தனியார் தற்கொலை களங்கள்...ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு.


இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. வழக்கம் போல அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் மதிப்பெண்களை பெற்றியிருக்கிறார்கள்.

ஆனால் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு இந்த மதிப்பெண்களை தனியார் பள்ளிகள் "வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்" என்பது தான் உண்மை.

பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை சேர்க்காமல் கழித்து கட்டி விட்டு, நானூறு அல்லது நானூற்று ஐம்பது மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களை மட்டுமே அட்மிஷன் கொடுத்து, அவர்களை பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்களை பெற வைப்பது தான் சாதனையா?

அரசுப்பள்ளிகளில் எந்த வகுப்பிலும் எந்த மாணவனையும் எப்போது வேண்டுமானலும் சேர்த்திக்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை. எந்த தனியார் பள்ளியிலாவது, கல்வியாண்டின் பாதியில் ஒரு மாணவனை சேர்த்திக்கொள்வார்களா?

பதினொன்றாம் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடங்களை நடத்திவிட்டு, இரண்டு வருடம் ஒரு பாடத்திட்டத்தை படிக்கவைத்து, வெறுமனே மதிப்பெண்களை குவிப்பது சரியானதாக உங்களுக்கு தெரியக்கூடும். அந்த வாய்ப்பு ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மிக நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவன் ஒரு பாடத்திட்டத்தை இரண்டு வருடம் படித்து எழுதுகிறான். சராசரி மாணவன் ஒரு வருடம் மட்டும் படித்து எழுதுகிறான். எப்படி இது சமமாகும்?

வெற்றி மட்டுமே குறிக்கோள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாமே?

வாரத்தின் ஏழு நாட்களும் வகுப்பு, அதுவும் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை என்று மாணவர்களின் மண்டைக்குள் பாடங்களை திணிக்க கூடாது என்ற கல்விக்கோட்பாடுகள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் தானா?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கற்பித்தல் என்பதை விட கோச்சிங் எனப்படும் பயிற்சி அளித்தல் என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விஷயம் என்னவென்று புரிந்துக்கொள்ளப்படாமல் வெறுமனே மனப்பாடம் செய்து அதனை மதிப்பெண்களுக்காக வாந்தியெடுப்பவர்களைத்தான் தனியார் பள்ளிகள் தயார் செய்து அனுப்புகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழ்நாட்டிலேயே சிறந்த தனியார் பள்ளி என்று பெயர் பெற்ற பள்ளிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் மருத்துவ, இன்ஜீனிரிங் படிப்புக்களில் ஒன்றும் புரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டும். புரிந்துக்கொள்ளாமல் படித்த அடிப்படைக்கல்வியின் பாதிப்பு இது.

தனியார் பள்ளிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது உண்மையல்ல. அரசுப்பள்ளி மாணவர்களும் சாதித்திருக்கிறார்கள்.

இன்று டி.வி.பேட்டிகளில் பொளந்துக்கட்டிகொண்டிருக்கும் வசதி வாய்ப்புக்களின் பாதுகாப்போடு ஜெயித்தவர்களை விட, வாழ்க்கையோடும், அது தந்த கசப்புக்களோடும் போராடி, மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.

வறுமையோடு போராடி, ஏழுநூறு மதிபெண்களை பெற்றவனின் சாதனையின் தூசுக்கு கூட இணையாக முடியாது , பணம் தரும் சகல வசதியோடு படித்து ஆயிரத்து நூறு தாண்டியவனின் மதிப்பெண்கள்.

எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை விட, எவ்வளவு பள்ளத்திலிருந்து இந்த உயரம் வந்திருக்கிறான் என்பதை பாருங்கள் சாமானியனின் சாதனைக்கான அர்த்தம் புலப்படும் உங்களுக்கு.

அரசர்களை மட்டும் பதிவு செய்வது தான் சரித்திரத்தின் வழக்கம் என்றாலும், சாமானியனுக்கும் வலி இருக்கிறது என்பதை ஏன் மறக்கப்படுகிறது.

மேலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், தமிழ்நாட்டில் பல்கி பெருகி விட்டன. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், பிரபலங்களாகவும் இருப்பவர்கள் எல்லாம் கார்பரேஷன் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

மனதை கொன்று விட்டு, இதயங்களை தூக்கில் இட்டுவிட்டு, மூளைக்காரர்களை மட்டும் அனுப்பும் இடங்களை தற்கொலைக்கூடங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

29 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டிப்பாக இது எச்சரிக்கை பதிவுதான்...

மூளைகளை மட்டமே நம்பி நாட்டை வளர்த்துவிட முடியாது..
அதில் மனிதாபிமானமும்.. இரக்கமும் இருக்கவேண்டும் அப்பேர்துதான் கற்ற கல்விக்கே பெருமை....

சிறந்த பதிவு
சிறந்த கண்ணோட்டம்..
வாழ்த்துக்கள்..

சசிகுமார் said...

//பதினொன்றாம் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடங்களை நடத்திவிட்டு, இரண்டு வருடம் ஒரு பாடத்திட்டத்தை படிக்கவைத்து, //

பதினொன்றாம் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடங்களை நடத்திவிட்டு, இரண்டு வருடம் ஒரு பாடத்திட்டத்தை படிக்கவைத்து,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதிகமான இடங்களில் நடப்பதும் இதவே...

நன்றாக படிக்கும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு நாங்கள் சாதித்து விட்டோம் என்று மார்தட்டமுடியாது..

சுமாரான மாணவர்களை ஏழை மாணவர்களை வைத்துக்கொண்டும் வெற்றி பெற செய்வதுதான் சாதனை
இந்த சாதனையை அரசுப்பள்ளிகளும்..
ஒரு சில சிறுபான்மை பள்ளிகள் மட்டுமே செய்துக் கொண்டிருக்கிறது...

அதிக கட்டணங்கள் பெரும் தனியார் பள்ளிகள் மாணர்வர்களை ஒரு ரோபோவைப் போல் தான் இயக்கிக் கொண்டிருக்கிறது..

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கையோடும், அது தந்த கசப்புக்களோடும் போராடி, மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.
வலிமையான கருத்து.

Unknown said...

//பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கற்பித்தல் என்பதை விட கோச்சிங் எனப்படும் பயிற்சி அளித்தல் என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விஷயம் என்னவென்று புரிந்துக்கொள்ளப்படாமல் வெறுமனே மனப்பாடம் செய்து அதனை மதிப்பெண்களுக்காக வாந்தியெடுப்பவர்களைத்தான் தனியார் பள்ளிகள் தயார் செய்து அனுப்புகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.//
உண்மை நிலை இது தான்

கவி அழகன் said...

நல்லா மார்க்ஸ் எடுபதுக்கு பிள்ளைகளை எப்படி கச்டபடுதுகிரார்கள் தனியார் பாடசாலைகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.///

சரியா சொன்னீங்க. சமச்சீர் கல்வி வரட்டும்

சென்னை பித்தன் said...

அருமையான கருத்துக்களை,அழகாகச் சொல்லியிருக்கீங்க,பாரதி!

Carfire said...

எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை விட, எவ்வளவு பள்ளத்திலிருந்து இந்த உயரம் வந்திருக்கிறான் என்பதை பாருங்கள் சாமானியனின் சாதனைக்கான அர்த்தம் புலப்படும் உங்களுக்கு.


சிந்திக்க தூண்டும் வரிகள்

டக்கால்டி said...

Nalla alasal...

Chitra said...

அரசர்களை மட்டும் பதிவு செய்வது தான் சரித்திரத்தின் வழக்கம் என்றாலும், சாமானியனுக்கும் வலி இருக்கிறது என்பதை ஏன் மறக்கப்படுகிறது.


...... சரியான கேள்விதான்.

மாணவன் said...

அனைவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டிய கருத்துக்களை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் பார்க்கலாம் மாற்றம் வருமா என்று?

வீராங்கன் said...

ரேங்க் பட்டியல் வெளியிடும் பள்ளிகள் தங்கள் பள்ளியின் +2மாணவர்கள் அனைவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்த்து வெளியிட வேண்டும். சாயம் வெளுத்துவிடும்

siva said...

வெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவனின் தரத்தை மதிப்பிடும் இந்திய கல்வி முறை உருவாக்குவது பகுத்தறிவட்ற சதை பின்டங்களையே.

பாலா said...

இது குறித்து நானும் ஒரு பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள்.

Jaleela Kamal said...

மிகச்சரியான சிற்ந்த பதிவு

Raju said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Super sir En manasula romba nala irunthatha ippo inka unka varikalal parkiran.

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

Unknown said...

சமூக அக்கறையுள்ள இந்த பதிவுக்கு எனது வந்தனங்கள்...

மதுரை சரவணன் said...

அறிவு சார்ந்த கேள்வி முறை மாறி, திறன்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திறனை அறியும் கேள்வி முறைகளுக்கு முக்கியத்துவம் தரும் நாட்களில் உங்கள் கனவு நிறைவேறலாம்..அதுவரை போராடுவோம்... பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சிறந்த பதிவு பாராட்டுக்கள்

Sivakumar said...

முட்டாள் பெற்றோரை சவுக்கால் அடித்தால் சரியாகி விடும்.

Pranavam Ravikumar said...

பதிவு அழகாக இருக்கிறது!

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

பொடியன் said...

மெட்ரிகுலேசனில் படிக்கவைக்கத் துடிக்கும் பெற்றோரும், தமிழக அரசும் கவனிக்கவேண்டிய விசயம் இது!! கூடுதல் தகவல் - தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மெட்ரிக்குலேசம் என்பதே இல்லை!! #ஊர் சுற்றும் அனுபவங்களிலிருந்து!!

பொடியன் said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

புரிந்துக்கொள்ளாமல் படித்த அடிப்படைக்கல்வியின் பாதிப்பு இது.
வருந்தத்தக்க பாதிப்பு.

Rabbani said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

ஷர்புதீன் said...

கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்