எனது பள்ளி... எனது நம்பிக்கை...இன்னும் சில நாட்களில்
எங்கள் பள்ளி நாட்கள்
முடிந்து விடும்..
அதன் பின்
வாழ்க்கையை
நேரடியாக சந்திக்கப் போகிறேன்..
இவள் கை களைத்து
தோற்றுப் போய்விடுவாளோ
என கவலைப்பட வேண்டாம்...

வெறும் புத்தகப்புழுவாய்
இருந்து விடாமல்
எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக்கொடுத்திருக்கிறது.

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது.

நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.

சிகரங்கள்
என்னை
பாடமாய்
எடுத்து படிக்குமாறு
எழுவேன்...

மிக உயரமாய்...(மீள்பதிவு)

31 கருத்துரைகள்:

sakthistudycentre-கருன் said...

யாதார்த்தமான கவிதை.. அருமை.
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

விக்கி உலகம் said...

கவிதை அருமை

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

மாணவன் said...

உங்கள் உணர்வுகளையும் தன்னம்பிக்கையையும் வரிகளில் சொல்லியிருக்கீங்க பாரதி.... வாழ்த்துக்கள்...

மாணவன் said...

//சிகரங்கள்
என்னை
பாடமாய்
எடுத்து படிக்குமாறு
எழுவேன்...

மிக உயரமாய்...//

இதே உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மென் melum vetrikalai alla vaazhthukkal

S Maharajan said...

கவிதை அருமை
என் வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

இன்ட்லியில் இணைக்க வில்லை என்று நினைக்கிறேன் .....

சி.பி.செந்தில்குமார் said...

>>>நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.

நல்லாருக்கு. இண்ட்லில இணைச்சாச்சு

நா.மணிவண்ணன் said...

வாழ்த்துக்கள்

Speed Master said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Jana said...

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது.

அனைவருக்கும் பொதுவான பொக்கிசமான அனுபவம்...

Chitra said...

வாழ்த்துக்கள்!

sakthistudycentre-கருன் said...

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...
//

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..

Arun Prasath said...

வாழ்த்துக்கள்.... ஜெயிக்க

செங்கோவி said...

நல்ல உத்வேகமூட்டும் கவிதை..மீள்பதிவிற்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

//நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.//இந்த தன்னம்பிக்கை இருந்தாலே போதும் இமயம் உன் காலுக்கு செருப்பாகும்.....
வாழ்த்துக்கள் மக்கா.......

வைகை said...

தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் :))

padma said...

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது......
sir,,, these lines are really true.. and also i feel these lines sir..
It`s me Padmapriya.V

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன தலைவரே மீள்பதிவு?

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

title is superb...keep going..all the best..:)

கோமாளி செல்வா said...

//வெறும் புத்தகப்புழுவாய்
இருந்து விடாமல்
எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக்கொடுத்திருக்கிறது./

வாழ்த்துகிறேன் .. கண்டிப்பா நீங்க வெற்றி பெறுவீர்கள் ..

மாத்தி யோசி said...

ம்.... நம்பிக்கையூட்டும் வரிகள்!

சாந்திபாபு said...

அழகான ,கவிதை புதிய நம்பிக்கை பிறக்கிறது

அன்புடன் அருணா said...

Good!

அரசன் said...

கவிதை அருமை ....
தொடர்ந்து நிறைய வழங்குங்க

ஆயிஷா said...

கவிதை அருமை .

A.சிவசங்கர் said...

அருமை பள்ளி பற்றி இன்னுமொரு கவி

டக்கால்டி said...

எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக்கொடுத்திருக்கிறது.//


உண்மைய சொல்லப் போனால் நான் கத்துகிட்டது மிகவும் குறைவு தாங்க...
வெறும் புத்தகப் புழுவாகவே திரிந்து பல நல்ல இளமைக் கால அனுபவங்களை இழந்திருக்கிறேன்...(குறிப்பாக பெண் தோழிகளின் சகவாசம்...இன்று வரையில் ஒரு முகம் தெரியா புது பெண்ணுடன் பேசும் போது ஏற்படும் கூச்ச சுபாவமே அதற்கு சான்று)

நமது கல்வி முறையும் நாளுக்கு நாள் மாணவர்களை புத்தகப் புழுவாகவே மாற்றி விடுகிறது...உலக ஞானம் என்பது பள்ளிப் பாடம் மட்டும் அன்று...புத்தகப்புழுவாக இருப்பினும் கூட பள்ளிப்பாடம் சாராத மற்ற புத்தகங்களைப் படித்தல் ஆகும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள்..... உலகமே ஒரு பெரிய பள்ளிக்கூடம் தான்.....

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்