பிரபல பதிவரிடம் சிக்கி சின்னாபின்னமான காங். தலைவர் தங்கபாலு.

முஸ்கி:
ஈழத் தமிழர்களின் வலி, மீனவர்களின் வேதனையை உணராதவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரம்பு மீறிய நையாண்டியாக கூட தெரியலாம். அப்படிப்படடவர்களுக்கு ஒரு வரி....
வருகைக்கு நன்றி, நாளை மீண்டும் வருக.

ஆப் த ரெக்கார்டா சொல்லுகிறேன் நிருபர்களே, ஒரு பதிவரோட  தொல்ல தாங்க முடியல... படுத்தியெடுக்கிறான். கொலையா கொன்னு எடுக்கிறான். சரி கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கலாம் அப்படினு கண்ண மூடினா கனவுல கூட அந்தாளு ட்விட் தான் வருது...

சாம்பிளுக்கு ஒரு மூணு சொல்லுறேன், படிச்சு பாருங்க...

RajanLeaks ராஜன்
தங்கபாலு மண்டைல இடி உளுந்தாலும் ஒண்ணும் ஆகாது வழுக்கிட்டு போயிடும்! -ஈவீகேஎஸ் பேட்டி!

RajanLeaks ராஜன்
தங்கபாலு வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு # ஹா ஹா ஹா! இவன் தான்யா ஒரிஜினல் பீஸு! இவனுக்கு சப்ஸ்டியூட்டே கெடையாது

RajanLeaks ராஜன் 
தங்கபாலு தயாரித்த வேட்பாளர் பட்டியலைத் தூக்கி சொட்டைத்தலயிலேயே வீசியெறிந்தார் சொக்கத் தங்கம் சோனியா! புதிய பட்டியலுக்கு உத்திரவு!ஆகவே மக்களே,  ஆன் தி ரெக்கார்டாக சொல்கிறேன்.
தமிழகத்தை பொறுத்தவரை என்னுடைய ஒரே எதிரி கும்மி என்னும் பெயரில் எழுதும் பதிவர் தான். அவர்  ராஜன் லீக்ஸ் என்னும் பெயரில் டிவிட்டரிலும் எழுதிவருவதாக உளவுத்துறை என்னை எச்சரித்துள்ளது.

**************************************************************************
அடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தங்கபாலு அளித்த பதில்களின் தொகுப்பு மட்டும் இங்கே... (முழுவதும் எழுத இது என்ன மெகா டீவி காமெடி டைம் நிகழ்ச்சியா?)

என்னுடைய கொடும்பாவி எரிக்கப்பட்ட பின்ண்ணியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் கொடும்பாவி எரிக்கும் நிகழ்ச்சி இனியும் நடந்தால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எனது ஆதரவாளர்களை திரட்டி,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை புதைக்கும் போராட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் நடத்துவேன் என அவர்களை எச்சரிக்க விரும்புகிறேன்.

மேலும் என்னுடைய கொடும்பாவி என்று எரித்தவர்கள் உண்மையில் ஏமாந்துதான் போனார்கள். (தலையில் முடி இருந்தது எப்படி என்னுடைய கொடும்பாவியாக முடியும்)

என்னுடைய கொடும்பாவி எரிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் நான் கொடும்பாவி இல்லை அப்பாவி.
    

மயிலாப்பூரில் போட்டியிடும் எனது மனைவியும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்தான். அதனால் தான் அவருக்கு அன்னை சோனியா அவர்கள் போட்டியிட அனுமதி கொடுத்துள்ளார்கள். காந்தி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோமே, அதில் ஜெயந்தி என்பது என் மனைவியை தான்  குறிக்கிறது என்ற வரலாற்று உண்மையை அன்னையிடம் விளக்கிய பின் தான் அன்னை சீட் அளித்தார் என்பதை  கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


சத்திய மூர்த்தி பவனில் நான் நள்ளிரவு ரகசிய பூசையில் ஈடுபட்டதாக வந்திருக்கும் செய்தியும் எனக்கு எதிரான சதிதான். சம்பவம் நடந்த அன்று, கட்சியின் செயல்வீரர்கள்(???) கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது, அப்போது கொசுக்கடி அதிகமாக இருந்ததால், அன்னை  சோனியாவின் நல்லாசியுடன், இளந்தலைவர் ராகுல் காந்தியின் வழிக்காட்டுதலின் படி 63 கொசுவர்த்திகள் கொளுத்தப்பட்டன. அந்த புகையைத்தான் ரகசிய பூஜை என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.


எங்கள் கட்சி வேட்பாளர் ராஜபக்சே எனது நண்பர்தான் என்று சொன்னது உண்மைதான். முதலில் அவர் தங்கபாலு எனது நண்பர் என்றுதான் அதைக்கேட்டு நிருபர்கள் நக்கலாக சிரித்ததால் , கொஞ்சம் டெரர் எபக்ட் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் ராஜபக்சே எனது நண்பர் என்று கூறினார். இதில் என்ன தப்பு?

எங்கள் சார்பில் போட்டியிட 63 வேட்பாளர்கள் கூட இல்லை என்று முன்பு பதிவர்கள் எழுதியதையும் வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது பாருங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள்.

பதிவர்கள் என்னை "கைப்புள்ளை என்று கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். வேண்டுமென்றால் அரசியல் நாகரீகத்தோடு, அன்போடு கைப் பையன் என்று அழைத்தால் ஏற்றுகொள்வேன்.

என்னது 63 தொகுதிகளில் வெற்றி  வாய்ப்பு எப்படி உள்ளதா? எங்க வெளிய வந்து பார்க்க விடுறாங்க. கொடும்பாவி எரிக்கிறதுக்கு பதிலா என்னைய எரிச்சாலும் எரிச்சுடுவாங்க-னு வெளிய வரவே பயமா இருக்கிறது.

அண்மைச்செய்தி:

மயிலாப்பூர் எங்கே இருக்கிறது என்று தங்களிடம் அட்ரஸ் கேட்க வந்த தங்கபாலுவை #tnfisherman மற்றும் #defeatCongress  ட்விட்டர்கள் கடத்திக்கொண்டு போய், தெளியவைத்து, தெளிய வைத்து அடிப்பதாகச் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது. (ஏழு நாட்கள் வைத்து அடிப்பதாகத்தான் பேச்சு, இருந்த போதிலும் அவர் ஆறு நாட்களில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


22 கருத்துரைகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ம்..ம்.. நடத்துங்க...நடத்துங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Golden milk..... haahaaa

தமிழ் 007 said...

ரைட்டு...

கலக்குங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு அல்லக்கைய போட்டு இப்பிடியா அடிக்கறது....?

ரஹீம் கஸாலி said...

தங்கபாலு மட்டுமல்ல....காங்கிரஸ் தலைவர்கள் எல்லோருமே காமெடி பீஸுதான். தேர்தலுக்கு பிறகு பீஸு புடுங்கப்பட்ட காமெடியன்கள்

பாட்டு ரசிகன் said...

பாவங்க தங்கபாலு..
இந்த தேர்தலுக்கு அவர்தான் பலிகடா..

பாட்டு ரசிகன் said...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

middleclassmadhavi said...

ம்.... நடக்கட்டும், நடக்கட்டும்!

ராஜ நடராஜன் said...

இப்படியுங்கூட விக்கெட் எடுக்கலாமா?

சரி!இந்தப்பக்கம் வருகிறவங்களுக்கு ஒரு Q & A

தங்கபாலு மண்டைல அடிச்சது Bullseye ன்னு சொல்றதா அல்லது Sunny side up ன்னு சொல்றதா?

Raja=Theking said...

Super comedy . . Www.kingraja.co.nr

Raja=Theking said...

Congress will loose all 63 seats

ஜெய்லானி said...

இன்னும் தெளிய வச்சி தெளிய வச்சி நல்லா அடிங்க ஹா...ஹா...!! :-))

MANO நாஞ்சில் மனோ said...

தெளிய விடாம தண்ணி காட்டி தண்ணி கட்டி அடிங்கய்யா இதோ நானும் வந்துட்டே இருக்கேன் அவன் மூஞ்சில மிதிக்க.....

நிரூபன் said...

ஆப் த ரெக்கார்டா சொல்லுகிறேன் நிருபர்களே, ஒரு பதிவரோட தொல்ல தாங்க முடியல... படுத்தியெடுக்கிறான். கொலையா கொன்னு எடுக்கிறான். சரி கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கலாம் அப்படினு கண்ண மூடினா கனவுல கூட அந்தாளு ட்விட் தான் வருது...//

இப்படியொரு நிலமை நிச்சயம் உருவாக வேண்டும். அதனை எம் வலைப் பதிவர்கள், டுவிட்டர்கள் செய்வார்கள் என நினைக்கிறேன்.
நகைச்சுவையூடாக நீங்கள் கூறும் வலியினைப் புரிந்து கொள்ளுகையில் சிரிப்பு மறந்து போகிறது.

நிரூபன் said...

சத்திய மூர்த்தி பவனில் நான் நள்ளிரவு ரகசிய பூசையில் ஈடுபட்டதாக வந்திருக்கும் செய்தியும் எனக்கு எதிரான சதிதான். சம்பவம் நடந்த அன்று, கட்சியின் செயல்வீரர்கள்(???//

இவை சதியில்லை என்பதை ராஜன்லீக்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
எல்லாமே உண்மைகள் தான்.

மக்களை வைத்து, மொக்கை போடும் அரசியல் வாதிக்கு பதிவர்களை வைத்து ஒரு மொக்கை தயாரித்து, செருப்பு மாலையாக அணிவித்துள்ளீர்கள்.

உங்களின் நாசுக்கான நையாண்டிகளையும், கிண்டல்களையும் ரசித்தேன்.

வானம் said...

எல்லாரும் பாத்துகுங்க, நான் என் பொண்டாட்டிக்கு சீட்டு வாங்கிட்டேன். நானும் தலைவர்தான்,நானும் தலைவர்தான்,நானும் தலைவர்தான்....

விக்கி உலகம் said...

தானே வழுக்கி விழும் தொலைவன் ஹிஹி!

செங்கோவி said...

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க! பின்னீட்டீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

நையாண்டிப்பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டா? தமிழன் திருந்த மாட்டான்

நாய்க்குட்டி மனசு said...

பயமே இல்லையே ?

நிலா said...

நல்லா சத்தம் போட்டு சிரிக்க வைச்சிடீங்க நன்றி.

நிலா said...

நல்லா சத்தம் போட்டு சிரிக்க வைச்சிடீங்க நன்றி.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்