எங்க வீட்ல துக்கம் நடத்திருக்கு, பகிர்ந்து கொள்ள வருவீங்களா?

#tnfishermanஆத்மா பேசுகிறது... 


நான் இறந்து போயிருந்தேன்
எனக்காக
தமிழ்நாடே
எழவு வீடாய்
மாறியிருந்தது...

நீங்கள் கொடுக்கும்
"லட்சங்கள்
எம் புருஷனுக்கு ஈடாகுமா?"
என் மனைவி
தலையிலடித்து
கதறுகிறாள்.

விஷயம் என்னவென்று
உணராமல்
தாய் அழுவதால்
என் குழந்தைகளும்
வெடித்து அழுகின்றன.

இந்த வகை மரணத்தில்
இதுவே இறுதியாய் இருக்கட்டும்
என
டிவிட்டர்களும்
வலைப்பதிவுகளும்
தமிழ் உணர்வுடன்
அனல் பரப்பி
தகிக்கின்றன.

ஆனால்
ஒன்றை மட்டும்
என்னால் இயல்பாய்
எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

நீந்த இயலாத
என்னை இரையெடுத்த
அந்த சிங்கள அரக்கன்
தன்
பல் இடுக்கில்
சிக்கிய இறைச்சித்துண்டை
சிரித்துக்கொண்டே
நீக்கிக்கொண்டு
இருப்பதை

பார்க்கும் போதுதான்
என் ஆத்மாவே
மரித்துவிடும் போலிருக்கிறது.

- பாரதீ.


35 கருத்துரைகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல கவிதை கடைசி வரிகள் நச்!

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கவிதை. பங்களிப்பிற்கு நன்றி

வைகை said...

கண்டிப்பாய் பகிர்ந்துகொள்கிறோம்! ஒரு திருத்தம்....உங்கள் வீடு அல்ல நம் வீடு!

Speed Master said...

அருமையான கவிதை. பங்களிப்பிற்கு நன்றி

Unknown said...

எங்க வீடு அல்ல நம்ம வீடு, கண்டிப்பாக பங்கெடுத்து கொள்கிறேன் :-(

மாணவன் said...

உங்களின் பங்களிப்பிற்கு நன்றிங்க

கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறோம்..

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை.
பங்களிப்பிற்கு நன்றி..
நாங்களும் கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறோம்..

செல்வா said...

ரொம்ப சிரமமா தாங்க இருக்கு .. என்ன செய்வது நம்மால் இயன்றதை தொடர்ந்து செய்வோம் ..

சுந்தரா said...

இந்தத் துக்கம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான்.

அருமையான கவிதை பாரதீ!

KANA VARO said...

உணர்வுகளுடன் கவிதையை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை!

Anonymous said...

உங்கள் பிளாக்கை எனது பிளாக் பிரபல பதிவர்கள் லிஸ்டில் இணைத்திருக்கிறேன்

Anonymous said...

நாம் கண்டுக்காமல் இருக்க...
நகரத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் அல்ல...
நம் பரிமாணத்தின் எச்சம்...

MANO நாஞ்சில் மனோ said...

கூடுமானவரை போராடுவோம்.....

Unknown said...

வலி நிறைந்த கவிதை - என்ன கொடுமை இந்த அநியாயங்களை செய்பவர்களுக்கு நம் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே கைப்பிள்ளைகளாக இருப்பது தான் இன்னும் கொடுமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னதான் இரங்கள் தெரிவித்தாலும் உயிருக்கு இணை இங்கு ஏதும் இல்லை..

// முதலில்
வியர்வை சிந்தி மீன்பிடித்தன்ர்
ஆனால் இப்போது
ரத்தம் சிந்தி...//

R. Gopi said...

வெல் டன்

பாலா said...

கமெண்ட போடுவதற்கு ஒன்றும் இல்லை. இதயம் கணக்கிறது. தேர்தல் வரட்டும். :(

Chitra said...

அந்த துக்கம் என்று தீருமோ?

Unknown said...

எல்லாவற்றையும் விட வேதனை யார் நமக்காக செய்ய கடமைபட்டவர்களோ அவர்களின் நத்தைவேகம் தான். என்றாலும் நாமளும் நம் பங்கை செய்வோம்.

vasan said...

இந்திய‌ச் சிங்க‌ங்க‌ள், சிங்க‌ள‌ நரிக‌ளிட‌ம் தோற்கும் சோக‌ம்.
ஊட‌க‌ம், எண்ணெய்,ஏற்றும‌தி வியாப‌ர‌ங்க‌ளுக்காய், விலை போன த‌ர‌க‌ர்க‌ள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான நேரத்தில சரியான சாட்டையடி கவிதை!

செங்கோவி said...

பகிர்ந்து கொண்டேயிருக்கிறோம்..

ஹேமா said...

இந்த ஒற்றுமை இருந்தாலே வெற்றிதான் பாரத் !

சி.பி.செந்தில்குமார் said...

உணர்ச்சியைத்தூண்டும் கவிதை

ஆனந்தி.. said...

அருமையான கவிதை !!!

குறையொன்றுமில்லை. said...

சரியான நேரத்தில் பகிர்ந்த சரியான கவிதை.

ஆயிஷா said...

அருமையான கவிதை.

Jana said...

கடைசிவரிகள்...நெஞ்சத்தை பிளக்கின்றன.

போளூர் தயாநிதி said...

கண்டிப்பாய் பகிர்ந்துகொள்கிறோம்! ஒரு திருத்தம்....உங்கள் வீடு அல்ல நம் வீடு!

Unknown said...

கண்டு கொள்ளாமலிருக்கும் அரசின் தூக்கத்தால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன பல துக்கங்கள்!!

அஞ்சா சிங்கம் said...

பல் இடுக்கில்
சிக்கிய இறைச்சித்துண்டை
சிரித்துக்கொண்டே
நீக்கிக்கொண்டு
இருப்பதை....................///////////////////////


உண்மைதான் அதற்க்கு தாம்பூலம் மடித்து கொடுக்கும் வேலையும் நடக்கிறது ......

Anonymous said...

அவரின் ஆத்மா பேசியதாய் மட்டுமே உணரமுடிகிறது..பங்கு கொள்வோம் நம் வீட்டு எழவில்..

ம.தி.சுதா said...

ஒரு உயிரின் வலியும்.. பெறுமதியும் உவமித்த போகிறிர்கள்.. நெஞ்சு கனக்கிறது...

அன்புடன் நான் said...

உணர்வு மிகு கவிதை..... உங்களுக்கு என் நன்றிங்க.

இராஜராஜேஸ்வரி said...

இதயத்தில் வலியை வரவழைக்கும் வரிகள்.!துக்கத்தில் பங்கெடுக்கிறோம்!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்