கலங்கடிக்கும் பின்னூட்ட ஊழல்.


தமிழ் பூந்தோட்டத்தில் ரோஜா மணம்.

சென்ற வாரத்திய தமிழ்மணத்தில் முதல் இருபது இடங்களுக்கான பட்டியலில் எட்டாம் இடத்தை நமது ரோஜாப்பூந்தோட்டம் பெற்றிருப்பதை, உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியுறுகிறோம்.

தமிழ்மணம் பட்டியலில் வருவது இதுவே முதல் முறை என்பது கொஞ்சம் பயம் கலந்த மகிழ்ச்சியாகவே தெரிகிறது.எங்கள் பதிவுகளை ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும்
தமது பின்னூட்டம் மூலம் இந்த தகவலை எங்களுக்கு தெரிவித்த ரஹீம் கஸாலி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர்க்கும் நன்றிகள்.


(பின்னூட்டம் இடுபவர்கள் வசதிக்காக,
கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பின்னூட்டம் இடலாம்)
தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஊட்ட பின் ஊழல் :

ரோஜாப்பூந்தோட்டத்தில் பின்னூட்டம் இடும் கமிட்டியில் இருந்தவர்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, பின்னூட்டம் இடும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஊழல் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால், எங்கள் வலைப்பூ பொறுப்பாளர்களிடம் பெருத்த குழப்பம் நிலவி வருகிறது.

மற்ற பதிவர்களின் பதிவுகளை முழுவதும் படிக்காமல், ஆரம்ப மற்றும் இறுதி வரிகளைக் கொண்டு மற்றவர்களுக்கு பின்னூட்டம் வழங்கியுள்ளதே பின்னூட்ட ஊழல்.

அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

பின்னூட்டம் இடுபவர்கள் வசதிக்காக,
கீழே உள்ள் வரிகளை காப்பி செய்து பின்னூட்டம் இடலாம்)

பெரும்பாலான பதிவர்கள் நேரம் கருதி இதைத்தான் செய்கிறார்கள், எனவே விட்டுவிடலாம்.

அல்லது

பின்னூட்ட ஊழல் செய்தவர்களை அழுகை வரும் வரை காஸ்ட்லியான வெங்காயத்தை உரிக்க வைக்கலாம்.

ஆண்டு புது யாருக்கு?

வரும் 1111 நாளை கொண்டாட உலகம் முழுவதும் கொண்டாட தயாரகி விட்ட நிலையில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மன்னிக்கவும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருவது தமிழ் புத்தாண்டு அல்லவே, ஆதலால் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?

புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்.

இப்போதேல்லாம் கோவில் வேறு பன்னிரெண்டு மணிக்கு திறந்து, வரம் கேட்கும் வழக்கம் வேறு தொடங்கியிருக்கிறது.

இதெல்லாம் எதைக்காட்டுகிறது.
கலாச்சாரக்காவலர்களின் கருத்து இதனில் என்ன?

தனிப்பட்ட முறையில் உங்கள் பதில் என்ன?

(இதுக்கு பின்னூட்டம் நீங்கள் தான் போட வேண்டும்.)

டிஸ்கி:
இந்த பதிவில் உள்ள தலைப்புகளில் உள்ள தவறுகளை கண்டும், காணாமல் இருந்தது போல், 2010ல் உங்கள் அன்புக்குரியவர்கள் செய்த தவறுகளை கண்டும், காணாமல் இருந்து விட்டு, 2011 அவர்களுடன் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.
சரியான தலைப்புக்கள்.
தமிழ் மணத்தில் ரோஜாப்பூந்தோட்டம்.
பின்னூட்ட ஊழல்
புதுஆண்டு யாருக்கு. ?

பஸ்கி:
இந்த பதில் பின்னூட்டம் இடுபவர்களின் வசதிக்காக நாங்களே பின்னூட்ட வரிகளை இணைத்துளோம்..(இதுவும் ஒரு வகை பின்னூட்ட ஊழல் தான்)


இந்த பதிவிலுள்ள மூன்று விஷயங்களிலும் பின்னூட்டம் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால்இந்த பதிவு பின்னூட்ட சிறப்பிதழ் என அன்போடு அழைக்கப்படுகிறது.

35 கருத்துரைகள்:

வினோ said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இந்த ஊழல் எல்லாம் இப்படி தான் இருக்கும்...

ரஹீம் கஸ்ஸாலி said...

எனக்குத்தான் ஊட்டி வறுக்கி

ரஹீம் கஸ்ஸாலி said...

இதுக்கு நான் என்னன்னு பின்னூட்டம் போடறது? சரி...இப்படி போட்டுருவோம்.
தமிழ்மணத்தில் புதிதாக நுழைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் தொடர்ந்து தமிழ்மணம் டாப் 20- யில் இருப்பதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

பின்னூட்ட வாழ்த்துக்கள்..

THOPPITHOPPI said...

என்ன டிஸ்கி பஸ்கி என கலக்குறிங்க.
மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்

மாணவன் said...

//இந்த பதிவிலுள்ள மூன்று விஷயங்களிலும் பின்னூட்டம் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால்இந்த பதிவு பின்னூட்ட சிறப்பிதழ் என அன்போடு அழைக்கப்படுகிறது.//

ஆஹா இதுக்கும் சிறப்பிதழா....

நல்லாருக்கே.......

ப.கந்தசாமி said...

இதுக்கு நான் என்னன்னு பின்னூட்டம் போடறது? சரி...இப்படி போட்டுருவோம்.
தமிழ்மணத்தில் புதிதாக நுழைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் தொடர்ந்து தமிழ்மணம் டாப் 20- யில் இருப்பதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

பின்னூட்டம் போடுவதற்கு சுலபமான வழியைக் காட்டினதற்கு நன்றி.

மாணவன் said...

//வாலைப்பூ பொறுப்பாளர்களிடம் பெருத்த குழப்பம் நிலவி வருகிறது.//

“வலைப்பூ” என்றுதானே வரும்

பதிவுகளில் எழுத்துப்பிழைகள் ஏற்படுவது சகஜம்தான்

முடிந்தால் திருத்தி விடுங்கள்

இந்த மாணவனுக்கே பிழை கண்டுபிடிக்கிறதே வேலையா போச்சுன்னு தவறாக நினைக்க வேண்டாம்.....

மாணவன் said...

தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

karthikkumar said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் தமிழ்மணத்தில் இடம்பிடித்ததற்க்கும்.....

தினேஷ்குமார் said...

அப்பா இப்ப தான் உயிர் வந்தமாதிரி இருக்கு சகோ வாங்க வாங்க

தினேஷ்குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரோசா பூந்தோட்டமே

தினேஷ்குமார் said...

நமக்கு ஊழல் பண்ண தெரியாதுங்க தெரிஞ்சிருந்தா நான் ஏனுங்க இங்க வர்றேன்

செங்கோவி said...

பின்னூட்ட ஊழலை அம்பலப்படுத்தி, உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ரோஜாப் பூந்தோட்டத்திற்கு இவ்வார பூச்செண்டு. (அப்பாடி,சொந்தமா ஒரு பின்னூட்டம் போட்டாச்சு)

ம.தி.சுதா said...

தங்கள் தமிழ்மண நுழைவுக்கு எனது வாழ்த்துக்கள்...

இதிலும் ஒரு டிஸ்கி சொல்லட்டுமா (பலருக்கு பிடிக்காது என்ன செய்வது) இதை தக்க வைப்பதென்றால் நிங்கள் பதிவுலக இணையத்துடன் பல மணி நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்... ஹ..ஹ..ஹ..

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha super

செல்வா said...

இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் கொடுப்பீங்களா ..?

செல்வா said...

//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்.//

அப்படின்னா முதல் நாள் மட்டும் சாப்பிட்டுட்டு மத்தனால் சாப்பிடலைனா வயிறு பசிக்காதா ..?

Unknown said...

உருப்படியா எழுதுங்கப்பா?

அருண் பிரசாத் said...

என்னங்க உங்க வலைப்பூ திடீருனு காணாம போகுது...திடீருனு வருது... என்ன நடக்குதுனு பாருங்க கொஞ்சம்....

சரி என்ன பின்னோட்டம் போதுறது... எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க.....

ஊழல் செய்தவங்களை உங்க வலைப்பூவை ஒண்ணுவிடாம முழுசா படிக்க சொல்லுங்க... அதை விட பெரிய தண்டனை எதும் இல்ல

அருண் பிரசாத் said...

//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்//

அப்படினு பார்த்தா என்னைக்கு வேலைக்கு போகாம வீட்டுல வெட்டியா இருக்கறோமோ அப்போ மட்டும் வெளங்கிடுமா?

அருண் பிரசாத் said...

//இதெல்லாம் எதைக்காட்டுகிறது.
கலாச்சாரக்காவலர்களின் கருத்து இதனில் என்ன?//

ஓ அவங்களை கேட்டீங்களா...எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க ஆங்கில புத்தாண்டு கொண்டாட....

நான் கலாச்சார காவலன் இல்லை...அதனால No Comments

அருண் பிரசாத் said...

//ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?//
குடிப்பவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும்... புத்தாண்டு அவர்களுக்கு காரண்மாக அமைத்துக் கொண்டு குடிக்கிறார்கள்....

அவர்களை திருத்த முடியாது விட்டுவிடுங்கள்

மாதேவி said...

தொடரட்டும் வெற்றிகள்.

ஆனந்தி.. said...

நான் எதுவும் படிக்கல...படிக்கல....:)))
தமிழ் மணம் பட்டியலில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...:))

NKS.ஹாஜா மைதீன் said...

பின்னூட்ட ஊழல்....

தலைப்பே வித்யாசமா இருக்கே....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

THOPPITHOPPI said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வைகை said...

தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

(நன்றி: டெம்ப்ளேட்)

வைகை said...

கோமாளி செல்வா said...
இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் கொடுப்பீங்களா ../////////////


ஊசிப்போன வடை உண்டாம் வேணுமா?!!!!!!!

வைகை said...

அருண் பிரசாத் said...
//ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?//
குடிப்பவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும்... புத்தாண்டு அவர்களுக்கு காரண்மாக அமைத்துக் கொண்டு குடிக்கிறார்கள்....

அவர்களை திருத்த முடியாது விட்டுவிடுங்க/////////////


அலோ மச்சி அவங்க அதபத்தி சொல்லவே இல்லையே? ஒய் யு ஆஜர்? அதுல வேற அவங்களுக்கு காரணம்...! ஏன் எங்களுக்குன்னு சொன்னா?!!!!!!!!!

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

ஆமினா said...

எழுத்து பிழை ஓவரா இருக்கே......

செக் பண்றீங்களாக்கும் ;))

8ம் இடத்தை பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மார்கண்டேயன் said...

//ஆண்டு புது யாருக்கு?//

//தனிப்பட்ட முறையில் உங்கள் பதில் என்ன?//

புதிய ஆண்டு: நமக்குமா ?

என்ற தலைப்பில் என் பதிவு, இங்கே:

http://markandaysureshkumar.blogspot.com/2010/12/blog-post.html

உண்மையிலேயே பயனுள்ள தகவலாய் இருந்தால், நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த சுட்டியை பரிந்துரைக்கவும்,

நட்புடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.com

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்