பாசத்தலைவனும், தங்கத்தாரகையும் -தேர்தல் களத்திலிருந்து ஒரு சூடான அலசல்.

ஒரு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் போது, அதில் நல்ல மெல்லிசை பாடல்கள் இருந்தாலும் கூட, குத்தாட்ட பாடல்கள் தான் சட்டென்று பற்றிக்கொண்டு, ஹிட்டாகி விடும். அது மாதிரி தான் தமிழக தேர்தல் பிரச்சார களமும் அமைந்திருந்தது.


கலைஞரின் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு தான் மிக அதிக அளவில் கூட்டம் வரும், அதுவும் எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலேயே என்று சொல்வார்கள். அந்த அளவு ஈர்ப்பாக பேசும் வல்லமை பெற்றவர் அவர். கூட்டம் அத்தனையும் ஓட்டுகளாக மாறியதா என்பது வேறுவிஷயம். 


ஆனால் இந்த முறை கருணாநிதியின் பிரச்சாரக்கூட்டங்களில் அதிகம் இடம் பிடித்தது உருக்கமும், தேர்தல் கமிஷனுக்கு எதிரான புலம்பலும் தான். "என்னாச்சு தலைவா உங்களுக்கு?" என அவரின் கரகரப்பான குரலில் கிரங்கும் உடன்பிறப்புக்களே முணுமுணுத்தது தான் மிச்சம். 


தான் பேசும் ஊரின் பெருமை, தனக்கும் அந்த ஊருக்கும் உள்ள தொடர்பு, நலத்திட்டங்கள், கூட்டணியினரின் பெருமை, ஆறாவது முறையாக வாய்ப்பு, உங்களுக்காக வாழ்கிறேன், அதற்காகவே உயிர் துறப்பேன் என வழக்கமான பாணியில் இருந்தது முதல்வரின் பிரச்சார உரை.


ஜெயலலிதாவை பொறுத்த வரை அவரை பார்ப்பதற்கென்றே வரும் கூட்டம் வழக்கம் போல, இந்த முறையும் ஏராளம். அவரின் பிரச்சார வேனை பார்ப்பற்கு என்று கொஞ்சம் கூடுதல் கூட்டம் இந்தமுறை.

எழுதி வைத்ததை வாசிப்பதற்கு  டிரேட் மார்க் வாங்கிக்கொள்ளலாம் என சொல்லும் அளவுக்கு இந்த முறையும் எந்த மாற்றமும் இன்றி இருந்தது "ஜெயலலிதா பாணி" பிரச்சாரம். 


பேச்சின் இடையிடையே குரலை திடீரென உசத்திப்பேசுவது கொஞ்சம் ஆறுதல். (அப்படி குரலை உயர்த்தினால் அந்த இடத்தில் கைத்தட்ட வேண்டும் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு தெரியாதா என்ன)


குடும்ப அரசியல், ரவுடிகளின் பிடியில் தமிழகம், ஸ்பெக்ட்ரம், அந்த ஊரின் பிரச்சனை என ஜெயலலிதாவின் உரை தயாரிப்பு நன்றாகவே இருந்தது. காங்கிரசை ஏதும் தாக்காதது, பிரச்சாரத்தின் விஜயகாந்த் பற்றி அடக்கி வாசித்தது இவையெல்லாம் ஜெயலலிதா அரசியல் அரங்கை யோசிக்க வைத்த விஷயங்கள். (கள்ள மௌனம்???)


அடுத்த அட்சியில் அமரப்போவது கலைஞர் அல்லது ஜெயலலிதா என்ற இருவரில் ஒருவர்தான் என்று முடிவாகி விட்டநிலையில் இருவரின் பிரச்சாரமும் மிக சுவாரஸியங்கள் இல்லாமல் இருந்தது என்பது தான் உண்மை. அரசியல் முதிர்ச்சி என்பது கூட நாம் எதிர்பார்த்த அதிரடி அரசியலுக்கான சூடான பேச்சினை இவர்களால் குடுக்கமுடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம். 


இவர்களால் பிரச்சார குத்தாட்டத்தை தர முடியாது என்பதற்காகத்தான் சினிமா நடிகர்களை இறக்கி விட்டார்கள் போல..


இவர்கள் இருவரும் ரொம்ப பரவாயில்லை என்ற அளவு மிக மொக்கையாக இருந்தது சோனியா காந்தி மற்றும் மன்மோகனின் "என்னமோ பிரச்சாரத்திற்கு கூப்டாங்க, நாங்களும் வந்துட்டோம்" என்று அப்படிங்கிற மாதிரி, வந்த கூட்டத்தை தூங்க வைத்து அனுப்பியது தான் மிச்சம். (இது தான் பேச்சுல மயக்குறதா???)


தேர்தல் நடக்கும் ஏப்ரல் 13 முதல் வாக்குபதிவு நடைப்பெறும்  மே 13 வரையிலான ஒரு மாதமாவது இவர்கள் பேட்டிகளுக்கும், பேச்சுகளுக்கும், அறிக்கைகளுக்கும்  கொஞ்சம் விடுமுறை கொடுக்கட்டும் என்று தான் தேர்தல் கமிஷனும் ஒரு மாத இடைவெளிவிட்டு விட்டது போல..(அந்த ஒரு மாச ஓய்வு அவர்களுக்குத்தான் நமக்கில்லையே?)

7 கருத்துரைகள்:

பாட்டு ரசிகன் said...

ம்.. நடத்துங்க... நாளைக்கு கரைக்ட்டா ஓட்டுப் போட்டுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>..(அந்த ஒரு மாச ஓய்வு அவர்களுக்குத்தான் நமக்கில்லையே?)

ஹா ஹா அவங்க ஏதாவது உளறுனாத்தான் நமக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கும்..

பொன் மாலை பொழுது said...

வடிவேலுவின் வரவு தி.மு.க. விற்கு அதிக சாதகமானதாக மாறிப்போனத்தையும் சொல்லி இருக்கலாம்.

சக்தி கல்வி மையம் said...

அரசியல் பதிவு.. கலக்குங்க..

சசிகுமார் said...

மிக அருமை

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க....

Jayadev Das said...

\ \\அதிகம் இடம் பிடித்தது உருக்கமும், தேர்தல் கமிஷனுக்கு எதிரான புலம்பலும் தான். \\
\\வழக்கமான பாணியில் இருந்தது முதல்வரின் பிரச்சார உரை.\\ வழக்கம் போலில்லாமல் புலம்பலாக இருந்ததா, இல்லை வழக்கமாகத்தான் இருந்ததா? குழப்புறீங்களே பாஸ்!

\\பேச்சின் இடையிடையே குரலை திடீரென உசத்திப்பேசுவது கொஞ்சம் ஆறுதல். (அப்படி குரலை உயர்த்தினால் அந்த இடத்தில் கைத்தட்ட வேண்டும் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு தெரியாதா என்ன)
\\ ஹா.ஹா.ஹா.. நல்லா கவனிச்சு வச்சிருக்கீங்க.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்