காக்கும் தெய்வம்............

தினேஷ்குமார் said...

தனியே தவமிருக்கிறாய்
ஆயுதம் சேர்க்க
வதம் வர வேண்டு
கலமிரங்குகிறேன்............

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

சுந்தரா said...

கவிதை ரொம்பக் காரமா இருக்குதே,ஏதும் விவகாரமா?

முன்னேற்றப்பாதையில் முட்டுக்கட்டைகள் சகஜம்...விட்டுத்தள்ளுங்க.

R. Gopi said...

நிறைவாகும் வரை மறைவாகவே இரு என்று எங்கோ படித்த ஞாபகம். இந்தக் கவிதையும் அதையே சொல்கிறது.

கட்டுண்டோம், பொறுத்திருப்போம். காலம் கனியும்.

ஹேமா said...

கவிதையின் தலைப்பே அசத்தலாயிருக்கு !

Butter_cutter said...

எங்கயோ உல் குத்து தெரிது

puthiaparvai said...

super.

Unknown said...

அருமை

Unknown said...

//உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

நன்றி.//

வலைச்சரம் ஆசிரியர் அருண் பிரசாத் அவர்களுக்கும், அவரின் குழுவினருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அதுவும் பல்சுவை பாரிஜாதமாக எங்களை அறிமுகப்படுத்தியது, எங்களுக்கான அடையாளத்தை நாங்களே உணர்ந்துக்கொள்ள உதவியது.

தங்களின் அறிமுகம், எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வலைச்சரத்தின் கதம்பம்-2 அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Unknown said...

வலைச்சரத்தில் வாழ்த்திய எஸ்.கே. அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டம் சார்பில்,அழகிய முள் இல்லாத ரோஜாவை பரிசளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்..

மோகன்ஜி said...

கவிதையில் தொனிக்கும் நம்பிக்கை கலந்த ஆதங்கம் அசத்துகிறது.வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

நிறைவாகி வர வாழ்த்துக்கள். காத்திருக்கிறோம்.

Unknown said...

தங்கள் வாக்குகள் மூலம் இந்த பதிவை பிரபலப்படுத்த உதவிய மற்றும் பின்னூட்டமிட்டு, கவிதையின் உணர்வை உணர்ந்துக்கொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..

Unknown said...

//நிறைவாகும் வரை மறைவாகவே இரு என்று எங்கோ படித்த ஞாபகம். இந்தக் கவிதையும் அதையே சொல்கிறது.

கட்டுண்டோம், பொறுத்திருப்போம். காலம் கனியும்.//



ரசனையான பின்னூட்டம்..

kavitha said...

migavum arumai........ vaarthaigalaal korkappatta kavithai migavum arumai.....

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்