skip to main |
skip to sidebar
தீபாவளி போன்று ஏதேனும் விஷேச நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை வெளியிட விஜய் டி.வி. ரொம்ப மெனக்கெடுவார்கள்.
சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கமல்,சிவக்குமார், கோபிநாத் என பெரிய பட்டாளமே ரொம்ப யோசித்து நிகழ்ச்சிகள் தருவார்கள். ஆனால் தீபாவளி தினத்தன்று இந்த தரமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், சன் டிவி அவர்களை எளிதில் வீழ்த்தி விடும்.
சன் டிவி; "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"-னு விளம்பரத்தை போட்டுத் தாக்கி, எவனோ உழைத்து உருவாக்கிய புத்தம்புதிய திரைப்படத்தை ஒளிபரப்பி மக்களை ஈர்த்துவிடுவார்கள்.
தரம், தன்மானம் அப்படினு எதிர்பார்க்கிறவங்க மட்டும் விஜய் டிவியோடு தீபாவளி கொண்டாடுவார்கள். மற்றபடி அலுங்கமல் பெரும்பான்மை மக்களை அள்ளிக்கொண்டு போய்விடும் சன் டிவி.
அந்த மாதிரியான சன் டிவி பார்முலாவை தான் தேர்தல் களத்தில் வடிவேலுவை பேச விட்டு, மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது திமுக.
தன்னுடைய சொந்த பிரச்சனைக்காக விஜயகாந்தை எதிர்க்க மேடையேறிய வடிவேலுவை, தன்னுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக திமுக பயன்படுத்தியிருக்கிறது.(அது சரியா தவறா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்)
அடுத்து அம்மா ஆட்சி வந்து விட்டால், வடிவேலு மண்டையில் மாவிளக்கு வைத்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். வடிவேலு எந்த மேடையிலும் ஜெயலலிதாவை தாக்கவில்லை.
விஜயகாந்தை மட்டும் கர்ணகொடூரமாக சாடியுள்ளார். ஒரு வேளை விஜயகாந்த் அரசியல் களத்தில், காமெடியனாக ஆக்கப்படுவதை ஜெயலலிதா கூட ரசித்திருக்கலாம், யார் கண்டது. எனவே அம்மா விஷயத்தில் வடிவேலு ரொம்ப சேப்டியாகத்தான் இருக்கிறார்.
ஒருவேளை அதிமுக ஆட்சியில் வடிவேலு அடித்து, துவைக்கப்பட்டால், "அவரு அடி வாங்காத இடமே இல்லைங்க" அப்படினு மக்கள் அதையும் காமெடியாக கருதக்கூடும்.
பிரச்சாரக்களத்தில் விஜய டி.ஆர்., எஸ்.எஸ். சந்திரன், வெற்றிக்கொண்டான் இல்லாத சூழ்நிலையில் அத்துணை பேரின் இழப்பையும் ஈடு செய்யும் பொறுப்பு (????) தன்னிடம் இருப்பதை உணர்ந்தே வடிவேலு, தில்லாலங்கடி பேச்சுக்களை எதிர்பார்க்கும் மக்களை திருப்தி படுத்தியிருக்கிறார்.
அடுத்து கருணாநிதியின் ஆட்சியே வரும் பட்சத்தில், வடிவேலுவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து திமுக தலைமை அழகு பார்க்கலாம். ஏற்கனவே வடிவேலுவுக்கு, அவரது அண்ணன் அழகிரி "பிக் செட்டில்மெண்ட்"கொடுத்திருப்பார் என்பது வேறுகதை.
ராஜ்யசபா எம்.பி. பதவி இல்லாத பட்சத்தில் வடிவேலுவுக்கு, தமிழ்நாடு சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத்தலைவர் பதவி வழங்கப்படலாம். (இதற்கு முன்பு திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த டி. ராஜேந்தருக்கு இந்த பரிசு தான் வழங்கப்பட்டது)
வடிவேலு பிரச்சாரம் செய்த போது, ஒரு தேசிய கட்சியினுடைய, மாநில தலைவரான தங்கபாலு கைகூப்பி நின்றுக்கொண்டே இருந்ததெல்லாம் காலக்கொடுமை என்பதைத்தவிர என்னச்சொல்ல.
திருவாரூர் திமுக பிரச்சாரக்கூட்டத்தில் வடிவேலு, கலைஞர் முன்னிலையில், முதல் முறையாக, விஜயகாந்தை தனிப்பட்ட வகையில் தாக்கி பேசிய போது, அனைவரும் முகம் சுளித்தனர் என்பது உண்மைதான், ஆனால் பிற்பாடு திமுக ஆதரவு தொலைக்காட்சிகளால் மாறிப்போனது. (நம்ம ரசனை அப்படி)
ஸ்ரீரங்கம் - திருவாணைக்கோவிலில் வடிவேலு (வேன்) மீது செருப்பு வீசப்பட்டது, கமுதியில் கல் வீசப்பட்டது, டிவிட்டர்களில் அதிக கிண்டலடிக்கப்பட்டது, சன் டிவியில் சிறப்பு பேட்டி அளித்தது, இரு பாகங்களாக வடிவேலுவின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதெல்ல்லாம் பிரச்சாரக்களம் வடிவேலுவை சுற்றி சுழன்றதற்க்கான ஆதாரங்கள்.
ஒரு கட்டத்தில் வடிவேலுவை, வெடிகுண்டு வீசி கொன்று விட்டு, அதன் மூலம் திமுக அனுதாப ஓட்டு பெற முயற்சிக்கிறது என்று திரைப்பட டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், ஜெயா டிவியில் சொன்னது கூட நிகழ்ந்தது.
வடிவேலுவை "ஆப்" செய்வதற்காக சிங்க முத்துவை அதிமுக இறக்கிவிட்டது சரியான தெரிவு தான் என்றாலும் கூட, சிங்க முத்து எடுபடவில்லை என்பது தான் உண்மை. சிங்க முத்து "மிக அதிக" நாகரீகத்துடன் பேசியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வடிவேலு ஒரு பக்கம் விஜயகாந்தை தாக்கிக்கொண்டிருக்க, விஜயகாந்த் நாகரீகமாய் அமைதி காக்க, அதிமுக பக்கத்திலிருந்து சிங்க முத்து, விந்தியா, ஆனந்தராஜ், ராதா ரவி வடிவேலுவை கலாய்க்க, சுவாரசியாமாய் பொழுது போனது "இந்த மாதிரி" சண்டைகளை ரசிக்கும் மக்களுக்கு.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் முதிர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட, த.பாண்டியன், சீமான் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட, அதிக மக்கள் கவர்வதாக பேச்சை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலின், குஷ்பு, விஜயகாந்த், வடிவேலு ஆகியோரில் இந்த தேர்தல் களத்தில் மேன் ஆப் த மேட்ச் பெறுபவர் வடிவேலு தான். (கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என ரிஷிவந்தியத்தில் குணச்சித்திர நடிப்புக்காக கண்ணீர் விட்டது தனி கணக்கு)
வடிவேலுவின் பேச்சுக்கள் திமுக கூட்டணிக்கு வரமா சாபமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேர்தல் களத்தில்அதிகம் ரசிக்கப்பட்ட வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகள்:
நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார்.
41 சீட் வாங்கி எப்படி முதல்வராக முடியும், எங்கிட்டாவது அஞ்சு பத்து கோடி கொடுத்து சினிமா எடுத்து அதுல முதல்வர் ஆகலாம்.
தண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?
எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, விஜயகாந்த் கறுப்பு எம்ஜியார் சொல்லித்திரிவதை ஒத்துக்கொள்கிறதா?
விஜயகாந்த் ஒரு வேட்பாளரை மக்கள் முன் அடிப்பது சரிதானா? “ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா’ தன் கட்சி தலைவரை நினைத்துப் புலம்புகிறாராம் அந்த வேட்பாளர் இப்போது”.
இந்த நேரம் கிரிக்கெட் கேப்டன் தோனி ஜனாதிபதி கூட விருந்து சாப்பிட்டு இருப்பாரு; ஆனா இவுங்க கேப்டன் மருந்து சாப்பிட்டு இருப்பாரு..
28 வருசம் கழிச்சு உலககோப்பை வாங்கிக்கொடுத்த தோனி தான் உண்மையான கேப்டன்..
வடிவேலு டங் சிலிப்பான இடம் :
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்டது.
***************************************************************************
கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் பிரச்சாரம் பற்றிய அலசல்:
அருகான்மை தோட்டங்கள்
-
"அது "க்குக் கூட
-
அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம்
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்
"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய்...
1 day ago
-
ஒரு மடக்கு தேநீர்.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)
-
சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள்
நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என
எங்கிருந்தோ ...
1 day ago
-
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ இலவசம்
-
பெர்ப்ளெக்ஸிட்டி என்பது சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட், க்ரோக் உள்ளிட்ட முன்னணி
இயற்றறிவு (GenAI) செயலிகளின் நவீன சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு
செயலியாகு...
1 year ago
-
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...
-
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல்
அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ...
அந்த ...
1 year ago
-
Tìm hiểu về xổ số tại MU88 – Cơ hội làm giàu hiếm có
-
Xổ số đang là trò chơi hấp dẫn thu hút rất nhiều người chơi mỗi ngày tại
MU88. Đây là một tựa game có lối chơi đơn giản, mang đến trải nghiệm thú vị
cùng v...
1 year ago
-
ரமேஷ் கதைகள்
-
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில்
நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை
தொகுப...
3 years ago
-
11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24
-
11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24
QUESTION PAPER PDF LINK: DOWNLOAD
3 years ago
-
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
3 years ago
-
LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்
-
1996ல் பி வாசு இயக்கத்தில் பிரபு தேவா , நக்மா நடிப்பில் வெளியான
லவ்பேர்ட்ஸ் தமிழ் படத்துக்கும் , 2020 ல் ஆக்சன் அட்வென்ச்சர்
அமெரிக்கன் படமாக...
3 years ago
-
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்
-
*வணக்கம் உறவுகளே*
*சுகநலங்கள் எப்படி ?*
*வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக்
காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தா...
6 years ago
-
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
6 years ago
-
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
7 years ago
-
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
7 years ago
-
மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?
-
சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்த...
7 years ago
-
பொது வெளியின் இன்றைய நிலை
-
*ஒவ்வொருவரும் *
*தனது கனவு வெளியை *
*திறந்து வைத்து ... *
*அவரவர் *
*கனவு வெறியை மொய்க்க *
*மற்றவர்களை அழைக்கின்றனர்.*
*அதனில்*
*தனது கனவு வெளியை மொய...
7 years ago
-
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
-
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
ந...
8 years ago
-
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
-
ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்
கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவ...
8 years ago
-
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
8 years ago
-
வாராது வந்த வரதாமணி
-
*வாராது வந்த வரதாமணி*
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட,
பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்ட...
8 years ago
-
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப...
9 years ago
-
சிற்பங்கள் கண் திறந்தால்!
-
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்...
9 years ago
-
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
10 years ago
-
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
10 years ago
-
மதுராந்தகி
-
மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.
கனத்த மவுனம்’
உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த...
10 years ago
-
வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள்
-
வலைச்சரத்தில் வெற்றிகரமாக ஆறாம் நாள் பதிவர்களுடன் வந்து விட்டேன் !
இதுவரை அதிகம் இங்கு பேசப்படாத பதிவர்கள் , அவர் தம் பதிவுகள் வேண்டும் என்றே
, தேடி தே...
11 years ago
-
-
[image: www.flex-tlm.blogspot.in]
11 years ago
-
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)
-
கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான்
எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...
11 years ago
-
கப்பல் விமர்சனம்
-
கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம்
ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே
முடி...
11 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~
-
வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!
இரவு 12.30 மணி....
கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...
12 years ago
-
கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...
-
நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும்
சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்...
12 years ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'
-
நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்
BB...
13 years ago
-
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...
13 years ago
-
வாழ்க்கை
-
எட்டி எட்டி உதைக்கிறது காலம்
கணப்பொழுதில் ..............
திடுக்கென வலிக்கிறது துன்பங்கள்....
நான் முந்தி
நீ முந்தி-என
அடுக்கடுக்காய் ச...
15 years ago
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
26 கருத்துரைகள்:
கைப்புள்ளைக்கு கால்(விஜயகாந்த் லெக்)அடி உண்டான்னு பொறுத்திருந்து பாக்கலாம்
Vadivelu ku aapu katheruku.
அவங்க மறந்தாலும் நீங்க எடுத்து கொடுப்பீங்க போல இருக்கே, ஆனாலும் வடிவேல் சொல்வதிலும் நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை
//அடுத்து அம்மா ஆட்சி வந்து விட்டால், வடிவேலு மண்டையில் மாவிளக்கு வைத்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். வடிவேலு எந்த மேடையிலும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. //
ஹை அப்பிடி ஒரு ஆங்கிள் இருக்கு இல்லையா...!!!!
//விஜயகாந்தை மட்டும் கர்ணகொடூரமாக சாடியுள்ளார். ஒரு வேளை விஜயகாந்த் அரசியல் களத்தில், காமெடியனாக ஆக்கப்படுவதை ஜெயலலிதா கூட ரசித்திருக்கலாம், யார் கண்டது. எனவே அம்மா விஷயத்தில் வடிவேலு ரொம்ப சேப்டியாகத்தான் இருக்கிறார்.//
அடடடடா அரசியல் சிலம்பாட்டத்தை பாருங்கய்யா...
///ஒருவேளை அதிமுக ஆட்சியில் வடிவேலு அடித்து, துவைக்கப்பட்டால், "அவரு அடி வாங்காத இடமே இல்லைங்க" அப்படினு மக்கள் அதையும் காமெடியாக கருதக்கூடும்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//அடுத்து கருணாநிதியின் ஆட்சியே வரும் பட்சத்தில், வடிவேலுவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து திமுக தலைமை அழகு பார்க்கலாம். ஏற்கனவே வடிவேலுவுக்கு, அவரது அண்ணன் அழகிரி "பிக் செட்டில்மெண்ட்"கொடுத்திருப்பார் என்பது வேறுகதை.//
அதுலதான் அஞ்சாநெஞ்சன் கெட்டிக்காரர் ஆச்சே....
//வடிவேலு பிரச்சாரம் செய்த போது, ஒரு தேசிய கட்சியினுடைய, மாநில தலைவரான தங்கபாலு கைகூப்பி நின்றுக்கொண்டே இருந்ததெல்லாம் காலக்கொடுமை என்பதைத்தவிர என்னச்சொல்ல//
வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவங்க'தானே காங்கிரஸ் காரனுங்க...
//ஒரு கட்டத்தில் வடிவேலுவை, வெடிகுண்டு வீசி கொன்று விட்டு, அதன் மூலம் திமுக அனுதாப ஓட்டு பெற முயற்சிக்கிறது என்று திரைப்பட டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், ஜெயா டிவியில் சொன்னது கூட நிகழ்ந்தது.//
அட அப்பிடியா....!!!!???
//வடிவேலு டங் சிலிப்பான இடம் :
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்டது.//
பெக்கு அளவு கூடி போச்சி போல ஹா ஹா ஹா ஹா....
ஆனால் வடிவேலுவின் பிரச்சாரத்தை மக்கள் பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது. பேச்சுக்கு கைதட்டுபவர்கள் எல்லாம் வோட்டு போடுவார்கள் என்றால் வைகோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்.
வடிவேலுதான் தி.மு.கவின் வெற்றிக்கு காரணம் என்றால் எஸ்.எஸ்.சந்திரன்,வெற்றிகொண்டான்,தீப்பொறி ஆறுமுகம் கூட அந்த அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமானவர்கள் என்று சொல்லலாமா!
வடிவேலுவின் த்னி மனித காழ்ப்புணர்ச்சியில் மட்டுமே தி.மு.க வெற்றியென்றால் தமிழர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
"ஆட்சி மாறினால் வடிவேலு மண்டையில் மாவிளக்கு???
hi..hii...hiii...
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
/////திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்டது.
///////////
ஆர்வக் கோளாறுல இப்படி ஏதாவது ஒன்றை செய்துவிட்டாரோ !!??
வடிவேலு சேஃப்பா த் தான் விளையாடி இருக்காரு!
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
அரசியலில் நிரந்தர நம்பர்களோ, எதிரிகளோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் ஒட்டிக் கொள்ளலாம். ஜெயலலிதாவை, காளிமுத்து மாதிரி த்வக்கிரமாகத் திட்டிப் பேசியவர்கள் யாரும் இல்லை, ஆனால் அவரையே அழித்து சபாநாயகராகினார் அவர். ஜெ. ஆட்சியின் போது அவரை அம்மா.. தாயே... என்று புகழ்ந்து பேசிய வடிவேலு, அவர் திரும்ப வந்தால் நிமிஷத்தில் காலில் விழுந்து, தாவிவிட மாட்டாரா? அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
தெரிந்தோ தெரியாமலோ அரசியல் சாயம் பூசிக்கொண்டார் வடிவேலு..அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 5 வருடங்களும் வடிவேலுக்கு அவமானம்தான்.96 ல் மனோரமா வுக்கு ஏறொபட்ட அதே சோதனைகள் இவருக்கும் கிடைக்கும்...அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் விஜயகாந்த் கட்சியினர் வீடு புகுந்து தாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை..வடிவேலு எதற்கு கோபப்பட்டு விஜயகாந்தை எதிர்த்தாரோ அது தினசரி நடக்கும்
வடிவேலு தன் சொந்த பகைக்காகத்தான் தி.மு.கவை ஆதரிக்கிறார்..தி.மு.க ஆட்சியை பிடித்துப்போய் அல்ல..இது கலைஞருக்கும் தெரியும்
வடிவேலுவுக்கு கலைஞர் மீது அவ்வளவு பாசம் இருந்தால் ஏன் தி.மு.க வில் சேரவில்லை..?
விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த சின்னகவுண்டர் படத்தில் வடிவேலு கோவணம் கட்டியபடி அவருக்கு கால்நகம் வெட்டும் காட்சி இருக்கிறது...அதற்குள் விஜயகாந்தை எதிர்க்கும் அளவு மக்கள் செல்வாக்கு அடைந்துவிட்டாரா
சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கமல்,சிவக்குமார், கோபிநாத் என பெரிய பட்டாளமே ரொம்ப யோசித்து நிகழ்ச்சிகள் தருவார்கள்///
.
.
விஜய் டிவி வேஸ்டு.எப்போபாத்தாலும் எவளா(நா)வது மைக்க புடிசிகினு கத்திகினு இருப்பாங்க(பாட்ரான்கலாம்)இல்லன்னா அரகொரை ட்றேச்சொட ஆட்டம் இல்லன்னா கோழிபீநாத் சாரி கோபிநாத்தின் மொக்க விவாதம்.எவன் பாப்பான் விஜய் டிவியா?அதே போல சன் டிவியும்.டிஸ்கவரி அல்லது பாக்ஸ் ஹிஸ்டரி பாக்கலாம்.
வடிவேலுவை தேர்தல் களம் பெரிய மனிதன் ஆக்கி விட்டது.
கடைசிபடம் சூப்பர்.
என்மா யோசிகிறாங்கப்பா.
வடிவேலுக்கு மாவிளக்கா.
அப்படின்னா என்னாப்பு..
Post a Comment