தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கான அழைப்பு

உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...



முஸ்கி:
ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன் காரணத்தையும், அதனை சரி செய்வதற்காக காரியங்களையும் ஆராயும் வகையில்இந்த பதிவில் இருக்கும் கேள்விகள்/ கருத்துக்கள் தொகுக்கப்பட்டது.

இதற்கான பதில்களை "எதிர் பதிவாக" எதிர்பார்க்கிறோம். (எம்பூட்டு நாளைக்குத் தான் தொடர் பதிவு எழுத சகபதிவர்களை அழைப்பது...., இது எதிர்பதிவுக்கான அழைப்பு.. தில் இருந்தால் ஒரு சில ஆ"சிறியர்கள்" பற்றிய இந்த விமர்சனங்களுக்கு, பதில்... இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை, செயலில் காட்டுங்கள்)
கலகம் நன்மையில் முடியட்டும்.

 "மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?

அது என்ன அப்படி ஒரு கொடூர சந்தோஷம்... கேம்ஸ் பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதாக "படம்" காட்டுவதில்..

கரும்பலகைக்கு முன் நின்று கொண்டு, ஏன் உளறிக்கொட்டுகிறீர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்கள்...ஹா..ஹா.. நாங்கள் எந்திரன் யுகத்து மாணவர்கள். (இலவச லேப்டாப் தரட்டும், இணையத்திலிருந்து, புதியதகவல்களை சேகரித்து, உங்களை "பெண்டு நிமித்தும் படலம்" நடத்தப்போகிறோம்.. அப்போது இருக்கிறது வேடிக்கை.

ஆ..ஊ.. என்றால் "நாங்கெல்லாம் அந்த காலத்துல.." என்று கதையளக்கிறீர்கள்.. ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தகுதியை சோதிக்கும் வண்ணம் தேர்வு வைக்கச் சொல்லலாமா? அதுவும் இப்போது மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருக்கும் பாடப்பகுதியில்?(டீலா நோ டீலா?)

எப்போது சமச்சீர் வகுப்பறை கிடைக்கும் எங்களுக்கு? எப்ப பாத்தாலும், நல்லா படிக்கிறங்களுக்கே "காவடி" தூக்கிட்டு, எங்களை "காவு" கொடுக்க பாக்குறீங்க... எங்களுக்கும் மனசுனு ஒண்ணு இருக்கு..

பட்டாம்பூச்சியை புடிச்சு, இறக்கைகளில் ஆணியடித்து, மனசுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துறீங்களே நியாயமா? புத்தகத்தில் இருப்பதை வெறுமனே படித்து காட்டுவதற்கு எதுக்கு ஆசிரியர்? (அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க... லட்சியதுக்காக ஓடுபவர்களை, வெறும் சம்பளத்திற்காக ஓடுபவர்கள் ஜெயித்துவிட முடியாது. லட்சியத்திற்காக பாடம் சொல்லித்தரும் சக ஆசிரியர்களை கிண்டலடிக்கிறீங்களே நியாயமா? (எப்படியாவது அவர்களை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிடுவதில் காட்டும் புத்திசாலித்தனத்தை, எப்படி அவர்களை விட அதிகம் சாதிப்பது என்பதில் காட்டலாமே?)
காலங்காலமா இந்த சுள்ளான்னுக தொல்லை தாங்க முடியலையே

ஒரு இயந்திரத்தின், இதயத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைந்து, பாகம் குறிக்கும் பக்குவம் கூட எங்கள் இதய உணர்வுகளை புரிந்து கொள்வதில் காட்டவில்லையே ஏன்? (படிப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்லவே)

காலையில, முதல் பாட வகுப்பில் கூட.. மனசுல முதலமைச்சர் மாதிரி-னு நெனைச்சுக்கிட்டு, உட்கார்ந்தே பாடம் நடத்துறீங்களே அடுக்குமா? (முதலமைச்சர் கூட நின்னூட்டு தான் பேசுறாங்க... ஆட்சி மாறியிடுச்சு.. தெரியுமில்ல)

புரியவைப்பதை விட்டுவிட்டு, "மக்கப்" செய்வதை தூண்டுகிறீர்களே நியாயமா?(அது சரி... தனக்கு புரிஞ்சா தானே, அடுத்தவங்களுக்கு புரிய வைக்க...)

நாகரீகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுறீங்க... ஆனா ஸ்கூல் முடிஞ்ச உடனே புள்ளைங்களுக்கு முன்னாடி நீங்க தான் ஓடுறீங்க...(மனசுல ஸ்கூல் பர்ஸ்ட்-னு நினைப்பு...)

கடைசியா ஒரு கேள்வி....வீட்டிலாவது சிரிப்பீங்களா? இல்ல இதே மாதிரி டெரர்தானா?

டிஸ்கி:
இந்த பதிவிலுள்ள கேள்விகள் அர்த்தமற்றவைகள் என்று நீங்கள் நினைத்தால், உலகில் மிகச்சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். குருதேவோ பவ... 

பஸ்கி:
"தில்" என்றால் ஹிந்தியில் அன்பு என்றார்கள். அன்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் என்பது தான் தலைப்புக்கான கோனார் உரை....எப்பூடி...

39 கருத்துரைகள்:

Unknown said...

மாப்ள ஆசிரியர்களுக்கு ஒரு நெனப்புண்டு(எல்லோரும் அல்ல!) தாங்கள் போனாபோகுத்துன்னு தர்ம சேவையாக கல்வியை போதிப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.....அதிலும் தரம் பற்றி கேட்டு விட்டால் செத்தோம்....வட்டி, சேலை வியாபாரத்துக்கே நேரம் போதவில்லை என்று ஒரு குற்றசாட்டு உண்டு.....ஹிஹி!

செங்கோவி said...

நல்ல கேள்விகள் தான்..ஆனா என் ஆசிரியர்கள் எல்லாரும் இப்படி இல்லைப்பா!

சி.பி.செந்தில்குமார் said...

ஐ ஜாலி, எனக்கு தில் இல்லை

தமிழ் உதயம் said...

நேர்மை குறைபாடு எல்லா துறைகளிலும்... அதுவே கல்வித்துறையிலும். நல்ல ஆசிரியர்களை பெற்றவர்கள அதிர்ஷ்டசாலிகள்.

Unknown said...

ம்ம்...ஆசிரியர்கள் பற்றி ஒரு பதிவு மைண்ட்ல இருக்கு...எழுதணும்! :-)

பாலா said...

நண்பரே எனக்கு தில் இருக்கு (அன்பு)

ஒரு ஆசிரியராக சில பதில்கள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அப்பேற்பட்ட துரோணராலேயே ஒரே ஒரு அர்ஜுனனை மட்டுமே உருவாக்க முடிந்தது. அவர் சிறந்த ஆசிரியர் என்றால் எல்லோருமே அர்ஜுனனாக அல்லவா உருவாகி இருக்க வேண்டும்? உளி சரியாக இருந்தாலும், அதற்கு கல் இசைந்து கொடுக்காவிட்டால் ஒன்று கல் சிதையும் அல்லது உளி சிதையும். பெரும்பாலான உளிகள் சரியான தயாரிப்புடன் வருவதில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாலா said...

// நடத்துவதாக "படம்" காட்டுவதில்..

உங்களுடைய முதல் கருத்து (உளிகள் சரியில்லை) உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் பிறகு எல்லாமே இப்படித்தான் தெரியும். அதே போல பள்ளிகள் கல்லூரிகள் பக்கமிருந்தும் ஆசிரியருக்கு சில பிரஸ்ஸர்கள் உண்டு. இத்தனை வகுப்புகள் எடுத்திருக்கவேண்டும், சிலாபஸ் குறித்த நேரத்தில் முடித்திருக்க வேண்டும் என்று.

பாலா said...

பெரும்பாலான ஆசிரியர்கள் உளறி கொட்டுகிறார்கள் என்பது உண்மையே. எல்லோருமே மிக திறமையாளர்களாக இருப்பதில்லை. ஆனால் சில ஆண்டுகளில் இது மாறலாம். இதற்கு ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பது முக்கியம். அதே போல ஆசிரியர்கள் எப்போதுமே ஒரே மன நிலையில் இருப்பார் என்றும் சொல்ல முடியாது அல்லவா? அவரும் மனிதர்தானே?

பாலா said...

//அந்த காலத்துல....

இதை ஆசிரியர்கள் மட்டும் சொல்வதில்லை. அனுபவம் மிக்க யாருமே இப்படித்தான் சொல்வார்கள். இன்றைய மாணவர்கள் கூட நாளைக்கு அவர்கள் குழந்தைகளிடம் இப்படித்தான் சொல்வார்கள்.

பாலா said...

ஆசிரியர்களுக்கான தகுதி உயர்வு தேர்வு என்பது அவசியம். ஆனால் அவர் மாணவனை விட சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த ஆசிரியர் என்று சொல்வது தவறு. அப்படி பார்த்தால் ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கும் வீரனுக்கு கோச் தங்க மெடல் வாங்கி இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. வழி காட்டுதல் என்பது வேறு.

பாலா said...

//நல்லா படிக்கிற மானவர்களுக்கு..

இதற்கு பள்ளி நிர்வாகமும் காரணம். என்னை பொறுத்தவரை இப்படி ஒரு ஆசிரியர் இருப்பாரானல் அது தவறு. ஆனால் நல்ல படிக்கும் மாணவனை பாராட்டினாள் அதனால் மற்றவர்களும் அதை பின்பற்றுவார்கள் என்று நினைத்தாள் தப்பில்லை.

சசிகுமார் said...

படிக்கும் போது நான் கேக்கனும்னு நெனச்ச கேள்விகள் அனைத்தையும் இப்படி புட்டுபுட்டு வைக்கிறீங்களே எப்புடி....

அப்புறம் தலைப்பிர்க்கான கோனார் உரை ஹா ஹா சூப்பர் பாரதி....

பாலா said...

//பட்டாம்பூச்சியை புடிச்சு, இறக்கைகளில் ஆணியடித்து, மனசுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துறீங்களே நியாயமா?

என்னங்க இவ்வளவு காண்டு?

வர வர மாணவர்கள் எல்லாம் ஆசிரியர்களை வேலைக்காரர்கள் மாதிரி பார்க்க தொடங்கி விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பள்ளி என்பது நல்ல கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கும் ஏஜென்சி. கல்லூரி என்பது வேலை வாங்கி கொடுக்கும் ஏஜென்சி. இந்த ஈயத்தை காய்ச்சி ஊற்றும் ஆசிரியர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

பாலா said...

அதன் பின்னால் வரும் கருத்துக்கள் அனைத்துக்குமே ஒரே பதில்தான்.

கல்வி என்பது வியாபாரம் ஆகி விட்டது. நாம் மக்கள் நல்ல பள்ளி என்பது நல்ல ரிசல்ட் கொடுக்க வேண்டும், நிறைய ஹோம் வொர்க் கொடுக்கவேண்டும், ஸ்பெஷல் கிளாஸ் வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நிறைய பள்ளிகள், நிர்வாகங்கள் வெறும் ரிசல்ட் நோக்கியே செயல் பட்டு வருகின்றன. அதே போல பெரும்பாலான ஆசிரியர்கள், தகுதி குறைவாக, வெறும் 2000 சம்பளத்துக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் வேலை குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்ய பயிற்சி அளிப்பது. இதுதான் இப்போதைய பிரச்சனை.

பாலா said...

நீங்கள் கேட்ட கேள்விகளில் நிறைய நியாயம் இருக்கிறது. ஆனால் அது என்னை மாதிரி ஆசிரியர்களைப் பார்த்து அல்ல என்று நினைக்கிறேன். ஆசிரியராக இருப்பதால், கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன் என்றும் நினைக்கவேண்டாம். நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் படிக்கும் காலத்தில் தோன்றியவையே. ஆகவே இன்றும் அவற்றை மனதில் வைதிரிக்கிறேன். நம் மாணவன் அப்படி நினைத்து விடக்கூடாது என்று. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறும்.

இன்று பதிவு போடவேண்டாம் என்று நினைத்தேன். கடைசியில் கருத்துக்களையே பதிவு மாதிரி போட வேண்டியதாகி விட்டது. நன்றி நண்பரே...

Unknown said...

எல்லாம் ஓகே,அதென்ன பஸ்கி???அடுத்தது விஸ்கியா??அவ்வ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்பை நன்றாக யோசித்து வைத்துள்ளீர்...

பகிர்வுக்கு நன்றி....

சக்தி கல்வி மையம் said...

நான் ஒரு ஆசிரியர் . இந்த பதிவைப் பற்றி நான் என்ன சொல்ல?

ஆமினா said...

//(அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)
//
அதானே.......

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா தில்லை சொதிக்குராயிங்களே.....

Yoga.s.FR said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது./////டெம்பிளேட் பின்னூட்டம்.ஹி!ஹி!ஹி!ஹி!

தனிமரம் said...

நல்ல பதிவு இதற்கு நானும் பதிவு விரைவில் எழுதலாம் என்று இருக்கின்றேன் நண்பரே!

ஜெய்லானி said...

நியாயமான கேள்விகள் ...எதிர் பதிவா ..???? கம்பை கையிலகுடுக்குறீங்க ...அப்புறம் ஐயோ..அம்மான்னு சும்மா கத்தக்கூடாது ஹி...ஹி... !! :-))

தமிழ்வாசி பிரகாஷ் said...

அன்பான ஆசிரியர் இவரு... எதிர்பதிவு போட நம்மளால முடியாது.

மாய உலகம் said...

இன்றும் அரசு பள்ளிகளில் படித்த பெரும்பான்மை மாணவர்கள் டிகிரி வரை படித்தவர்கள் கூட ஆங்கிலம் பேச இயலாமை... அவர்கள் படித்த பாடம் பற்றி அவர்களிடமே கேட்டால் அவர்களுக்கே தெரியாமல் இருப்பது..சர்ட்டிபிகேட்டுக்காக மக்கப் செய்து ஜெயித்திருப்பார்கள்... இதற்கெல்லாம் சில தனது பொருப்பின் மீது அக்கறையின்மையெ காரணம் மற்றும் அவர்களை கண்டுகொள்ளாத அரசாங்கமும் தான்... உங்கள் பதிவுக்கு ஆதரவே... நன்றிகள்

சென்னை பித்தன் said...

நான் யார் கருத்துச் சொல்ல?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆசிரியர் தினம் நெருங்கி வரும் இந்த வேளையில் இப்படி ஒரு பதிவு தேவை தானா?

நிரூபன் said...

தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கான அழைப்ப//

வணக்கம் பாஸ்,
வாசலிலே ஒரு சேலஞ் வார்த்தையினை வைத்திருக்கிறீங்க.
படிச்சிட்டு வாரேன்

நிரூபன் said...

"மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?//

சபாஷ்...சரியான அடி....

நிரூபன் said...

பாஸ் ஒரு கொஞ்ச நேரத்தால வந்து கருத்து எழுதுகிறேன்.

மாலதி said...

உண்மையில் நல்ல வினாக்கள் நேர்மையான பதில்களை எதிர் நோக்க முடியுமா விளங்க வில்லை எதிர் பதிவு போடுவார்களா பதில் சொல்ல வேண்டியது இந்த பதிவுலகம் பாராட்டுகள் நன்றி .

நிரூபன் said...

நண்பா,
ஆசிரியர் தின வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாகட்டும்,

நிரூபன் said...

"மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?//

காத்திரமான கேள்வி பாஸ்,
நான் அறிய ஒரு சிலர் தம்மிடம் முன்னர் படித்த மாணவர்கள் எழுதிய குறிப்புப் புத்தகங்களை(நோட் புக்கினை) வைத்துத் தான் பாடம் நடத்திக் காலத்தை ஓட்டியிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், முழுமையான தயார்படுத்தல் ஏதுமின்றிக் கல்வி கற்பிக்க வந்து,
மாணவர்கள் ஏதாவது கேள்வி கேட்கும் போது, அடுத்த வகுப்பு அல்லது தாம் கற்பிக்கும் பாடத்தோடு தொடர்புடைய ஆசிரியர்களிடம் போய்க் கேட்டுப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நிரூபன் said...

நல்லதோர் அலசல் பாஸ், நீங்கள் சொல்வது போல இன்றைய தினத்தில் பல மாணவர்கள் தேடிப் படிக்கும் தம் அறிவினை விருத்தி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்கள் பாட வேளையினை வேஸ்ட் பண்ணும் போது, கேள்வி கேட்டுத் திணறடிக்கக் கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள்.

தாம் கல்வி கற்கப் போகும் பாடம் பற்றிய அன்றைய நாளுக்கான தெளிவான தயார்படுத்தலுடன் ஒரு ஆசிரியர் செல்லும் போது தான் மாணவனின் கல்வி முயற்சியும் சிறப்பாக நடை பெறும், அதே போன்று ஆசிரியரும் சிரமமின்றித் தனது கற்பித்தலைத் தொடர முடியும்.

நிரூபன் said...

ஆசிரியர்களில் ஒரு சிலர் விடும் தவறுகளைக் காத்திரமாக எழுதியிருக்கிறீங்க.
இப் பதிவு பலரைச் சென்றடைய வேண்டும் பாஸ்,
அப்போது தான் ஆசிரியர்கள் என்று வேசமிட்டுப் பாடம் பற்றிய தெளிவான அறிவு இன்றிக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உணர்வு வரும்,.

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

செங்கோவி said...

தாமதமான...........

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நண்பரே.

அம்பாளடியாள் said...

எனக்கு வந்த ஆசிரியர்கள் அச்சா .....அதனால தப்பாய் சொல்ல மாட்டன் .(நீங்கள் சொல்வதுபோன்ற ஆசிரியைகளும் இருக்கத்தான் செய்யினம் என் செய்வது மனசாட்சி )முட்டிவலிக்க இருத்தினாலும் முறைத்து என்னைப் பார்த்தாலும் கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களை என்
காலம் உள்ளவரைக்கும் நான் மறக்க மாட்டேன் .போதுங்களா?............

அருமையான ஆக்கம் அகம் மகிழ்ந்து பார்த்தேன் விரைந்து வந்து நற்பதில்கள் இங்கே விழையவென
வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி பகிர்வுக்கு ..............

அம்பாளடியாள் said...

பிந்திய ஆசிரியர்தின வாழ்த்துக்கள் சகோ ..........

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்