எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...

மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 

மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். 
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். 
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.

பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். 
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும் 
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, 
வெறுப்பேத்தக்கூடாது.


எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என 
மாணவர்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது. 
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.12 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தக் காலத்தில் ஆசிரியர் பணி ஒரு சேவையாக இருந்தது...

இப்போது எல்லாமே பணம்... (சிலரைத் தவிர)

இந்த 'சிலர்' - 'பலர்' ஆனால் சரி...

நல்ல பல கருத்துக்கள்... நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

நியாயமான வேண்டுகோள்கள்தானே.. நிறைவேற்ற ஆசிரியர்கள் தயாரா? :-))

MARI The Great said...

நண்பர் திண்டுக்கல் தனபாலரின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க .

NKS.ஹாஜா மைதீன் said...

சரியாக சொன்னீர்கள்..

Thozhirkalam Channel said...

நல்ல பகிர்வு.. வாழ்த்துகள்..

ஆனாலும் இந்த பின்னூட்டம் டெம்லெட் ரொம்ப அருமையோ அருமைங்க...

தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் உங்கள் பதிவுகளை இணையுங்கள்

குறையொன்றுமில்லை. said...

நல்லா சொன்னிங்க

Unknown said...

ஆசிரியர் பணி இன்றும் ஒரு சில நல்ல ஆசிரியர்களால் , அவர்களும் மாணவர்களும் சிறப்படைகின்றார்கள்

Yoga.S. said...

அருமை,ஆசிரியர்கள்/மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது!

கவி அழகன் said...

Sariyaa sonninka

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


அறிமுகப்படுத்தியவர்-காவியகவி


பார்வையிட முகவரி-வலைச்சரம்-நன்றி-


-அன்புடன்-


-ரூபன்-

Kasthuri Rengan said...

அருமையான அறிவுரைத் தொகுப்பு நன்றி
சகோதரி இனியாவின் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன்

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்